Wednesday, 28 June 2023

சாதி இல்லாமல் இனம் கிடையாது.

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்பதை காலமே வகுக்கிறது.

சமூக கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பவர்கள் தனிநபர்கள் தான். 

ஆனால் சமூகம் என்பது தனிநபர்களால் மாத்திரம் உருவாவதில்லை.

சமூகம் என்பது ஒரு படிநிலை கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தனிநபர்கள் சேர்ந்து குடும்பம். குடும்பங்கள் சேர்ந்து குலம். குலங்கள் சேர்ந்து சாதி. சாதிகள் சேர்த்து இனம். இவ்வாறான பல இனங்கள் சேர்ந்ததுதான் ஒரு சமூகம். 

இங்கே தனிநபர், குடும்பம், குலம், சாதி, இனம் என்று எது ஒன்றைச் சிதைத்தாலும் சமூகக் கட்டமைப்பு குலைந்துவிடும். 

ஒழுக்கமின்மை, சிந்தனையின்மை என்பவற்றால் தனிநபர்கள் என்ற கட்டமைப்பு சிதைக்கப்படும்.
தனிநபர்கள் வழிதவறும்போது குடும்பக் கட்டமைப்பு சிதைக்கப்படும். 
குடும்பங்கள் சிதையும் போது குலங்கள் சிதைந்து அழிந்து போகும்.
குலங்கள் அழியும் போது சாதிய ஒற்றுமையும் பலமும் இல்லாமல் போகும்.

சாதிகள் பலமிழந்து இல்லாமல் போகும்போது இனம் என்பது எதுவென்றே தெரியாமல் போய்விடும். சம்பந்தமே இல்லாதவர்கள் அந்த இனத்தின் அடையாளத்தை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அந்த இனத்தின் மரபுக்கும் பண்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் அந்த இனத்திற்கு உரிமைகோரி அதனை ஆள்வதற்கு முற்படுவார்கள்.

இன்று எம் இனத்திற்கு நடப்பது இதுதான்.

எமது இனத்தை அழித்து, அடையாளம் தொலைத்த மக்களை ஆள்பவர்களே சாதிகள் வேண்டாம் என்கிறார்கள்.

சாதிகள் இல்லையென்றால் இனம் என்பது கிடையாது. மொழி என்பது இனமல்ல. மொழி என்பது இனத்தின் ஒரு கூறு மாத்திரமே. மொழிதான் இனமென்றால் யார் வேண்டுமானாலும் ஒரு இனத்திற்கு மாறிவிடலாம். 

மொழி தான் இனமென்றால்; எம்மினத்தை ஆக்கிரமிப்பு செய்ய வந்தவன், அவன் கொண்டுவந்த அடிமைகளின் வம்சங்கள், அவர்கள் இருவராலும் உண்டாக்கப்பட்ட கலப்பின வம்சங்கள் எல்லாம் இன்று எம்மொழியைப் பேசுவதால் எம்மினம் என்று ஆகிவிடும்.

அதனால்தான் சொல்கிறோம் மொழி இனமல்ல, இனத்தின் ஒரு கூறே மொழியென்று. 

இங்கே.. தனிநபர்கள், குடும்பம் என்பவற்றில் யாருக்கும் எந்த குழப்பமும் இருப்பதில்லை. ஆனால் குலம், சாதி, இனம் என்பதில்தான் கேள்விகள் உண்டு.

இனம், சாதி இரண்டும் ஒரே பொருளைக் கொண்டது.குலம், சாதி இரண்டும் ஒன்று எனும் மயக்கத்தை தருவது.

குலம் என்பது இன்று நாம் பரம்பரை என்று குறிப்பிடும் பொருளைக் கொண்டது. ஏதோ ஒரு குடும்பத்தில் இருந்து கிளைத்தெழுந்த குடும்பங்களைக் குறிக்கும் பெயரே குலமாகும். 

சாதி என்பது நெருக்கமான குண இயல்புகளைக் கொண்ட குலங்களைச் சேர்ந்த பிரிவாகும். 

இனம் என்பது பொதுவாக பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் பொது இயல்புகளைக் கொண்ட சாதிகளின் கூட்டமாகும்.

இங்கே பொதுவான பழக்கவழக்கங்கள் இயல்புகள் என்பவை, அவர்களின் சமய பாரம்பரியம் நம்பிக்கைகள் என்பவற்றை சார்ந்ததாகவே இருக்கிறது.

எனவே ஒரு இனத்தை தீர்மானிக்கும் முதன்மையான காரணி சமயம் என்றுகூட சொல்லலாம். சமயம் என்பது இல்லாமல் இனம் என்பது கிடையாது. 

மக்கள் மதம் மாறும் போது அவர்களது இனத்தின் பொதுவான பாரம்பரியம் நம்பிக்கை இயல்பு என்பவற்றில் இருந்து வேறுபட்டு செல்கின்றனர். இனம் என்பதே பொதுவாக பழக்கவழக்கமுடைய கூட்டம் என்பதாக இருக்கும்போது, புதிய பழக்கவழக்கம் புதிய நம்பிக்கை என்று இனத்தின் பொதுத் தன்மையில் இருந்து மாறுபட்டு நிற்பவர்கள் ஒருபோதும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது.

சமூகத்தில் மதமாற்றம் என்பது இனவழிப்பு பொறிமுறை என்பதாகவே உள்ளது. நீண்ட கால வரலாறு அதைத்தான் சொல்கிறது. 

இனத்தின் அடிப்படையான சமயத்தை பேணிப் பாதுகாப்வர்களை உயர்வான குலங்கள் என்றும், அந்த இனக் கட்டமைப்பை சீரழிக்கும் குலங்களை தாழ்வான குலங்கள் என்றும் காலம் வரையறுத்து விடுகிறது.

இங்கே தாழ்த்தப்பட்ட என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்று உயர்ந்த நிலையில் இருப்பவை நாளை தாழ்ந்து போகலாம். இன்று தாழ்ந்த நிலையில் இருப்பவை நாளை உயர்ந்த நிலையில் இருக்கலாம். 

உங்கள் குணங்களே உங்கள் சந்ததிகளின் உயர்வு தாழ்வினை தீர்மானிக்க போகிறது. எம் இனத்தின் பாரம்பரியத்தை, அதைத் தாங்கி நிற்கும் சமயத்தை காக்கவேண்டும் என்று உங்கள் குணமிருந்தால் உங்கள் சந்ததிகள் உயர்ந்த நிலையில் இருக்கும். இல்லை உங்கள் அல்ப்பமான தேவைகளுக்காக, இச்சைகளுக்காக உங்கள் பாரம்பரியத்தை தூக்கி வீசவோ, அழிக்கவோ உங்கள் குணம் இசைந்து நிற்கிறது என்றால் உங்கள் சந்ததிகள் இழிவு நிலையில் இருக்கும்.

அதுபோலவே சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பான தனிநபர்களின் ஒழுக்கத்தை கெடுத்து அதன் அடுத்த படிநிலையான குடும்பங்களை சிதைக்கும் போதைப்பொருள், விபச்சாரம், திருட்டு, நம்பிக்கை சிதைப்பு என்பவற்றை மேற்கொள்பவர்களின் சந்ததிகளும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காலத்தால் வைக்கப்படும்.

குலத்தின் அளவு குணத்தை அடிப்படையாகக் கொண்டது. குணம் மாறினால் காலத்தால் குலத்தின் நிலையும் மாறிவிடும். யாரையும் யாராலும் உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாது. 

உங்கள் எதிர்கால சந்ததிகள் உயர்ந்த நிலையில் இருப்பதும், தாழ்ந்த நிலையில் இருப்பதும் உங்கள் கைகளிலேயே உள்ளது.