Friday, 8 November 2024

பொன்னம்பலம் உருவாக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம்

இலங்கை தேசிய காங்கிரஸ், இது சுதந்திரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேசிய கட்சி. இந்த கட்சிதான் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி என்றானது. அப்படியானால் இந்த கட்சியை யார் ஆரம்பித்து இருப்பார்கள்.?

நீங்கள் நினைப்பது போல கிடையாது, அந்த கட்சியை ஆரம்பித்தவர் பொன்னம்பலம் அருணாசலம் என்பவர். இவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்கலாம். பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கிய அதே பொன்னம்பலம் குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

1919 டிசம்பர் மாதத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கிறார் பொன்னம்பலம் அருணாசலம். 2020 ஒக்டோபரில் சேர் ஜேம்ஸ் பீரிஸ் தலைவராக தெரிவு செய்யப்படுகிறார். அவருடன் சேர்ந்து F.R சேனநாயக்க, D. S. சேனநாயக்க D. B. ஜயதிலக்க, E. W. பெரேரா, C. W. W. கன்னங்கரா, பற்றிக் டீ சில்வா , H. W. அயரசூரிய, W. A. de சில்வா, ஜோர்ஜ் E. டீ சில்வா, எட்வின் விஜயரத்ன போன்றோர் செயற்பட ஆரம்பிக்கின்றனர். ஆம் இதில் குறிப்பிட்டுள்ள அனைவரும் கிறிஸ்தவர்கள். இவர்கள் தான் கிறிஸ்தவ ஆட்சியாளர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராட புறப்பட்டவர்கள். 

அடுத்து 1936 இல் சிங்கள மகாசபா உருவாக்கப்படுகிறது. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற உண்மையை அறிந்து சிங்களவர்கள் தமக்கான ஒரு அரசியல் அமைப்பாக சிங்கள மகாசபாவை உருவாக்கினார்கள். பரவாயில்லையே ஒரு பதினைந்து வருடங்களில் உண்மையை உணர்ந்து கொண்டார்களே என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. இந்த சிங்கள மகாசபாவை உருவாக்கியது வேறு யாரும் அல்ல சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா என்ற கிறிஸ்தவர்தான். 

இந்த இரண்டு கிறிஸ்தவ அமைப்புகளும் சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றி அவர்களை நம்பவைத்து இயங்கி வந்தார்கள். பின்னர் இந்த சிங்கள மகாசபாவையும் இலங்கை தேசிய காங்கிரஸையும் இணைத்து ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். 

அப்படியானால் தெற்கில் இவ்வளவு செய்தவர்கள் வடக்கில் மட்டும் செய்யாமலா இருப்பார்கள். 

வடக்கில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களின் சைவப் பணி தமிழ்ப்பணி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

இந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கினாரே பொன்னம்பலம் அருணாசலம் அவரின் தாயார் செல்லாச்சி. அவரின் சகோதரர் முத்து குமாரசாமி. இந்த பெயர்களை பார்த்தால் ஏதோ தமிழர்கள் போல தோன்றும், எல்லாம் மக்களை ஏமாற்ற வைத்த பெயர்களே அவை. அவர்களின் உண்மையான பெயர் வேறு தோற்றம் அப்படியே ஐரோப்பிய சாயல்குடியில் இருக்கும். சரி அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருவோம்.

இந்த பெயரில் தமிழர் உண்மையில் பறங்கியர் என்னும் முத்து குமாரசாமிக்கும் எலிசபெத் கிளே பீபிக்கும் பிறந்த மகன் ஆனந்தா குமாரசாமி. என்னதான் பறங்கிய பிறப்பு என்றாலும் பேரை பாருப்பா.

இந்த ஆனந்தா குமாரசாமிதான் சைவ சித்தாந்தத்தை முதன் முதலில் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தியவராம். அவர் நிறைய சைவ நூல்கள் எல்லாம் எழுதி சைவப் பணி எல்லாம் செய்தாராம். நம்புங்கடா நாம்பாட்டில் சோறு கிடையாது. ஆம் சைவம், சைவ சித்தாந்தம் என்ற பெயரில் கிறிஸ்தவ கோட்பாடுகளை நம்பிக்கைகளை இந்துக்கள் மீது திணிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தவன் இவன்தான். 

இவனுக்கு ஒரு மனைவி ஐந்தாறு வைப்பாட்டி, எத்தெல் மேரி மைரெட், ரத்தினா தேவி எனும் சிங்கள பெண் பின் அலியஸ் என்று மதமும் பெயரும் மாற்றப்பட்டார், இசுடெல்லா புளொக், லூயிசா ரன்சுடைன். ஆனந்தா இவர்களுடன் இணைந்து தான் சைவத்தை காப்பாற்றி நட்டுக்குத்தாக நிறுத்த முயற்சித்தார்.

நாங்கள் ஏசுவை வணங்குகிறோம் ஆனாலும் சைவர்கள், எம்மதமும் சம்மதம் என்று பேசும் இன்றைய பல பைத்தியங்கள் உருவாக இவர்கள்தான் முன்னோடிகள்.

இவர்களில் சமய பணிகள் வடக்கில் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்க, இவர்களின் வம்சத்தில் வந்த ஒருவர் அரசியல் பணியையும் ஆரம்பிக்கிறார். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஜி ஜி பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கப்படுகிறது. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்த அதே பொன்னம்பலத்தின் வாரிசுகள் தான் இவர்.

ஜி ஜி பொன்னம்பலத்தின் பெயர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம், தந்தை கணபதி காங்கேயர் சரி தாய்? அதை அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். மானிப்பாய் பக்கத்தில் நவாலி என்று மட்டும் கூறுவார்கள். இந்த ஜி ஜி பொன்னம்பலத்திற்கு சகோதரர்கள் இல்லையா? ஏன் இல்லை அதனையும் அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.

ஆம் ஜி ஜி பொன்னம்பலத்தின் குடும்பம் கத்தோலிக்க கிறித்தவ பறங்கியர்கள். அவரது சகோதரர் ஒருவர் சென் பற்றிக்ஸ் சர்ச்சின் பாடசாலையில் வார்டனாக இருந்தவர். அவர் ஒரு பாதிரியார். அவரது சகோதரியின் மகள் தான் அல்பிரட் துரையப்பாவின் மனைவி. இன்னொரு சகோதரி டத்தோ எர்னஸ்ட் இமானுவேல் கிளவ் துரைசிங்கம் என்ற மலேசிய அரசியல் வாதியின் மனைவிகளில் ஒருவர். 

ஜி ஜி பொன்னம்பலத்தின் மனைவி பெயர் ரோஸ் அழகுமணி கிளவ். இவர் அந்த மலேசியா அரசியல்வாதி டத்தோ எர்னஸ்ட் இமானுவேல் கிளவ் துரைசிங்கத்தின் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறது. 

கிளவ் துரைசிங்கத்தின் தந்தையின் பெயர் காசிநாதர் கிளவ். மேற் சொன்ன கிளவ் குடும்பம் பொன்னம்பலம் குடும்பம் குமாரசாமி குடும்பம் அனைத்தும் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

ரோஸ் அழகுமணி கிளவ், ஜி ஜி பொன்னம்பலத்தின் மகன்தான் குமார் பொன்னம்பலம் எனப்படும் காசிநாதர் காங்கேயர் பொன்னம்பலம். 

காசிநாதர் கிளவ் மீனாட்சி கிளவ் தம்பதிகளுக்கு 6 பிள்ளைகள். அதில் ஒருவர் தான் இந்த ரோஸ் அழகுமணி கிளவ் எனப்படும் ரோஸ் பியூட்டி பேர்ள் கிளவ். அந்த பியூட்டி பேர்ள் என்பதை தமிழில் அழகுமணி என்று மாற்றி இருக்கிறார்கள்.

இந்த கத்தோலிக்க ஜி ஜி பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி S J V செல்வநாயகம் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டது. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சர்ச் ஓப் இங்லன்ட் பிரிவைச் சேர்ந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவர். 

கத்தோலிக்கமா, அங்கிலிக்கனா தமிழர்களை ஆள்வது என்ற போட்டியில் செல்வநாயகம் பிறகு தனியாக ஃபெடரல் கட்சி தமிழரசு கட்சி என்று ஆரம்பிக்கிறார். ஜோன் ஜெபயத்தினம் ஹேன்ஸ்மன் நாகநாதன், அதாவது நீங்கள் ஈ.வி.எம் நாகநாதன் என்று நம்பும் நபரும் ஒரு கிறிஸ்தவர் தான். 

இங்கே வடக்கில் கத்தோலிகமா அங்கிலிக்கனா தமிழர்களை ஆள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தமிழ் தேசியம் என்று பேசி மக்களை உசுப்பேற்றி ஏமாற்ற, தெற்கில் ஒன்று சேர்ந்த சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவும் டட்லி செல்டன் சேனநாயக்கவும் மீண்டும் பிரிந்து தமிழர்களை எதிர்ப்பதாக கூறி சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாதத்தை அள்ளித் தெளித்து தமது மத அரசியலை மறைத்துக் கொள்கிறார்கள்.

இங்கே வடக்கில் தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்வார்களும், அங்கே தெற்கில் சிங்கள பௌத்த வாதம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்த ஒரே இனத்தை ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இரண்டு பக்கமும் இருந்து எதிரெதிர் அரசியலை கட்டமைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களும் கிறிஸ்தவ பறங்கியர்கள் தான்.

அன்று இந்த பிரிவினைவாத அரசியலை ஆரம்பித்த இந்த கிறிஸ்தவ வாரிசுகளே இன்றுவரை அந்த அயோக்கியதனத்தை தொடர்கிறார்கள். 

அவர்கள் யார் என்றும் இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.



No comments:

Post a Comment