Wednesday 19 January 2022

மங்கையின் நல்லூரான் - சிறுகதை

சிறுபிள்ளையாக இருக்கும் போதே மங்கைக்கு நல்லூரான் மீது அலாதியான  பிரியம். தினமும் அவனை பார்க்க ஓடோடிச் சென்றுவிடுவாள், மங்கையானபின்பும்  மங்கை அப்படியே தான் இருந்தாள். இளமைக்காலம் அவளை அழகுடன் நடத்திச் சென்றது.

அன்றைய பொழுது புலரும் போதே மங்கையின் மனதில் சஞ்சலமாகவே இருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக இருள்  கலையும் முன்னரே எழுந்திருந்தாள். இரவு முழுவதும் மாடுகள் கத்திய வண்ணம் இருந்ததால் அவளுக்கு தூக்கமும் சரியாக வரவில்லை. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதை அவளின் ஆழ்மனம் எச்சரித்துக்கொண்டே இருந்தது. வீட்டில் வேறு யாரும் எழுந்திருப்பதாக தெரியவில்லை. மனதில் ஏதோ தோன்றியவளாய் வேகமாக கிணற்றடிக்குச் சென்றாள். மளமளவென்று வாளியில் அள்ளிய தண்ணீரை தலையில் ஊற்றி பித்துப்பிடித்தவள் போல் குளித்தாள். துடைத்தது பாதி துடைக்காதது பாதியாக வந்தவள் தலையில் துண்டை வைத்து முடிந்துவிட்டு சேலையை உடுத்தினாள். அப்போதுதான் அவள் தாய் மரகதம் சத்தம் கேட்டு எழுந்தாள். என்ன மங்கை இவ்வளவு நேரத்திற்கே எழும்பிவிட்டாய் என்று தாய் கேட்ட வார்த்தைகளை அவள் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. மங்கை கூடையை எடுத்து மலர்ந்தும் மலராதது போல இருந்த மலர்களை பறித்து கூடையில் போட்டுக் கொண்டாள். பாதி மலர்கள் அவள் பரிசம் பட்டதன் பின்னர் தான் முழுமையாக மலர்ந்தது. வழக்கமாக நாட்தவறாமல் காலையில் எழுந்து பூக்களைப் பறித்து மாலைகட்டி கோயிலுக்கு கொண்டுசெல்வது மங்கையின் வாடிக்கைதான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக விடியும் முன்னரே எழுந்து இப்படிச் செய்வது மரகதத்திற்கு புதிதாகப்பட்டது. அவள் எழுந்து தனது வழக்கமான வேலைகளை  பார்க்கலானாள். மங்கை அதற்குள்ளாகவே மலர்க்கூடையை எடுத்துக் கொண்டு "அம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வறேன்" என்று சொல்லிவிட்டு தாயின் பதிலுக்காகக்கூட காத்திருக்காமல் கோயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

மங்கையின் வீட்டில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோயில் வெறும் ஐந்து நிமிட நடைதூரந்தான். 

மங்கையின் வீட்டில் அவள் தாய் மரகதம், தந்தை வீரவாகு அவள் குட்டித்தங்கை வள்ளி என்று எல்லோரும் நல்லூரான் பக்தர்கள்தான். ஆனால் மங்கை இவர்கள் எல்லோருக்கும் ஒருபடி மேலேதான். மங்கையர்க்கரசிதான் மங்கையின் பெயர். மங்கை என்பது அவளை வீட்டில் அழைக்கும் செல்லப்பெயர். ஆனால் வீட்டில் மட்டுமல்ல நல்லூர் சுற்று வட்டம் முழுவதும் அவள் இப்போது மங்கை என்றுதான் அழைக்கப்பட்டாள். அவள் இப்போது ஊருக்கே செல்லப்பிள்ளை. ஆனால் அந்த மங்கைக்கு நல்லூரானே  செல்லப்பிள்ளை.

கோயிலை நெருங்கும் போதே மங்கையின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோயிலை பெருக்கிக்கொண்டிருந்த சரசாச்சிக்கு ஒன்றும் புரியவில்லை. மங்கை ஏன் அழுற என்று பெருக்குவதை நிறுத்திவிட்டு கேட்டாள்.

ஏன் அழுகிறாள் என்று மங்கைக்கேகூட தெரியாது என்று சரசாச்சிக்கு எப்படி தெரியும்.? கொண்டு வந்த பூக்களை நல்லூரான் சன்னிதியில் சாத்திவிட்டு பித்துப் பிடித்தவள் போல் நீண்டநேரம் அழுதபடியே கும்பிட்டாள். இது தான் நல்லூரானை அவள் வணங்கும் இறுதி முறையென்று அவள் உணர்ந்திருந்தாளோ என்னவோ மூன்று தடவை கடந்தும் கோயிலைச் சுற்றி சுற்றி வந்தாள். அதற்குள் பொழுது புலர்ந்து வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. சட்டென்று சுற்றுவதை நிறுத்திவிட்டு கண்ணீரால் கந்தனுக்கு விடை கூறிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள். 

அப்போது தான் சிலர் வீட்டைவிட்டெழுந்து வெளியேவர ஆரம்பித்திருந்தனர். மங்கை ஓடுவதைக் கண்ட அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்று கேட்கவோ அதைக்கேட்டு பதில் சொல்லவோ அங்கு யாருக்கும் அவகாசம் கிடைக்கவில்லை. வேகமாக ஓடிவந்த மங்கையைப் பார்த்ததும் பதறிப்போனாள் மரகதம். ஓடிவந்த அவளை அணைத்து என்னவென்று கேட்டாள். "அம்மா இங்க இருக்கவேண்டாம் எங்கயாவது போயிருவோம் அப்பாவையும் தங்கச்சியையும் கூட்டி கொண்டு வாங்க" என்றாள். மரகதத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அவள் தந்தை வீரவாகுவும், அயலில் இருந்த உறவினர்களும் படலையடிக்கு வந்துவிட்டார். மங்கை என்ன சொல்கிறாள் ஏது சொல்கிறாள் என்று யாருக்கும் புரியவில்லை. மங்கைக்கு மட்டும் தெரியுமா என்ன?

இங்கே இவர்கள் புரியாமல் விழிக்கும் போதே, அங்கே நல்லூர் ஆலயத்தை போர்த்துக்கேய படைகளும், அவர்களின் அடிமைக்கூலிகளும் சூழ்ந்து ஆலயத்தை முற்றுகையிட்டு இடிக்க ஆரம்பித்திருந்தனர்.

 "கோயிலை இடிக்காத அப்பு" என்று முன்னால் சென்று மறித்த சரசாச்சியை கொலை வெறி பிடித்த கிறிஸ்தவ கூட்டம் வெட்டி வீசிவிட்டு இடிப்பதைத் தொடர்ந்தது. நல்லூரான் கோயில் இடிக்கப்படும் செய்தி ஊரைக்கடந்தும் பரவியது. கோயில் இடிப்பைத் தடுக்கச் சென்ற தமிழர்களின் சிறிய படைகளால் கிறிஸ்தவ பறங்கியர்களின் பெரிய படைகள் முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் கிறித்துவ படைகளின் இடிப்பு நடவடிக்கை ஆறு நாட்களுக்கு தாமதப்படுத்த மட்டுமே முடிந்தது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்து தமிழர்கள் சிறுசிறு படைகளாக திரட்டிவந்து கிறிஸ்தவ படைகளுடன் மோதின. தமிழர்களின் வீரமிக்க தாக்குதல்களால் பலநூறு போர்த்துக்கேய படைகளும் அடிமைக்கூலிகளும் கொல்லப்பட்டனர். அப்படி சிறுசிறு குழுக்களாக எதிர்த்தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும்போதே ஒருபுறம் ஆறாம் நாளில் நல்லூர் கோயில் முற்றிலுமாக இடிக்கப்பட்டிருந்தது. 

தமிழர்களின் அத்தனை சிறுபடைகளும் ஒன்றாக சேர்த்து மோதியிருந்தால் 

ஒருவேளை கிறிஸ்தவ கூட்டம் அன்று இல்லாமலே போயிருக்கும். நல்லூர் கோயிலும் அழியாமல் காக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒற்றுமையின்மை தானே தமிழர்களின் சாபம். என்ன செய்வது?  

அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதும், நல்லூர் கோயில் முற்றாக இடிக்கப்பட்டதும் மக்களிடையே காட்டுத்தீயாக  பரவியது. மக்களால் உள்ளுக்குள் அழுவதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. யார் வீட்டிலும் ஒழுங்காக அடுப்பெரியவில்லை. ஏழாவது நாள் விடிந்தது. யாருக்கும் விடியலில்லாத விடியல் அது. அன்றைய நாள் மயான அமைதியாக கடந்தது. பூகம்பத்தின் முன்னும் அமைதி வரும், பின்னும் அமைதி வரும். மக்கள் பூகம்பத்தின் பின்னான அமைதியென்றே நினைத்திருந்தார்கள். ஆனால் அது பூகம்பத்திற்கான அமைதியென்று அடுத்தநாளில் தான் தெரிந்தது.

கோயிலை இடிக்க ஆரம்பித்த முதல் நாளிலேயே மங்கை குடும்பம் ஊரைவிட்டு புறப்பட்டிருந்தது. மங்கையின் வார்த்தை சாதாரண வார்த்தையல்ல, அது முருகனின் வாக்கு. இதை நம்பிய பல உறவுகளும் அவர்களுடன் ஊரைவிட்டு புறப்பட்டிருந்தது. கால் போன போக்கில் நல்லூரான் காட்டிய வழியென்று அவர்கள் எங்கெங்கோ போனார்கள். 

மூன்றாவது நாளில் அவர்களில் சில குடும்பங்கள் இணுவில் பகுதியில் தங்கி விட ஊர் விட்டு ஊர் சென்ற மங்கையின் குடும்பமும் சில உறவினர்களும் ஏழாவது நாளில் நீர்வேலிப் பகுதியில் தங்கி விடுகிறார்கள். மங்கை குடும்பமும் சில உறவினர்களின் குடும்பமும் ஊரைவிட்டு சென்றாலும் பல குடும்பங்கள் இன்னும் நல்லூரில்த்தான் இருந்தார்கள். 

எட்டாவது நாள் விடிய ஆரம்பித்திருந்தது. அன்றும் அதே மயான அமைதி. அப்படியே அமைதியாக இன்றைய நாளும் நடந்து விடும் என்றே அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் அன்று தான் அந்த விபரீதம் நடந்தது. ஊர் முழுவதையும் போர்த்துக்கேய படைகளும் அவர்களின் அடிமைப் படைகளும் சுற்றிவளைத்திருந்தன. வீடு வீடாக வந்த கிறிஸ்தவ படைகள் அனைவரையும் கால்நடைகள் போல பிடித்துக்கொண்டு சென்றார்கள். கிறிஸ்த்துவர்களை எதிர்த்தவர்கள், வரமறுத்தவர்களை மற்றவர்களின் கண்முன்னால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். 

இப்படி கிறிஸ்தவ படைகள் அனைவரையும் பிடித்துச் செல்வதைக் கண்ட பலரும் ஓடி ஒழியத் தொடங்கினார்கள். உயிரை காப்பாற்றிக்கொள்ள மீதி பேர் பற்றைகள் பறுகுகள் என்பவற்றுக்குள்ளும் குப்பை கூழங்களுக்குள்ளும் தம்மை மறைத்துக் கொண்டார்கள். கிறிஸ்தவ படைகள் அவர்களைக் கடந்ததும் கால்போனபோக்கில் ஓடி தப்பினார்கள். அப்படி ஒழிந்து ஓடியவர்களில் மங்கையின் பால்ய நண்பி தனமும் ஒருத்தி.

பிடித்துச் செல்லப்பட்ட அனைவரும் கோயில் இடிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிதைந்து போன நல்லூரான் சன்னதியை பார்த்து கண்ணீர் விட்டு கதற மட்டுமே அவர்களால் முடிந்தது. ஆனால் அதற்குக் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். பின்னர் இளம் ஆண்கள், இளம் பெண்கள் என்று தனித்தனியாக பிரித்தார்கள். யாரேனும் தப்பித்து ஓடினால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கொல்லப்படுவார்கள் என்று பயமுறுத்தினார்கள் கிறிஸ்தவ காடையர் படைகள். ஆனால் இவர்களின் மிரட்டல்களைக் கடந்தும் பல ஆண்களும் பெண்களும் திமிறிக்கொண்டு ஓடினார்கள். சிலர் கிறிஸ்தவ படைகளால் பிடிக்கப்பட்டு கொடுரமாக கொல்லப்பட்டாலும் திமிறிக்கொண்டு புறப்பட்டவர்கள் பலர் ஓடித் தப்பியிருந்தனர்.

தனியாக பிரித்தெடுக்கப்பட்ட ஆண்கள் கைகால்கள் கட்டப்பட்டார்கள். இளம் பெண்கள் அனைவரது கண் முன்னாலும் கிறிஸ்தவ காட்டுமிராண்டி படைகளால் வன்புணர்வு செய்யப்பட்டார்கள். வயோதிகர்கள் பலர் இந்தக் கொடுமைகளைப் பார்க்கமுடியாமல் மாரடைத்து மாண்டுபோனார்கள். ஓரளவு வளர்ந்த சிறுவர்கள் கற்கள் தடிகள் கொண்டு தாக்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அச்சிறுவர்கள் அனைவரும் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். 

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டு புதிய சந்ததிகளை உருவாக்கும் கருவிகளாக கிறிஸ்தவ சந்ததிகளை விளைவிக்கும் விளைநிலங்களாக மாற்றப்பட்டார்கள். வயோதிகர்கள் சிறுவர்கள் உணவின்றியும் நீரின்றியும் மாண்டார்கள். ஓரளவு வலுவுள்ளவர்கள் அங்கிருந்து இரவு வேளையில் ஓடித் தப்பினார்கள். 

கைதான ஆண்கள் அனைவரும் கோயில் இடித்துப் பெறப்பட்ட கற்களை சுமந்து செல்வதற்காகவும், யாழ்ப்பாணம் கோட்டையைக் கட்டுவதற்காகவும் அடிமைக்கூலிகளாக பயன்படுத்தப்பட்டார்கள். கோட்டை கட்டி முடிவதற்கு முன்னரே பலர் நோயாலும் மன அழுத்தத்தாலும் மாண்டுபோயினர். மீதமானோர் அனைவரும் கோட்டை வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றதும் சிரைச்சேதம் செய்து கொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு தடுத்து வைத்து வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குள் நல்லூர் ஆலயம் இருந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. குழந்தைகள் பிறந்ததும் புதிதாக கட்டப்பட்ட சர்ச்சின் பங்கில் பதிவு வைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவ பாடசாலைகளை உருவாக்கி வன்புணர்வில் பிறந்த குழந்தைகளைக்கொண்டு புதிய சந்ததியை உருவாக்கியிருந்தார்கள்.  யாழ்ப்பாணத்தில் முதலாவது கிறிஸ்தவ சந்ததி உருவாக்கப்பட்டிருந்தது. நல்லூரான் இருந்த தடையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன. 

சில பத்தாண்டுகள் கடந்தது. மங்கையும் இப்போது இளமையைக் கடந்திருந்தாள்.

நல்லூரான் இல்லாமல் எனக்கு வாழ்க்கை தேவையில்லை என்று மங்கை திருமணமே முடிக்கவில்லை.  மீண்டும் நல்லூரில் நல்லூரான் சன்னதி உருவாக்கப்படவேண்டும் என்று நல்லூரை நோக்கி புறப்பட்டாள் மங்கை. நல்லூரான் சந்நதியை அமைத்தே தீருவது என்ற தீர்க்கம் மங்கையின் தீர்க்கமல்ல. அது நல்லூரான் தீர்க்கம்.


-தமிழன்பன்-

No comments:

Post a Comment