Saturday 30 April 2022

ஆங்கில மொழி யாருடைய மொழி?

ஆங்கிலம் என்பது சர்வதேச மொழியா? பிரித்தானியர்களின் ஆட்சி மொழியா? பிரித்தானிய காலனித்துவ அடிமைகளின் மொழியா?

இன்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கும் பொய்களில் முதன்மையான பொய் ஆங்கிலம் சர்வதேச மொழி என்பது. இன்னொரு பொய் ஆங்கிலம் பிரித்தானிய மக்களின், பிரித்தானிய அரசர்களின் ஆட்சி மொழி என்பது.

உண்மையில் ஆங்கிலம் என்பது ஆங்கிலோ சாக்சன் என்ற இரு நாடோடி வேண்டுவ இனங்களின் கலப்பினால் உண்டான மொழியாகும். ஸ்கன்டினேவிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட ஆங்கிலோ சாக்சன் இனங்கள் ஜேர்மனி பகுதியில் சிலகாலம் வசித்து பின்னர் பிரித்தானியப் பகுதிகளை அடைந்துள்ளனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்கள் பிரித்தானியாவில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையோர வேடுவர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் கடையர்கள் என்ற கரையோர வேடுவர் சமூகத்தை ஒத்த ஒரு சமூகமாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டு சமூக மாற்றம் ஏற்படும் வரையில்; பிரித்தானிய அரசின் ஆட்சி மொழியாகவும், அரச குடும்பத்தின் தொடர்பாடல் மொழியாகவும் பிரெஞ்சு மொழியே இருந்துள்ளது. மன்னர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பிரித்தானிய பிரபுக்களும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே பேசியுள்ளனர். 

பிரித்தானிய அரசின் காலனித்துவ காலத்தில் உலகம் முழுவதும் அடிமை வியாபாரமும், அடிமைத் தொழிலாளர் பயன்பாடும் சர்வ சாதாரணமாக நடந்தது. இதனால் பல்வேறுபட்ட நாடுகளை, பல்வேறுபட்ட நாடுகளின் அடிமைகளை கட்டுப்படுத்த வேண்டிய, கட்டளை இடவேண்டிய தேவை பிரித்தானிய அரசுக்கு உருவானது. ஆனால் தம் மன்னர் குடும்பமும், பிரபுக்கள் குடும்பமும் பேசும் உயர்ந்த பிரெஞ்சு மொழியில் அடிமைகளுக்கு கட்டளை இடவோ, அடிமைகள் தங்களுக்குள் உரையாடவோ பிரித்தானிய அரச குடும்பம் விரும்பவில்லை. அதனால் பிரித்தானிய பகுதியில் வசித்த கரையோர வேடுவர்களான ஆங்கிலோ மக்களின் மொழியை அடிமைகளுக்கு கட்டளை இடுவதற்காக பயன்படுத்துவது என்றும், அடிமைகள் தங்களுக்குள் உரையாட ஆங்கிலோ மக்களின் மொழியை அனுமதிப்பது என்றும் முடிவு செய்தார்கள். 

இதன் காரணமாக பிரித்தானிய அரசின் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஆங்கில மொழியை கட்டளை இடும் மொழியாக பயன்படுத்தினார்கள், காலனித்துவ அடிமைகள் அந்த மொழியை கற்பதன் மூலம் தங்களின் கட்டளைகளை புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்பதால் அடிமைகள் அனைவருக்கும் ஆங்கில மொழியை கற்பித்தார்கள். அதுதவிர அவர்கள் அடிமைப் படுத்திய நாடுகளின் நிர்வாக மொழியாகவும் ஆங்கில மொழியைப் பயன்படுத்தினார்கள்.

அடிமைகள் அனைவரும் ஆங்கிலம் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக ஆங்கிலம் கற்ற அடிமைகளுக்கு, ஏனைய அடிமைகளை கட்டுப்படுத்தும் பதவிகளையும், பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்கிலம் பேசும் வெள்ளையின விலைமாதர்களை அழைத்து வந்து ஆங்கிலம் தெரிந்தால் அவர்களை அடைய முடியும் என்று ஆசை காட்டினார்கள். விலைமாதர்கள் அடைவதற்காக ஆங்கிலம் கற்றவர்கள் அக்காலத்திலும் அதிகம்.

பிரித்தானிய அரசு தன் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஆங்கில மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்திய போதும், தன் அடிமைகள் அடிமை விசுவாசிகள் அனைவரும் ஆங்கில மொழியை கற்று பயன்படுத்த அனுமதித்த போதும், பிரித்தானிய அரசின் அலுவலத்திலோ, மன்னரின் அரண்மனைக்குள்ளோ ஆங்கிலம் பேச அனுமதிக்கப் படவில்லை. 

ஆங்கிலம் அடிமை மொழி என்பதிலும், அடிமைகளுக்கான மொழி என்பதிலும் பிரித்தானிய அரசு மிகவும் உறுதியாகவே இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் புரட்சி ஏற்பட்டு மன்னர் வம்சத்தின் அதிகாரம் குறைக்கப்படும் வரையில் ஆங்கிலம் அரண்மனைக்கு வெளியேதான் காத்திருந்தது. அதுவரை அடிமைகளாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசில் செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு மாறினார்கள். அரண்மனைக்குள்ளும், ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார்கள்.

இதன்போது உலகம் முழுவதும் ஆங்கிலம் கற்ற பிரித்தானிய அடிமைகளே அதிகமாக இருந்தார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் பிரித்தானிய அரசின் அடிமைகள் என்பது ஓர் அடையாளமாக விளங்கியது. இதனை மறைப்பதற்காக அந்த பிரித்தானிய அடிமைகள் சேர்ந்து உண்டாக்கிய புரட்டுக்களே ஆங்கிலம் சர்வதேச மொழி என்பதும், ஆங்கிலம் கற்றவர்கள் அறிவாளிகள் என்பதும்.

ஆங்கிலம் என்பது அறிவல்ல அது ஒரு மொழி. அது சாதாரண மொழியல்ல, அடிமைகள் தங்களுக்குள் பேசவும், அடிமைகளுக்கு அவர்களின் எஜமானர்கள் கட்டளை இடவும் உருவாக்கிய மொழி.

உண்மைகளை உணர்ந்து கொள்வோம். நவநாகரீக அடிமைகளாக வாழ்வதில் இருந்து மீண்டெழுவோம்.



No comments:

Post a Comment