யாழ்ப்பாணத்தில் பிரபலமான இந்து ஆலயங்களில் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். இன்று பிள்ளையார் கோயிலாக சிறப்புப் பெற்றிருந்தாலும் அதன் பழைய ஆலயம் பற்றிய விபரமும், அது அழிக்கப்பட்ட வரலாறும் பலருக்கும் தெரியாத நிலையே காணப்படுகிறது.
இப்போது மருதடி பிள்ளையார் கோயில் உள்ள இடத்தில், அந்த ஆலயம் முன்பு இருக்கவில்லை. இன்று மானிப்பாய் கிரீன் ஹாஸ்பிடல் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் சர்ச் என்பவை அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே முன்னர் கோயில் இருந்துள்ளது.
தென்னிந்திய திருச்சபை என்று இப்போது அறியப்படும், அமெரிக்கன் சிலோன் மிசன் என்னும் கிறித்தவ மதமாற்ற அமைப்பு, 1813 இல் இலங்கையில் கால்பதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தென்னிலங்கையில் செயற்படவே விரும்பிய போதும் அப்போதைய கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளால் யாழ்ப்பாணத்தில் தமது மதமாற்ற செயற்பாடுகளை ஆரம்பித்தனர். பாரம்பரிய இந்து மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான பிரசுரங்களை, நூல்களை வெளியிடுவதை அவர்கள் பிரதான பணியாக கொண்டிருந்தனர். மக்கள் தமது பாரம்பரிய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் மீது நம்பிக்கையை இழக்க வேண்டும், அவை தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டும், அதுவே மதமாற்றத்திற்கு முதல்படி என்பது கிறித்தவ மதமாற்ற குழுக்களின் மதமாற்ற உபாயம். அமெரிக்கன் சிலோன் மிசனும் அதையே இந்த மண்ணில் செய்தது. சமூக சேவை என்ற பெயரில் மக்களை அணுகுவது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய வாழ்வியலை சிதைப்பது, என்பது அவர்கள் கைக்கொண்ட உத்தி. அதற்காக வைத்திய சாலைகள் கல்விச் சாலைகள் என்பவற்றையும் நடத்த ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு அவர்கள் யாழ்பாணத்தில் ஆரம்பித்த வைத்தியசாலை தான் மானிப்பாய் கிறீன் ஹாஸ்பிட்டல். அந்த இடம் முன்பு பூதவராயர் கோயில் எனப்படும் மிகப்பெரிய சைவ ஆலயம் அமைந்திருந்த இடமாகும். பூதவராயர் என்பது பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாக இறைவனை வழிபடும் ஒரு இந்து வழிபாட்டு முறையாகும். லிங்க வடிவமாகவும், பூதவராயர் என்ற ஒரு கடவுள் வடிவமாகவும் வழிபடும் வழக்கம் இம்மண்ணில் இருந்துள்ளது.
தமிழர்களிடம் இருந்து யாழ்பாணத்தை ஆக்கிரமிப்பு செய்த போர்த்துக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட செய்த கத்தோலிக்க கிறித்தவர்கள், இலங்கையில் இருந்த அனைத்து இந்து பௌத்த ஆலயங்களையும் இடித்து வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். அவ்வாறு கத்தோலிக்க மதவெறியர்கள் இடித்த ஆலயங்களில் இந்த மானிப்பாய் மருதடி பூதவராயர் ஆலயமும் ஒன்று. இடித்த கற்கள் யாழ் கோட்டை அமைக்க எடுத்துச் செல்லப்பட, அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டார்கள், பெண்கள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். சிலர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு சென்றதும் நடந்துள்ளது.
அப்படி கத்தோலிக்கர்கள் இடித்து தரைமட்டமாக்கிய இடத்திலேயே இன்று தென்னிந்திய திருச்சபையின் சர்ச்சும், வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. அதன் சுற்றுவட்டாரத்தில் ஏற்கனவே இருந்த கிறிஸ்தவ முலாட்டோக்களுக்கு மேலதிகமாக, கிறிஸ்தவ பறங்கியர்கள் சிலரும் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். இன்றும்கூட அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் பலரும் முலாட்டோ என்று கூறத் தக்க தோற்றத்திலும், தென்னிந்திய திருச்சபையினர் பலரும் பறங்கியர் என்று கூறத் தக்க தோற்றத்திலும் உள்ளார்கள்.
பாராம்பரிய மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்காக பூதவராயர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் கத்தோலிக்கர்களால் இடுகாடும் சர்ச்சும் கட்டப்பட்டிருந்தது. பின்னர் கத்தோலிக்கர்களை வென்று யாழ்பாணத்தை ஆக்கிரமிப்பு செய்த புரட்டஸ்தாந்து(ஒல்லாந்த) சபையினர் கத்தோலிக்க சர்ச்சினை இடித்து அகற்றினார்கள். அந்த இடத்திலேயே பின்னர் அமெரிக்கன் சிலோன் மிசன் தமது சர்ச்சையும் வைத்திய சாலையும் நிறுவியது.
பிற்காலத்தில் பிரித்தானிய அரசு தமது நீண்டகால இருப்பை தக்க வைப்பதற்காக, பாரம்பரிய மக்களுக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பது போல் கொடுத்து, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ற நடைமுறையை பின்பற்றினார்கள். அதனால் 1850 களின் பின்னர் பாரம்பரிய இந்து மக்களுக்கு கத்தோலிக்கர்கள் இடித்து தரைமட்டமாக்கி கைப்பற்றிய பூதவராயர் கோயில் நிலத்திற்கு மாற்றாக, ஆலயம் எதுவும் அமைக்க முடியாத வயல் நிலத்தை பதில் நிலம் என்பதாக கொடுத்தார்கள். அதற்கும் இந்துக்களிடம் இருந்து பெருந்தொகை பணம் பிரித்தானிய அரசால் அறவிடப்பட்டது. அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் கட்டுப்படுத்தும் உரிமையை கூட பிரித்தானிய அரசே வைத்துக் கொண்டது. அந்த காலத்திலேயே கிறிஸ்தவ ஆளுகைக்குட்பட்ட சைவ சமயமும் பரவ ஆரம்பித்தது.
பூதவராயர் கோயிலை இடம் மாற்றி அமைப்பது தொடர்பில், பக்தர்களால் தெய்வ ஆணை பலமுறை கேட்கப்பட்ட போதும் அது கிடைக்காததால், பூதவராயர் கோயிலை மீண்டும் அமைப்பது என்றால் அது இருந்த இடத்தில் தான் மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், இடம் மாற்றி அமைப்பது இறைவன் ஆணையல்ல என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் பிற்பாடு பூதவராயர் ஆலயத்தின் பரிவார மூர்த்தியான விநாயகர் சன்னதி இருந்த இடம் பிரித்தானியர் கொடுத்த காணியின் எல்லையை தொட்டு நிற்பதால் பிள்ளையார் கோயிலை அமைப்பது என்றும், பூதவராயர் ஆலயத்தின் இடத்தை மீட்டு அந்த இடத்திலேயே மீண்டும் பூதவராயருக்கு கோயில் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பூதவராயர் ஆலயத்தின் பரிவார பூர்த்தியாக பிள்ளையார் இருந்த இடமே இன்றைய மருதடி பிள்ளையார் கோயில் முன்புறம் என்பதும், அதற்கு முன்னால் உள்ள கிறிஸ்தவ சர்ச்சே பூதவராயர் ஆலயத்தின் மூலவர் இருந்த இடம் என்பதும் மறைக்கப்பட முடியாத வரலாற்று உண்மை.
தன் ஆலயம் அமைக்கப்படும் நாளுக்காக பூதவராயர் காத்துக் கொண்டு இருக்கிறார். அன்னிய ஆக்கிரமிப்பின் அசிங்கத்தை நீக்கி, பாரம்பரிய மக்கள் தம் வாழ்வியல் இருப்பை மீண்டும் நிறுவும் நாள் எப்போது?
No comments:
Post a Comment