Friday, 8 November 2024

கரையோரத்தில் வாழ்பவர்கள் எல்லாம் கரையார்கள் கிடையாது

இன்று பொதுவாக கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்கள், மீன்பிடி மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் கரையார்கள் என்பதான ஒரு அபிப்பிராயம் காணப்படுகிறது.

ஆனால் உண்மை அதுவல்ல. கரையார் சமூகம் என்பது உண்மையில் கரையோர மீன்பிடி சமுதாயம் கிடையாது. அவர்கள் யார் என்று பார்பதற்கு முதலில் ஏனைய கரையோர சமூகங்கள் எவை என்று பார்த்துவிட்டு வருவோம்.

பரவர், பரதவர், திமிலர், முக்குவர், கடையர், கடல் வேடர், செம்படவர் போன்ற சமூகங்கள் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் கரையார் என்ற சமூகமும் கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றது. ஆனால் கரையோரப் பகுதிகளை விட நாட்டின் உட்பகுதிகளிலேயே கரையார் சமூகம் அதிகமாக உள்ளது.

பரதர் அல்லது பரதவர் சமூகம் என்பது இதிகாசங்கள் கூறும் பரதனின் வம்சத்தை சேர்ந்த மக்கள். இவர்கள் வட இந்தியாவில் இருந்து கரையோரப் பகுதி வழியாக தென்னிந்திய மற்றும் இலங்கை பகுதிகளில் குடியேறிய மக்கள். இவர்கள் பொதுவாக கரையோர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். 

திமிலர் என்பவர்கள் கட்டுமரங்களில் பயணித்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். திமில் என்பது கட்டுமரத்தை குறிக்கும் ஒரு சொல். இவர்கள் கிழக்கு ஆபிரிக்க பகுதிகளில் இருந்து கடல்வழியாக குடியேறியவர்கள்.

முக்குவர்கள் என்பவர்கள் கடல் நீருக்குள் மூழ்கி இறால் நண்டு சங்கு என்பவற்றை பிடிக்கும் ஒரு சமுதாயத்தினர். இவர்கள் நீண்ட நேரம் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் வேலைக்காக இலங்கைக்கு பல்வேறு காலகட்டங்களில் பலரால் கொண்டு வரப்பட்டார்கள். வங்கம் கலிங்கம் போன்ற பகுதிகளில் இவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் கடல் சார் போர்ப் படையாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

கடையர் மற்றும் கடல் வேடுவர் என்பவர்கள் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களிலேயே மிகவும் நாகரிகம் குறைந்த, அறிவு குறைந்த மக்களாக அடையாளப்படுத்த படுகிறார்கள். ஏனைய கரையோர சமுதாயங்களால் கூலி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு பயன்படுத்த பட்டுள்ளார்கள். இவர்கள் வலை படகு கட்டுமரம் என்று எதுவும் இல்லாமல் கம்புகள் ஈட்டிகள் என்பவற்றை கொண்டும் கைகளாலும் மீன் இறால் நண்டு என்பவற்றை பிடிப்பவர்கள். அதனால்தான் இவர்கள் கரையோர வேடுவர்கள் என்பட்டார்கள். இவர்கள் ஒரு நாடோடி பழங்குடியினர் என்று சொல்லலாம்.

செம்படவர்கள் என்பதும் இதிகாச புராணங்களில் கூறும் வட இந்திய மீனவ சமுதாயம்தான். இன்று தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்த பட்டாலும் அவர்களும் வட இந்தியாவில் இருந்து வந்த ஒரு மீனவ சமுதாய மக்கள் தான். 

கரையார் என்பது கவரா என்ற சொல்லின் திரிபாக உருவான வார்த்தை.  கவராக்கள் என்பது நாயக்கர்களின் போர்ப்படை என்று இன்று அறியப்பட்டாலும், பண்டைய வட இந்திய வியாபார குழுக்களின் காவல் படையாகவும் இந்த கவராக்கள் இருந்துள்ளார்கள். இந்த கவராக்கள் பெரிய படகுகள் கட்டுதல் அவற்றை திறம்பட செலுத்துதல் மற்றும் போர் புரிதல் என்பவற்றில் சிறந்து விளங்கியுள்ளார்கள்.  வியாபார குழுக்களுடன் நீண்ட காலம் இருந்ததால் வியாபாரம் பற்றிய புரிதலும் தொடர்புகளும் அவர்களுக்கு இருந்துள்ளது. இந்த கவராக்கள் அன்னிய ஆட்சிக் காலத்தில் மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கும், கடல் சார்ந்த தொழில்களுக்கும் மாறியுள்ளார்கள். 

இந்த கரையோர சமூகங்கள் அனைத்தும் ஒன்றாகவோ ஒற்றுமையாகவோ வாழ்ந்தவை கிடையாது. கடையர்களை கரையார் சமூகமும் முக்குவர் சமூகமும் மிகவும் அடிமைப்படுத்தி வைத்திருந்தன, கீழாக நடத்தின என்று அந்த சமுதாயத்தினர் கூறுகின்றனர். கரையார் சமூகமும் முக்குவர் சமூகமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, கடுமையாக போர்புரிந்தன என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. கரையார்களுடனான போரில் தோற்றுப் போன முக்குவர்கள் கிழக்கு மாகாணத்திலும், மன்னார் பூநகரி புத்தளம் போன்ற பகுதிகளிலும் சென்று மறைந்து வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது. 

இவர்களின் இந்த பிரச்சினையை வைத்தே அந்த சமூகங்களில் மதமாற்றமும் நடந்துள்ளது. கரையார் முக்குவர் யுத்ததில் தோற்றுப் போன முக்குவர்களை இஸ்லாமிய வணிகர்கள் தமது படகுகளில் ஏற்றி காப்பாற்றி சென்றார்கள் என்றும், கரையார்களுக்கு எதிராக போர் புரிவதற்கு படகுகள் ஆயுதங்களை முஸ்லிம்கள் கொடுத்தார்கள் என்றும் அந்த நட்புறவின் தொடர்ச்சியாக பல முக்குவர்கள் கிழக்கில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் என்றும் கூறப்படுகின்றது.

கரையார்களால் ஒடுக்கப்பட்ட கடையர் சமுதாய மக்கள், அவர்களை பழிவாங்கும் நோக்கில், அன்னியர்கள் படையெடுத்து வந்த போது அந்நியர்களுக்கு உதவினார்கள் என்றும், தம்மை அடக்கியாண்ட கரையார்களை தோற்கடித்த கிறிஸ்துவர்களுடன், கடையர்கள் சேர்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக கரையோர பகுதிகளில் வாழ்ந்த நாகரிக வளர்ச்சி குறைந்த இந்த கடையர் சமுதாய மக்களே மதமாற்றத்திற்கு உள்ளானார்கள். கரையார் சமூதாய மக்கள் மிகவும் பற்றுறுதி மிக்க இந்துக்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்.

அன்று கரையார்களுக்கு எதிராக, கிறிஸ்தவருக்கு துணையாக நின்ற கடையர்கள், இன்று தங்களை கரையார்கள் என்று அடையாளப்படுத்தும் மோசடிகளை செய்து வருகின்றார்கள்.

உண்மையில் கரையார் சமூகம் என்பது ஒருபோதும் தம் வழிபாட்டு முறையில், மத நம்பிக்கையில் எந்த ஒரு சமரசமும் செய்யாத மக்களாகவே வரலாறு முழுவதும் இருந்துள்ளார்கள். கவராக்கள் தங்கள் சமூகத்தின் கொடியாக இடபக் கொடியை அதாவது நந்திக் கொடியை கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. 

கடையர் சமுதாய மக்களும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளின் சந்ததிகளுமே கிறிஸ்தவர்களாக உள்ளார்களேயன்றி அவர்கள் கரையார்கள் கிடையாது. கருவாட்டு உற்பத்தி மற்றும் கூலி, படைத்தேவைகள் என்பவற்றுக்காக அன்னிய ஆட்சிக் காலத்தில் ஆபிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு. அவர்களை இந்து பாரம்பரியத்தை கடைப்பிடித்து வாழும் கரையார் சமூகத்துடன் சேர்ந்து கூறுவது வரலாற்று மோசடி என்றே கொள்ள வேண்டும்.

கரையோர சமூகங்கள் எல்லாம் கரையார்கள் கிடையாது என்பதையும், கரையார் சமூதாய மக்கள் எக்காலத்திலும் தமது மதவழிபாட்டு முறைகளை விட்டுக் கொடுத்ததில்லை மதம் மாறியதில்லை என்பதையும் புரிந்து கொள்வோம்.

மதம் மாறிய வேறு சமுதாய மக்கள் கரையார் சமுதாய பெயரை பாவிப்பது ஒரு மோசடி என்பதையும், மதம் மாறியவர்கள் யாரும் கரையார் சமுதாயத்தினர் கிடையாது என்பதையும் அனைவரும் அறியச் செய்வோம்.



No comments:

Post a Comment