Sunday, 30 January 2022

மைக்கேல்பட்டி சகாயமேரி-சிறுகதை

 "நான் உடைந்த சிதைந்த பாத்திரம் யேசையா.. என்னை கருவியாக பயன்படுத்தும் யேசையா.." என்று அவளின் ரிங்டோன் ஒலித்தது. குளிப்பதற்காக உள்ளே சென்றவள் திரும்பிவந்து தொலைபேசியை எடுத்தாள்.  மறுமுனையில் ஃபாதர் இமானுவல். "என்ன ஃபாதர் இன்னைக்கு எல்லா ஃபாதரும் எங்கூடத்தான் போல" என்று நையாண்டியாக கேட்டாள். "என்ன, வேற யாராச்சும் நிக்கிறாங்களா?" இமானுவல் ரொம்ப கவலையாக கேட்டார். இல்லை ஃபாதர், நியூட்டன் ஃபாதர் வந்தாரு,

 இப்பதான் போனார். நான் குளிச்சிட்டு அஞ்சே நிமிசத்தில ரெடியாயிடுறன். நீங்க வாங்க" என்றவள் தொலைபேசியை வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள்.

ஊழியராணி ரொம்ப சுத்தபத்தம் கொள்கையோடு வாழ்பவள்.குடும்பம் குட்டி என்று இருக்கும் ஆண்களையோ, உழைத்து சாப்பிடும் ஏழைபாழைகளையோ அவள் உள்ளே அனுமதிப்பதில்லை. ஊரான் சொத்தில் உல்லாசமாக வாழ்பவர்கள் தான் அவளின் இலக்கு. ரேட்கூட கொஞ்சம் அதிகம். வரும் ஒவ்வொருவரும் சென்றபின் குளித்து சுத்தபத்தமாகிவிடுவது அவள் வாடிக்கை. இப்போதும் அப்படித்தான், நியூட்டன் ஃபாதர் சென்றதும் குளிக்கப் போய்விட்டாள். 

ஊழியராணி இந்த பெயரே கொஞ்சம் விசித்திரமான பெயர். அந்த பெயர் வந்ததே ஒரு பெரிய கதை.

ஊழியராணியின் தாய் சகாயமேரி. அவளுக்கு கணவன் விட்டுவிட்டு போய்விட்டான்.  கல்யாணம் பண்ணி ஒருமாதம் கூட முடியவில்லை, அதற்குள் இன்னொருவருடன் ஊழியம் செய்தகொண்டிருநதாள் சகாயமேரி. அதை பார்த்துவிட்டு அன்றே போனவன்தான். அவன் மானஸ்தன், திரும்ப வரவேயில்லை. அன்று முதல் மைக்கேல்பட்டி சர்ச்சிற்காக ஊழியம் செய்வதுதான்  அவளின் முழுநேர வேலை.

மைக்கேல் பட்டியில் செல்வராஜ் குடும்பம் பெரிய குடும்பம். இப்போதும் கூட்டுக் குடும்பமாக பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள். செல்வராஜ் சொன்னால் மொத்தக் குடும்பமே கேட்கும். எப்படியாவது மருந்துக்கடை செல்வராஜை மதம் மாற்றி மொத்த குடும்பத்தையும் மாற்றிவிடவேண்டும். இதுதான் சகாயமேரிக்கு அப்போது கொடுக்கப்பட்ட  பணி. பலபேர் முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள். இப்போது சகாயமேரியின் முறை.

சகாயமேரியின் பெருமுயற்சியால், செல்வராஜ் ஊழியம்செய்ய ஒருவாறு அனுமதித்துவிட்டார். செல்வராஜ் ஃப்ரீயாக இருக்கும் போதெல்லாம் மனங்கோணாமல் ஊழியம் செய்து வந்தாள் சகாயமேரி. எப்படியாவது மதம் மாற்றிவிடவேண்டும் அல்லவா?

ஊழியம் தொடர்ந்து கொண்டே இருந்தது. செல்வராஜ் மதம்மாறியதாக இல்லை. ஆனால் சில மாதங்களில் சகாயமேரியின் உருவம் மாறிவிட்டது. ஆம், அவள் கர்ப்பமாக இருந்தாள். மதமாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மறந்து ஊழியம் செய்துவிட்டாள். அது இப்போது கர்ப்பமாக வந்து நின்றது. 

ஏதாவது மருந்தைக் கொடுத்து கரைத்து விடலாம் என்று பலமுறை முயற்சி செய்தார் செல்வராஜ். ஆனால் கர்த்தர் கோவித்துக்கொள்ளுவார் என்று அவள் மறுத்துவிட்டாள். அந்த கர்ப்பத்தில் வந்த சிற்பம்தான் இந்த ஊழியராணி. பாவமன்னிப்பு, கரோல், கன்னியாஸ்திரிகள், ஊழியக்கார்கள் என்று இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவளிடம் வரவைத்த அழகு ஊழியராணியுடையது. தன்னைவிட பெரிய ஊழியக்காரியாக வரவேண்டும் என்று சகாயமேரி வைத்த பெயர்தான் இந்த "ஊழியராணி".

அவள் குளித்து முடித்து வருவதற்குள், ஃபாதர் இமானுவல் வந்துசேர்ந்துவிட்டார். "என்ன ஃபாதர் அவ்வளவு அவசரமா?" துடைத்துக்கொண்டு வெளியே வந்தவள் நக்கலாக கேட்டாள். அவரால் அசடு வழிவதைத்தவிர வேறொன்றும் முடியவில்லை.

 "ஃபாதர் டெய்லி பலபேருக்கு பாவமன்னிப்பு கொடுக்கிறிங்க, கரோல் வேற இப்ப பழக்கிறிங்களாம், மடத்தில கன்னியாஸ்திரிங்கவேற மூணு பேர் பேர்மனன்டா இருக்காங்க இவ்வளவும் பத்தாமத்தான் இங்க வாறிங்களா?" அவள் குத்தல் பேச்சால் மீண்டும் சீண்டினாள். அவள் தாய் இப்போதும் மைக்கேல் பட்டியில் ஊழியம் செய்வதால் அவள் ஊழியக்காரிகளை இழுக்கவில்லை.

இமானுவல் அவள் பேச்சை திசை திருப்ப பார்த்தார். "நீயேன் இப்படி தனியா இருந்து பண்ற, எங்ககூட இருந்து ஊழியம் பண்ணேன்" என்றார். "ஊழியமா? நானா? அவ்வளவு கேவலமாவா என்னப்பார்க்க தெரியுது?" என்றாள் அவள். 

" ரெண்டுமே ஒன்றுதானே, நீ இப்ப பண்றது மட்டும் ஒசத்தியா என்ன?" அவள் பேச்சில் சூடாகிய ஃபாதர் உண்மையை பேசிவிட்டார். 

"என்னை ஏன் விபச்சாரின்னு ஊருக்க சொல்றாங்க ஃபாதர்?உங்க கூட எல்லாம் படுக்கிறதால தானே"

"ம்ம்.." என்று தலையை ஆட்டினார்.

"உங்க அம்மா எப்படி உங்கள பெத்தாங்க? அப்பா கூட படுத்துத்தானே.. ரெண்டுமே ஒன்றுதானே. ஆனால் உங்க அம்மாவ யாரும் விபச்சாரின்னு சொல்லமாட்டாங்கல்ல" 

"அவ ஒருத்தரோட படுத்தா, நீ பலபேரோட படுக்கிற" தாயை ஒப்பிட்டு சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை.

"அவ ஒருத்தரோடதான் படுத்தான்னு ஒனக்கு தெரியுமாக்கும்? ஒருத்தனுக்கு பிறந்தா நீயேன் ஃபாதர் ஆன" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே.. "சரி அதை விடுங்க ஃபாதர், உங்க சர்ச்சில இருக்கும் சிஸ்டர்ஸ் எல்லாம் என்ன பண்றாங்க? சிஸ்டர்ஸ் மட்டும் இல்லைன்னா உங்க ஃபாதருங்க யாராச்சும் ஃபாதராவே இருப்பாங்களா? சிஸ்டர்ஸ் எல்லாரும் ஒரு ஃபாதர்கூட மட்டுந்தான் படுக்கிறாங்களாமா? பலபேரோட படுத்தா விபச்சாரின்னா, கன்னியாஸ்திரிங்க விபச்சாரிங்க, நீங்கல்லாம் ஆம்பள விபச்சாரிங்க அப்பிடியா ஃபாதர்?" அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். அவரால் பதிலேதும் பேச முடியவில்லை.

ஒவ்வொரு முறை ஊழியராணியிடம் வரும்போதும் இவளை எப்படியாவது ஊழியக்காரியாக்கிவிடவேணும் என்ற நினைப்போடுதான் வருவார் இமானுவல். ஆனால் அவள் விபச்சாரம் செய்வதைவிட ஊழியம் இழிவானது என்பது அவருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. இரண்டுமே ஒன்றுதானே! ஏன் அவள் விபச்சாரத்தைவிட ஊழியத்தை இழிவாக கருதுகிறாள் என்று அவருக்கு புரியவேயில்லை.

"சரி சரி நீ ஊழியம் செய்யவே வரவேணாம்" என்று சொல்லிக்கொண்டே ஊழியராணியை கட்டிலில் சாய்த்தார் ஃபாதர்.. புரிதலுக்கான முயற்சி தொடங்கியது...



2 comments:

  1. அருமையான சிறுகதை...
    இது போன்று நிறைய எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete