Tuesday 6 August 2024

கிறிஸ்தவம் என்பது சமணர்கள் உருவாக்கிய ஒரு மதமா?

இன்றைய கிறிஸ்தவ மதம் என்பது பைபிள் என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு மத நம்பிக்கை ஆகும். அந்த மதம் ஏசு என்ற ஒருநபரை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏசுதான் ஆண்டவர், அவர்தான் அவரின் தூதுவர், அவரே அவரின் தூதுவராக பூமியில் பிறந்தார் என்பது அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் நம்பும் நம்பிக்கை.

நிற்க, அவர்களின் இந்த மூட நம்பிக்கைக்கும் சமணர்களுக்கும் என்ன சம்பந்தம், தேவையில்லாமல் சமணர்களை எதற்காக இங்கே இழுக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

சமணர்கள் என்பவர்கள் கடவுள் என்பது இல்லை, ஆன்மாக்கள் உள்ளது, அவ்வாறே வேறுபட்ட நிலைகளைக் கொண்ட ஆன்மாக்கள் உள்ளது. உயர்ந்த ஆற்றலை அறிவைக் கொண்ட ஆன்மாக்களே வழிபடப்படும் என்னும் நம்பிக்கையை உடையவர்கள்.

இந்த மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் பாலைவன நாடுகளில் அன்று இருந்தவர்கள் பலரும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து குடியேறியவர்களே. அவர்கள் தங்கள் ஆபிரிக்க பூர்வீக மதங்கள் தெய்வங்கள் நம்பிக்கைகள் என்பவற்றை சுமந்துகொண்டே குடியேறி இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து காவி வந்த ஒரு வழிபடு தெய்வமே ஏசு என்பது, அது ஈசு அல்லது ஈசா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இந்த ஏசு என்ற ஆபிரிக்க மக்களின் தெய்வம் ஒரு மனித பிறவி கிடையாது. இந்திய மதங்கள் தேவர்கள் என்பது போலவே, ஆபிரிக்க மதங்கள் ஓரிசிஸ் என்று பல்வேறு தேவர்களை வணங்கினார்கள். அவ்வாறான பலநூறு ஓரிசிஸ்களில் இந்த ஏசுவும் ஒன்று.

இந்த ஏசு என்ற ஓரிசிஸ் தூதுவராக அந்த மக்களால் வழிபடப்படுகிறார். இந்த தூதுவர் பல்வேறு தேவர்களுக்கும் தூதுவராக இருப்பதாகவும், தங்களது வேண்டுதல்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாகவும், ஏனைய தேவர்களிடம் இருந்து வரங்களை தகவல்களை எடுத்து வந்து வழங்குவதாகவும் நம்புகின்றனர். இது இந்து மதத்தின் அக்னி தேவன் யாகத்தின் பயன்களை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வதாக கூறும் நம்பிக்கையை ஒத்தது.

இந்த ஆபிரிக்க மக்களின் ஏசு என்ற ஓரிசிஸின் வழிபாடு அன்றைய காலகட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. பல்வேறு ஓரிசிஸ்களை வழிபடுவதற்கு சோம்பேறிதனம் கொண்ட மக்கள் பலர் ஏசுவை வழிபட்டால், அவர் அந்த வேண்டுதலை உரிய தேவர்களிடம் எடுத்து செல்வார் என்று நம்பி வழிபட்டார்கள்.

உலகம் முழுவதும் தமது நம்பிக்கைகளை பரப்புவதற்காக சென்ற சமணர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றார்கள். மக்களின் வழிபடு தெய்வங்களை மாற்றுவது கடினம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்த அவர்கள், மக்கள் வழிபடும் தெய்வங்களை ஒரு மனித கதாபாத்திரமாக மாற்றி ஆன்ம வழிபாடாக மாற்றும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதற்காக திட்டமிட்டு அவர்கள் உருவாக்கிய நூல்தான் பைபிள் என்பது.

அந்த நூலில் அந்த மக்களால் பேசப்பட்ட பல கதைகளை எடுத்து அவற்றுக்குள் மிக நுணுக்கமாக விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி அந்த மக்களின் பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தையே ஆட்டங்காண வைத்தார்கள். பாரம்பரிய மக்களிடம் எழுதப்பட்ட உறுதியான நூல்கள் இருப்பதில்லை. அதை சாதகமாக கொண்டு சமணர்கள் எழுதிய நூல்களே உண்மையான ஆதார நூல் என்பதாக ஒரு போலியான மாயை உண்டாகிவிடும். பைபிளும் அவ்வாறு உருவாக்கப்பட்ட போலியான ஒரு மாயையே.

அந்த நூல் காலப்போக்கில் மக்கள் வழிபட்ட ஏசு என்ற ஓரிசிஸை ஒரு மனிதப் பிறவி என்பதாக நம்பச் செய்தது. அந்த பிறப்பை கூட பலரும் பலவிதமாக கேள்விக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் வகையில் விஷமத்தனமான கருத்துக்களை புகுத்தி வைத்தது. பைபிள் ஏசு என்ற ஓரிசிஸை மட்டுமே மனிதனாக மாற்றியது என்று கூறமுடியாது. அந்த புத்தகத்தில் உள்ள பலநூறு கதைகளில் அன்றைய மக்களின் வழிபடு தெய்வங்கள் பல மனிதர்கள் என்பதாக மாற்றப்பட்டு அவற்றின் வழிபாட்டு முறைமை சிதைக்கப்பட்டது.

பைபிள் மூலம் அவ்வாறு நயவஞ்சகமாக அழித்த அல்லது இழிவு செய்யப்பட்ட இன்னொரு வழிபாட்டு தெய்வம் எஸ்தர். எஸ்தர் என்பது பண்டைய எகிப்து முதல் ஈரான் வரை சிறப்பு பெற்றிருந்த மிகப்பெரும் தெய்வம். இந்தியாவில் காளி தேவியின் வழிபாட்டு சிறப்பினை ஒத்த ஒரு தெய்வம் எஸ்தர். அந்த எஸ்தர் தெய்வத்தை ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணியாக, முறைகேடான வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஒருத்தியாக சித்தரித்து, எஸ்தர் என்றால் அது ஒரு சூழ்ச்சி மிக்க யூத பெண்மணி என்பதாக மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். இன்று எஸ்தர் வழிபாடு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

பிறப்பு இறப்பிற்கு உட்பட்டது கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பது பிறப்பு இறப்பிற்கு உட்படாதது என்பது ஆன்மீக முடிவு. அதனால் கடவுள் மறுப்பு நம்பிக்கையை கொண்ட சமணர்கள் உலகம் முழுவதும் உள்ள எல்லா மக்களினதும் வழிபடு தெய்வங்களை பிறந்த இறந்த ஒரு ஆன்மா என்பதாக கதைகளை எழுதி மக்களிடையே பரப்பினார்கள்.

இந்த பைபிள் கூறும் ஏசு, எஸ்தர் மட்டுமல்லாமல் உங்களில் பலர் வழிபடும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் பற்றிய பிறந்தார் இறந்தார் என்ற பல கதைகளும் சமணர்கள் உருவாக்கியது தான்.

பைபிளில் ஏசுவும் எஸ்தரும் மனித பிறவிகளாக மாற்றப்பட்ட அதே அணுகுமுறை தான், தமிழகம் மற்றும் கேரளாவில் பிரபலமாக இருந்த கண்ணகி வழிபாட்டை அழிப்பதற்கும் சமணர்களால் பயன்படுத்தப்பட்டது.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை எழுதிய ஒரு சமணன், மக்கள் வழிபட்டு வந்த கண்ணகி தெய்வத்தை ஒரு மானிட பெண்ணாக உருவகித்து கதை எழுதினான். கொண்டாடப்படும் இலக்கிய சிறப்பினை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அந்த கதை சென்று ஆழமாக சேர்ந்தது. முடிவு?

இன்று தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு சிறப்பினை இழந்தது மட்டுமல்லாமல் அதன் வேர்களையும் இழந்து நிற்கிறது.

கிறிஸ்தவ நண்பர்களே ஏசு என்பது மனித பிறவி கிடையாது. அவர் அன்றைய ஆபிரிக்க முன்னோர்களின் தேவன். நீங்கள் அவரை வழிபடுவது தவறல்ல.. ஆனால் அவரது நிலையை கீழிறக்க சமணர்களால் எழுதப்பட்ட பைபிளை தூக்கிச் சுமப்பது ஏசுவிற்கு செய்யும் துரோகம்.

ஏசுவை தெய்வமாக தேவனாக வணங்குங்கள். ஆனால், அவரை மனிதனாக சித்தரிக்கும் பைபிளையும் அதனைப் போதிக்கும் பாதிரிகள் பாஸ்டர்களையும் புறந்தள்ளுங்கள்.

ஏசு மனித பிறவி கிடையாது. அவர் எங்கள் ஆபிரிக்க முன்னோர்களின் ஓரிசிஸ்.



No comments:

Post a Comment