Monday, 6 December 2021

இனம் என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது

உலகளவில் மனித இனங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. உயிரியல் வகைப்பாட்டு இனங்கள்

2. மரபுவழி இனங்கள்

3. கலப்பு இனங்கள்

உயிரியல் ரீதியான தோற்றம், இயல்பு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் இனங்கள் உயிரியல் வகைப்பாட்டு இனங்கள் என்றும்.(உ+ம்: மங்கோலிய இனம், நீக்ரோ இனம், கார்கேசிய இனம்)

வாழ்வியல் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் வகுக்கப்படும் இனங்கள் மரபுவழி இனங்கள் என்றும்.( உ+ம்: யூத இனம், தமிழ் இனம், சீன இனம்)

உயிரியல் ரீதியாகவோ மரபு வழியாகவோ வகுக்க முடியாத, எந்த இனத்தினதும் வரையறைக்குள் அடங்காத, கலப்படைந்த இனங்கள் கலப்பினங்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது. கலப்பினங்கள் அவர்களின் மூதாதையர்களின் கலப்பால் உருவான புதிய அடையாளங்களைக் கொண்டு வகுக்கப்படுகின்றனர்.(உ+ம: பறங்கியர், சோனகர், ஐரோப்பிய இனங்கள்)

இந்தக் கலப்பினங்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள சொந்தமாக எந்த மரபுகளும் இல்லாத நிலையில், உலகில் உள்ள மரபுவழி இனங்களை இல்லாமல் செய்யவும், மொழிகளை அடிப்படையாகக் கொண்டு இனங்களை அடையாளப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த மரபுவழி இனங்களை அழிக்கும் முயற்சியில் கிரேக்க, ரோமானிய, அரேபிய பாரம்பரிய இனங்களும், ஆபிரிக்க, ஐரோப்பிய பாரம்பரிய இனங்களும், அமெரிக்க நாடுகளின் பூர்வீக இனங்களும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.  

பழைமைவாய்ந்த ஒருசில பாரம்பரிய இனங்களே உலகில் எஞ்சியுள்ளன. அவற்றில் எம் தமிழினமும் ஒன்று. எம் இனத்தின் மரபுகளை சிதைத்து, தமிழினத்தையும் கலப்பினமாக மாற்றும் சூழ்ச்சியில் கிறிஸ்தவ பறங்கியர்கள் பல தசாப்தங்களாக முயற்சித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ பறங்கியர்களின் முயற்சிகளை முறியடித்து எம் இனத்தின் இருப்பையும் பெருமையையும் நிலைநாட்டுவோம். பல ஆயிரம் ஆண்டுகளாக, பலநூறு தடைகளைத் தாண்டி எம்முன்னோர்கள் எமக்கு ஒப்படைத்துச் சென்ற எம் இனத்தின் மரபுகளை சிதையாது பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைப்போம்.

மதம் மாறி மரபுகளை சிதைத்தவர்கள் தமிழர்கள் கிடையாது.

தமிழர் மரபில் (சைவ மரபு) வாழும் நாமே தமிழர்கள்.

தமிழினத்தைக் காக்க சைவ மரபைப் பாதுகாப்போம்.

சர்வம் சிவமயம்.



No comments:

Post a Comment