தம் மத அடையாளங்களை அகற்றியமைக்காக பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தெருவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய அடையாளங்களை அகற்றியமைக்காக இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டவர் சிங்களவர் அல்ல. அவர் ஒரு கிறிஸ்தவர்.
அவர் எவ்விதமான மதவெறிகொண்டு இஸ்லாமிய அடையாளங்களை அழித்திருப்பார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும், உலகம் முழுவதும், ஏனைய மதங்களை, மத அடையாளங்களை அழித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் இருந்து நாம் பார்க்கக்கூடாது. சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றியதையும், மன்னார் முசலியில் கோயில் பிள்ளையாரை அகற்றியதையும், மிருசுவில் குட்டிப்பிள்ளையார் இடிக்கப்பட்டதையும் வீதி ஓரங்களை மதச்சார்பற்ற இடமாக பேணுவதற்காக என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றியவர்களையும், முசலிப் பிள்ளையாரை அகற்றியவர்களையும், மிருசுவில் குட்டிப்பிள்ளையாரை இடித்தவர்களையும் இப்படித் தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக்கொன்று எரிக்காதது எம் இந்துமதம் போதித்த சகிப்புத்தன்மையா? அல்லது இந்துக்களின் இயலாமையா? என்பதை அவரவர் மனச்சாட்சியை தொட்டுப்பார்த்து வெளிப்படுத்த வேண்டும்.
யாராக இருந்தாலும் அக்கிரமங்கள் எல்லைதாண்டும்போது, தொடர்ந்தும் அகிம்சையை கடைப்பிடிக்க முடியாது என்பதை வரலாறு தொடர்ந்தும் பதிவுசெய்தே வருகின்றது.
சர்வம் சிவமயம்.
ஹர ஹர மகாதேவா
No comments:
Post a Comment