Thursday 31 October 2024

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்?

மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான தாக்குதல், மிலேச்சத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று நாளாந்தம் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம் அல்லவா, ஆம் அந்த வார்த்தை வரைமுறைகளை கடந்த, ஒழுக்கம் தவறிய, கொடூரச் செயல்களை செய்பவர்களைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக இன்றும் இருக்கிறது.

பண்டைய காலத்தில் இன்று ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்று கூறத் தக்க அந்த கொடூரமான மக்கள் கூட்டத்தை குறிக்கும் வார்த்தையாக இந்த மிலேச்சர் என்ற வார்த்தை இருந்தது. இந்தியாவிற்கு புறத்தே வாழ்ந்த கிரேக்கர்கள் பாரசீகர்கள் அல்லாத ஒரு குழுவினர் இந்த மிலேச்சர்கள். இவர்கள் கொலைகளை செய்ய அஞ்சாத, அறத்தை பின்பற்றாத ஒரு கூட்டம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. வட இந்திய அரசர்கள் மிலேச்ச படைகளை தமது படைப்பிரிவாக வைத்திருந்த குறிப்புக்களும் உள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் என்று இன்று அறியப்படும் பகுதி அன்று காமரூப பேரரசு என்று இருந்தது. இலங்கைக்கு வந்த விஜயனும் அவனது தோழர்களும் வந்ததாக கூறப்படும் லாலா நாடு இந்த காமரூப பேரரசை சேர்ந்த ஒரு நாடுதான். அந்த காமரூப பேரரசை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களை மிலேச்ச அரசர்கள் என்றே வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த மிலேச்ச அரசர்கள் தாம் நரகாசுரன் வம்சாவளியினர் என்று கூறியே ஆட்சி செய்ததையும் வரலாறு பதிவு செய்துள்ளது.

நரகாசுரனை அழித்த கதையைப் பேசும் பழைய நூல் எதுவென்று பார்த்தால் காளிகா புராணம் என்னும் நூலே. அந்த நூல் எழுந்தது எங்கே என்று பார்த்தால் இந்த காமரூப பேரரசில் இருந்தே. மிலேச்ச அரசமரபு பொ.ஆ 950 அளவில் சுதேச மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த கதையும் கொண்டாட்டமும் ஆரம்பமாகி இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். சுதேச மக்களால் ஆபிரகாமிய வழிவந்தவர்கள் என்று கூறத் தக்க அன்னிய மிலேச்ச இனத்தவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தினத்தை கொண்டாடும் நிகழ்வே இந்த தீபாவளி என்பதை. 

தாம் வணங்கும் காளி தேவியின் அருளால் இந்த வெற்றி சாத்தியமானது என்பதால், தமது வெற்றி என்று கூறாமல் அந்த வெற்றியின் புகழை தம் போர்தெய்வமான காளிக்கு அர்பணித்து வெற்றியை கொண்டாடினார்கள் மண்ணின் மைந்தர்கள்.  மிலேச்ச ஆட்சியின் கொடுமை நீங்கியது என, அன்னிய ஆட்சியின் வரலாற்று இருள் நீங்கியது என விளக்கேற்றி வைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி என்பது அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட சுதேச மக்களின் கொண்டாட்டம். ஆனால் சுதேச மக்களுக்கு இன்னுமொரு தீபாவளி வேண்டும். மீண்டும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் அன்னிய ஆதிக்கத்தை, எம் வாழ்வியல் மீது படர்ந்து கிடக்கும் இருளை நீக்கி, நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த மாகாளியின் அருளால் அதுவும் விரைவில் சாத்தியமாகும்.

*அனைத்து தமிழர்களுக்கும், அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை வேண்டி போராடும் சுதேச மக்கள் அனைவருக்கும், எமது தீபாவளி வாழ்த்துக்கள்.*



யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...