Monday, 6 December 2021

இந்தியா இலங்கையில் வசிக்கும் 'சித்தி' எனும் ஆபிரிக்க வம்சாவழி இனத்தவர்கள்.

ஆபிரிக்காவின் அபினீசியா பகுதியில் இருந்து போர்த்துக்கேய கிறிஸ்தவ ஆட்சியிலும், பின் பிரித்தானிய கிறிஸ்தவ ஆட்சியிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு அடிமைகளாகவும், கூலிப்படைகளாகவும் கொண்டுவரப்பட்ட மக்களே இவர்கள்.

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற பகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் இலங்கையிலும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள மக்களுடன் கலப்படைந்து விட்டாலும் சுமார் இருபதாயிரம் வரையிலான ஆபிரிக்க மக்கள் தங்கள் ஆபிரிக்க வம்சாவழியினர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடிமைகளாக கொண்டுவரப்பட்ட பலரும் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை பின்பற்றினாலும் சிலர் இஸ்லாமிய சூபி மதத்தை பின்பற்றுகின்றனர். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவர்கள் இப்போது நீக்ரோ என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. சித்தி என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது சித்தி இனத்தவர்கள் பலர் தாம் மீண்டும் யாராலும் அடிமைப்படுத்தப் படக்கூடாது என்பதற்காக பெரும் வனங்களுக்குள் சென்று தம் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர்.

உடல் பலம் கடின உழைப்பு என்பவற்றை கொண்டிருந்தும் கல்விஅறிவு, முன்னேற்றம் என்பவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் தம் பாரம்பரிய மொழி கலாச்சாரம் மரபு என்பவற்றை தொலைத்து இன்றுவரை மனோரீதியான அடிமைகளாக வாழ்ந்து வரும் இவர்கள், ஆபிரிக்காவின் புகழ்பெற்ற "பந்தூ" வம்சத்தை சேர்ந்தவர்களாவர்.

பட உதவி, தகவல் : BBC




No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...