Friday 14 July 2023

தேவதாசி முறையை கைவிட்ட பௌத்தம்

இன்று தேவாதாசிகள் என்போர் இந்துக்களின் சமய நம்பிக்கையின் அங்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இன்று சைவம் வைணவம் என்று சொல்லப்படும் பிரிவுகள் பல சமண பௌத்த கூறுகளை தம்வசம் உள்வாங்கி கொண்டுள்ளது என்பதே உண்மையாகும். சமய தத்துவங்கள் முதல் ஆச்சார அமைப்பு நடைமுறைகள் வரை சமண பௌத்த கூறுகள் உள்ளன.

பௌத்தத்தின் அவ்வாறான ஒரு கூறுதான் இந்த தேவதாசி நடைமுறை. சமண மதம் என்று குறிப்பிடப்படும் மகாயான பௌத்த பிரிவுகள், உலகாயத பிரிவு என்பவற்றின் ஒரு அங்கமே இந்த தேவதாசிகள். துறவு என்பது இல்லற பந்தத்தில் இருந்து தவிர்ப்பதே அன்றி பசியுடன் இருப்பது அல்ல என்பது அவர்கள் வாதம். துறவி என்பதனால் ஒருவர் உணவைத் துறப்பதில்லை அல்லவா? அதுபோலவே உடல்சார்ந்த பசியை போக்குவதும் தவறில்லை. ஆனால் இன்ன உணவுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும் என்பது துறவுக்கான முறையல்ல, அதுபோலவே உடற்பசிக்கும்.. 


அதனால் குடும்ப வாழ்வைத் தவிர்த்தாலும் உடற்பசியைப் போக்குவதற்கான ஏற்பாடாக சமண மதங்கள் இந்த தேவதாசி முறையை உண்டாக்கியது.. 

பயன்படுத்தியது.. 

அந்த தேவதாசி முறைக்கு அனைத்து சாதிகளில் இருந்தும் பெண்கள் சென்றுள்ளனர். இன்றைய கிறித்தவ மதத்தில் உள்ள கன்னியாஸ்திரி முறையை ஒத்ததாகவே அது ஆரம்பத்தில் இருந்துள்ளது. குறித்த குலத்தைச் சேர்ந்தவர் என்று இல்லாமல் எல்லா குலத்தவர்களும் பெண்களை அனுப்பியுள்ளனர். அந்த துறவுக்கு துணை நின்ற பெண்களின் சந்ததிகள் நாளடைவில் ஒரு சமுதாயமாகவே மாறிவிட்டார்கள். கன்னியாஸ்திரிகள் தனியான சமூகமாக உருவாகாததற்கு அவர்கள் மதத்தின் கட்டமைப்பே காரணம். 

அன்றைய காலத்தில் கருத்தடை, கருக்கலைப்பு என்பவை சிக்கலான ஒன்றாக இருந்ததால் தேவதாசிகள் குழ்நதைகளை பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அல்லது அவ்வாறு பெறும் குழந்தைகளை அனாதை குழந்தைகள் என்ற பெயரில் அனாதை இல்லம் ஒன்றை அமைத்து வளர்க்காமல் குறித்த பெண்களே வளர்த்ததால் அது ஒரு சமுதாயமாகவே மாறிவிட்டது என்றும் சொல்லலாம்.

பிற்காலத்தில் சைவத்தின் எழுச்சி சமணத்தின் தோல்வி போன்ற காரணங்களால் தேவதாசிகள் கைவிடப்பட்ட சமூகமாக மாறினார்கள். கைவிடப்பட்ட தேவதாசிகளை அக்காலத்தில் எஞ்சிய பௌத்தர்களும் ஏற்கவில்லை. அப்போது சமூகத்தின் மையமாக மாறியிருந்த சைவ கோயில்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் மீட்சிக்கான பிராயச்சித்தமாக இறைபணி செய்வதற்கு வாய்ப்பளித்து. 

ஆனால் சைவத்தின் செல்வாக்கு சரிந்து அன்னியர்கள் தயவில் ஜமீன்தார் பண்ணையார் நாயக்கர் என்று சிறுசிறு கூட்டங்களாக ஆட்சியமைப்பு மாறியபோது சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் எல்லாம் பயன்படுத்தும் நிலைக்கு அந்த தேவதாசி சமுதாயம் தள்ளப்பட்டது. 

இன்று பௌத்த துறவிகள் சிலர் பாலியல் நுகர்வுக்காக பெண்களிடம் சென்று பிடிபட்டு அது பேசுபொருளாகவும் மாற்றப்படுகிறது. அது சரியா தவறா என்று நான் விளக்க வரவில்லை. ஆனால் காமம் என்பது தவறில்லை. அதைத் தீர்த்துக் கொள்வதும் தவறில்லை. நாம் அனைவரும் காமத்தின் எச்சங்கள் தானே? ஆனால் துறவிகள் காமத்தை துய்க்கலாமா என்பதே கேள்வியாக மாறுகிறது..

துறவிகள் காமத்தை துய்க்கலாமா என்ற கேள்வியுடன்..
துறவிகள் உணவு உண்ணலாமா?
துறவிகள் தூங்கலாமா?
துறவிகள் ஆடை உடுத்தலாமா?
துறவிகளுக்கு மத அடையாளம் உள்ளதா? 
இப்படி நிறைய கேள்விகளை கேட்கலாம்..
.

அவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்.. காமம் கூடாது என்றால் உணவு நீர் உடை தூக்கம் மதம் எதுவுமே கூடாது அல்லவா..

உண்மையில் துறவு என்றால் ஒன்றை விடுவது கிடையாது.. அதில் கட்டுண்டு போகாமல் இருப்பது. உணவு நீர் உடை காமம் என்று எதிலும் கட்டுண்டு கிடக்கக் கூடாது அதுதான் துறவு. அவற்றை தவிர்ப்பது துறவல்ல.. காமத்தை அடக்கி வைப்பதைவிட துய்ப்பதே சிறந்தது..

இந்துக்கள் வாழ்ந்து வாழ்வை கடந்த பின்னரே துறவு என்று கொள்கிறார்கள். வாழ்வை வாழ்ந்து கடக்காதவனது துறவு பொய்யானது என்கிறார்கள். 

பௌத்தத்தில் தமது விருப்பத்தில் துறவை ஏற்பவர்கள் குறைவு. சிறுவயதிலேயே குடும்பத்தினரால் துறவிகளாக மாற்றப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆசைகளைத் துறந்து துறவிகள் ஆனவர்கள் என்று சொல்ல முடியாது. யாரோ ஒருவரின் விருப்பத்திற்காக ஒருவர் துறவியாக முடியாது அல்லவா..

கிறிஸ்தவ நடைமுறைகளுடன் பௌத்தத்தை பொருத்திப் பார்க்க முடியாது. கிறிஸ்தவ சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாதிரியார்களுக்கும் தனித்தனி அறைகள், அந்த சபைகளுக்கு என்று தனியான கன்னியாஸ்திரி மடங்கள், அந்த மடத்திற்கு என்று அனாதை இல்லங்கள், ஆஸ்பத்திரிகள் என்று அனைத்தும் உள்ளன. ஆனால் இத்தகைய வசதிகள் எதுவும் பௌத்த பிக்குகளுக்கு கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய வெளியே செல்கிறார்கள். அதனாலேயே அண்மையில் நாம் பார்த்த சம்பவங்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கிறிஸ்தவ சபைகளுக்கு இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தும் அவர்களது சபைகளுக்கு வெளியேயும் பல சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் பௌத்த பிக்குகள் எந்த ஏற்பாடுகளும் இல்லாததால் இவ்வாறு செல்வதை, கிறித்தவ பாதிரியார்களின் பாலியல் நடவடிக்கைகளுடன் ஒப்பிட முடியாது.

பௌத்தம் மீண்டும் ஒருமுறை தன்னை சீர்செய்ய வேண்டும். அவர்கள் கைவிட்ட தேவதாசி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும். அது ஒரு குலமாக உருவாகாமல் கன்னியாஸ்திரி முறையை போல பேணவேண்டும். மடங்களுக்கு என்று தனியான அனாதை இல்லங்கள், ஆஸ்பத்திரிகள் என்பவற்றை அமைத்து அந்த தேவதாசிகளின் கர்ப்பம், கர்ப்ப தடை, குழந்தைகள் என்பவற்றை முறைப்படுத்த வேண்டும். 

கிறிஸ்தவ சபைகளின் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவது ஒன்றே பௌத்த பிக்குகள் தமது இச்சைகளை தீர்த்துக் கொள்ள, வெளியே சென்று மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கு வழியாகும். அல்லது இந்துக்களைப் போல இல்லற வாழ்க்கையை வாழ்ந்து முடித்த பின்னரே துறவு என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

அடுத்தவர்கள் எள்ளி நகையாடுவார்கள் என்பதற்காக தேவதாசி முறையை கைவிட்டாலும், அதுவும் இன்று அடுத்தவர்கள் எள்ளி நகையாடும் நிலைக்கு காரணமாகி உள்ளது. அதனால் அடுத்தவர்களுக்காக எமது பாரம்பரியம் எதனையும் கைவிடக் கூடாது. அதில் நடைமுறை சார்ந்த தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் அவற்றை கைவிடக் கூடாது.

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆணும் பெண்ணும் தம் விருப்பத்துடன் தனியறையில் இருந்து உறவுகொள்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அதனை படமெடுத்து பகிரங்கமாக இடுவது தவறு. அவர்களை தாக்குவது பிழை. இவை அனைத்தும் சட்டப்படி குற்றமாகும். அதனால் யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.



No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...