ஈசரின் ஆலயத்திற்கு நாட்கல் வைத்தது முதல் ஊர் விழாக்கோலம் பூண்டு விட்டது. ஆலயம் அமைத்து முடியும் வரை எந்த தடங்கலும் வந்துவிடக்கூடாது என்று மக்கள் பலரும் விரதம் பூண்டு விட்டார்கள். ஈழநாட்டின் மன்னன் நாப்பிரசிற்கு இது ஒரு மாபெரும் கனவு. ஈழ நாட்டின் தலைநகர் ஊரில் எப்படியாவது ஒரு பேராலயத்தை அமைக்க வேண்டும் என்பது அவனது நீண்டநாள் ஆசை. மன்னனின் விருப்பமும் மக்களின் விருப்பமும் ஒன்றாகவே இருந்தது. ஈசரின் ஆலயத்தை காண பேரவா எழுந்துவிட அனைவரும் இரவு பகலாக உழைத்தார்கள்.
ஊரில் இப்போது எந்த குற்றச் செயலும் நடப்பதில்லை. ஒழுக்கம் தவறி வாழ்ந்தவர்கள் பலரும் ஒழுக்கசீலர்களாக மாறிவிட்டார்கள். மக்கள் அனைவரும் அன்பாகவும், அன்னியோன்யமாகவும் ஆகிவிட்டார்கள். வரலாற்றில் ஊர் ஒருபோதும் இப்படி இருந்ததில்லை. படைகளும் மிக பலமாகவே இருந்தது. பார்சியா, சுமேரியா, பாபிலோன், அசுரியா, பாத்தீனியா என்று சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் நாப்பிரசு மன்னனுடன் நட்போடு இருக்கவே விரும்பின. தெற்கெல்லை முழுவதும் கடலாக இருந்தாலும் வருவதற்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.
படைபலம், செல்வவளம் என்று சிறப்பாக ஆட்சிசெய்த மன்னனுக்கு இந்த பேராலயம் அமைந்தால் வரலாற்று சிறப்பும் சேர்ந்துவிடும். ஆனால் தப்பான தொழில் செய்த சிலருக்கு இது பிடிக்கவில்லை. ஆலய பணி தொடங்கியது முதல் எல்லோரும் நல்லவர்களாக மாறியதால் தப்பான தொழில்கள் எதையும் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு மன்னன் மேல் கோபமும், பயமும் வந்துவிட்டது. எல்லோரும் திருந்தி விட்டால் எதிர்காலத்தில் அவர்கள் தொழிலே செய்ய முடியாது.
அவ்வாறு பயந்தவர்கள் ஒன்றாக கூடினார்கள். மன்னனுக்கு எதிராகவும், ஆலயம் அமைப்பதை எதிர்த்தும் மக்களைத் தூண்டினார்கள். மன்னன் பகட்டிற்காக செய்கிறான் என்று பரப்புரை செய்தார்கள். மக்கள் பசியால் வாட வானுயரும் ஆலயம் தேவைதானா என்று வஞ்சகமாய் பேசினார்கள். வானுயர கோயில் அமைத்தால் கடவுளுக்கு முட்டிவிடும், கடவுளுக்கு கோபம் வந்துவிடும் என்று அறிவில்லாத மக்களை ஏமாற்றி , அவர்களைக் கொண்டே ஆலயம் அமைப்பதை நிறுத்த முயற்சித்தார்கள்.
இவை எல்லாவற்றையும் மன்னன் பொறுமையாக வேடிக்கை பார்த்தான். அவன் பலம் அவனுக்கு தெரிந்ததால் அச்சப்பட வில்லை. ஆனால் மக்களுக்கு பொறுமையில்லை, கிளர்ந்தெழுந்து விட்டார்கள். கோயில் அமைக்க இடையூறு செய்தவர்களை நாட்டை விட்டே விரட்டி அடித்தார்கள். அவ்வாறு ஈழ நாட்டின் தலைநகர் ஊரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஒருவன்தான் அபிராம். அவன் தனது தந்தை, மனைவி சாரா, சகோதரனின் மகன் லோத்து என்பவர்களை அழைத்துக் கொண்டு நாட்டைவிட்டு தப்பி ஓடினான். ஓடும் போதும் அடுத்தவர்களின் ஆடு மாடுகள், குதிரைகள் என்பவற்றையும் திருடிக்கொண்டே ஓடினான்.
இவ்வாறு கலகம் விளைவித்து விரட்டப்பட்டவர்களை அயல் நாடுகளும் ஏற்கத் தயாராக இல்லை. ஈழ மன்னனையும், மக்களையும் பகைத்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. தப்பித்து போன அபிராம் சுமேரியாவைக் கடந்து கானான் நாட்டிற்குள் சென்றான். தனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றிக்கொண்டான். தந்தை மனைவி பெறாமகனுடன் மக்கள் இல்லாத ஒரு மலைக்கிராமத்தில் தங்கினான். இவனைப் போலவே விரட்டப்பட்ட சிலரும் அவர்களுடன் வந்து சேர்ந்தார்கள். திருடிக்கொண்டு வந்த ஆடுமாடுகள் குதிரைகள் என்று வாழ்க்கை வசதியாக இருந்தாலும், கல்யாணம் ஆகி பலவருடங்கள் கடந்தும் குழந்தைகள் இல்லாதது அபிராமிற்கு பெரும் குறையாகவே இருந்தது. திருட்டுச் சொத்து நிலைக்காது அல்லவா? சிறிது காலத்திலேயே கொள்ளை நோய், வறட்சி என்று வந்துவிட, கால்நடைகளும் இறந்து வறுமை சூழ்ந்துவிட்டது.
வறுமையின் கொடுமை இங்கு வாழமுடியாது என்ற நிலையை உருவாக்கியது. இனியும் இங்கிருந்து பயனில்லை என்பதால் எகிப்து நோக்கி புறப்பட்டார்கள். போகும் வழியில் ஆபிரகாமிற்கு ஒரு பயம் வந்துவிட்டது. வயதாகிவிட்டது அவன் தோற்றத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் மனைவி சாரா இப்போதும் ஒப்பனையுடன் இளமையுடனும், அழகுடனும் இருந்தாள். அவள் தன் தொழிலுக்காக உடலை எப்போதும் பராமரித்தே வந்தாள். எகிப்தியர்கள் தன் மனைவியை அடைவதற்கான தன்னை கொன்றுவிடுவார்கள் என்று அச்சமடைந்தான். மனைவியும் சேர்ந்து கொன்றுவிட்டு யாருடனேனும் சென்றுவிடுவாளோ என்று சந்தேகப்பட்டான். எகிப்தின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னரே மனைவியின் காலில் விழுந்த கெஞ்சினான் ஆபிரகாம். எகிப்திற்குள் சென்றபின்னர் தன்னை கணவன் என்று சொல்லக்கூடாது என்றும், சகோதரர் என்று சொல்லவேண்டும் என்றும் சத்தியம் வாங்கினான். அவளும் சம்மதித்து சத்தியம் செய்தாள்.
ஆபிரகாம் குழுவினர் எகிப்திற்குள் சென்றார்கள். அழகான பெண் ஒருத்தி குழுவுடன் வந்திருக்கும் செய்தி மன்னனுக்கும் சென்றது. ஆபிரகாம் குழுவினரை அரண்மனைக்கு அழைத்து விருந்து வைத்தான் மன்னன். சத்தியம் செய்ததுபோல் தன்னை தங்கை என்றே அறிமுகம் செய்தாள் சாரா. ஆபிரகாமின் மனைவியை மன்னனுக்கும் பிடித்துவிட்டது. அவன் தங்கை என்று நம்பி ஆடு மாடுகள் பெண் கழுதைகள் என்பவற்றையும் அவற்றை மேய்ப்பதற்கு அடிமைகள் சிலரையும் ஆபிரகாமிற்கு அளித்துவிட்டு சாராவை அந்தப்புரத்தில் சேர்த்தார்.
மனைவியை கூட்டிக் கொடுத்து பெற்ற ஆடு மாடுகள் பெண் கழுதைகள் என்பவற்றையும், அடிமைகளையும் வைத்து வாழ்க்கையை ஓட்டலானான் ஆபிரகாம். அவன் வாழ்க்கை வசதியாக மாறிவிட்டது. இவன் மனைவி அந்தப் புரத்திற்குள் போனதுமுதல் மன்னன் வாழ்க்கை பீடை பிடித்தது போல் ஆகிவிட்டது. அவளிடமிருந்து தொற்றிய பால்வினை நோயினால் அவன் வாழ்க்கை அவதியாக மாறிவிட்டது. என்ன நடந்தது என்று ஒற்றர்களை வைத்து விசாரணை செய்தான்.
ஒற்றர்கள் கண்டறிந்த உண்மை மன்னனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. சாரா ஆபிரகாமின் தங்கை இல்லை மனைவி என்பதும், அவர்கள் ஈழநாட்டில் தப்பான தொழில் செய்து கலகத்தில் ஈடுபட்டு விரட்டப்பட்டவர்கள் என்பதும் அப்போதுதான் தெரிந்தது. மன்னன் தன் பால்வினை நோய்க்கான காரணத்தை அறிந்து ஆத்திரம் கொண்டான். ஆனாலும் மன்னன் மிகவும் கருணையுள்ளவன். யாரையும் கொல்லவில்லை. சாராவை அந்தப்புரத்தில் இருந்து விரட்டினான். ஆபிரகாம் குழுவை நாட்டைவிட்டே விரட்டினான்.
அந்நேரம் ஈழத்தின் தலைநகர் ஊரில் ஆலய வேலைகள் முடிந்து திருவிழா ஆரம்பமாகி இருந்து. தன் நோய் தீர வேண்டி ஈழநாட்டிற்கு புறப்பட்டான் எகிப்து மன்னன். அவன் வேண்டுதல் பொய்க்கவில்லை. ஈழம் சென்று திரும்பும் போது அவன் நோய் இல்லாமல் போயிருந்தது.
ஆபிரகாம் சாரா லோத்து தன் அடிமைகள் என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கானானுக்கு வந்தான். ஆம் மன்னன் அவர்களுக்கு கொடுத்த கால்நடைகள் அடிமைகள் எதையும் திரும்பப் பெறவில்லை. ஆபிரகாம் மனைவியை விட்டு வாங்கிய கால்நடைகளுடன் மறுவாழ்வை ஆரம்பித்தான்.
ஆபிரகாம் அடிமைப் பெண்ணாக வைத்திருக்கும் ஒருத்திக்கு குழந்தை ஒன்று பிறந்தது. எகிப்து மன்னனிடம் இருந்து வந்த ஆபிரகாம் மனைவிக்கும் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த இரண்டு குழந்தைகளிலும் இருந்து இஸ்லாமிய யூத கிறிஸ்தவ இனங்கள் ஆபிரகாமின் சந்ததிகளாக உருவாகிப் பரவினார்கள்.
இன்றும் அவர்கள் சந்ததிகள் ஆலயங்கள் அமைப்பதை எதிர்ப்பதையும், நல்லது செய்யும் ஆட்சியாளர்களை எதிர்ப்பதையும், தப்பான தொழில்கள் செய்வதையும் வழக்கமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அது அவர்களின் தப்பில்லை. மனைவியை விட்டு வாழ்க்கை நடாத்திய ஆபிரகாமின் மரபணுக்களில் இருந்து உண்டாகும் தப்பு.
குறிப்பு: ஈழம் என்பது இன்றைய ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த ஒரு நாடாகும். அந்த நாட்டின் தலைநகர் பெயர் ஊர்.
ஆதாம் ஏவாள் வயதே பிபிலியத்தின்படி 6600 வருடங்கள்தான். ஆனால் தமிழர்களின் முதல் தமிழ் சங்கத்தின் வயது 10000 வருடங்களுக்கு மேல்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் நாகரீகத்தின் பெயர் எலாம் (Elam)......... ஈழம் என்பதல்ல.
ReplyDeleteஅது எலாம் இல்லை. ஈழம் என்பது தான். பனை ராட்சியம் என்ற பொருளில் பல்மைரா எம்பெயார் என்றே குறிப்பிடப்படுகிறது.
Deleteஅந்த பெரிய கோயிலின் சிதைவுகள் இன்றும் உள்ளது. அது சோழா அன்பில் சிகரம் என்ற பெயரிலேயே இன்றும் குறிக்கப்படுகிறது
Delete