Friday, 4 March 2022

தடம்மாறிய தர்மினி- சிறுகதை (மதமாற்றம் இல்லை மனமாற்றம்)

"பிள்ளை இண்டைக்கே எல்லாத்தையும் ஆயத்தபப்டுத்து நாளைக்கு காலையில வெளிக்கிட வேணும்" என்று ஏரம்பர் சொல்லவும் தர்மினிக்கு பலநூறு பட்டாம்பூச்சிகள் வந்து அவளைத் தூக்கிச் செல்வது போல இருந்தது. இந்த வார்த்தைக்காகத்தானே கொழும்பில் இத்தனை நாட்களாக காத்திருந்தாள். விடுதியின் குறுகிய அறைக்குள் இருந்தவாறே அகலப்பறந்து சென்றது அவள் மனம். பலவருட காதல் கைகூடப்போகும் சந்தோஷத்தில் அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

தர்மினிக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் மூளாய். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே காந்தனை காதலிக்க ஆரம்பித்து விட்டாள். காதலிக்கும் போது வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் போராட்ட இயக்கம் ஒன்றில் சேர்ந்துவிட்டான் அவன். 

காந்தன் சேர்ந்த இயக்கம் கம்யூனிசம், பொதுவுடைமை என்ற சிந்தனைகளுடன் இருந்ததால் அவனுக்கு தர்மினியின் நினைப்பே வரவில்லை. சக பெண்தோழர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தர்மினியை முழுவதுமாக மறந்துவிட்டான். பின் போராட்ட இயக்கங்களுக்குள் பிரச்சனை ஏற்பட காந்தன் நாட்டைவிட்டு ஓடி லண்டனுக்கு போய்விட்டான். 

லண்டன் போனபிறகு தான் தர்மினியின் நினைப்பே காந்தனுக்கு வந்தது. போராட்ட இயக்கங்களில் இருந்தவர்களுக்கு பொதுவாக யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். காந்தனுக்கு இலங்கைக்கு வரவும் முடியாது. ஸ்பொன்சர் பண்ணி பெண்ணை கூப்பிட காந்தனுக்கு விசாவும் இல்லை. வேற வழியில்லாமல் தர்மினிக்கு தொடர்பெடுக்க, வெளிநாட்டு மாப்பிள்ளை, பழைய காதலன் என்ற சந்தோஷத்தில் இவ்வளவு நாளும் கதைக்காததை கூட மறந்து தர்மினியும் சம்மதித்து விட்டாள்.

இப்போது பல நாட்களாக லண்டன் செல்வதற்காக கொழும்பில் உள்ள ஒரு விடுதியில் காத்திருக்கிறாள் தர்மினி. வெளிநாடு போற எல்லா ஒழுங்கையும் காந்தனே செய்தான். கொஞ்சம் கடினமான பயணம் என்று அவளுக்கும் தெரியும். வெளிநாட்டு மாப்பிள்ளை, காதல் என்ற இரண்டு மயக்கமும் ஒன்று சேர்ந்து அவளை எல்லாவற்றுக்கும் துணிய வைத்தது.   

ஏரம்பர்தான் அவளின் கொழும்பு ஏஜென்சி. ஏரம்பர் நாளைக்கு பயணம் என்று சொன்னதும் கற்பனையில் பறந்தவள் பயணத்துக்கு தேவையான பொருட்களை ஒழுங்கு படுத்தவும் வாங்கவும் என்று ஆலாய்ப் பறந்தாள். அன்று முழுவதும் அவளுக்கு தூக்கமும் வரவில்லை. 

காலையில் ஏரம்பர் வருவதற்கு முன்பே தயாராக இருந்தாள் தர்மினி. கட்டுநாயக்கா சென்று விமானத்தில் ஏறியதும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம். முதலாவது விமான பயணம் என்ற பயங்கூட காதலனிடம் போகும் மகிழ்ச்சியில் காணமல் போய்விட்டது. புறப்பட்ட விமானம் பாங்கொங்கில் தரையிறங்கியது. காந்தனுடன் இயக்கத்தில் ஒன்றாக இருந்த தயாளன்தான் விமான நிலையத்தில் வந்து அவளை அழைத்துச் சென்றான். அவன்தான் அவளின் அந்த நாட்டின் ஏஜென்சி. வெளிநாடு செல்ல வந்த பல ஆண்களுடன் ஒரு வீட்டில் அவள் மட்டும் ஒரே பெண்ணாக தங்கினாள். அவர்கள் அனைவரும் அவளிடம் கண்ணியமாகத்தான் நட்துகொண்டார்கள். ஆனால் காந்தன் போராட்ட இயக்கத்தில் செய்த கர்மங்களின் பலன் அவனது சக இயக்க நண்பனின் வடிவில் வந்து நின்றது. தர்மினியை அவ்வப்போது வந்து அழைத்துச் செல்வான் தயாளன். தன் தேவைகள் முடிந்ததும் கொண்டுவந்து விட்டுவிடுவான்.

முதல் முறை அவன் அழைத்துச் சென்று ஆசைக்கு இணங்க வைத்தபோது மாட்டேன் என்று சொல்லி அடம்பிடித்தாள் தர்மினி. கல்யாணம் பண்ண போகும் கணவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லி கற்புக்கரசி போல் வசனம் எல்லாம் பேசினாள். ஆனால் வெளிநாட்டு வாழ்வில் இதுவெல்லாம் சாதாரணம், காந்தன் இயக்கத்தில் இருந்தபோதே பல பெண்களை அனுபவித்து விட்டான், நீ மட்டும் இப்படி இருந்து என்ன சாதிக்கப்போகிறாய் என்று சொல்லியும், இங்கே எனக்கு சம்மதிக்காமல் எப்படி அவனிடம் சென்று சேர்வாய் என்று மிரட்டியும் சம்மதிக்க வைத்துவிட்டான் தயாளன். 

அந்த வாழ்க்கை அவளுக்கும் பிடித்துப்போக சிலாநாட்கள் அப்படியே அவனுடன் போய்வந்தாள். பின் சிலநாட்கள் கடந்து இன்னுமோர் பயணம். தென்கொரியாவில் போய் இறங்கினாள் தர்மினி. அவளோடு நின்ற ஆண்களும் அவளுடனேயே வந்தார்கள். ஏற்கனவே வந்துநின்ற சிலருடன் ஒரு வீட்டில் தக்கவைக்கப் பட்டார்கள். ஏற்கனவே வந்து நின்றவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். சில நாட்களில் அடுத்த பயணம். வடகொரியாவில் தொடங்கி ரைஷ்யா கடந்து ஜெர்மனிவரை செல்லும் நீண்ட பயணம். பெலாரஸ், போலந்து என்று தனியான நாடுகள் தோன்றாத காலம் அது. ஜேர்மனி வரை ரஷ்யாவின் எல்லைகள் நீண்டிருந்தது. வாரக்கணக்கில் தொடருந்திலேயே செல்லவேண்டும். பொதிசெய்து விற்கும் ரொட்டியையும் தண்ணீரையும் மட்டுமே நம்பிய நீண்ட பயணம். அவர்கள் யாருக்கும் எங்கே செல்கிறோம், எங்கே இறங்கவேண்டும் என்று எதுவுமே தெரியாது.  

வாரங்கள் கடந்த தொடருந்து பயணத்தின் பின் தொடருந்து நிலையம் ஒன்றில் ஏறிய ஒருவன் இவர்களை தொடர்பு கொண்டான். அவன் என்ன மொழி பேசுகிறான் என்று அவர்களுக்கு புரியவில்லை. அவன் தமிழன் இல்லை என்பது மட்டுமே புரிந்தது. நிலையமே இல்லாத ஒரு இடத்தில் "குதித்து வா" என்று சொல்லி விட்டு தொடருந்தில் இருந்து குதித்து நடக்கலானான். அவனுக்கு தெரிந்த ஒரே தமிழ் வார்த்தை "குதித்து வா" மட்டுந்தான். புற்களின் மேல் பனி படர்ந்திருந்தது. ஓடும் ரயிலில் இருந்து ஆண்கள் குதித்து அவன் பின்னால் நடந்தார்கள். தர்மினியும் மனதைக் கல்லாக்கிவிட்டு குதித்தாள். முகங்குப்பற விழுந்தாலும் அவளுக்கு எதுவும் ஆகவில்லை. எழுந்து துடைத்தவாறு நடப்பவர்கள் பின்னால் நடக்கலானாள். இவர்களுடன் வந்த ஒருவன் குதித்தபோது கால் உடைந்துவிட்டது. திரும்பி பார்த்தால் முனகிக்கொண்டு கிடக்கிறான். முன்னால் போனவர்கள் யாரும் நிற்கவில்லை. இவளும் நிற்கவில்லை நடந்தாள். கால் உடைந்து கிடப்பவனை யார் காப்பாற்றுவார்கள்? அல்லது காப்பாற்ற ஆளில்லாமல் பனியில் உறைந்து செத்துவிடுவானா? குழந்தைகளுடன் வந்த அந்த பெண்மணி என்ன செய்வார்? அவரும் குதித்து நடப்பாரா? பிள்ளைகள் நட்பார்களா? பிள்ளைகளை தூக்கிக்கொண்டு நடக்க முடியுமா? அவள் மனம் எங்கெங்கோ போனது. யாரையும் நின்று பார்க்க முடியாது. முன்னால் செல்பவனை விட்டுவிட்டால் யாருமில்லாத இந்த பனிப்பாலைவனத்தில் இவளை யார் காப்பாற்றுவார்கள். குளிர்வேறு உயிரைக் குடித்தது. குளிருக்கு போட்ட ஆடைகளைக் கடந்தும் குளிர்ந்தது.

அவன் நடந்துகொண்டே இருந்தான். அவர்களும் நடந்து கொண்டே இருந்தார்கள். அவளும் அவர்கள் பின்னால் நடந்து கொண்டே இருந்தாள். வாரக்கணக்கில் நடக்காமல் பயணத்தில் சலித்தவர்கள இப்போது நடந்து சலித்தார்கள். பனிமலைகள், பனிக்காடுகள் கடந்து நீண்ட நடைபயணம். நடக்க முடியாத சிலர் பனியோடு பனியாக உறைந்துவிட ஏனையவர்கள் ஒருவாறு திருட்டு வழியால் ஜேர்மனியை அடைந்தார்கள்.

ஜேர்மனிக்கு வந்தவர்கள் வேறு வேறாக பிரிந்தார்கள். தர்மினி மட்டும் ஒரு ஐரோப்பிய குடும்பத்துடன் காரில் அனுப்பப்பட்டாள். பிரான்ஸ் பிரிட்டன் எல்லைகள் கடந்து காந்தனிடம் கொண்டு வந்து சேர்த்தது அந்த ஐரோப்பிய குடும்பம்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வாழ்க்கையை தொடங்கினாள் தர்மினி. ஆனால் வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே அவளுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. காந்தன் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தான். தர்மினியை எடுத்ததால் அவன் கடனாளியாக மாறியிருந்தான் . கடன், வட்டி என்று அவனை நெருக்க இரண்டு மூன்று என்று வேலை செய்தான். ஆனால் இத்தனை கஷ்டங்களை கடந்து பெரிய பெரிய எதிர்பார்ப்புகளோடு வந்தவள் வாழ்வில் ஏதுமில்லாதது போன்ற வெறுமையை உணர்ந்தாள். 

மொழிக் கல்வி என்று வெளியே சென்றவளுக்கு எமில்டா என்ற புதிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். வாழ்வில் வெறுமையை உணர்ந்த அவளை வாரந்தவறாமல் எமில்டா சர்ச்சுக்கு அழைத்துச் சென்றாள். அங்கு தன் ஆண் நண்பர்களையும் அறிமுகம் செய்துவைத்தாள். சில நாட்களிலேயே தர்மினியின் வாழ்க்கை மாறியது. அவள் இப்போது மதம் மாறிவிட்டாள். இல்லை இல்லை அவள் மனம் மாறிவிட்டாள். பாங்கொங்கில் இருந்த போதே ஒருமுறை மனம் மாறியவள் அல்லவா. இப்போது எமில்டாவின் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்க ஆரம்பித்து விட்டாள்.

தர்மினி இப்படி வெளியே சுற்றித்திரிவதும் தவறான உறவில் ஈடுபடுவதும் காந்தனுக்கு தெரிய பிரச்சினை பெரிதாகி சில நாட்களிலேயே குடும்பம் பிரிந்துவிட்டது. அவள் வாழ்க்கை அப்படியே முழுவதுமாக மாறிவிட்டது. 

எமில்டாவின் தொழிலே இதுதான். ஊழியம் என்ற பெயரில் வாழ்வில் ஏக்கத்துடன் இருக்கும் பெண்களை மூளைச்சலவை செய்து தொழிலில் ஈடுபடுத்துவதுதான். இப்போது குடும்பத்தை விட்டும் பிரிந்துநின்ற தர்மினியை மேற்கு லண்டனுக்கு அழைத்துச் சென்றாள். அது ஒரு விபச்சார விடுதி. மேற்கு லண்டனில் வத்திக்கானால் நடத்தப்படும் பலநூறு விபச்சாரி விடுதிகளில் ஒன்று. அதிலேயே தர்மினி விடப்பட்டாள். ஐந்து நட்சத்திர விடுதிகளின் சொகுசு மற்றும் தரத்தில் நடத்தப்படும் விபச்சாரவிடுதி அது. புதிதாக தொழிலுக்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக அது அவ்வாறு நடத்தப்படுகிறது. தொழிலுக்கு பழக்கப்பட்டவுடன் சாதாரண விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். 

காந்தன் தர்மினியை எடுத்த கடனுக்காகவும் வட்டிக்காகவும் இப்போதும் இரண்டு மூன்று வேலைக்கு ஓடிக்கொண்டே இருக்கிறான். தர்மினிக்கு எதையும் சிந்தித்து பார்க்க நேரமில்லை. குடும்பத்தை பிரிந்ததைப் பற்றியோ, இந்த தொழிலில் ஈடுபடுவதைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை. 

அவள் இளமை இன்னமும் தீரவில்லை. மேற்கு லண்டன் தொழிலுக்கு அவள் பழக்கப்பட்டு விட்டாள். அதனால் அவள் இப்போது வேறு விடுதிக்கு மாற்றப்பட்டுவிட்டாள். ஆனால் தொடர்ந்தும் வத்திக்கானின் விடுதி ஒன்றிலேயே அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறாள். 

ஆம்... தர்மினிக்கு நடந்தது மதமாற்றம் இல்லை மனமாற்றம்.



No comments:

Post a Comment