Monday, 28 August 2023

புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறித்தவ டாக்டர்+போதகர் துரை..

பலநூறு பெண்கள் மற்றும் சிறுமிகளை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய குற்றத்திற்காக இவருக்கு புலிகளின் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த இவரது சகாக்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கிறித்தவ குழுவினர் சிறுவர்கள் இளைஞர்கள் பலரை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுகளும் அந்த வழக்கில் பதிவாகி இருந்தது.

இந்த வழக்கில் சுமார் 120 பெண்கள்,சிறுமிகள் நேரடியாக தாம் பாலியல் வல்லுறவுக்கு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக துரை டாக்டர் என்பவரின் மகன் உட்பட 250 இற்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. தந்தையும் அவரது பதின்ம வயது மகனும் சேர்ந்து சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக அந்நாளில் பரவலாக பேசப்பட்டது. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த அவரது அவரது தனியார் வைத்தியசாலையில் வைத்தே பல குற்றச்செயல்கள் நடந்தமை வழக்கில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. சில குற்றச் செயல்கள் உடையாகட்டு மற்றும் விசுவமடு பகுதிகளில் உள்ள அவரது கிளினிக் நிலையங்களில் நடந்ததுள்ளது. 

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கிறித்தவ சபை இவரால் உருவாக்கப்பட்டதுதான். பின்னால் கிறித்தவ சபை முன்னால் மெடிக்கல் கிளினிக் என்று ஒருசேர நடத்தி வந்தார். பாடசாலை மாணவிகள், புலிகள் இயக்க பெண் உறுப்பினர்கள் உட்பட பலர் இவர்களால் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது வழக்கில் உறுதிசெய்யப்பட்டது. 

புலிகளின் காலத்தில் குழு ஒன்றினால் நடந்த மிகப் பெரிய பாலியல் வல்லுறவு சம்பவங்களாக இவை பதிவாகி இருந்தது. புலிகள் இந்த பாலியல் குற்றவாளி டாக்டருக்கும் அவரது சகாக்களுக்கும் தண்டனை வழங்கியதை அடுத்து கிறித்தவ அமைப்புக்கள் பரபரப்பாக செயற்பட்டன.

குறித்த வைத்தியர் ஒரு கிறிஸ்தவர் என்பதாலும் கிறித்தவ மதம் மரணதண்டனையை தற்போது எதிர்ப்பதாலும் அவரது மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று போப்பாண்டவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அன்றைய நாளில் பிபிசி தனியான பெட்டக நிகழ்ச்சி ஒன்றையே நடத்தியிருந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவர் கத்தோலிக்கர் கிடையாது. பெந்தகோஸ்து சபையை சேர்ந்தவர். முன்பு கத்தோலிக்கராக இருந்தவர். ஆனால் கத்தோலிக்க வத்திக்கான் போப்பாண்டவர் இவரது மரண தண்டனையை நிறுத்தும்படி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கிறிஸ்தவ சபைகளின் கடுமையான அழுத்தத்தை அடுத்து புலிகள் பகிரங்கமாக மரணதண்டனை விதிப்பதை கைவிட்டனர். 

இந்த சம்பவங்கள் வழக்கு தண்டனை என்பவை அனைத்தும் 2000 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த துரை டாக்டருக்கு இரகசியமான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் அவரது உடல் யாரிடமும் கையளிக்கப்படவில்லை. அதனால் அவருக்கு உண்மையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதா அல்லது கிறித்தவ மிஷனரிகளினதும் வத்திகானதும் அழுத்தத்தால் கைவிடப்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

ஆனால் பின்னாளில் அவரது மகன் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அவர் வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார் என்றும் கூறுகின்றனர்.



No comments:

Post a Comment