Friday, 4 February 2022

மாறாத அடிமைவாழ்வும் கொன்சலீற்றாக்களும் -சிறுகதை

 யாழ் ஆயர் இல்லம் சுறுசுறுப்பாக இயங்கியது. ஊடகங்களும், செய்தி கேகரிப்பாளர்களும் பெரும்பாலும் ஆயரில்ல அடிமைகளாக இருப்பதால் அவர்களின் வேலை கடினமாக இருக்கவில்லை. செய்தி எவற்றிலுமே பங்குத்தந்தைகளின் பெயரோ படமோ வராமல் பார்த்துக் கொண்டார்கள்.

மறுநாள் பத்திரிகைகளில் குருநகர் இளம் யுவதி தற்கொலை என்று மட்டுமே செய்திகள் வெளியாகின. ஆனால் சில இணையதள ஊடகங்கள் மட்டுமே குருநகர் சர்ச்சின் உதவிப் பங்குத்தந்தைகள் இருவரே மரணத்திற்கு காரணம் என்றும், இது தற்கொலை அல்ல கொலை என்றும் செய்தி வெளியிட்டன. இறந்த யுவதியின் உறவினர்கள் சிலர் பங்குத்தந்தைகளின் அச்சுறுத்தலை மீறி போராட்டத்தில் இறங்கினர். கொல்லப்பட்ட கொன்சலீற்றாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று வீதியில் நின்று போராடினர்.

பெண்ணின் தாயும் தந்தையும் தம் மகளின் மரணத்திற்கு பங்குத் தந்தைகள் இருவரே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பங்குத்தந்தைகள் இருவரும் தன் மகளை படுக்கைக்கு அழைத்ததை ஊடகங்கள் முன்னால் போட்டுடைத்தனர். பிரச்சினை நாடு முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக மாறிவிட்டது.

குருநகர் கிராமம் யாழ்ப்பாணம் நகரை ஒட்டிய கரையோர மீன்பிடி கிராமம். போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள் இங்குள்ள பெரும்பான்மை மக்கள். 

மேற்கு ஆபிரிக்காவின் அடிமை விற்பனை கட்டுப்பாடு முழுவதும் அன்று போர்த்துக்கேய அரசிடம் இருந்தது. மொரோக்கோ, செனகல், சியாரா லியோன் என்று பல்வேறு அடிமை சந்தைகளில் இருந்து போர்த்துக்கேயரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கருவாடு பதனிடல், சுண்ணாம்பு சூளைகள், மற்றும் மீன்பிடித் தொழில் என்பவற்றில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களின் அடிமைத்தனம் மாறாதிருக்க மதம்மாற்றியும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியும் புதிய சந்ததியாக உருவாக்கின கத்தோலிக்க சபைகள்.

அடிமை முறை ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அனால் இவர்களின் அடிமை வாழ்வு மாறவில்லை. இவர்களை நவீன அடிமைகளாகவே உருவாக்கி வைத்திருக்கிறது கிறிஸ்தவ மிசநரி. அந்த அடிமை வாழ்வின் துயரமே இப்போதும் அரங்கேறுகிறது. பல சம்பவங்கள் மறைக்கப்பட சில சம்பவங்கள் அவ்வப்போது வெளிப்படுகின்றது. அப்படி வெளியே தெரிந்த கிறிஸ்தவ கொடூரமே கொன்சலீற்றாவின் படுகொலை.

கொல்லப்பட்ட பெண் தொடர்பில் ஆயர் இல்லத்திற்கு எந்த வருத்தமும் இல்லை. தம் கிறிஸ்தவ அசிங்கம் வெளியே தெரிந்துவிட்டது என்பது மட்டுமே அவர்களின் ஒரே கவலை. அதை எப்படியாவது மடையாற்றிவிட வேண்டும். எத்தனை கோடி கொடுக்கவும் தயாராக இருந்தது ஆயர் இல்லம். ஆயர் இல்லத்தால் எலும்பு துண்டுகள் வீசப்பட்டன, பாய்ந்து சென்று லாவகமாக கவ்வின தமிழ் தேசிய கிறிஸ்தவ அடிமைகள். கொலைகார பங்குத் தந்தைகளுக்கு முட்டுக்கொடுத்து அறிக்கைகள் பறந்தன.

கொல்லப்பட்ட யுவதி கொன்சலீற்றாவிற்கு 22 வயதுதான் ஆகியிருந்தது. சர்ச்சிற்கு செல்லும் போதுதான் அவளைப் பார்த்தார்கள் பாதிரியார்கள். உதவிப் பங்குத்தந்தைகள் இருவருக்கு அவள் மேல் தீராத மோகம் உண்டாகிவிட்டது. அவளை அடைவதற்கான வழிகளைத் தேடினார்கள். பின் அவர்களுக்கு தோன்றியது தான் மறைக்கல்வி கற்பித்தல் எனும் இலகுவான வழி. படித்து விட்டு தாதியர் பயிற்சிக்கு சென்ற கொன்சலீற்றாவை மறைக்கல்வி கற்பிப்பதற்கென்று சர்ச்சிற்கு அழைத்துள்ளனர். பங்குத்தந்தை அழைப்பதால் அவளும் சம்மதித்தாள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை முடிந்ததும் மறைக்கல்வி வகுப்பு என்பது கொன்சலீற்றாவின் வாடிக்கை ஆனது.

ஒருநாள் மதிய வேளை. மறைக்கல்வி முடிந்து வீடு செல்லப் புறப்பட்டாள் அவள். அப்போதுதான் அறைக்குள் இருந்து இருவரும் அழைத்தார்கள். அழைப்பது பங்குத் தந்தைகள் அல்லவா. உள்ளே சென்றாள். கதவுகள் மூட்பட்டன. இரண்டு பங்குத் தந்தைகளுக்கும் மாறிமாறி இரையாகிப்போனாள் அவள். 

அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள். பங்கம் செய்தது பங்குத் தந்தைகள். அவள் எதுவும் வெளியே சொல்லவில்லை. அவள் பரம்பரை அடிமைத்தனம் அதற்கான தைரியத்தையும் கொடுக்கவில்லை. இப்போது மறைக்கல்விக்கு செல்வதை மட்டும் நிறுத்திவிட்டாள்.

பங்குத் தந்தைகள் இப்போது ருசிகண்ட பூனைகள். அவளை விடாமல் விரட்டினார்கள். பகிரங்கமாக படுக்கைக்கு அழைத்தார்கள். அவள் பயந்துபோய் இருந்தாள், பலமுறை அழைத்தும் செல்லவில்லை. ஒருமுறை படுத்துவிட்டாய் இனி என்ன பயம் என்று தொலைபேசி வழியே மிரட்டினார்கள்.

ஒருநாள் கொன்சலீற்றா வீட்டில் தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். எதிர் முனையில் பேசியவன் அவளை மிரட்டினான். "நீ வரலன்னா, நீ எங்க கூட படுத்த வீடியோவை வெளியில விட்டிடுவம், உன் வாழ்கையையே நாசமாக்கிடுவம், நான் ரொம்ப கோவக்காரன்" என்று மிரட்டினான். "பயமாக இருக்கு, என்ன விட்டிடுங்க ஃபாதர்" என்று அவள் கெஞ்சலாக கேட்ட வார்த்தை அவள் தாயின் காதில் விழுந்தது.

"எதுக்குடி பயமாயிருக்கு, யார்டி போன்ல" என்று போனைப் பறித்துப் பார்த்த தாய்க்கு அதிர்ச்சி. எதிர்முனையில் குருநகர் சர்ச்சின் பங்குத் தந்தைகளுள் ஒருவன். தொலைபேசியை அணைத்துவிட்டு, "எதுக்குடி பயமாயிருக்குன்னு சொன்ன? என்னடி கேட்டார் ஃபாதர்? சொல்லுடி.." அவள் தாய் உறுக்கிக் கோட்டாள். கொன்சலீற்றா அழுதுகொண்டே நடந்ததைச் சொன்னாள். 

சில நாட்களாக அவளை எங்கும் விடுவதில்லை. அவள் வீட்டிலேயே இருந்தாள். அவர்கள் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஆயர் இல்லத்தில் சொன்னாலும் எதுவும் நடக்காது. எங்கு சென்றாலும் நீதி கிடைக்காது, ஊர் பேரைச் சொன்னாலே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எல்லாவற்றையும் அவர்களே முடிவுசெய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனால் அதிலும் ஒரு விடயத்தை தாயிடம் மறைத்துவிட்டாள் கொன்சலீற்றா.

ஒருமாதம் கடந்துவிட்டது. கொன்சலீற்றா வீட்டார் எந்த சட்ட நடவடிக்கைக்கும் இறங்கவில்லை. வீட்டிற்கு தெரிந்துவிட்டது, ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்று பயத்தில் இருந்த பங்குத் தந்தைகளுக்கு இப்போது துணிச்சல் வந்துவிட்டது. மீண்டும் அவளிடம் பேசினார்கள். ஏதோ தெரியாமல் செய்தது போலவும் திருந்திவிட்டதுபோலவும் நடித்தார்கள். "வீடியோ இருக்கும் மெமரி கார்ட உங்கிட்டயே கொடுக்கிறம், நீயே கொண்டு போய் உடச்சு வீசிடு" என்று நயவஞ்சகமாக பேசினார்கள். அவர்கள் சொன்னதை அவள் அப்பாவித்தனமாக நம்பினாள். யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோவை அழித்து விடவேண்டும் என்று நினைத்தாள். அவர்களின் பேச்சை நம்பி வீட்டிற்கு கூட சொல்லாமல் ஒரு மாலை வேளையில் அவர்களிடம் சென்றாள். 

அங்கே போன பின்புதான் அவர்களின் வஞ்சகம் தெரிந்தது அவளுக்கு, மெமரி கார்டை கொடுக்கவில்லை. "ஒரேயொரு முறை எங்ககூட படுத்திடு மெமரி கார்டை கொடுக்கிறம்" என்று கேவலமாக பேரம் பேசினார்கள். அவளால் எதுவுமே பேசமுடியவில்லை. அவள் இயலாமை கண்ணீராய் ஒழுகியது. பங்குத் தந்தைகளுக்கு இப்போது காமம் கட்டுக்குள் இல்லை. மாதங்கள் கடந்த தவிப்பு. மாறிமாறி அவளை மடிநனைக்க வைத்தார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது. முன்பு வீடியோ எடுத்தாக சொல்லி அவர்கள் மிரட்டியது பொய். உண்மையில் இப்போதுதான் அவர்கள் வீடியோ எடுத்திருந்தார்கள். இதை கொன்சலீற்றாவின் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. "இனி உனக்கு பயமில்லைதானே, நாங்க கூப்பிடுறப்ப எல்லாம் வா, இப்பதான் உண்மைல வீடியோ எடுத்தம், நாங்க கூப்பிட்டு நீ வரலைன்னா உன் வாழ்கையையே சீரழிச்சிடுவம்" என்று அவளுக்கு பயம்காட்டினார்கள். அவள் இப்போது வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டாள். ஏமாற்றம் இயலாமை எல்லாம் கோபமாக மாறி நின்றது. "நீங்க என்ன என்னோட வாழ்க்கையை நாசமாக்கிறது. நான் உங்க எல்லாத்தையும் தெருவில நிக்க வைக்கிறேன்" என்று ஆத்திரத்தில் கத்தினாள். அவள் இப்போது முழுக்க நனைந்துவிட்டாள். இனி முக்காடு தேவையில்லை. இவர்களைப் பழிவாங்குவது என்று வெளியே புறப்பட்டாள்.

அப்போதுதான் பங்குத் தந்தைகளுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அவளை மிரட்டி பணிய வைத்து தொடர்ந்து அனுபவிப்பதுதான் அவர்களின் நோக்கம். இப்படி அவள் மாறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. பிரச்சினை வெளியே போனால் சிக்கலாகிவிடும். முடிந்தவரை சமாளிக்க முனைந்தார்கள். அவர்கள் ராஜதந்திரம் எல்லாம் அவள் விரக்தியின் முன்னால் தோற்றுவிட்டது. வெள்ளைப்பாவாடைகளுக்கு வேறு வழியே தெரியவில்லை. தங்கள் சுயரூபத்தை எடுத்தன. அவளைப் பிடித்துச் சென்று மறைவான அறை ஒன்றுக்குள் அடைத்தார்கள். விடியும்வரை அவளை மாறிமாறி சிதைத்தார்கள். விடிந்துவிட்டது. நேரமோ பத்துமணி ஆகிவிட்டது. இனியும் வைத்திருந்தால் எல்லாம் பிழைத்துவிடும் என்று நினைத்தார்கள். அவளைத் அப்படியே தூக்கிச் சென்று பின்னால் உள்ள கிணற்றுக்குள் போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அவள் தத்தளித்து மூச்சுத்திணறி துடிதுடித்தாள். அப்படியே அடங்கிவிட்டாள்.

பொலிஸ் விசாரணை, மரணப் பரிசோதனை எல்லாம் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் நின்றது. பங்குத் தந்தைகளைக் காப்பாற்ற வழக்குரைஞன் அன்ரன் ஆஜரானான். இவன் கிரிமினல் லோயர். ஆயரில்லத்தின் ஆஸ்தான அடவகேட். சட்டத்தின் ஓட்டைகள் இவனுக்கு அத்துப்படி. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் தமிழ் பெண் வழக்கறிஞர் தலைமையில் சில தமிழ் வழக்கறிஞர்கள் ஆஜராயினர். 

இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகளோ வேறுயாருமோ இல்லை. மருத்துவ பரிசோதனை அறிக்கையே வழக்கின் முடிவைத் தீர்மானிக்கும் ஒரே ஒரு சான்றானது. ஆயரில்லமும் அன்ரனும் தீயாய் வேலைசெய்தார்கள். சட்ட வைத்திய அதிகாரி ஏற்கனவே இவர்கள் தொடர்பில் உள்ளவன்தான். பெட்டிகளில் கோடிகள் கைமாறியது. நீதி விலை பேசி விற்கப்பட்டது.

விசாரணைக்காக மன்று கூடியது. சட்ட வைத்திய அதிகாரி சாட்சி சொன்னான். "அந்த பெண் நீரில் மூழ்கியதால் மட்டுமே உயிரிழந்துள்ளாள். அவள் இன்னும் கன்னித்தன்மை கூட இழக்கவில்லை" என்று. கொடுத்த காசுக்கு ஒரு படி மேலே போய் கூவிவிட்டான். நீதிபதிக்கே அதிர்ச்சியில் இருந்து மீள சில நிமிடங்கள் பிடித்தது.

அவரால் இதை ஏற்காமல் மறுக்க முடியாது. மீண்டும் பொலீசாருக்கு பணித்தார் நீதிபதி. தொலைபேசி விபரங்கள், தொலைபேசி அழைப்பு பட்டியல் எல்லாவற்றையும் ஆராய சொன்னார். ஆனால் அங்கேயும் விலைபோய்விட்டனர் பலர். 

பாவம் நீதி என்ன செய்வது? நீதிபதி என்ன செய்வார்? ஆதாரங்கள், சாட்சிகள் இன்றி எப்படி தண்டிப்பது. கொன்சலீற்றா மரணத்திற்கு குறித்த இரண்டு பங்குத்தந்தைகளும்தான் காரணம் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் மனறம விடுவித்தது.

நீதிமன்றத்தை ஏமாற்றிய திருப்தியில் ஆயரில்லமும் பங்குத் தந்தைகளும் மகிழ்ந்தன. சட்டத்தரணியையும், சட்ட வைத்திய அதிகாரியையும் தலையில் வைத்துக் கொண்டாடின.

சில வருடங்கள் கடந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட வைத்திய அதிகாரி சிறைக்குள் சென்றுவிட்டான். ஆயுதங்களை வைத்திருந்தது, நாட்டிற்கு எதிராக பிரிவினைவாத குழுவை உருவாக்கியது என்பது இவன் கையும் களவுமாக மாட்டிய குற்றங்கள். ஒன்றில் ஏமாற்றி இன்னொன்றில் மாட்டுவதுதானே மனிதர்கள் வாடிக்கை. இவனும் அப்படித்தான்.

கொன்சலீற்றா வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததால் முதல் குற்றவாளி இவனல்லவா? அதனால் முதலிலேயே தண்டனை கிடைத்ததுவிட்டது.

மற்றவர்களும் தமக்கான காலத்திற்காக காத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களை ஏமாற்றி யார் வேண்டுமானாலும் தப்பிக்கலாம். ஆனால் காலம் யாரையும் தப்பிக்க விடுவதில்லை.



No comments:

Post a Comment