Friday, 22 August 2025

இலங்கையில் கிறிஸ்தவ சபைகளின் மறைமுக ஆட்சி

இலங்கையில் கிறிஸ்தவர்கள் பொதுவாக RC, NonRC என்று பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்த படுகிறார்கள். 

அதாவது ரோமன் கத்தோலிக்கர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் என்பதே அந்த பகுப்பாகும். 

வத்திக்கானை, போப்பை நேரடியாக ஏற்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்றும் அவ்வாறு இல்லாத பிரிவுகள் அனைத்தும் இந்த NonRC என்பதற்குள்ளும் அடங்கிவிடும். 

இந்த NonRC என்பதற்குள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், பாப்டிஸ்ட், பெப்டிஸ்ட், புரட்டஸ்தாந்து, இவாஞ்சலிஸ்ட், லூத்தரன், பெந்தகோஸ்து மற்றும் ஊர்கள் தோறும் உள்ள பல அல்லேலூயா மதமாற்ற சபைகளும் அடங்கிவிடும்.

இலங்கையில் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பிரிவுகள் ஆங்கிலிக்கன், மெதடிஸ்த், கத்தோலிக்க சபைகளே. இலங்கையின் பிரபலமான தமிழ் சிங்கள தரப்பு அரசியல் வாதிகள் பலரும் இந்த மூன்று சபைகளுக்குள் அடங்கி விடுவார்கள்.

இன்று சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள் என்று திரும்ப திரும்ப கூறி நாம் அவ்வாறு நம்பும் நபர்களாக எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, ஜே ஆர் ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க, சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க இவர்கள் எல்லாம் இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான்.

உதாரணமாக ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலிக்கன் திருச்சபை (Church of Ceylon, Anglican Communion) உறுப்பினராக இருக்கிறார்.

அவர் கொழும்பு கிறிஸ்து தேவாலயம் (St. Michael and All Angels Church, Polwatte, Anglican Church)-இன் உறுப்பினராகவும், உள்ளார். இவ்வாறு மேலே கூறப்பட்ட நபர்கள் அனைவரும் இந்த சபையின் நேரடி மற்றும் மறைமுக உறுப்பினர்களாகவே இன்றுவரை தொடர்கிறார்கள். 

இந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப செல்வாக்கு என்பது, இலங்கை அரசியலில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பேசும் தரப்பில் எஸ் ஜே வி செல்வநாயகம் இந்த ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்தவராவார். சிங்கள பௌத்த அரசியல் வாதிகள் என்று நீங்களும் நானும் நம்பிய அதே நபர்களும், இந்த தமிழர் தந்தை என்று நம்பவைக்கப்பட்ட செல்வநாயகமும் ஒரே சபையின் உறுப்பினர் மற்றும் பங்காளிகள். 

கொழும்பில் ஆங்கிலிக்க கிறிஸ்தவ சபையின் அரசியல் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது போலவே வட கிழக்கில் மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் ஆதிக்கம் பின்னாளில் மேலோங்கி இருந்தது. ஏன் இன்றும் இருக்கிறது என்றும் கூறலாம். சுமந்திரன், சாணக்கியன், அரியநாயகம் சந்திரநேரு, சந்திரநேரு சந்திரகாந்தன், சாம் தம்பிமுத்து, கூ வன்னியசிங்கம் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் பார்டியை உருவாக்கியவர்), ஆனந்தசங்கரி இவர்கள் எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். வடகிழக்கு அரசியலில் கத்தோலிக்க ஆதிக்கம் என்பது ஓரளவு வெளிப்படையாக தெரிந்தாலும் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியாமல் ஆனால் மேலோங்கியே இருக்கிறது. மெதடிஸ்த கிறிஸ்தவர்கள் என்றால் சிலருக்கு யார் என்று தெரியாமல் இருக்கலாம். நீங்கள் காணும் தென்னிந்திய திருச்சபை, அமெரிக்க மிஷன், என்பவை எல்லாம் இந்த மெதடிஸ்த கிறிஸ்தவ சபையின் மரு வைத்த மாறு வேடங்கள் தான்.

வடக்கு கிழக்கு தெற்கு என்று எல்லா இடங்களிலும் கரையோர பகுதிகளில் கத்தோலிக்க கிறித்தவ சபையின் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது என்று கூறலாம். போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களால் கொண்டுவரப்பட்ட மக்களாலும் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களாலும் பின்பற்றப்படுகிறது என்பதால் எண்ணிக்கை அளவில் கரையோரப் பகுதிகளில் இவர்களது செல்வாக்கு அதிகமாக உள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் ஆபிரிக்காவில் இருந்தும் கிழக்காசிய நாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட கூலிப்படைகளும், அடிமைகளாக கொண்டு வரப்பட்டு கருவாட்டு உற்பத்தி, முத்து எடுத்தல், சங்கு எடுத்தல், புகையிலை தோட்டம், சுண்ணாம்பு சூளை, செங்கல் சூளை போன்றவற்றுக்கான பயன்படுத்தப்பட்ட அடிமைகளும் கத்தோலிக்க மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப் பட்டதால் இங்கு வாழும் அவர்கள் பின்னாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள சிங்களம் தமிழ் போன்ற  மொழிகளைப் பேசும் மக்களாக மாறினாலும் கத்தோலிக்கத்தை பின்பற்றுபவர்களாக உள்ளார்கள். 

இலங்கையின் பிரபலமான பௌத்த சிங்கள என்று நம்ப வைக்கப்பட்ட அரசியல் குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ஷ குடும்பம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்த சேர்ந்ததே. அதுபோலவே பிரபலமான  பெர்னாண்டோ, பெரேரா, பீரிஸ், குரூஸ், சில்வா, பொன்சேகா, மெல், அல்விஸ், டயஸ், மென்டிஸ், அல்மைடா, ரொட்ரிகோ என்று பெயர் தாங்கிய அரசியல் வாதிகள் குடும்பங்கள் எல்லாம் இந்த கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். இப்போது நீங்கள் கடும் பௌத்த சிங்கள பேரினவாதிகள் என்று நம்பியவர்களின் பெயர்களை எல்லாம் எடுத்து பாருங்கள் பாதிக்கும் மேல் இவர்கள் தான் வருகிறார்கள் இல்லையா?

வடக்கு கிழக்கில் சாள்ஸ், அடைக்கலநாதன், அல்பிரட் துரையப்பா, பொன்னம்பலம், நாகநாதன் (செல்வநாயகத்துடன் சேர்ந்து ஃபெடரல் கட்சியை உருவாக்கியவர்கள்) யோகேஸ்வரன் இவர்கள் எல்லாம் கத்தோலிக்க கிறித்தவ சபையைச் சேர்ந்தவர்கள் தான். 

இப்பவே கண்ணைக் கட்டுதா, நிற்க.

ஏதோ அரசியல் செய்வதற்காக, பெரும்பான்மையாக வாழும் இந்து பௌத்த மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக அப்படி பண்ணுகிறார்கள். அவர்களுக்கு உள்ளேயே எவ்வளவு பிரிவு பிரச்சினை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை... அவர்கள் திட்டம் வாக்கு பெறுவது கிடையாது அதற்கும் மேலே..

உலகளாவிய அளவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக செயற்படுபவர்கள் இவாஞ்சலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்கள். குறளி வித்தை, நவமான பாஷை(தூஷணம் உட்பட) , புனித பேயுடனான அனுபவம் இவற்றை எல்லாம் வைத்து மதம் மாற்றுவது இவாஞ்சலிஸ்ட் கொள்கை. இந்த இவாஞ்சலிஸ்ட்கள் உலகளாவிய பல்வேறு சபைகளை உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பை வைத்துள்ளார்கள். அதாவது சர்வதேச கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு(ICEA) என்று. நான் மேலே கூறிய பல்வேறு கத்தோலிக்கம் அல்லாத சபைகள் பலவும் இந்த ICEA கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் சாணக்கியனின் மெதடிஸ்த திருச்சபை உட்பட பலவும் மதமாற்ற இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில் உள்ளன. சுமந்திரன் இலங்கை மெதடிஸ்த சபையின் உப தலைவர் அவரது மனைவி கிறிஸ்தவ மதமாற்ற கூட்டமைப்பான ICEA இன் தென்கிழக்கு ஆசியாவின் பிரதிநிதி என்னும் அளவுக்கு இவர்களின் மதவெறி+ மதமாற்ற வெறி என்பவை நீள்கிறது. 

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற பொய் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு மக்களால் நம்பவைக்கப்பட்டு, இந்த கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் ஆட்சி என்பவையும் அவர்களின் மதவெறியும் மறைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே தமிழ் தேசியம் என்ற பெயரில் கிறிஸ்தவ மத வெறியும் மதமாற்றமும் பேசுபொருளாக மாறாதவாறு மக்கள் முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஏமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களை மதமாற்றம் செய்வதற்கு தடையாக உள்ள கல்வியும் கலாச்சாரமும் இவர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் வட கிழக்கின் கல்வி நிலை தாழ்ந்துள்ளது. போதைவஸ்து கலாச்சாரம், வாள்வெட்டு வன்முறைக் கலாச்சாரம், துப்பாக்கி கலாசாரம் என்று வடகிழக்கின் வாழ்வியல் சில பத்து ஆண்டுகளாக சீரழிந்து போயுள்ளது. 

புற்றுநோய் போல் மதமாற்ற சபைகளும், மதமாற்றமும் தமிழர் தேசத்தை, தமிழினத்தின் இருப்பை வெளித் தெரியாது உள்ளிருந்து அழித்து வருகிறது. இதை தமிழினம் இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால், பேசவில்லை என்றால் இனி எப்போதும் பேச முடியாது. ஏனென்றால் இன்னும் சில காலம் இது தொடர்ந்தால் அதைப் பற்றி பேச தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் பேசும் ஒரு சிறிய கலப்பினம் மட்டுமே இம்மண்ணில் எஞ்சி இருக்கும்.

பொட்டழித்து, பூவழித்து, அறுதாலி கோலத்துடன், அரைகுறை ஆடையுடன், அசிங்கமான வாழ்க்கை வாழ்வதற்கு தான் நாம் தமிழ் தேசியம் என்ற பெயரில் ஏமாற்ற படுகிறோமா? வாழ்வியல் அழிந்த பின்னர் ஒரு இனத்திற்கு வாழ்க்கை ஏது?

நாம் அடிமைகளாக வாய் மூடி இருந்து எம் இனத்தின் அழிவைக் கண்டுகொண்டே சாகப் போகிறோமா? தமிழர்களே எம் நீண்டகால கும்பகர்ண தூக்கத்திற்கு எப்போது முடிவு?


புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...