Monday 7 February 2022

ஜீசஸ் (எ) யேசுவா பிறந்த கதை-தவறால் வந்த தவறுகள்

முன்னொரு காலத்தில் யூத நாட்டை ஏரோது என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். ரோமானிய பேரரசிற்குட்பட்ட பல சிற்றரசுகளில் அவனது யூத நாடும் ஒன்று. அந்த பிரதேசத்தின் பூர்வீக மக்களான சமாரிய மக்கள் பல அரசுகளாக, மதங்களாக, இனங்களாக பிரிந்து சிதைந்து போய் இருந்தார்கள். அப்படி சிறிது காலத்திற்கு முன்பு புதிதாக உருவாகிய மதம் ஒன்றுதான் 'யெகுதா மதம்'. ஆனால் தமது ஆட்சி அதிகாரம் மற்றும் வக்கிரமான பிரச்சாரம் ஆகியவற்றால் கணிசமான யூத மக்கள் புதிய யெகுதா மதத்தவர்களாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்டார்கள். பலர் தமது அடையாளங்களை காப்பாற்ற சொந்த நாட்டைவிட்டு வெளியேறி சென்றார்கள். இப்படி மதம் மாறி யெகுதா மதத்தைப் பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுதான் இந்த யூத நாடு.

இந்த யெகுதா மதத்தவர்கள் தாங்கள் தான் சுத்தமும் அறிவும் மிக்க உலகின் உயர்ந்த மக்கள் என்றும், தாம் மட்டுமே இறைவனின் ஆசியையும் அருளையும் பெற்றவர்கள் என்றும் நம்பினார்கள். உலகில் உள்ள ஏனைய மக்கள் அனைவரும் விபச்சார சந்ததிகள் என்று இழிவுபடுத்தினார்கள். அவர்களின் வழிபாட்டு உரிமைகளை மறுத்து கொடுமைகளைச் செய்தார்கள்.

இவ்வாறான காலத்தில் ஒருமுறை பாபிலோனியர்கள் படையெடுப்பு செய்து யெகுதா மதத்தை ஏற்ற சமாரியர்கள் பலரை அடிமைகளாக பிடித்துச் சென்றார்கள். இப்போது யூத நாடு ரோம பேரரசின் கீழ் உள்ளது. அதனால் ரோமர்களின் ஆதிக்கம் வலுவாகவே உள்ளது. யெகுதாவை ஏற்ற பல சமாரியர்கள் ரோமர்களின் மத நம்பிக்கைகளை ஏற்றனர். ஆனால் இப்போதும் பல சமாரியர்கள் தமது பாரம்பரிய வழிபாட்டு நம்பிக்கையில் மறைவாக வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.

அவ்வாறான பாரம்பரிய சமாரிய வம்சத்தில் வந்தவர்தான் சகாரியர். அழிந்து கொண்டிருக்கும் தமது பாரம்பரிய அடையாளத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று போராடும் சிலரில் அவரும் ஒருவர். அவர் அவர்களின் ஆலயம் ஒன்றின் மதகுரு. ஆனால் அந்த ஆலயம் யூத நாட்டில் இல்லை. யூத நாட்டில் இருந்து அகதிகளாக போயுள்ள சமாரியர்கள் அதிகமாக வாழும் அபிஜா பிராந்தியத்தில்தான் அவரின் ஆலயம் உள்ளது.

தமது மதத்தைப் பாதுகாக்க என்று முழுநேரமாக வாழ்க்கையை அர்ப்பணித்து செயற்பட்டார் சகாரியர். சகாரியருக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது ஆனாலும் அழிந்து கொண்டிருக்கும் தமது அடையாளங்களை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை செயலாற்ற வைத்தது. சகாரியர் ஆசாரிய குலத்தை சேர்ந்தவர். ஆனால் வேறு குலத்தை சேர்ந்த எலிசபெத்தை உறவினர்களின் எதிர்ப்பை மீறி மணமுடித்திருந்தார். அவரது மனைவி எலிசபெத் யூத நாட்டின் கலீலியில் இருக்க அவரைப் பிரிந்து, பலநூறு மைல்கள் கடந்து அபிஜா பிராந்தியத்தின் மதத்தலைவராக பணியாற்றி வந்தார். எலிசபெத்திற்கும் வயதாகிவிட்டது. திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இருவரும் முதுமையை அடைந்துவிட்டாலும் இருவருக்கும் குழந்தைகள் இல்லை.

இப்படி கணவன் மதத்தைக் காக்க சென்றபோது தனிமையில் இருந்த எலிசபெத்திற்கு தவறான இளைஞர்கள் சிலரின் சகவாசம் கிட்டுகிறது. அவளது குலம், தனிமை, வயதாகியும் தீராத காமம், ஒழுக்கமின்மை எல்லாம் சேர வயதுகளை, இனத்தை கடந்து பலருடன் இணையவைத்தது. ஆனால் அனைத்தையும் இரகசியமாக வைத்திருந்தாள். அவள் பழக்கவழக்கங்கள் வயதாகியும் ஒருசிலருடன் தொடர்ந்தது. அப்படி பழக்கத்தை தொடர்ந்த ரோமானிய இளைஞன் ஒருவனால் எலிசபெத் கர்ப்பம் அடைந்துவிட்டாள்.

இந்த வயதில் இப்படி நடக்கும் என்று யார்தான் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் இருவரும் கூட எதிர்பார்க்கவில்லை. கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதினைக் கடந்து இத்தனை ஆண்டுகள் கழித்து கர்ப்பம் தரித்ததால் எலிசபெத் ஒருவகையில் மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் இன்னொரு வகையில் பயமும் பிடித்துவிட்டது. "வெளியூரில் இருந்து கணவன் வரும்போது என்ன சொல்வது? வயாதான காலத்தில், கணவனும் இல்லாமல் கர்ப்பம் என்றால் ஊரார் என்ன சொல்வார்கள்!" இப்படி பலவாறாக யோசித்துவிட்டு அந்த ஊரில் உள்ள வயதான ஜெகுதா மதகுரு ஒருவனிடம் சென்று இதற்கு உபாயம் கேட்டாள். அவன் மிகவும் தந்திரக்காரன். அவன் இவளுக்கு ஏற்கனவை பலமுறை அறிமுகம் ஆனவன். அவனால் முடியாதது எதுவும் இல்லை என்று அவள் நம்பினாள். அந்த நம்பிக்கை ஓரளவு சரியாகத்தான் இருந்தது. 

அந்த மதகுரு உபாயமாக ஒரு திட்டம் தீட்டினான். யாராவது ஒருவனை தேவதூதர் வேடமிட்டு சகாரியரிடம் அனுப்புவது என்றும் கடவுளின் வாக்குஎன்று கூறி அவனை நம்பவைப்பது என்பதும் அவனது திட்டம். திட்டம் முடிவானது, ஆனால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய யாருக்கு பாதை தெரியும் என்று சிந்தித்த யெகுதா மதகுரு அதற்கான உபாயத்தையும் கூறினான். யூத நாடு ரோமானிய பேரரசின் கீழ் இருப்பதால் அவர்களின் போர்வீரர்கள் விடுமுறையில் வீடு சென்று வருவது வழக்கம். அப்படி வீடுசெல்லும் ஒருவனை பிடித்துவிட்டால் காரியம் கச்சிதமாக முடிந்துவிடும் என்று கூறினான்.

அதற்காக பலரை அணுகினார்கள். அவர்களில் ஒருவன் அப்படி செல்வதற்கு சம்மதம் தெரிவித்து வந்தான் . அவன் பெயர் திபெரியுஸ் யூலியஸ் அப்டெஸ் பந்தேர். இவன் பல ஆயிரம் மைல்கள் கடந்து ஜேர்மனியில் இருந்து வந்து ரோமானிய படையில் பணியாற்றுபவன். இவனுக்கு சில நூறு மைல்களில் இருக்கும் அபிஜாவிற்கு செல்வது சாதாரண விசயம்.மதகுருவும் எலிசபெத்தும் அவனை பரீட்சித்துப் பார்க்க விரும்பினார்கள். அவன் கேட்ட கூலியும், இவன் சகாரியரிடம் சென்று ஏமாற்றும் தகுதியுடையவனா என்ற சந்தேகமும் அவனை பரீட்சித்துப் பார்க்க வைத்தது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நபர்தான் மேரி.

மேரி எலிசபெத்தின் கணவன் சகாரியாவின் உறவுக்காரப் பெண். நசரேத்தில் இருக்கிறாள். சிறுவயதில் ஆலயம் ஒன்றுக்கு தேவரடியாளாக நேர்ந்து விடப்பட்டவள். அவர்களின் இன வழக்கத்தின்படி பதின்நான்கு வயதிற்கு மேல் ஆலயத்தில் இருக்க முடியாது. அதனால் அந்த ஆலயத்தின் குரு யோசப் என்பவருக்கு மணமுடித்து கொடுக்க நிச்சயித்து வீட்டிற்கு அனுப்புகிறார். யோசப் மேரியிலும் பலவயது முத்தவன். தச்சுத் தொழில் செய்துவந்தான். கடின உழைப்பாளி.அதனால் தமது ஜாதிக்குள் மணமுடிக்க வேண்டும் என்று முதியவனான யோசப்பிற்கு நிச்சயம் செய்தார்கள்.

பந்தேர் பரீட்சைக்கு அனுப்பப்பட்டான். முதலில் அந்தப் பெண் மேரியை ஏமாற்ற வேண்டும். இந்தச் சிறுமியே நம்பாவிட்டால் இவனால் எப்படி வயதான அனுபவமிக்க மதகுரு சகாரியரை நம்பவைக்க முடியும்? பந்தேர் நசரேத்திற்கு சென்று மேரியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறான். பின்னர் அவள் நம்புமாறு தேவதை வேடம் ஒன்றை ஆடைகள், ஒப்பனைகள் மூலம் உண்டாக்குகின்றான். பின் அவள் தனிமையில் இருந்த ஒருவேளையில் அவள்முன் தோன்றி "நான் நம்பிக்கையின் தேவதூதன்" என்று தன்னை அறிமுகம் செய்கின்றான். அவளைப் பார்த்தவுடன் அவன் மனதில் ஆசை உண்டாகிவிட்டது. அவளின் இளமையும் வனப்பும் அவளை அடையவேண்டும் என்று தூண்டியது. வந்த வேலையை மனதில் வைத்து ஆசையை கட்டுப் படுத்தினான். பின்னர் அவளிடம் "வாழ்த்துக்கள், நீ யாரை மிகவும் விரும்புகிறாயோ, அந்த கடவுள் உன்னுடனேயே இருக்கிறார்!" என்றான். 

மேரி அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு பயந்தாள். இது என்ன வகையான வாழ்த்து என்று யோசிக்கலானாள். அவளின் சிந்தனையைக் கலைத்த பந்தேர் "நீ கடவுளின் விருப்பத்திற்குரியவளாக அடையாளம் காணப்பட்டுள்ளாய், நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவனை யேசுவா என்று அழைப்பாயாக, அவன் கடவுளின் குமாரன் என்று அழைக்கப்படுவான், டாவிட்டின் சிம்மாசனத்தை தேவன் அவனுக்கு அளிப்பார், அவன் ஜேக்கப்பின் வம்சத்தை முடிவின்றி ஆண்டிருப்பான்" என்று அவள் ஆசையை தூண்டும் வகையில் கூறினான்.

மேரியால் நம்பமுடியவில்லை, "நானோ திருமணம் முடிக்கவில்லை. நான் இப்போதும் கன்னியாகவேதான் இருக்கிறேன், அது எப்படி சாத்தியமாகும்?" என்று கேட்டாள். 

அதற்கு அவன் "தேவனால் முடியாதது எதுவுமில்லை, உனது உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத் முதுமையில் ஒரு குழந்தையைப் பெறப் போகிறார். கர்ப்பம் தரிக்கவே முடியாது என்று கூறப்பட்ட அவள் இப்போது ஆறாவது மாதத்தில் உள்ளாள்" என்றான்.

இப்போது மேரிக்கு அவன்மேல் ஓரளவு நம்பிக்கை வந்தது. "நான் ஒரு தேவரடியாள், உங்கள் வார்த்தைகள் எனக்கு நிறைவேறட்டும்" என்றாள். அவள் நம்பிவிட்ட திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டான் பந்தேர்.

அவன் போய்விட்டான், ஆனால் மேரிக்கு சந்தேகம் முழுவதுமாக போகவில்லை. யாருக்கும் சொல்லாமல் யூதாவின் மலை நாடான கலீலிக்கு புறப்பட்டாள். கலீலியில் உள்ள சகாரியரின் வீட்டிற்கு சென்றாள். அங்கு உண்மையிலே எலிசபெத் கர்ப்பமாகவே இருந்தாள். அவளின் கர்ப்பத்தைப் பார்த்ததும் வந்தது தேவ தூதன் என்றே நம்பிவிட்டாள். எலிசபெத்திடம் வாழ்த்து சொல்லிவிட்டு, தேவதூதன் தனக்கும் இறைவனால் குழந்தை கிடைக்க இருப்பதாக கூறியதாக அப்பாவியாக கூறினாள். 

சிறுமி மேரியின் வார்த்தைகள் எலிசபெத்தை நகைப்புற செய்தாலும் பந்தேர் சிறப்பாக நடித்து ஏமாற்றியதை நினைத்து மகிழ்ந்தாள். இவன்தான் தனது கணவன் சகாரியரை ஏமாற்ற பொருத்தமானவன் என்றும் நினைத்துக் கொண்டாள்.

மேரி சகாரியரின் வீட்டிற்கு வந்த அன்று மாலையிலேயே பந்தேரும் வந்தான். பந்தேர் வேடம் எல்லாவற்றையும் களைந்து விட்டு வந்ததால் மேரியால் அவனை அடையாளம் காண முடியவில்லை. மேரியைக் கண்டதும் பந்தேரின் மனது சபலத்தில் மூழ்கியது. எலிசபெத்தை தனிமையில் அழைத்து தான் மேரியை ஏமாற்றிய பொய்யை கூறி அதை தானே நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், அவளை அவ்வாறு தனக்கு அனுபவிக்க தந்தால் தனக்கு ஊதியமே தேவையில்லை என்றும் கூறினான். 

எலிசபெத்திற்கு வேறு வழியே இல்லை. அவன் கேட்ட கூலியை எப்படி கொடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவன் ஆசைக்கு அனுமதி கொடுத்தாள். அவன் யோசனைப்படி மேரி தூங்கச் செல்லும் முன்னர் பாலில் சிறிது மயக்க மருந்தைக் கலந்து கொடுத்தாள் எலிசபெத். மேரி மயங்கிய பின்னர் பந்தேர் வந்து அவளை அனுபவித்து விட்டு செல்வான். சிலநாட்கள் இது தொடர்ந்தது. மேரிக்கு இது கனவா நிஜமா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அதுகூட அவளுக்கு ஒரு நல்ல உணர்வாகத்தான் இருந்தது. எலிசபெதிற்கோ கணவனைச் சென்று எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்ற அவசரம். பந்தேருக்கோ மேரிமை விட்டுச் செல்ல மனமிலாத சரச மோகம்.

 "நீ அபிஜாவிற்கு சென்று திரும்பும் வரையில், அவள் இங்கேயே இருப்பாள். நீ வந்து அவளை அனுபவிக்கலாம்" என்று எலிசபெத் அவனுக்கு வாக்குக் கொடுத்தாள். எலிசபெத் கொடுத்த வாக்கின் பின் அவன் அபிஜாவிற்கு புறப்பட்டு போனான்.

அபிஜாவிற்கு சென்றவன் சகாரியரின் நாளாந்த நடவடிக்கைகளை கவனமாக உளவு பார்த்தான். பின்னர் ஒருநாள் பூசை செய்வதற்காக சகாரியா தூபம் போட்டுக்கொண்டு கோயிலின் உட்புறம் சென்றார். மக்கள் பலர் ஆலயத்தின் வெளிமண்டபத்தில் நின்று பாடல்களைப் பாடியவாறு வழிபட்டனர். தூபம் போட்டுக்கொண்டு உள்ளே சென்ற சகாரியர் முன் வலதுபுறம் உள்ள வாயிலுக்குள்ளால் தூப புகைகளுக்குள்ளாக தோன்றினான் பந்தேர். அவனை கண்டதும் பயந்துவிட்டார் சகாரியர். யூதர்கள் இங்கும் கொல்வதற்காக ஆள் அனுப்பிவிட்டார்கள் என்றே நினைத்தார். 

சகாரியர் பயப்படுவதை உணர்ந்த பந்தேர் அவர் பயந்து கூச்சலிட்டால் எல்லாம் பிழைத்துவிடும் என்று உணர்ந்தான். உடனே "பயப்படாதே சகாரியா! உன் வேண்டுதல்கள் கடவுளால் கேட்கப்பட்டது, உன் மனைவி எலிசபெத் விரைவில் குழந்தை ஒன்றை பெற்றெடுப்பாள். அவனை ஜான் என்று அழைப்பாயாக" என்றான்.

சகாரியா மனதில் பயம் குறைந்து குழப்பம் அதிகரித்துவிட்டது. சகாரியரால் இந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. இவன் எதற்காக இப்படி பேசுகிறான் என்பது அவருக்கு புரியவில்லை. பந்தேர் சகாரியரின் சிந்தனையை குழப்பி அவரது ஆசையைத் தூண்டினான். "பிறக்கும் குழந்தை பலருக்கு மகிழ்வைத் தருவான். அவன் ஒருபோதும் மதுபானங்களை அருந்த மாட்டான். சமாரிய மக்களில் அநேகரை உண்மையான தேவனான ஏலிஜை நோக்கி அழைத்துவருவான்" என்று ஆசையை தூண்டினான்.

 சகாரியாவுக்கு இந்த வார்த்தைகள் சந்தோஷத்தை கொடுத்தது. அவர் இதற்காகத்தானே, இத்தனை ஆண்டுகளாக இந்த வயதிலும் கஷ்டப்படுகிறார். ஆனால் அவரால் நம்ப முடியவில்லை. "நாங்கள் இருவரும் முதுமையை அடைந்தவர்கள். என் மனைவி எலிசபெத் நீண்ட காலமாக தனிமையில் இருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும்? இதை நான் எப்படி நம்புவது?" என்று கேட்டார்.

அதற்கு பந்தேர் சொன்னான் " நான் நம்பிக்கையின் தேவதை, நான் கடவுளின் முன்னால் நிற்கிறேன். அத்துடன் இந்த நல்ல செய்தியை உங்களிடம் சொல்வதற்காகவே அனுப்பப்பட்டேன்.நீங்கள் இப்போது மௌனமாக இருங்கள். யாரிடமும் சொல்ல வேண்டாம். ஏனெனில் நீங்கள் இந்த வார்த்தைகளை நம்பவில்லை. ஆனால் குறித்த ஒரு நேரத்தில் இவற்றை நம்புவீர்கள்" என்று கூறிவிட்டு சகாரியாவுடன் உரையாடலை தொடராமல் சென்றுவிட்டான்.

கோயில் உள்ளே சென்ற சகாரியாவை காணாமல் வெளியே மக்கள் காத்துக்கொண்டு நின்றார்கள். வெளியே வந்த சகாரியா அவர்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. உள்ளே ஏதோ ஒன்றை பார்த்து குழம்பிப்போய் இருப்பது அவரது முகக்குறிப்பில் தோன்றியது. 

பந்தேர் கலீலிக்கு திரும்பி எலிசபெத் வீட்டிற்கு வந்தான். தினமும் எலிசபெத்தின் அனுசரணையில் மேரியை அனுபவித்து இன்பமடைந்தான். மேரிக்கு இப்போது ஏனோ சந்தேகம் வந்துவிட்டது. ஒருநாள் எலிசபெத் கொடுத்த பாலினை குடிக்காமலேயே ஊற்றூவிட்டு தூங்கச் சென்றாள் மேரி. தூங்குவது போல நடித்தாள். அப்போதுதான் தினமும் தனக்கு நடப்பதை உணர்ந்தாள். அவள் தூங்கச் சென்ற சிறிது நேரத்தில் பந்தேர் உள்ளே வந்து மேரியை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான். மேரிக்கும் அது பிடித்திருந்ததால் எதுவும் சொல்லவில்லை. வயதான யோசப்பை மணமுடித்தால் இவ்வளவு இன்பம் கிடைக்காது என்பதால் பேசாமல் விட்டுவிட்டாள். அவ்வாறு மேரி எலிசபெத்தின் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கினாள். அதனால் அவள் வயிற்றில் குழந்தை உண்டாகியிருந்தது.

அப்போதுதான் சகாரியர் தனது சேவையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.கலீலிக்கு சகாரியர் வந்ததும் இனி அங்கு இன்பம் அனுபவிக்க முடியாது என்பதால் மேரியும் நசரேத்திற்கு திரும்பி வந்துவிட்டாள். சகாரியர் கலீலிக்கு வந்து சில வாரங்களில் எலிசபெத் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கிறாள். அதற்கு அவர்களின் பூர்வீக மரபின்படி சகாரியரின் தந்தையின் பெயரைச் சூட்ட முடிவு செய்தனர். ஆனால் அதை மறுத்த எலிசபெத் ஜோன் என்றே பெயர்சூட்டினாள். உறவினர்கள் அனைவரும் இப்படி ஒரு பெயர் எமது குலத்திலேயே வைப்பதில்லை என்றனர். ஆனால் எலிசபெத் யார் பேச்சையும் கேட்காமல் ஜோன் என்றே அழைத்தாள்.

மேரி கர்ப்பமாக உள்ள விடையம் நிச்சயம் செய்யப்பட்ட யோசப்பிற்கு தெரிகிறது. அவளின் இந்த செயலை அவனால் ஏற்க முடியவில்லை. ஆனால் அவனுக்கு இந்த வயதான காலத்தில் இவளைவிட்டால் இவ்வளவு இளவயது பெண் எப்படி கிடைப்பாள்? அதனால் சகித்துக் கொண்டான்.

அன்றைய சட்டத்தின்படி ஒரு பெண் கணவனில்லாமல் கர்ப்பம் தரித்தால் தெருவில் நிறுத்தி கல்லால் எறிந்து கொன்றுவிடுவார்கள். யோசெப்பின் இளகிய மனம் அவள் கொல்லப்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை. தனது குலத்தை சேர்ந்த அவள் அறியாத வயதில், உணர்ச்சி வேகத்தில் தவறு செய்ததை உணர்ந்தார். கடவுள் பிள்ளை கொடுத்ததாக அவள் சொன்ன பொய்யை நம்புவதாக நடித்தார். ஆனால் சமூகம் அவர்களை விட்டுவைக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அன்றிலிருந்து அவர்களின் ஓட்டம் தொடங்கியது. தப்பித்து இருப்பதற்கு இடந்தேடி பல ஊர்களுக்கு அலைந்தார்கள். யாரும் அவர்களை ஏற்கவில்லை.

நசரேத்தில் இருந்து பல மைல்கள் தொலைவில் உள்ள நகரம் ஜெருசலேம். ஜெருசலேமின் புறச்சேரிப் பகுதியே பெத்லகேம். கொலை செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக மேரியை அழைத்துக்கொண்டு இறுதியில் பெத்தலகேமிற்கு வருகிறார் யோசெப். அவர்களுக்கு அங்கேயும் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில் மாடு அடுகளை மேய்க்கும் இடையர்கள் சிலர் அது மேய்ச்சல் காலமாக இருந்ததால் தொழுவம் ஒன்றை தங்குவதற்காக தொடுத்தனர். அந்த மாடு ஆடுகளை அடைக்கும் தொழுவத்திலேயே மேரிக்கு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு யேசுவா என்றே பெயரும் சூட்டப்பட்டது.

எலிசபெத் தான் விட்ட தவறை நியாயப்படுத்த இன்னோர் தவறைச் செய்தாள். அதனால் இன்று மேரி என்ற எதுவும் தெரியாத சிறுமி தவறானவளாக யோசெப் முன்னும் உலகத்தின் முன்னும் களங்கப்பட்டு நின்றாள். யோசப் தப்புப் பண்ணிய மேரியைக் காப்பதற்காக முனைந்தான், அதனால் தன் வாழ்விடம் விட்டு அகதியாக அலைந்தான்.

தவறை மறைக்க இன்னோர் தவறைச் செய்வது தவறுகளின் பெருக்கத்திற்கே உதவும். தவறுகள் நடக்காதிருக்க உதவாது. தவறானவர்களை காப்பாற்ற முனைபவர்களும் தவறிற்கான பலனை அனுபவிக்க நேரிடுகிறது.. இது மறுக்க முடியாத வாழ்வியல் நீதியாகும்...

(அந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருந்தது?)

தொடரும்....



No comments:

Post a Comment