இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா?
புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு, சிலுவை அணியலாம் திருநீறு ருத்ராட்சம் அணியக்கூடாது போன்ற இந்து விரோத செயற்பாடுகள் பற்றியும், ஆனாலும் பிரபாகரன் பக்தி மார்க்க நம்பிக்கை உடையவர், முருக பக்தர் என்றும் பார்த்தோம். புலிகள் இயக்கத்தின் தலைவராக பிரபாகரனே உலகால் அறியப்படுகின்றார். அப்படி இருக்க இவை எல்லாம் எப்படி நடந்தது என்று பார்ப்போம்.
புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் தலைவர் என்று இல்லாமல் மத்திய குழு ஒன்றினால் முடிவுகள் எடுக்கப்படும் அமைப்பே இருந்தது(கம்யூனிச பொலிட் பீரோ முறை போல). பின்னர் அதனிலும் சில சிக்கல்கள் ஏற்பட தலைமை ஒன்று தேவை என்றும் அதற்கான தகைமை உள்ள ஒருவர் வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு தம்மிடம் தகைமை உள்ள யாரும் இல்லை என்று அழைத்து வந்து தலைவர் ஆக்கப்பட்டவர்தான் உமாமகேஸ்வரன். பின்னாளில் புளொட் இயக்கத்தின் தலைவராக அறியப்படும் உமாமகேஸ்வரன் தான் முதலில் புலிகள் இயக்கத்திற்கு தலைவராக இருந்தார்.
புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் ஆங்கிலம் என்பதை அறிவு என்பதாக கருதும் மங்கிய மனநிலையிலேயே இருந்தனர். தமது தலைவர் ஆங்கில புலமை மிக்க ஒருவராக இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அதனால்தான் நில அளவையாளராக பணியாற்றிய, அரசியல் கட்சிகளுடன் தொடர்புள்ள, ஆங்கில புலமையுள்ள உமாமகேஸ்வரனை தலைவர் ஆக்கினார்கள். ஆனால் பிரபாகரன் அதனை உள்ளூர விரும்பவில்லை. பிரபாகரன் தானே தலைவராக இருக்கவ விரும்பினார். ஆனால் தன் கல்வித் தகைமை மீதான தாழ்வு மனப்பான்மையில் காட்டிக் கொள்ளாமலேயே இருந்தார்.
இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் ஒத்த சிந்தனையில் செயற்படுவது என்பது முடியாத காரியம். அல்லது மிகக் கடினமான விடயம். புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பிரபாகரனும் அதற்கு விதிவிலக்கல்ல.
பிரபாகரன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே பாடசாலை சென்ற ஒருவர். பள்ளிக் கல்விக்கும் அவருக்கும் சற்று தூரம் அதிகம் எனலாம். தமிழகத்தில் கருணாநிதி ஈவேரா போன்றவர்களும் எட்டாம் வகுப்பை தாண்டாத தலைவர்கள் தான். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல், தம்மை மேதைகள் போல காட்டிக் கொண்டு, மக்களையும் கடைசி வரை ஏமாற்றி நம்பவைத்தார்கள். ஆனால் பிரபாகரன் அவ்வாறு இல்லை. மஹாபாரதத்தில் பார்வை இல்லை என்று கூறி முடியுரிமையை இழந்த திருதராஷ்டிரனின் மனநிலையிலேயே, கல்வித் தகைமையையும், ஆங்கில புலமையையும் காட்டி தான் விரும்பிய தலைமை பதவி மறுக்கப்படதை கருதினார்.
மத்திய குழுவை விடுத்து தனித்த தலைமை வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவர் பிரபாகரன் தான். தான் தலைமை தாங்க வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு கோரினார். ஆனால் ஏனையவர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது தகுதியை காட்டி புறந்தள்ளி உமாமகேஸ்வரனை தலைவர் ஆக்கிவிட்டார்கள். பிரபாகரன் உமாமகேஸ்வரனை அப்புறப்படுத்தி தலைமைக்கு வர விரும்பினார். அவ்வாறே பின்னர் தலைமை பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். பிரபாகரன் உமாமகேஸ்வரன் மோதலுக்கும் பிரிவுக்கும் ஊர்மிளா காரணமாக கூறப்பட்டாலும் அடிப்படை இதுதான்.
பிரபாகரன் தலைமைக்கு வர ஆசைப்பட்டாரே தவிர, அதற்கான தகைமையும் திறனும் தனக்கு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையிலேயே அவர் இருந்தார். சற்று நெருங்கிப் பழகிய, அனுபவமும் அறிவும் உள்ள பலரும் இதனை அறிந்து இருக்கிறார்கள்.
போராட்ட ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு அரசியல் ரீதியான அறிவு இல்லை என்பதால், ஈரோஸ் அமைப்பின் இராணுவ பிரிவாக புலிகள் அமைப்பை மாற்ற வேண்டும் என்றும், ஈரோஸ் அமைப்பு அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் புலிகளின் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டது.
பிரபாகரன் தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை, அவருக்கு அரசியல் ரீதியான எந்த புரிதலும் அறிவும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்திய, மத்திய குழு உறுப்பினர் பற்குணம் எனப்படும் சரவணனை, பிரபாகரன் கொன்றது எல்லாம் ஆரம்ப கால வரலாறுகள்.
இவ்வாறான நிலையில் தான் புலிகள் அமைப்புடன் அன்ரன் பாலசிங்கம் எனப்படும், அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் தொடர்புக்கு வருகிறார். இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறித்தவர். முலாட்டோ இனத்தைச் சேர்ந்தவர். இவர் அன்றைய அனைத்து போராட்ட இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் மூலமாக பிரபாகரனுடன் தொடர்பை உண்டாக்கி பிரபாகரனை தன் வசப்படுத்திக் கொள்கிறார். பிரபாகரன் விரும்பிய வகையில் அவருக்கு ஏற்றவாறு தன்னைக் காட்டிக் கொள்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தி காட்டாமல் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி தன் விருப்பங்களை கட்டளைகளை பிறப்பித்து கொள்கிறார்.
அன்ரன் பாலசிங்கத்தின் ஆங்கில புலமை, மார்க்சியக் கருத்துக்கள், அரசியல் ரீதியான கருத்துக்கள், பன்னாட்டு அரசியல் தொடர்புகள், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி செயற்படும் அணுகுமுறை என்பவற்றால் பிரபாகரன் கவரப்படுகிறார். தன் தேவைக்கும் விருப்பத்திற்கும் பொருத்தமான நபர் என்று முடிவு செய்கிறார். தன்னிடம் இல்லாத அறிவும் ஆற்றலும் அவரிடம் இருப்பதாக பிரபாகரன் கருதுகிறார். ஆயுதங்கள் மீதும், ஆயுத வழிமுறைகள் மீதும் மட்டுமே நாட்டம் கொண்ட பிரபாகரன், தனது அரசியல் ரீதியான குறைபாடுகளை அன்ரன் பாலசிங்கம் மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறார்.
அன்ரன் பாலசிங்கம் கிழக்கு மண்ணினை சேர்ந்தவர் என்பதால் கல்வி ரீதியாக மற்றவரை மட்டம் தட்டும் யாழ்ப்பாணிய மனோபாவம் இன்றி, மனம் கோணாதவாறு பிரபாகரனிடம் நடந்து கொள்கிறார். அன்று முதல் புலிகள் அமைப்பின் யுத்தம் சாராத அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நபராக, புலிகள் அமைப்பின் உயர் அதிகாரம் உடையவராக மாறிவிடுகிறார்.
கிறிஸ்தவர்கள் உலகில் எந்த நாட்டில் எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள். அன்ரன் பாலசிங்கமும் அதில் இருந்து விலகவில்லை. அன்ரன் பாலசிங்கம் குடும்பம் கிழக்கு மாகாணத்தில் செல்வாக்கு மிக்க தீவிரமான கிறிஸ்தவ குடும்பம். அவர் தன்னை மார்க்சிய வாதியாக ஆரம்பத்தில் அடையாளப்படுத்திக் கொண்டவர் என்றாலும், அவரது தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவ அடையாளத்தை மரணம் வரையில் கைவிடவில்லை.
புலிகள் இயக்கத்தின் தலைவர் எனப்பட்ட பிரபாகரன் போர் மற்றும் ஆயுத நடவடிக்கைகளில் கவனம் செலுத்த, அமைப்பின் கட்டமைப்பு, கொள்கை முடிவுகள், அமைப்பின் நடைமுறைகள் அனைத்தையும் அன்ரன் பாலசிங்கமே முடிவு செய்கிறார். கத்தோலிக்க சபையினரும் தமது இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை அன்ரன் பாலசிங்கம் மூலமாக புலிகள் இயக்கத்திற்குள் கொண்டு வருகின்றனர்.
புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி சாப்பாடு, சிலுவை அணியலாம் திருநீறு ருத்ராட்சம் அணியக்கூடாது போன்றவைகளை எல்லாம், புலிகள் இயக்கத்திற்குள் ஊடுருவி இருந்த கத்தோலிக்க லாபியே அன்ரன் பாலசிங்கம் மூலமாக செய்தது எனலாம்.
பிரபாகரனின் எதிர்ப்பாளர்கள் பலரும், பிரபாகரன் முட்டாளல்ல அவர் புத்திசாலி வேண்டும் என்றே தான் இந்துமத எதிர்ப்பில் ஈடுபட்டார் என்று நினைக்கின்றனர். ஆனால் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பலரும் பிரபாகரன் இந்த சூழ்ச்சியை அறிந்திருக்கவில்லை அவர் அறியாமையில் இருந்தார் என்று நினைக்கின்றனர். இது ஒரு நகை முரணான அணுகுமுறையாகவே உள்ளது. பிரபாகரனின் ஆதரவாளர்கள் அவரை முட்டாள் என்று கருதுகின்றனர். பிரபாகரனின் எதிர்ப்பாளர்கள் அவரை புத்திசாலி என்று கருதுகின்றனர்.
கத்தோலிக்க கிறித்தவ சபையின் சூழ்ச்சியையும், கத்தோலிக்க சபையின் முகவரான அன்ரன் பாலசிங்கத்தின் துரோகத்தையும், தான் முழுதாக ஏமாற்றப் பட்டத்தையும் பிரபாகரன் 2004 களின் பின்னர் தான் உணர்ந்து கொள்கிறார். அன்ரன் பாலசிங்கம் மீது கோபப்பட்டார், திட்டினார், ஆத்திரத்தில் கொதித்தெழுந்தார். ஆனால் அப்போது காலம் கடந்து போயிருந்தது. அது அவருக்கு சுடலை ஞானமாகவே இருந்தது.
அனைத்தும் அவரது கைகளை மீறி போயிருந்தது. புத்தி பேதலித்து தூக்கம் தொலைத்து உழலும் நிலைக்கு தள்ளப்பட்டார். தன் தாழ்வு மனப்பான்மையில் பெயரளவில் தலைவராக இருந்து கொண்டு, தலைமை பொறுப்பையும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அன்ரன் பாலசிங்கத்திடம் கொடுத்ததற்காக மிகவும் வருந்தினார். ஆனால், காலமும் கர்ம வினைகளும் அவரைச் சூழ ஆரம்பித்தது. அது தன் முடிவுரையையும் எழுதிக் கொண்டது.
போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மறைவிடங்கள், காடுகள், பதுங்கு குழிகள் என்பவற்றில் மட்டுமே பெரும்பான்மை நேரத்தை செலவிட்ட பிரபாகரனுக்கு, மக்களதும் சமூகத்தினதும் தொடர்பு இல்லாமலேயே இருந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர் தனியான ஒரு உலகத்திற்குள் சிறைப்பட்டுக் கொண்டார், அல்லது அவரைச் சூழ்ந்திருந்த லாபிகளால் சிறை வைக்கப்பட்டார். புலிகளின் முதல் நிலை தளபதிகள் பலரும் கூட பின்னர் இந்த நிலைக்கு சென்றுவிட்டார்கள்.
தம்மை அணுகுவதற்கான, தகவல்களை பெறுவதற்கான வழிகளுக்கு ஓரிருவரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையில் இருந்தார்கள். அவர்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும், அவர்கள் விரும்பும் தகவல்கள் மட்டும் பிரபாகரனை, முதல்நிலை தளபதிகளை சென்று சேரும் என்ற நிலையே இருந்தது. சமூகத்தின் உண்மை தன்மையை எடுத்துக் கூறக் கூடிய யாரையும் பிரபாகரன் அணுகும் சூழலே அன்று இருக்கவில்லை.
எது தர்மம் எது அதர்மம் என்று எடுத்துக் கூறி பிரபாகரனை திருத்த கூடிய வழிநடத்த கூடிய யாரையும் பிரபாகரன் அருகில் வைத்திருக்கவில்லை, அல்லது அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் வைத்திருக்க விடவில்லை. தர்மத்தில் இருந்து வெகுதூரம் விலகி புலிகள் செயற்பட்டதற்கு அதுவே காரணம் ஆனது. பின்னாளில் அவர்களின் முடிவுக்கும் அதுவே என்று கூறலாம்.
"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு" என்கிறார் வள்ளுவர். அந்த உண்மை இங்கே உறுதிப்படுத்தபட்டுள்ளது.
No comments:
Post a Comment