Thursday 26 January 2023

ஏலி ஏலி ஏன் பன்றியிறைச்சியை உண்ணாமல் செய்தீர்?

இவர் ஐரோப்பிய, மத்தியகிழக்கு நாடுகளில் பெரியதேவி என்று அழைக்கப்படும் எலுசிஸ் கடவுள்.

இவரது அருகில் இருப்பது பன்றி. இவர் பன்றி உருவிலும், பன்றியின் உருவில் முகமூடி தரித்தும் தோன்றுவதாக அந்த மக்கள் நம்புகிறார்கள். எலு என்ற ஆண் கடவளின் துணையாக கருதப்படுகிறார்.

எலு கடவுள் கானான் மற்றும் எகிப்திய மக்களால் அல் கடவுள் என்று வழிபடப்பட்டார். அல்லின் துணையாக அய்சிஸ்/ ஐசிஸ் என்ற கடவுள் போற்றி வணங்கப்படுகிறார்.

எலுசிஸ் கடவுளை வழிபட்ட மக்கள் நிர்ப்பந்தம் காரணமாக வேறு மதங்களை பின்பற்ற நேர்ந்த போதும் பன்றியை கடவுளாக போற்றினார்களேயன்றி அதைக் கொன்று தின்பதற்கு துணியவில்லை. ஆனால் இதனைச் சகிக்க முடியாத நிர்ப்பந்த மதமாற்ற காரர்கள் பன்றியை விலக்கப்பட்ட ஒன்றாக பிரகடனம் செய்தார்கள். அதனால்தான் அது உண்ணப்படுவதில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள்.

உண்மைகள் உறங்கலாம் ஆனால் மரணித்து விடுவதில்லை. அது என்றேனும் விழித்து எழும்.

(எலு கடவுளே ஏலி என்று விழிக்கப்படுகிறார். முருகன் என்ற கடவுளை முருகா என்று விழிப்பது போல எலு கடவுள் ஏலி என்று விழிக்கப்படுகிறார்)



No comments:

Post a Comment