Thursday, 10 August 2023

நவாலி புக்காரா விமான தாக்குதல் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

யாழ்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற காலத்தில் நவாலி பகுதியில் சென். பீட்டர்ஸ் சர்ச் சர்ச் மீது விமானதாக்குதல் நடைபெற்றது என்றும் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் ஒரு செய்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது. உண்மையில் நடந்தது என்ன?

யாழ்பாணத்தை மீளக் கைப்பற்றும் இராணுவத்தின் நடவடிக்கை நடந்தபோது மக்கள் வன்னியை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்போது நவாலிக்கு வடக்கே இருந்த மக்கள் நவாலி வழியாக இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு செல்லும்போது நவாலி சின்னக்கதிர்காமம் ஆலயத்தில் நீர் அருந்திவிட்டு சென்றனர். அதற்கு முன்னால் உள்ள ஒரு சர்ச்சுத்தான் இந்த சென். பீட்டர்ஸ் சர்ச். அது வீதியில் இருந்து சற்று உள்ளே உள்ளது.

இந்த சென். பீட்டர் சர்ச் புலிகளின் ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும் புலிகள் தாக்குதல் ஒன்றுக்காக தயார்ப்படுத்தல் செய்யும் இடமாகவும் இருந்தது. மக்கள் யாரும் சர்ச்சுக்குள் இல்லை. புலிகள் சர்சுக்குள் இருப்பது பாதிரிகளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் பாதிரிகளின் முடிவைக் கேட்டு செயற்பட புலிகள் தயாராக இல்லை. பின்னாளில் மடுவிலும் அதுதான் நடந்தது. பாதிரிகள் நயவஞ்சகமாக திட்டம் போட்டார்கள். புலிகளையும் வெளியேற்ற வேண்டும். தமது சர்ச்சுக்கு முன்னால் இருக்கும் அந்த சிறிய முருகன் ஆலயத்தையும் ஒருசேர இல்லாமல் செய்ய வேண்டும் என்று.

மக்கள் தண்ணீர் குடித்துச் செல்லும் முருகன் ஆலய சூழலில் காவல் நடவடிக்கைக்காக புலிகள் ஆயுதங்களுடன் நின்றார்கள். அதை ஆலயத்திற்கு எதிராக பயன்படுத்த நினைத்த பாதிரிகள் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு ஒரு தகவலை அனுப்புகிறார்கள். "நவாலி சின்ன கதிர்காமம் முருகன் ஆலயத்தில் புலிகள் தங்கி இருக்கிறார்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்று இரவே தாக்குதல் நடத்த தயாராகிறார்கள்" என்பதே அது.

இராணுவம் தனது முன்னேற்ற நடவடிக்கைகளை பாதிக்கும் எந்த விடயத்தையும் அனுமதிக்காது தானே. அவர்கள் தாக்குதலுக்கு தயாராகும் புலிகளையும், பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களையும் விமான தாக்குதல் மூலம் அழிக்க முடிவு செய்கின்றார்கள். இன்று இரவே தாக்குதல் நடத்த தயாராகிறார்கள் என்று பாதிரிகள் தகவல் அனுப்பியதன் சூழ்ச்சி, வியாபார நிறுவனங்கள் இன்று மட்டுமே தள்ளுபடி என்பது போன்றது. அந்த தகவலை இராணுவம் சரிபார்க்க அவகாசம் கொடுக்க கூடாது என்பதே அவர்களின் நோக்கம். இராணுவமும் அந்த சூழுச்சியில் சிக்கியது. அவசர அவசரமாக விமான தாக்குதல் நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டது. 

மாலை 5 மணிக்கு பின்னர் புக்காரா விமானங்கள் தாக்குதலுக்கு புறப்பட்டன. ஆனால் பாதிரிகள் அனைவரும் அந்த இடத்தை விட்டு அதற்கு முன்னரே பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். புக்காரா வந்தது. சின்னக் கதிர்காமம் முருகன் கோயில் மீது குண்டு வீசியது. முருகனின் அருளோ என்னவோ முருகனின் முன்னால் விழுந்த குண்டுகள் வெடிக்கவில்லை. அடுத்தடுத்து விமானம் வீசிய குண்டுகள் தகவல் கொடுத்த பாதிரிகளின் சர்ச் வளாகத்திலேயே விழுந்து வெடித்தன. இறுதியாக வீசப்பட்ட ஒரு குண்டு சென்.பீட்டர்ஸ் சர்ச்சின் மீதே சரியாக விழுந்தது. சர்ச் உள்ளே இருந்த குண்டுகளால் வெடித்துச் சிதறியது. அத்துடன் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டன.

இந்த தாக்குதலில் பாதிரிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிய, அரச நிவாரணங்களை மதமாற்றும் நோக்கில் வழங்கிய அரச அதிகாரிகள் புலிகள் உட்பட சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர். வீதியால் சென்ற, இங்கே நடக்கும் எந்த சூதும் அறியாது அவ்விடத்தில் ஓய்வெடுக்க தங்கிய மக்கள் சிலரும் அந்த இறந்தவர்களில் அடக்கம்.

போர்த்துக்கேயர் காலத்தில் முருகன் கோயிலை இடித்து கட்டப்பட்ட ஒரு சர்ச்சுத்தான் இந்த சென் பீட்டர்ஸ் சர்ச். பின்னாளில் இந்துக்கள் அந்த சர்ச்சுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய இடத்தில் முருகன் கோயிலை மீளமைத்துக் கொண்டனர். அதுதான் இந்த சின்னக் கதிர்காமம் முருகன் கோயில். ஆனால் அது இருப்பது கூட பாதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாமல் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தன்வினை தன்னைச் சுட அவர்களின் சர்ச்சே சுடுகாடாக மாறியது.  

கடவுள் இருக்கான் குமாரு..

தாக்குதல் நடந்தது சர்ச்சில், சர்ச் முழுவதும் நிர்மூலம் ஆகியது, ஆனால் பாதிரிகள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை, அது எப்படி சாத்தியம் என்று சிந்திக்க முடியாத முட்டாளாக உன்னை மாற்றியது யார்? எப்போது சிந்திப்பாய் தமிழா?



No comments:

Post a Comment