Friday 22 September 2023

யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் யார்?

அதற்கு முதலில் கிழக்கிந்திய கம்பெனி தெரியுமா? ஓ.. தெரியுமே பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபார குழுமம் என்றுதானே நினைக்கிறீர்கள். அது சரிதான். ஆனால் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதில் கிடையாது. அதுதவிர டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி என்றும் ஒரு குழுமம் இருந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் பின்னால் பிரித்தானிய அரசகுடும்பமும், அரசும் எவ்வாறு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருந்ததோ அதுபோல், டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு பின்னால் ஒல்லாந்த அரசும், அரசகுடும்பமும் இருந்தது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக வந்ததாக கூறிக்கொண்டாலும் கிழக்கிந்திய கம்பெனி எமது நாடுகளை ஆண்டதும், அவர்களிடம் இருந்தே பிரித்தானிய அரசுக்கு இந்த நாடுகளின் ஆட்சி அதிகாரம் கைமாற்றம் செய்யப்பட்டதும் வரலாறு.

இந்த கிழக்கிந்திய கம்பெனி போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல வியாபார குழுமங்கள் இங்கே இருந்துள்ளன. வியாபார குழுமங்கள் என்றால் அது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அமைப்பு கிடையாது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகள் சேர்ந்த ஒரு சங்கமாக இருந்தது. அந்த வியாபார குழுக்கள் தமது பாதுகாப்பிற்காக தனியான பாதுகாப்பு படைகளையும் வைத்திருந்துள்ளனர். பல நாடுகள் அதனை அனுமதித்து இருக்கின்றன.

வாதாபி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இந்த வாதாபியை மையமாகக் கொண்டும் ஒரு வியாபார குழுமம் இருந்துள்ளது. அதில் பல்வேறு உப குழுக்களும் இருந்துள்ளது. அவை தனியான கொடி தனியான சில பழக்க வழக்கங்கள் என்பவற்றையும் கொண்டிருந்தன. இந்த வாதாபியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு வியாபார குழுமம் இடப கொடியை தமது கொடியாக கொண்டிருந்துள்ளது. இந்த வியாபார குழுமம் இன்றைய கர்நாடகம், தமிழகம், ஆந்திரம், இலங்கை போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. 

வாதாபி சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்தி அவர்கள் குழுமம் இயங்கினாலும், சோழ பாண்டிய பல்லவ பகுதிகளிலும் செல்வாக்கும் சிறப்பு உரிமைகளும் பெற்றவர்களாகவே இருந்தார்கள். இன்றைய பல்தேசிய கம்பெனிகள் எல்லா நாடுகளிலும் செல்வாக்கு பெற்றிருப்பது போல. சாளுக்கிய இராச்சியம் மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர் என்று கலிங்கப்பகுதியிலும் ஆந்திரப் பகுதியிலும் விஸ்தரிப்பு செய்யப்பட்ட போது இந்த வியாபார குழுமமும் அந்த பகுதிகளை மையப்படுத்தி இயங்க ஆரம்பித்தது.

பிற்கால சோழ இராச்சியம் வலுவிழந்து சோழர் பெயரில் சாளுக்கியர் ஆளும் நிலை வந்தபோது, குலோத்துங்கன் காலத்தில் சோழ இராச்சியத்திலும் இவர்களின் செல்வாக்கு ஏனைய வணிக குழுக்களை விட மேலோங்கி இருந்தது. இந்த சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்திய வணிக குழுவினர் வளஞ்சியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் பட்டாரகியை வழிபட்டார்கள், இவர்களின் கொடியாக இடபக்கொடி இருந்தது என்று கூறப்படுகிறது. பட்டாரகி என்பது இன்று பத்ரகாளி, மாகாளி, பிடாரி என்று கூறப்படும் உக்கிரமான பெண் தெய்வ வடிவத்தை குறிக்க கூடியது. பட்டாகத்தி என்று கூறப்படும் பெரிய கத்தியைக் கையில் வைத்திருக்கும் தெய்வ வடிவம் பட்டாரகி என்பதாக அல்லது பட்டாரகி தெய்வம் வைத்திருக்கும் கத்தி என்பதால் அது பட்டாகத்தி என்பதாக ஆகியிருக்கலாம். பட்டாரகியை வழிபடுபவர்கள் என்பதால் பட்டாரகர் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். 

யாழ்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் உருவான ஒரு ஆட்சியாளர்களாக அறியப்படுகிறார்கள். இது சோழ பேரரசு வலுவிழந்து சோழர்கள் பெயரில் சாளுக்கியர் ஆட்சியில் அமர்ந்த காலப்பகுதியாகும். சோழ பேரரசின் பெயரிலேயே சாளுக்கியர் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்றால் அன்றைய பாண்டியர்கள் என்பவர்களும் பாண்டியர் பெயரிலான சாளுக்கியர் என்றே கொள்ளவேண்டும். சமகாலத்தில் வலுவான இருந்த சோழ பேரரைசையே சோழர்கள் பெயரில் கைப்பற்றி ஆண்ட சாளுக்கியர், பலகாலம் முன்பாகவே சிதைந்துபோன பாண்டிய இராச்சியத்தை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அதனால் அன்றைய காலப்பகுதியில் பாண்டியர் பெயரில் ஆண்டவர்களும் சாளுக்கியர் என்றே கொள்ளவேண்டும்.

இவ்வாறு சாளுக்கியர் தென்னிந்தியாவில் அதிகாரத்தில் அமர்ந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்திலும் ஆரிய சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு ஆட்சியாளர்கள் உருவாகினார்கள். ஆக இதுவும் சாளுக்கிய ஆட்சியின் தொடர்ச்சி என்றே கருதவேண்டும். அதுவரை இருந்த நிலவுடைமையாளர் ஆட்சி முறைக்கு மாற்றாக வியாபாரிகள் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்று சொல்லலாம். 

ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் வீரமாகாளி அம்மனை வழிபடுபவர்களாகவும், நந்திக் கொடியை தமது கொடியாக கொண்டவர்களாகவும் இருந்தனர். சாளுக்கியர் கொடியில் இருந்து சூரிய சந்திர அடையாளங்களையும் தமது அரசு கொடியில் வைத்திருந்தனர். இந்த வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த படையின் தலைவன் ஒருவன் ஆரிய சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் இங்கே ஆண்டிருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

இந்த இடப கொடியில் இருக்கும் இடபம் கவரா என்று அழைக்கப்படும். இன்றும் சிங்கள மக்கள் எருதை கவரா என்றே அழைக்கின்றனர். இந்த கவரா கொடியினை கொண்ட குழுவினர் கவராக்கள் என்று அழைக்கப்படும் வழக்கமும் இருந்துள்ளது. இடப வாகனத்தை கொண்ட சிவனின் வடிவம் கவரேஸ்வர் என்று அழைக்கப்படும். எருது வாகனத்தில் உள்ள காளியின் வடிவமும் உண்டு. 

சோழர்கள் கூட நிசும்பசூதனி என்ற பெயரில் இந்த அகோர காளியை வழிபடுபவர்களாகவும், சிவ வழிபாட்டை பரதெய்வ வழிபாடாக பின்பற்றுபவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த சாளுக்கிய அரசை மையப்படுத்திய வளஞ்சியர் குழுமங்கள் கபரேஸ்வரர், நகரேஸ்வரர் போன்ற கடவுள்களை பரதெய்வமாக வழிபட்டாலும், வாதாபி சாளுக்கியர்கள் கந்த கடவுளை பரதெய்வமாக கந்தேஸ்வரர் என்றும் வழிபட்டுள்ளனர்.

ஆக, இந்த ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்திய வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் ஆட்சி என்பதை உறுதியாக கூறலாம். அவர்களே நல்லூர் வீரமாகாளி அம்மனை வழிபடுபவர்களாகவும் அந்த ஆலயத்தை அமைத்து ஆட்சி செய்தவர்களாகவும் கொள்ளலாம். பின்னர் தென்னிலங்கையில் ஆண்ட வேறொரு வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த சப்புமல்குமார எனப்படும் செண்பக பெருமாளே யாழ்பாணத்தை கைப்பற்றி சிலகாலம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலை அமைத்தவர் என்று கொள்ளலாம்.

இப்போது இந்த வளஞ்சியர் குழுமம் என்ன ஜாதி என்று தேடுவது அர்த்தமற்றது. ஏனென்றால் அது பல இன சமூக குழுக்கள் சேர்ந்த ஒரு கூட்டம். இன்று அவர்கள் எந்தெந்த ஜாதிகளில் கரைந்து போயுள்ளார்கள் என்று வேண்டுமானால் தேடிப் பார்க்கலாம். இந்த பட்டாரகி தெய்வம் எனப்படும் பத்ரகாளி அல்லது மாகாளியை குலதெய்வமாகவும் , கவரேஸ்வரர் எனப்படும் இடபவாகன சிவனை பரதெய்வமாகவும்  வழிபடுபவர்கள் யார் என்று தேடினால், அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்கள் இந்த ஆரிய சக்கரவர்த்திகளின் பண்பாட்டு மிச்சங்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

இங்கே அரசவம்சம், அரச வம்சத்தின் வாரிசுகள் என்று யாரும் கிடையாது. ஏனென்றால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பவர்களே ஒரு வியாபார குழுமம்தான்.



Friday 1 September 2023

வீரம் விளைந்த வன்னி

(பறங்கியர்கள் வன்னியர்கள் இடையிலான போர்க்கால வரலாற்று தொடர்)

பறங்கியங்களோட வண்டியள் வருகுது.. பறங்கியங்கள் ஊருக்க வாறாங்கள் என்று கத்திக்கொண்டே சுப்பு ஊருக்குள் ஓடிவந்தான்.

சுப்பு இவ்வாறு கத்திக்கொண்டு ஓடிவர, வீடுகளில் இருந்த எல்லோரும் வத்தல், கிழங்கு தானியங்கள் என்று வீட்டில் கிடைத்த உணவு பொருட்களையும், தேவையான வேறு பொருட்களையும் எடுத்துக்கொண்டு காடுகளுக்குள் ஓடினார்கள். குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் என்று இம்முறை யாரும் விடுபட்டு விடக்கூடாது என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டே காடுகளுக்குள் ஓடினார்கள். பறங்கியர்களுடைய வண்டிச் சத்தம் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருவாறு எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் காடுகளுக்குள் வந்துவிட்டார்கள். ஒருவித பதைபதைப்புடன் பாதுகாப்பான இடத்தை அடைவதற்காக, கிராமத்தில் இருந்து சற்று தூரமான காட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்து கெண்டிருந்தோம்.

ஏன் பறங்கியர்களைக் கண்டு ஓடுகிறோம் என்பதற்கு முதலில் எங்கள் கிராமத்தைப் பற்றி சொல்லவேண்டும். அடர்ந்த வன்னிப் பெருங்காடுகளுக்கு நடுவே குளங்கள் ஆறுகளை அண்மித்த விவசாய கிராமங்களில் எமது எழுவாழி கிராமமும் ஒன்று. எழுவாழி குளத்தின் வடக்குப் பகுதியில் விவசாய நிலங்கள் இருக்கிறது. குளத்தின் கிழக்குப் பகுதியில் எங்கள் குடியிருப்பு பகுதி. அதனோடு சேர்ந்தவாறே மேய்ச்சல் நிலமும் இருந்தது. எங்கள் கிராமத்தில் ஒரு நாற்பது குடும்பங்கள் வரை வாழ்ந்து வந்தோம். நெல்லு, இறுங்கு, சாமி திணை, உளுந்து, பயறு என்று எல்லாம் எங்கள் கிராமத்திலேயே பயிரிடப்படுகிறது. ஊரின் எல்லையில் ஒரு ஐயனார் கோயில், எழுவாழி குளத்தின் அருகில் நாகம்மாள் ஆலயம், தெற்குப் பக்கத்தில் ஒரு சிறிய குன்று, குடியிருப்பைவிட்டு சற்று தள்ளி இருந்தது, அதில் ஒரு முருகன் கோயில். சிறுவர்கள் எல்லோரும் அந்த மலைக்கோயில் முன்றலில் சென்றுதான் விளையாடுவார்கள். செங்கற்களால் கட்டப்பட்ட முருகன் கோயில், அதற்கு முன்னால் கருங் கற்களால் பொழிந்து கட்டப்பட்ட ஒரு கேணி இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கேணி என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்த கோயில் மலையில் நின்று பார்த்தால் ஊரைச் சுற்றி பல மைல் தூரங்களுக்கு தெரியும். சுப்பு இந்த மலையில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போதுதான் பறங்கியர் வண்டி வருவதைக் கண்டிருக்கிறான். அவன் கண்டு வந்து சொன்னதால் தான் நாம் இப்போது தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறோம். 

இவை எல்லாவற்றையும் விட எங்கள் முத்தண்ணனை பற்றி சொல்லியே ஆகவேண்டும். எங்கள் கிராமத்தில் இன்றும் மக்கள் பலர் குடும்பங்களுடனும், உயிருடனும் இருப்பதற்கு இவர்தான் காரணம். இவர் சுப்புவின் தாய்வழி உறவினர். பறங்கியரின் வெறியாட்டத்தால் மனைவி மக்கள் எல்லோரையும் இழந்து தனித்துப்போய் ஒலுமடுவில் இருந்து இங்கே வந்தவர். இவர் வந்து இப்போது இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர் வந்து பறங்கியர் செய்யும் கொடுமைகள் பற்றி சொன்னதால் தான் நாம் ஏற்கனவே ஒருமுறை பறங்கியர்கள் ஊருக்குள் வந்தபோதும் பெரிய அளவில் இழப்புகள் ஏதுமின்றி தப்பித்துக் கொண்டோம்.

முத்தண்ணனின் ஒலுமடு கிராமம் எங்கள் ஊரில் இருந்து ஒரு இருபது மைல் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஊருக்குள் புகுந்த பறங்கியர்கள் ஆயுத முனையில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று பலரை பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதை தடுக்க முனைந்தவர்கள், எதிர்த்து போரிட்டவர்கள் என்று கிராம மக்கள் பலரை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று விட்டு சென்றிருக்கிறார்கள். எதிர்த்து வெல்ல முடியாது என்ற நிலையில் பலர் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அதற்கு பிறகு அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். சிலர் யாழ்ப்பாணம் நோக்கி செல்ல பலர் குடும்பமாக அனுராதபுரம் நோக்கி சென்றுவிட்டனர்.  பறங்கியர்களின் அந்த வெறியாட்டத்தில் முத்தண்ணன் குடும்பத்தில் அவர் மட்டும் எஞ்சி தனிமரமாகிவிட்டார். அவருக்கு வேறு எங்கும் செல்ல பிடிக்காததால் எழுவாலியில் வந்து எம்முடனேயே தங்கிவிட்டார். இப்போது அவரது ஊரில் யாருமே இல்லை என்று சொல்வார். 

பறங்கியர்கள் வந்தால் என்ன நடக்கும் என்று முத்தண்ணன் வந்து சொன்னதால் தான் எங்களுக்கு தெரியும். இல்லாவிட்டால் ஒரு வருடத்திற்கு முன்பே எங்கள் ஊராருக்கும் இதே நிலைமைதான் வந்திருக்கும். 

ஒரு வருடத்திற்கு முன்பும் எங்கள் கிராமத்திற்கு பறங்கியர் கூட்டம் வந்தது. அப்போதும் எச்சரிக்கையாக இருந்ததால், இதேபோல் காடுகளுக்குள் ஓடி பெரும்பாலானவர்கள் தப்பிவிட்டோம். ஊருக்குள் இருந்த ஒருசில வயதானவர்கள், நோயாளிகளை கூட மிகக் கொடூரமாக தாக்கிக் கொன்று, குடிசைகள் அனைத்தையும் எரித்து ஊரையே நாசமாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். சென்ற முறை வந்து ஐந்து நாட்கள் வரை முகாமிட்டு தங்கியிருந்தார்கள். நாகம்மாள் கோயில் ஐயனார் கோயில் இரண்டையும் அடியோடு அழித்து விட்டு சென்றார்கள். முருகன் கோயில் மட்டும் ஓரளவு தப்பித்து இருந்தது. நாம் ஊருக்குள் திரும்பி வந்தபோது ஒன்றுமே இல்லை. ஊர் சுடுகாடாக கிடந்தது. ஐந்தாறு மாடுகளைக் கூட சுட்டுக் கொன்று தின்று, மீதமுள்ள இறைச்சியை வாட்டி எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். எமது ஊரில் இது இரண்டாவது முறை. சில ஊர்களில் பலமுறை இவ்வாறு நடந்திருக்கிறது. பல ஊர்கள் முற்றிலும் இல்லாமல் போயிருக்கிறது. 

காடுகளுக்குள் நீண்ட தூரம் வந்தாகிவிட்டது. ஓடிக்கொண்டே இருந்தோம், பசியும் தாகமும் அனைவரையும் வாட்டியது. இங்கேயே தங்கி விடுவோமா என்று சரசாச்சி கேட்க, பலரும் இனியும் ஓட முடியாது இங்கேயே இருப்போம் என்று சொன்னார்கள். நல்லையா மட்டும் இங்கே வேண்டாம் இன்னும் கொஞ்ச தூரம் போனால் ஒரு சிறு குளம் இருக்கிறது, அங்கே தங்கிவிட்டால் தண்ணீர் சிக்கல் இருக்காது என்றார். எல்லோருக்கும் அது சரியாக படவே களைப்பைப் பாராமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நல்லையாவுக்கு இந்த காடு முழுவதும் அத்துப்படி. நித்தமும் வேட்டைக்கு போய் காட்டில் எந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியும். அதனால் அவரது பேச்சை யாரும் மறுக்கவில்லை. 

ஒருவாறு நல்லையா சொன்ன அந்த இடத்திற்கு வந்தாகிவிட்டது. எல்லோரும் தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு, சாப்பிடுவதற்கு ஏதாவது செய்யலாம் என்று தயாரானோம்.  மூன்று நான்கு இடங்களில் தீமூட்டி கிழங்கு இறுங்கு என்பவற்றை சுட்டு குழுக் குழுவாக சாப்பிட ஆரம்பித்தோம். சிறுவர்கள் மட்டும் எல்லா இடங்களிலும் மாறி மாறி சென்று சாப்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு அப்படியும் அது பத்தியப்படவில்லை. அருகில் இருந்த விழாமரத்தில் இருந்து பழங்களை கொண்டு வந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திலேயே இரண்டு பெரிய காட்டு மாமரங்கள். அதன் கீழும் பழங்கள் தாராளமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் மேலே ஏறிச் சென்று பிடுங்கி வந்தார்கள். எல்லோரும் கிடைத்ததை எல்லாம் மாற்றி பகிர்ந்து தின்றார்கள். பயத்தில் ஓடிவந்த போதும் ஒரு மகிழ்ச்சியான பொழுதாக அது கடந்தது. 

முத்தண்ணன் மட்டும் ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தார். அவருக்கு ஒலுமடுவில் நடந்த கொடுமைகள் நினைவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்த பறங்கியர்கள் யார் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவரிடம் நீண்ட நாட்களாக கேட்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முத்தண்ணன் அருகில் சென்று அவர் சிந்தனையை கலைத்தேன். 

முத்தண்ணா இந்த பறங்கியர்கள் எப்படி இருப்பார்கள்? என்று பேச்சுக் கொடுத்தேன்.. என்னை ஒருமுறை ஏற இறக்கப் பார்த்தவர் "தெரிந்து என்ன செய்ய போகிறாய்?" என்று கேட்டார்? "இல்லையண்ணா, இப்படி பயந்து ஓடிக் கொண்டு இருக்கிறோமே, அதுதான் கேட்டேன். அவர்களை கண்டு ஏன் பயப்படுறம், அவங்களை எதிர்த்து ஏதாச்சும் செய்ய முடியாதா எண்டுதான்" என்று இழுத்தேன் 

"அவர்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்"

"எங்களிடமும்" என்ற என்னை தொடரவிடாமல் மறித்த முத்தண்ணன், எங்களிடம் இருப்பது போல் கத்தி, ஈட்டி, வாள், வில்லம்பு இல்லை அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்றார்.

"துப்பாக்கியா அப்படியென்றால்"

"அது தூரத்தில் நின்றே ஒருவரை கொல்லக்கூடிய ஆயுதம். எம்மில் பட்டால் வெடித்துச் சிதறி இறந்து விடுவோம்"

"அவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?"

"ஒரு இருநூறு முன்னூறு பேர் இருப்பார்கள் சிலவேளை ஐநூறு பேர் வரையில் இருப்பார்கள்"

நான் எமது கிராமத்தவர்களை திரும்பி பார்த்தேன். ஒரு நாற்பது ஐம்பது பேர் கூட போராடக்கூடியவாறு தேறமாட்டார்கள். 

முத்தண்ணா சொல்வதைப் பார்த்தால் எம்மை தூரத்தில் வைத்தே கொண்டுவிடுவார்கள்.

இன்னும் எனது முதலாவது கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அந்த பறங்கியர்கள் எப்படி இருப்பார்கள் என்று..

"முத்தண்ணா, எமது ஊருக்கு எல்லையில் போய் நின்று அவர்கள் எப்படி இருப்பார்கள், என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வருகிறேன். யாரிடமும் சொல்லாதீர்கள் என்றேன்.."

"தனியாகவா"

"ம்ம்"

"தனியாக வேண்டாம் நானும் வாறன்" என்றார் முத்தண்ணன். எனக்கு சந்தோஷம், ஆனால் ஏதோ ஒருவித பதட்டமும் ஒருபக்கம் தொற்றிக் கொண்டது. 

"இப்போதே ஒரு இரண்டு மூன்று மணி ஆகியிருக்கும். நேரத்தோடு போனால்தான் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்று அவசரப்படுத்தினேன். முத்தண்ணன் எதுவும் பேசாமல் எழுந்து சென்றார். கொண்டுவந்த சாமான்களில் இருந்து இரண்டு உறைக்கத்திகளை எடுத்து வந்து ஒன்றை என்னிடம் தந்துவிட்டு மற்றையதை அவர் இடையில் சொருகிக்கொண்டு 

"சரி புறப்படு" என்றார். 

நாம் இருவரும் யாருக்கும் சொல்லாமல் எமது கிராமத்தை நோக்கி புறப்பட்டோம். பறங்கியர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கும் ஆவலில் வேகமாகவே கிராமத்தை அண்மித்து விட்டோம். எமது குடியிருப்பை அண்மித்த ஒரு பற்றைக்குள் இருவரும் பதுங்கிக்கொண்டோம். பறங்கியர்கள் வந்த வண்டிகளின் குதிரைகள் அங்காங்கே கட்டப்பட்டிருந்தது. தூரத்தே குதிரை வண்டிகள் நின்றன. பறங்கியர்களை காணவில்லை.

 "முத்தண்ணா இந்த இடத்தில் இருந்து பார்த்தால் பறங்கியர்கள் யாரையும் காணவில்லை. வேறு இடத்தில் நின்று பார்ப்போமா?" என்றேன்.

"குதிரை இங்கே நிற்பதால் அதன் அருகில் தான் கூடாரம் அமைப்பார்கள். சற்று பொறு" என்றார். முதண்ணா சொல்லி சிறிது நேரத்தில் அவர்கள் கூடாரம் அமைக்க வந்துவிட்டார்கள். முத்தண்ணா பெரிய சாத்திரகாரன்தான் என்று நினைத்துக்கொண்டேன். 

பறங்கியர்கள் என்றால் வெள்ளையர்கள் என்றுதான் இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால் அவர்களில் பலர் பயங்கரமான கறுப்பு நிறத்தில் இருந்தார்கள். சிலர் கறுப்பு வெள்ளை இரண்டும் கலந்தது போலவும், கறுப்பு தோலில் பூனைக் கண்கள், பழுப்பு நிற தோலில் சுருட்டை முடி என்று பல்வேறு விதமாக வித்தியாசமான விசித்திரமான உருவங்களில் இருந்தார்கள்.

"முத்தண்ணா முத்தண்ணா"

"என்னடா"

"பறங்கியர்கள் என்றால் வெள்ளையர்கள் இல்லையா, இவர்கள் எல்லாம் வேறு வேறு உருவத்தில் இருக்கிறார்கள். ஒருசிலர் மட்டும் தானே வெள்ளையாக இருக்கிறார்கள்?"

"வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும் தான் ஐரோப்பாவில் இருந்து வந்த பறங்கியர்கள்"

"அப்படியானால் அந்த அமாவாசை கறுப்பர்கள்?"

"அவர்கள் ஆபிரிக்க அடிமை படைகள்"

"அவர்கள் எப்படி அடிமைகள் ஆனார்கள்?"

"என்னுடைய ஊர் ஒலுமடுவில் வந்து பெண்கள் இளைஞர்கள் சிறுவர்களை பிடித்துக் கொண்டு சென்றார்கள் என்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா?"

"ம்ம்"

"அவ்வாறு பிடித்துக் கொண்டு செல்லப்படும் சிறுவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் சொல்லும் வேலைகளை செய்யும் வகையில் வளர்ப்பார்கள். அவர்களை இவ்வாறு படைதிரட்டி சென்று வேறு நாடுகளில் கொள்ளையிடும் நபர்கள் நபர்கள் விலைகொடுத்து வாங்குவார்கள்"

"மனிதர்களை விலைக்கு விற்பார்களா?"

"ம்ம், கிறித்தவ அமைப்புக்கள் அதைத்தான் செய்கிறது"

"அப்படியானால் அவர்கள் ஏன் கறுப்பாக இருக்கிறார்கள். அவர்களும் எங்களைப் போலத்தானே இருக்க வேண்டும்"

"இவர்கள் எங்கள் நாட்டில் இருந்து பிடித்து செல்லப்பட்ட சிறுவர்கள் இளைஞர்கள் கிடையாது. ஆபிரிக்கா என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கேயும் இவ்வாறு கிராமம் கிராமமாக சென்று பெண்கள் சிறுவர்கள் இளைஞர்கள் என்று பிடித்துச் சென்று கிறிஸ்தவர்களாக மாற்றி பின் அடிமைச் சந்தைகளில் விற்பார்கள். அப்படி ஆபிரிக்க அடிமைச் சந்தைகளில் விலைகொடுத்து வாங்கப்பட்டு எம் நாட்டில் கொள்ளையடிக்க கொண்டுவரப்பட்டவர்கள்தான் இந்த அமாவாசை கறுப்பர்கள்"

"அப்படியானால் அவர்கள் இந்த விலைக்கு வாங்குபவர்களுக்கு எதிராக சண்டைபோட மாட்டார்களா? அவர்களை கொன்றுவிட்டு தப்பித்து செல்ல முற்பட மாட்டார்களா?"

"அதற்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கிறிஸ்தவ மதம் என்பது அடிமைகள் சிந்திக்க கூடாது என்பதற்காகவும், அடிமைப்படுத்தும் எஜமானர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய கூடாது என்பதற்காகவும் உருவாக்கிய ஒரு முறைமை. கிறிஸ்தவராக மாறிவிட்டால் அவன் அடிமையாக இருப்பதை இயல்பாகவும் பெருமையாகவும் உணர்வான். எதிர்த்து போராட மாட்டான்"

எனக்கு அவர்களை பார்க்க பாவமாகவும் இருந்தது. ஆத்திரமாகவும் இருந்தது. ஒரு மனிதன் இவ்வளவு முட்டாளாக, சிந்திக்க முடியாத அடிமையாக, அப்படி இருப்பதை பெருமையாக உணரும் நிலையில் இருக்கிறான் என்று நினைக்கும் போது அவர்களை கொன்று விட்டால் என்ன என்று தோன்றியது.

"அப்படியானால் கறுப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் எல்லாம் கலந்து விசித்திரமாக இருக்கும் மற்றவர்கள் யார்?"

"அவர்கள் எங்கள் ஊர்களில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பெண்கள் போன்றவர்களால் உண்டான சந்ததிகள். பிடித்து செல்லப்பட்ட பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெள்ளையர்கள், கறுப்பின அடிமைப் படைகள் என்று பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தப் பட்டார்கள். அதனால் உண்டான சந்ததிகள் தான் இந்த கறுப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் இருக்கும் இவர்கள். கறுப்பின அடிமைப் படைகள் தப்பித்து ஓடாமல் இருப்பதற்காகவும் எதிர்த்து போராடாமல் இருப்பதற்காகவும் பிடித்துச் செல்லும் பெண்களில் தமக்கு பிடித்தவர்கள் போக மீதமானவர்களை அடிமைப் படைகளும் அனுபவிக்க அனுமதிப்பார்கள்"

"என்ன கொடுமையான இழிவான பிறப்பு, அவர்கள் பாவம் இல்லையா?"

"இல்லை. அவர்கள் தான் வெள்ளையர்கள் கறுப்பர்களை விட மோசமாக நடந்து கொள்வார்கள். கிறிஸ்தவ மதத்தை அவர்கள் தான் மக்களிடையே பலாத்காரமாக பரப்புவார்கள்.அவர்கள்தான் கிறித்தவ மதத்தையே உருவாக்கி காப்பாற்றுவது போல நடந்து கொள்வார்கள். தம்முடைய பிறப்பை யாரும் தவறாக சொல்லக் கூடாது என்பதற்காக எல்லோரையும் தம்மைப் போல மாற்றுவதற்கு துடிப்பார்கள்."

முத்தண்ணன் சொல்ல சொல்ல எனக்கு உடலெங்கும் ஒருவித அனல் பரவியது. நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் தமது கூடாரத்தை அமைத்து முடித்திருந்தார்கள். சூரியன் மறைந்து வானில் நிலவும் வந்துவிட்டது. அது ஒரு முன்னிலவு நாள். பாதி நிலவின் வெளிச்சத்தில் அசைவு காட்சிகள் மட்டுமே தெரிந்தது. 

"சரி, பறங்கியர்களை பார்த்தாகிவிட்டது புறப்படு" என்றார் முத்தண்ணன்.

"இந்த இருட்டிற்குள் எப்படி அங்கு செல்வது. இரவு இங்கேயே தங்குவோம், வெள்ளாப்புடன் எழுந்து விடிவதற்கு முன்பு அங்கு செல்வோம்" என்றேன். 

"அப்படியானால் இங்கே இருக்க வேண்டாம் மலையில் சென்று தங்குவோம்" என்றார்.

எனக்கும் அதுதான் பாதுகாப்பான இடமாக பட்டது. யாராவது வந்தால் கண்டுகொள்ளலாம் என்பதால் எழுந்து மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்...

தொடரும்...


யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...