Thursday, 10 August 2023

நாம் ஜீசஸை பின்பற்ற வேண்டுமா?

நிச்சயமாக, நாம் அனைவரும் ஜீசஸை பின்பற்ற வேண்டும். ஜீசஸைப் போன்ற தியாகம் மிக்க இந்துக்களே இன்றைய காலத்தின் தேவை.

என்ன ஜீசஸ் இந்துவா? என்று உங்களுக்கு தோன்றலாம்..

ஆம், ஜீசஸ் ஒரு இந்துவேதான். இந்து வாழ்வியலை, பாரம்பரியத்தை காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடினார். நாம் அனைவரும் இந்துக்களாக வாழ்வதற்காகவே யூதர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடினார். அதற்காகவே தன் இன்னுயிரை ஈந்தார்.

ஜீசஸ் எப்படி இந்துவாக முடியும்? அதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம்.. நானே சொல்கிறேன்.. கவனமாக கேளுங்கள்.

நீங்கள் பலரும் நம்புவது போல ஜீசஸ் யூதர் கிடையாது. அவர் ஒரு அசாரியர். இன்றைய இஸ்ரவேல் நாட்டின் பூர்வ குடிகள் சமாரியர்கள். அசாரியர்களும் அவர்களுடன் நீண்டகாலமாக வாழும் ஒரு இனக்குழுதான். யூதர்கள் என்பவர்கள் அந்த நாட்டில், அந்த காலத்தில் புதிதாக உருவான ஒரு மதக் குழுமமாகும். சில நூற்றாண்டுகள் முன் உருவான அவர்கள் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும், தமது வழிமுறையே சரியானது என்றும், மற்றவர்களது வழிபாடுகள் மதங்கள் அனைத்தும் பிழையானது என்றும் கூறி தடை செய்தார்கள். அப்போது ரோமானியர்களுக்கு கீழான சிற்றரசர்களாக ஆதிக்கம் செலுத்தும் குழுமமாக இந்த யூதர்கள் இருந்தார்கள்.

அந்த நாட்டில் யூத வழிப்பாட்டு தலத்திற்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஏனைய மதத்தவர்களின் வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் யூதர்களால் இடித்து அழிக்கப்பட்டது. யூதர்களின் ஆட்சி அதிகார எல்லைக்குள் வேறு எந்த மதத்தின் வழிபாட்டு தலமும் இருக்க கூடாது, உருவ வழிபாடும் இருக்க கூடாது என்று தடை செய்தார்கள். அதனால் தமது மதத்தைக் காப்பாற்ற எண்ணிய பலரும் யூத ஆட்சி எல்லையைக் கடந்து வேறு இடங்களில் சென்று குடியேறினார்கள். குடியேறிய இடங்களில் தமது வழிபாட்டு தலங்களை உண்டாக்கி சிலைகளை பிரதிஷ்டை செய்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

அப்படி அசாரியர்கள் பலர் குடியேறிய ஒரு இடம்தான் அபிஜா பிராந்தியம். இன்று லெபனான் என்று அழைக்கப்படும் அந்த அபிஜா பிராந்தியத்தில்தான் அசாரியர்கள் ஆலயம் அமைத்து சிலைகளை பிரதிஷ்டை செய்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த ஆலயத்தில் பிரதான அர்ச்சகராக இருந்தவர்தான் சகாரியர்.

இந்த சகாரியர்தான் எலிசபெத்தின் கணவர். எலிசபெத்தின் மகன்தான் ஜீசஸிற்கு லெபனான் ஆற்றில் வைத்து ஜலதீட்சை கொடுத்த யோவான் எனப்படும் ஜோன். ஜீசஸை விட ஜோனின் பிறப்பே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஜீசஸின் குரு என்றுகூட யோவானை கூறலாம். யோவானும் தந்தை வழியில் லெபனான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் பூசை செய்து வந்த ஒரு அர்ச்சகராவார். 

சகாரியர், யோவான் இருவரும் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தாலும், ஜீசஸ் வாமாச்சாரம் என்று சொல்லக்கூடிய ஆவிகள், மந்திர தந்திரங்களில் நாட்டமுடைய ஷாமன் மதத்தின் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஏனென்றால் அவர் நீண்டகாலமாக அவ்வாறான ஆவி வழிப்பாட்டை பின்பற்றுபவர்களுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். 

நாம் இந்திய நாட்டில் வாமாசாரம் என்று சொல்லும் நடைமுறை மதம், மத்திய கிழக்கு நாடுகள் முதல் மங்கோலியா வரை ஷாமன் மதம் என்ற பெயரில் இன்றுவரை இருக்கிறது. ஜீசஸ் இந்த ஷாமன் மத்ததை சேர்ந்தவர்களுடனேயே நீண்ட காலமாக இருந்துள்ளார். அதனால்தான் யோவான் ஜலதீட்சை கொடுத்து ஜீசஸை வைதீக நடைமுறைக்கு மாற்றினாலும், அவர் வாமாச்சார வழிமுறைகள் மீதே நாட்டம் கொண்டவராக இருந்தார். அதையே மக்களிடம் பரப்பினார்.

இன்று காளிக்கும், வைரவருக்கும், கருப்பனுக்கும், முனியப்பருக்கும் பலிகொடுத்து உருவேற்றி வழிபடும் வழிமுறையே ஜீசஸின் வழிமுறையாக இருந்துள்ளது. கோயிலில் பால் பழம் பூ வைத்து தூம் தீபம் காட்டும் வைதீக நடைமுறையையே சகாரியரும், யோவானும் பின்பற்றி உள்ளனர். மீண்டும் ஒருமுறை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஜீசஸை விட யோவானே முக்கியமானவராக எதிர்பார்க்கப்பட்ட ஒருவராக பைபிளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மேரியின் வயிற்றில் ஜீசஸை கொடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே எலிசபெத்தின் வயிற்றில் யோவானை கர்த்தர் கொடுத்துவிட்டார், கப்ரியல் மூலமாக.

ஆக, கர்த்தருக்கு முதலில் பிறந்த பிள்ளை யோவான், பிறகு பிறந்தவர்தான் ஜீசஸ். வைதீக மத்ததை காப்பதற்காக யோவானையும், வாமாச்சார வழிமுறைகளை காப்பதற்காக ஜீசஸையும் கர்த்தர் பிறப்பித்தார் என்றே கொள்ள வேண்டும்.

உண்மையில் நீங்கள் ஜீசஸை பின்பற்றுபவராக இருந்தால் பலிகொடுத்து வழிபடும் வாமாச்சார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அல்லது கர்த்தர் முதலில் கொடுத்த யோவானின் வழிமுறைகளை பின்பற்றுவது என்றால் வைதீக இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும்.

இரண்டு வழிமுறைகளையும் கர்த்தாவாகிய அந்த மாயவனே காட்டியுள்ளார். நீங்கள் ஜீசஸை பின்பற்ற போகிறீர்களா? யோவானை பின்பற்ற போகிறீர்களா?

யாரை பின்பற்றுவது என்றாலும் நீங்கள் இந்து மதத்தை முதலில் பின்பற்ற வேண்டும். 

கிறிஸ்தவம் என்பது ஜீசஸ் காட்டிய வழிமுறை கிடையாது. ஜீசஸ் பெயரால் மற்றவர்களை அடிமைபாபடுத்தும் யூதர்களின் சூழ்ச்சி அது.

பி.கு: இந்த சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் குறிப்பிடப்படும் சம்பவங்களே..



No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...