கிறிஸ்தவ வரலாற்றில் ஒரேயொரு முறை ஒன்பதாம் நூற்றாண்டில், பெண் ஒருவர் போப்பாக இருந்திருக்கிறார். யோயன்னா(போப் எஸ் லியோ IV) என்ற அந்த பெண் தன்னை ஏதென்ஸ் நகரத்தில் வசிக்கும் ஆண்கள் போல ஒப்பனை செய்து ரோம் நகரில் மூன்று ஆண்டுகள் கற்றிருக்கிறாள். அவளது அறிவு ஆளுமை என்பவற்றுக்கு மாணவர்கள் பெரும் பணக்காரர்கள் என்று பலரும் கட்டுப்பட்டு இருந்திருக்கிறார்கள். இதுவே அவள் எல்லோரதும் ஏகோபித்த ஆதரவுடன் போப்பாக ஆக்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
இவள் போப்பாக இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் நான்கு நாட்கள் இருந்திருக்கிறாள். ஆனால் போப்பாக இருந்தபோது அவளது காதலன் ஒருவனுடன் உறவுகொண்டு கர்ப்பம் அடைந்திருக்கிறாள். அவள் பிரசவ நாளினை அறியாமல் பயணித்துக் கொண்டிருந்த போது கோலிசௌம் சர்ச்சிற்கும் செயின் கிளமென்ட்ஸ் சர்ச்சிற்கும் இடைப்பட்ட பகுதியில் பிரசவ வலி எடுக்கிறது. அவள் அந்த பயணப் பாதையிலேயே குழந்தையைப் பிரசவிக்கிறாள்.
கிறிஸ்தவ மதத்தின் கட்டுப்பாடுகளின்படி ஒரு பெண் போப்பாக முடியாது. பெண்ணிற்கு சுயமான சிந்தனை கிடையாது என்பதும் பெண்ணே பாவத்தின் ஆரம்பம் என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கொள்கையாகும். பொதுவாக வீடுகளிலேயே பெண்களுக்கு எந்த பொறுப்பும் உரிமையும் கிடையாது. அவ்வாறு இருக்கையில் பெண் ஒருத்தி எல்லோரையும் ஏமாற்றிவிட்டு கிறிஸ்தவ மதத்தின் உயர் பதவியாக கருதப்படும் போப்பாக ஆகியிருக்கிறாள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆண்வேடம் தரித்து போப்பாகி இன்று குழந்தை பிரசவித்த யோயன்னா முன் கிறிஸ்தவ மதத்தவர்கள் ஒன்று கூடினார்கள். குழந்தை பிரசவித்த அந்த இடத்திலேயே அவளை மிகக் கொடுரமாக சித்திரவதை செய்து கொன்றார்கள். அப்போதுதான் பிறந்திருந்த அந்த பச்சிளம் குழந்தையையும் துடிதுடிக்க கொன்றார்கள்.அப்போதும் அவர்களின் வெறி அடங்கவில்லை. இனிமேலும் இவ்வாறு ஒரு பெண் போப்பாக மாற முயற்சி செய்ய கூடாது என்பதற்காக யோயன்னாவையும் குழந்தையையும் சித்திரவதை செய்து கொன்ற காட்சியை தத்ரூபமான சிலையாக செய்து அவ்விடத்தில் நிறுவினார்கள்.
இனிமேல் யாராவது ஒருவர் போப்பாக நியமனம் பெறுவது என்றால் அவர் பதவியேற்கும் முன்னர் அவரது பாவாடை அங்கிக்குள் புகுந்து அவர் ஆணா இல்லையா என்பதை இன்னுமொரு ஆண் பரிசோதனை செய்வது என்ற நடைமுறையை உண்டாக்கினார்கள். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்ந்து கடைப்பிடிக்க படுகிறது. போப் பதவியேற்கும் முன்னர் ஒரு ஆண் அவரது ஆடைகளைத் திறந்து அவர் ஆண்தான் என்று உறுதி செய்ததன் பின்னரே பதவியேற்பு நிகழ்வு நடக்கிறது.
ஆனால் யோயன்னா கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட காட்சி உருவங்கள் பதினாறாம் நூற்றாண்டில் ஐந்தாம் பியஸால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதன்பின் இன்றுவரை ஒரு பெண்ணால் போப்பாகவோ, கிறிஸ்தவ பாதிரியாகவோ ஆகமுடியவில்லை.
**(யோயன்னா)யொகென்னஸ் பாபா எனப்படும் நான்காம் எஸ் லியோ குழந்தை பெறுவதை சித்தரிக்கும் ஓவியம்