Tuesday 19 April 2022

ஆவிகள் மட்டும் அலைவதில்லை- (ஆவியான ஞாயிறு) பைபிள் உருவான கதை

ஓநாய்களின் ஊளையும், பேய்க்குருவிகளின் கூச்சலும் இரவின் அமைதியை இல்லாமல் செய்தது. சூனியக்காரர்களின் இராக்கூச்சல்கள் அச்சத்தை கூட்டியது. அந்த பைப்லஸ் மலைப்பகுதி முழுவதும் என்றுமில்லாதவாறு சப்தங்களால் அதிர்ந்தது. இரவு முழுவதும் எழுந்த கூச்சல்கள் மலைகளைத் தாண்டி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் திகிலைக் கூட்டியது. 

பைப்லஸ் மலைப்பகுதியில் மக்கள் யாரும் வசிக்காததால் சூனியக்காரர்கள், தீய ஆவிகளை வணங்குபவர்களின் உறைவிடமாகவே அது மாறியிருந்தது. துர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளை கொண்டு மக்களை ஆட்சிசெய்வதும், இவ்வுலகை ஆவிகளை வழிபடும் உலகமாக மாற்றுவதுமே அந்த சூனியக்காரர்களின் நோக்கம். ஆனால் இவ்வாறான சூனியக்காரர்கள் மக்கள் வசிக்கும் ஊர்களுக்குள் செல்லமுடியாது. அந்த பகுதிகளை ஆட்சிசெய்த ரோமானிய பாகன்களும், அருகில் இருந்த யூத, கானானிய சிற்றரசுகளும் இந்த சூனியக்காரர்களை அடியோடு வெறுத்தார்கள். ஊர்களுக்குள் சூனியக்காரர்கள் நுழைவதையே தடை செய்தார்கள். அப்படி விரட்டப்பட்ட சூனியக்காரர்கள்தான் பைப்லஸ் மலைகளிலும், ஏனைய மக்கள் வசிக்காத காடுகளிலும் அடைக்கலம் புகுந்தார்கள். ஆனாலும் மாறு வேடங்களைத் தரித்து அவ்வப்போது ஊர்களுக்குள் சென்றார்கள். 

இறைவழிபாட்டாளர்களை, தெய்வ நம்பிக்கைகளை அழித்து; மக்களை இறந்தவர்களின் தீய ஆவிகளை வழிபட வைப்பதும், இவ்வுலகை ஆவிகளுக்குரிய உலகமாக மாற்றுவதுமே இந்த சூனியக்காரர்களின் இலட்சியம். அவ்வாறு ஆவிக்குரிய உலகமாக மாற்றும் முயற்சியில் பலவருடங்கள் பயிற்சி பெற்று மாறுவேடத்தில் சென்ற ஒருவனை; ரோமானியர்கள் பிடித்து; சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டார்கள். அவ்வாறு சிலுவைத் தண்டனை பெற்று இறந்தவனின் உடலை இரவோடு இரவாக பைப்லஸ் மலைப்பகுதிக்கு கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி கொண்டுவந்த உடலைச் சுற்றி முட்டிபோட்டு நின்று கூச்சலிட்டு அதன் ஆவியை அழைத்தார்கள். சூனியக்காரர்கள் ஆவியை அழைத்த அவலக் கூச்சல் தான் மலைகளை கடந்து; மக்கள் வாழும் பகுதிகளையும் திகில் கொள்ள செய்திருந்தது.

அந்த சூனியக்காரர்கள் பெண்கள் உடுத்தும் கவுண் போன்ற ஆடைகளை அணிந்திருந்தார்கள். தங்கள் தலைமுடியை தெரியாதவாறு மறைத்திருந்தார்கள். முட்டி போட்டு இருந்து இரண்டு கைகளையும் அகலத்தூக்கி புரியாத வார்த்தைகளால் ஆவியை அழைத்தார்கள். இடுப்பில் பட்டி ஒன்றை கட்டியிருந்தார்கள். முட்டி போட்டிருந்து வணங்குவது ஆவி வழிபாட்டின் முக்கிய அம்சம். தலைமுடி தெரிந்தால் துர் ஆவிகள் உள்ளிறங்காது ஓடிவிடும் என்பதால்; ஆவிகளை வழிபடுபவர்கள் தலைமுடிகள் தெரியாதவாறு மறைத்தே இருப்பார்கள். தீய ஆவிகள் தம் மரணத்திற்கு காரணமான பொருட்களை தேடி வரும் என்பதால் சிலுவை ஒன்றை செய்துவைத்து ஆவியினை அழைத்தார்கள். விடிய விடிய கூச்சல் போட்டு; ஆவிகளை அழைத்த சூனியக்காரர்கள்; கொண்டு வந்த பிணத்தை சுற்றியிருந்து பிய்த்துத் தின்றார்கள். அதில் அழுகி ஒழுகும் ஊனத்தை இரத்தம் என்று சொல்லி குடித்தார்கள். அவர்களின் செயல்கள் அருவப்பானதாகவும், திகில் கொள்ளும் படியானதாகவும் இருந்தது. அவர்கள் எத்தனையோ அவலச்சாவு அடைந்தவர்களின் ஆவிகளை தமது நோக்கத்தை அடைவதற்காக பயன்படுத்த முனைந்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஆவிகள் உயிரோடிருந்தபோது வணங்கிய குல தெய்வங்கள் இவர்களின் முயற்சிகளைத் தடுத்துவிடும். அதனால் சூனியக்காரர்களுக்கு இந்த உடலும் இதனுடைய ஆவியும் மிகவும் முக்கியமானது. இவன் பன்னிரண்டு வயது முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆவிக்குரிய உலகத்தை நிறுவுவதற்காக இவர்களுடன் ஒன்றாக பயணித்தவன். போதைப் பொருள் பழக்கம், விபச்சாரிகள் தொடர்பு, திருடர்கள் சகவாசம் என்று இவனைவிட தீய ஆவியை காண்பது அரிது. இவன் ஆவிகளைத் தவிர்த்து குலதெய்வம், இறைவன் என்று ஏதொன்றையும் வணங்கியவன் இல்லை. இவனது ஆவியைப் பயன்படுத்தி ஆவிக்குரிய உலகை உருவாக்குவதை எவராலும் தடுக்க முடியாது என்று அந்த சூனியக்காரர்கள் நம்பினார்கள்.

அந்த அடர்ந்த மலைக்காட்டில்; பகல் எது இரவு எது என்று தெரியாமல் பொழுதுகள் நீண்டது. அவலச்சாவு அடைந்தவர்களின் பிணத்தை உண்டு அதன் இரத்தத்தை குடிப்பவர்களில் ஒருவனுக்கு அதன் ஆவி வசப்படும் என்பது ஆவிகளை வழிபடுபவர்கள் நம்பிக்கை. பிணத்தை உண்டு இரத்தத்தின் ஊனத்தை குடித்து 'அல்லேலூயா' என்று கூச்சலிட்டு ஆவியை அழைத்தார்கள். அந்த சூனியக்காரர்களின் நோக்கம் வீண்போகவில்லை. அவர்களில் ஒருவனுக்கு அந்த சிலுவையில் செத்தவனின் ஆவி வசப்பட்டது. இந்த அவலத்தில் செத்தவனின் தீய ஆவியை வைத்தே மக்களை நம்பவைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள். இறைவழிபாட்டைவிட ஆவி வழிபாடே சிறந்தது என்றும் ஆவிகள் வழிபாடு வல்லமை மிக்கது என்றும் மக்களை நம்ப வைக்க முடிவு செய்தார்கள்.

முதலில் இறந்தவனின் நண்பர்களை நம்பவைக்க முடிவு செய்தார்கள். பொதுவாக மரணம் அடைந்தவர்களது ஆவி தான் வசித்த இடங்களையும், பழகிய நபர்களையும் சுற்றிச் சுற்றியே வரும். அவற்றால் வெளிப்பட முடியாது. ஆனால் துர்மரணம் அடைந்தவர்களது ஆவிகளை மற்றவர் கண்களுக்கு தோன்றச்செய்ய முடியும். அதுகூட ஒரு மண்டலம் வரையிலேயே செய்விக்க முடியும். அதன் பின்னர் பொதுவாக அந்த ஆவிகள் தன்நிலையை இழந்து சிதைத்துவிடும். இந்த சூனியக்காரர்கள் சிலுவையில் இறந்தவனின் ஆவியை அவனது நண்பர்கள் இருக்குமிடங்களில் தோன்றசசெய்தார்கள். அவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். சிலுவையில் இறந்தவனின் நண்பர்கள் பலர் ஆவிகளை வழிபடும் வழக்கம் உள்ளவர்களாதலால் அவர்களிடம் இறந்தவனின் ஆவியை தோன்றச் செய்வது இலகுவாக இருந்தது. இறந்த ஆவி சிதைந்து போகும் ஒரு மண்டலம் வரையில் சிலருக்கு தோன்றவும், சிலருக்கு இறந்தவனின் குரலை ஒலிக்கவும் செய்ய முடிந்தது. ஆனால் முழுமையாக அவனது உருவை காணவோ, குரலை கேட்கவோ எவராலும் முடியவில்லை.

மாறுவேடம் தரித்த சூனியக்காரர்கள் ஊருக்குள் புகுந்து மக்களிடையே பேசினார்கள். இறந்தவனின் ஆவியை அரைகுறையாக கண்டவர்களை, குரலை அசுமாத்தமாக கேட்டவர்களை துணையாக வைத்து இறந்தவன் உயிர்த்து வந்ததாக நம்ப வைத்தார்கள். புத்தி குறைந்தவர்கள் பலர் அதையும் நம்பினார்கள். ஆனால் மக்கள் யாரும் இறந்தவனை ஒருபோதும் காணவில்லை. ஆவிகளை வழிபட்டால் இறந்தபின்பும் உயிர்க்க முடியும் என்று ஆசை காட்டி மக்களை ஆவிகளை வழிபட ஊக்குவித்தார்கள். 

அப்போதுதான் சிலுவையில் இறந்தவனின் ஆவியை வைத்தே; ஆவிக்குரிய உலகமாக மாற்றும் அவர்களின் திட்டத்தில்; எதிர்பாராத தடைகளாக குலதெய்வங்கள் குறுக்கே வந்தன. ஆசை காட்டியதால் ஆவி வழிபாட்டிற்கு மாறியவர்களுக்கு, அதுவரை அவர்கள் வழிபட்ட குலதெய்வங்கள் வந்து உண்மையை உணர்த்தி நின்றன. தாம் புதிதாக வணங்குவது துர் ஆவிகள் என்ற உண்மையை உணர்ந்ததும் பலர் ஆவி வழிபாட்டில் இருந்து விலகிச் சென்றுவிட்டார்கள். மக்களை ஆவி வழிபாட்டிற்கு கஷ்டப்பட்டு அழைத்து வருவதும், அவர்கள் உண்மை உணர்ந்து தப்பித்து செல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சூனியக்காரர்களால் உலகம் முழுவதையும் ஆவிக்குரியதாக மாற்ற முடியவில்லை. ஆனாலும் பல நாடுகளில் பலரை மாற்றிவிட்டார்கள். அதுபோல் அவர்கள் தங்களின் வேடங்களையும் மாற்றிவிட்டார்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் ஆவி வழிபாட்டு உலகமாக மாற்ற முடியவில்லை என்பதுதான் சூனியக்காரர்களின் ஒரே கவலை. அதையும் மாற்றிவிடத் துடித்தார்கள். ஒருநாள் சூனியக்காரர்கள் எல்லோரும் ஒன்றாக கூடினார்கள், ஆவி வழிபாட்டை பரப்புவதற்கு தடையாக இருப்பது மக்களின் அறிவும், அவர்கள் வழிபடும் குலதெய்வங்களும் என்று ஒருமனதாக ஒத்துக் கொண்டார்கள். மக்களின் அறிவை மழுங்கச் செய்வதும், குலதெய்வ வழிபாட்டை இல்லாமல் செய்வதும் ஆவிக்குரிய உலகை நிறுவுவதற்கு அவசியம் என்றார்கள். மக்களை அறிவற்றவர்கள் ஆக்குவதற்கும், குலதெய்வ வழிபாட்டை இல்லாமல் செய்வதற்குமான கோட்பாடுகளை பைப்லஸ் மலையில் இருந்து நூலாக உருவாக்கினார்கள். தீய ஆன்மாக்கள் தான் ஆவியாக அலையும் என்பதை மறைத்து தூய ஆவி என்று இல்லாத ஒன்றை நம்ப வைக்கும் கற்பிதங்களை உருவாக்கினார்கள். பைப்லஸ் மலையில் இருந்து உருவானதால் அந்த நூல் பைபிள் என்றே பின்னாளில் பெயர் பெற்றது.

சூனியக்காரர்கள் அனைவரும் தாம் தரித்த புதிய வேடங்களில் எல்லா நாடுகளுக்கும் செல்வது என்றும்; யுத்தம், பசி, பட்டினி என்று உண்டாக்கி; சிந்திக்க முடியாத அறிவற்ற மக்களாக மாற்றுவது என்று சபதம் செய்தார்கள். ஆவிகளை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் குலதெய்வங்களும், காவல் தெய்வங்களும் குறுக்கே வரக்கூடாது என்றும் அதனால் அவற்றை சாத்தான்கள் என்றும், தீயவை என்றும் கூறி மக்களை நம்பச் செய்வது என்றும் முடிவு செய்தார்கள். 

அந்த சூனியக்காரர்களின் சூழ்ச்சிப் பயணம் நாடு நாடுகளான தொடர்ந்தது. குலதெய்வங்கள் கூடாது என்றார்கள். அவை சாத்தானின் வடிவங்கள் என்றார்கள். அவர்களின் பேச்சை நம்பி குலதெய்வங்களை கைவிட்டவர்கள் தீய ஆவிகளை வழிபடும் அற்பர்களாக மாற்றப்பட்டார்கள். அறிவற்ற மந்தைகளாக, தன் இனத்தின் பெருமை மறந்த தற்குறிகளாக ஆனார்கள். ஆனாலும் அவர்களால் உலகம் முழுவதையும் ஆவிக்குரியதாக மாற்ற முடியவில்லை. 

இறைவழிபாட்டை இறுகப் பிடித்தவர்களும், குலதெய்வங்களை குடும்பங்களில் போற்றியவர்களும் இன்னமும் அறிவு பொருந்திய பெருமைமிகு மக்களாகத்தான் வாழ்கிறார்கள். 

ஆனாலும் சூனியக்காரர்கள் தம் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ஒரு கையில் சிலுவை, மறு கையில் ஆவிக்குரிய பைபிள் நூல் என்று அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆவிகள் மட்டுமல்ல, ஆவிகளை வழிபடுபவர்களும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.



No comments:

Post a Comment