அதற்கு முன், புலிகளின் போராட்டத்தை கிறிஸ்தவர்கள் ஆதரித்தார்களா? இல்லையா என்று பார்க்க வேண்டும்.
ஆம், இல்லை என்று ஒரிவரியில் இந்த கேள்விக்கான பதிலை கூறிவிட முடியாது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் என்பது ஒரு பொதுவான அடையாளமாக காட்டப்படுகிறதே அன்றி கிறிஸ்தவர்கள் என்று தனியான ஒரு மதம் ஒரு சமூகம் இங்கே கிடையாது. அவர்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் ஆயிரம் சிக்கல்கள்.
இலங்கையில் உள்நாட்டு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளாக ஆங்கிலிக்கன், மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகள் இருந்தன. இதனை முன்பும் பார்த்திருக்கிறோம். ஏற்கனவே செல்வாக்கு செலுத்திய இந்த பிரிவுகள் தமது அந்த நிலையை தொடரத்தான் விரும்பினவே அன்றி அதனைக் குழப்ப விரும்பவில்லை. அதனால்தான் புலிகளின் போராட்டத்தையும் சரி ஏனைய போராட்ட இயக்கங்களையும் சரி ஆரம்பத்திலேயே அழிக்க விரும்பினார்கள். அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் விரும்பினார்கள்.
போராட்டத்தை எதிர்த்த காரணத்துக்காக, புலிகளால் அல்லது ஏனைய போராட்ட அமைப்புக்களால் கொல்லப்பட்ட ரஜனி திரணகம, ஆல்பிரட் துரையப்பா போன்றவர்கள் பலரும் ஆங்கிலிக்க மெதடிஸ்த கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். குறித்த இரண்டு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்களுமே ஆரம்ப காலத்தில் போராட்டத்தை எதிர்த்த நபர்களாக உள்ளனர்.
ஏனைய போராட்ட இயக்கங்கள் கம்யூனிச நாத்திக கோசங்களை முன்னிலைப்படுத்திய போதிலும், புலிகள் அவ்வாறு இல்லாமல் தமது இந்து அடையாளத்துடன் தொடர்ந்ததால் கிறிஸ்தவ சபைகள் பலவும் அன்று புலிகளையே அதிகமாக எதிர்த்தார்கள். அச்சத்துடன் பார்த்தார்கள். புலிகளின் ஆரம்பகால மத்திய குழுவில் பிராமணர் ஒருவர் இருந்ததும் அவர்களின் எதிர்ப்புக்கான இன்னொரு காரணமாக நிச்சயம் இருந்திருக்கும்.
அன்றைய காலத்தில் பெரிதும் செல்வாக்கு இன்றியும் ஆபிரிக்க ஐரோப்பிய கலபினமான முலாட்டோ இனத்திடம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கத்தோலிக்க சபைகளும் புலிகளையோ ஏனைய போராட்ட அமைப்புக்களையோ கண்டுகொள்ளவில்லை.
இந்த கத்தோலிக்கர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் முலாட்டோ இனத்தவர்கள், இலங்கையின் கரையோரப் பகுதிகளில் செறிந்து வாழ்ந்தாலும், பிரபாகரனின் கிராமமான வல்வெட்டித்துறையிலோ அதனை அண்மித்த கிராமங்களிலோ செல்வாக்கு இன்றியே இருந்துள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் கரையோர கரையார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வல்வெட்டித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கரையோர கிராமங்கள் பலவும் இந்து கிராமங்களாகவும் முலாட்டோக்கள் மிகவும் குறைவாக இருந்த காரணத்தாலும் கத்தோலிக்க ஆதிக்கம் புலிகள் இயக்கத்தின் மீதும் பிரபாகரன் மீதும் ஆரம்ப காலத்தில் இல்லாமலேயே இருந்துள்ளது.
புலிகள் இயக்கம் தனது ஆரம்ப காலத்தில் தனிமனித ஒழுக்கம், குடும்ப பின்புலம், சாதி என்பவற்றை ஆராய்ந்தே நபர்களை இணைந்தார்கள். ஆனால், பின்னாளில் தமது அமைப்புக்கு ஆட்சேர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பலரையும் இணைத்த போது, யாழ்ப்பாணத்தில் முலாட்டோக்கள் அதிகமாக வாழும் மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்தும், மன்னார் கரையோர பகுதிகளில் இருந்தும், திருகோணமலையில் பத்தாம் நம்பர் போன்ற பகுதிகளில் இருந்தும் இந்த கத்தோலிக்க முலாட்டோ இனத்தவர்கள் பலர் புலிகள் இயக்கத்திற்குள் இணைந்து கொண்டார்கள். இந்த பரவலான ஆட்சேர்ப்பு மாற்றமே பின்னாளில் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கத்தோலிக்க ஆதிக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் காரணமாக அமைந்தது எனலாம்.
புலிகள் இயக்கம் மற்றும் ஏனைய போராட்ட இயக்கங்களின் எழுச்சியை விரும்பாத ஆங்கிலிக்கன் மெதடிஸ்த சபைகள் இறுதிவரை அவற்றை அழிப்பதில் மட்டுமே கங்கனம் கட்டி செயற்பட்டு வந்தன. இலங்கை அரசியலில் இருந்த தமது மேலாதிக்கத்தை இந்த போராட்ட இயக்கங்கள் சிதைத்துவிட்டன அல்லது கேள்விக்கு உட்படுத்தி விட்டன என்பதே அவர்களது கோபத்திற்கும் வெறுப்பிற்கும் காரணமாக இருந்தது.
அதனால்தான் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட கூடாது என்பதை வேறு வடிவிலான பிரச்சாரமாக அவை மேற்கொண்டு வந்தன. மெதடிஸ்த கிறிஸ்தவ சபை தமது இலங்கை இவாஞ்சலிஸ்ட் கூட்டமைப்பில்(SLCEA) உள்ள கிறிஸ்தவ சபைகள் ஊடாக மதமாற்றத்தை தூண்டி புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களை போராட்டத்திற்கு எதிராகவும், எமது மதம் அன்பு மதம் போராட்டம் என்ற பெயரில் கொலை செய்வது தவறு என்னும் வகையிலும் பிரச்சாரம் செய்து, தமது மதத்தவர்கள் போராட்டத்தில் இணையக் கூடாது என்று கட்டுப்படுத்தி வந்தனர்.
இது இரண்டு வகையில் அவர்களுக்கு பலனை தந்தது. ஒன்று புலிகளின் ஆட்சேர்பை குறைத்து, போரிடும் வல்லமையை குறைத்து அவர்களை அழிப்பது. மற்றையது இந்து இளைஞர்கள் போராடி சாக அவர்களின் சந்ததிகள் அழிந்து போகும், அதேவேளை தமது கிறிஸ்தவர்கள் போராடி சாகாமல் சந்ததி பெருக்க வேண்டும். அப்போதுதான் இந்துக்களை அழித்து தாங்கள் பெரும்பான்மை ஆகலாம் என்று கணித்தார்கள். இதுதான் புலிகளுக்கும் கிறிஸ்தவ அமைப்புக்களுக்குமான பெரிய நெருடலாகவும் முரண்பாடாகவும் மாறியது.
இந்துக்களை அழித்து கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள் என்பதைவிட , மதமாற்றம் என்பது இனவழிப்பு என்ற புரிதலை விட, போராட்டத்திற்கு எதிராகவும், போராட்டத்தில் இணைய கூடாது என்பதாகவும் அவர்கள் செய்யும் பிரச்சாரங்களை தான் புலிகள் ரசிக்கவில்லை எனலாம். அதுதான் மதமாற்றத்திற்கு எதிராகவும் , கிறிஸ்தவ சபைகளுக்கு எதிராகவும் புலிகள் செயற்பட காரணமாக இருந்தது.
இந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் கத்தோலிக்க சபைகள் தமக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டன. மெதடிஸ்த சபையிடம் இருந்த வடக்கின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற புலிகள் இயக்கத்தை பயன்படுத்த கைப்பற்ற ஆரம்பித்தனர். மெதடிஸ்த, ஆங்கிலிக்கன் சபைகளின் புலி எதிர்ப்பு நடவடிக்கைக்கு மாற்றான செயற்பாட்டு நிலைகளை எடுத்தனர். புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கினர். புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டு தளபதிகள் பொறுப்பாளர்கள் என்று அதிகாரம் செலுத்த தொடங்கிய கத்தோலிக்க முலாட்டோக்களின் துணையுடன், பயிற்சி முகாம்கள் மற்றும் புலிகளின் கருத்தரங்குகள் என்பவற்றில் தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டனர். போராட்டத்திற்கும் புலிகள் அமைப்புக்கும் ஆதரவானவர்கள் என்பதாக காட்டிக் கொண்டார்கள்.
அதே நேரத்தில் தெற்கில் செல்வாக்கு செலுத்திவந்த ஆங்கிலிக்கன் திருச்சபையின் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையிலும் கத்தோலிக்க சபை ஈடுபட ஆரம்பித்திருந்தது. யுத்தத்தின் காரணத்தால் அதிகளவானவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். அதன்போது கரையோர கத்தோலிக்க முலாட்டோக்கள் பலர் இராணுவத்தில் இணைந்தனர். இதனால் இராணுவ மட்டத்தில் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது. இலங்கையின் பிரபல அரசியல் குடும்பங்களுக்குள் காதல் திருமணத்தின் மூலம் கத்தோலிக்கர்கள் உள்நுழைந்தார்கள். இது இலங்கையின் அரசியலில் நீண்ட காலமாக இல்லாமல் இருந்த கத்தோலிக்க ஆதிக்கம் மீண்டும் உருவாக காரணமாக இருந்தது. இலங்கையின் பிரபல அரசியல் குடும்பங்களுக்குள் காதல் திருமணத்தின் மூலம் உள்நுழைந்தது போலவே, புலிகள் இயக்கத்தின் தளபதிகளையும் நாடக காதல் திருமணத்தின் மூலம் வசப்படுத்திக் கொண்டார்கள். இவற்றை எல்லாம் நாம் பின் விரிவாக ஆராய வேண்டும்.
புலிகள் இயக்கத்திற்குள் நடந்த கத்தோலிக்க உள்நுழைவும், இயக்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியுமே பின்நாளில் இயக்கத்தில் நடந்த பிளவுக்கும், புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரதேச வாதத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. தமது கத்தோலிக்க முலாட்டோ தளபதிகள், பொறுப்பாளர்களை முன்னிலைப் படுத்த வேண்டும், அவர்களை இயக்கத்தில் மிகப்பெரிய ஆதிக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் சில பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். அவர்களுக்கான ஆதரவைப் பெறுவதற்காக மதத்தை வெளிக்காட்டாமல் பிரதேச ரீதியாக மக்களை ஆதரிக்க செய்யும் பிரச்சாரங்களை உருவாக்கினார்கள்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்தவ அமைப்புக்கள் புலிகளை தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்த முனைந்தார்களே அன்றி ஆதரிக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் நின்றுதான் அந்த உண்மையை உணர்ந்து கொண்டிருப்பார். ஆனால் தமிழ் மக்கள் பலர் அதனை இன்றும் உணராமல் இருப்பது, நாம் வரலாற்றில் எவ்வளவு பெரிய முட்டாள்களாக மாற்றப்பட்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது.
புலிகள் இயக்கத்தை கைப்பற்ற கத்தோலிக்க சபைகள் செய்த முயற்சிகள் எவை? முலாட்டோ தளபதிகளை ஹீரோக்களாக நம்ப வைக்க அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் எவை? இலங்கையின் அரசியல் குடும்பங்களுக்குள் நடந்த காதல் திருமண உள்நுழைவுகள் எவை? நாடக காதல் வலையில் சிக்கிய புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்கள் யார்?
No comments:
Post a Comment