Friday, 11 February 2022

கிறிஸ்தவர்கள் உருவாக்கிய இந்து தெய்வம்-பொம்மி அம்மனின் கதை

அது கிறிஸ்தவர்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த காலம். இன்றைய தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் மலைகள் அருவிகள் ஆறுகள் என்று அழகால் சூழ்ந்த கிராமம் இலந்தைக்குளம் அருகில் உள்ள பரமன்பட்டி. இந்த அழகிய ஊரில் வாழ்ந்தவள்தான் அந்த அழகான சிறுமி பொம்மி. 

பொம்மிக்கு தாய், தந்தை இருவரும் இல்லை. அவளுக்கு எல்லாமே அவனுடைய அண்ணன் அழகன் மட்டும்தான். பொம்மிக்கு வெளியூர் பையன் ஒருவனை மணமுடிப்பதற்காக நிச்சயம் செய்திருந்தான் அழகன். இன்னும் சில காலத்தில் அவள் மணமுடித்து ஊரைவிட்டே செல்லப் போகிறாள்.

வழக்கமாக அழகன் வேட்டைக்கு போனால் மாலையில் தான் வீடு திரும்புவான். வீட்டு வேலை, சமையல் வேலை என்று எல்லாவற்றையும் பொம்மியே செய்துவிடுவாள். குடும்பம் நடத்தும் சாமர்த்தியம் பொறுப்பு எல்லாம் அவளுக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டது.

அந்த ஊரின் மலையருவி அருகே புதிதாக சர்ச் ஒன்று அமைத்து மதம்மாற்றுவதற்காக செயற்பட்டு வந்தான் வெள்ளைக்கார கிறிஸ்தவன் ஒருவன். கிறிஸ்தவ ஆட்சியில் அந்த ஊரின் அரச அதிகாரியும் அவன்தான், மதபோதகரும் அவன்தான். கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு காலத்தில் பல ஊர்களில் அதுதான் நடைமுறை. அந்த கிறிஸ்தவனுக்கு துணையாக தப்பான தொழில் செய்யும் சிலர் உடந்தையாக இருந்தார்கள்.

மதமாற்ற வந்தவன் இப்போது சட்டம் போட்டான். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் அவனிடம் செல்லவேண்டும். மறுத்தால் அவனது தப்பான தொழில் செய்யும் எடுபிடிகளால் பிடித்துச் செல்லப்பட்டு சர்ச்சில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள். உயிருக்கு பயந்த சிலர் அந்த சர்ச்சிற்கு சென்று முந்தானை விரித்துவிட்டு வந்தார்கள். 

அப்படி சர்ச்சிற்கு சென்று முந்தானை விரித்து வந்தால் அன்று முதல் அவள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றவள் ஆனாள். அப்பெண்களின் கழுத்தில் சிலுவை மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு ஞாயிறு தோறும் அப்பெண்கள் சர்ச்சிற்கு செல்லவேண்டும். அப்படி முந்தானை விரித்தவர்கள் இப்போது சர்ச் போதகரின் முழுமையான சொத்து. பின் ஒருநாளில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் மதம் மாற்றுவார்கள்.

இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் மலைக்கிராம மக்கள் பலர் எப்படி கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்று.

சில நாட்களாக இந்த அராஜகம் தொடர்ந்து கொண்டே இருந்தது. சிலர் மானம் காக்க குடும்பத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். போக்கிடம் தெரியாதவர்களும், முந்தானை விலக்கிவிட்டு வந்தவர்களின் குடும்பங்களும் மட்டுமே இப்போது ஊரில் இருந்தது. போக்கிடம் தெரியாமல் தங்கியுள்ள குடும்பங்களில் பொம்மியின் குடும்பமும் ஒன்று.

அது ஒரு சித்திரை மாத பௌர்ணமி நாள். காலை கடந்து மதிய வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய் இல்லாததால் அவர்களுக்கு அன்று விரதநாள். சித்திரை பௌர்ணமி விரதத்திற்காக பொம்மி சமையல் செய்துகொண்டு இருந்தாள். விரதம் என்பதால் அழகன் இன்று வேட்டைக்கு செல்லவில்லை. சமையலுக்கு விறகு வெட்ட காட்டிற்கு சென்றுவிட்டான். அப்போதுதான் அந்த கிறிஸ்தவ பாதிரியின் எடுபிடி ஒருத்தி வந்தாள். அதாவது ஊழியக்காரி, பெயர் 'எமிலி'. அந்த ஊரில் எல்லா கேடுகெட்ட வேலைகளையும் அந்த எமிலி குடும்பம்தான் செய்யும். இப்போது ஊழியம் செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். "பொம்மி நாளைக்கு உன்னோட முறை, நீதான் சர்ச் ஃபாதர்ட்ட போகணும்" என்று சொல்லி விட்டு சென்றாள்.

பொம்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சர்ச்சிற்கு சென்று அசிங்கப்பட்டு உயிர்வாழ்வதை நினைக்கக்கூட அவளுக்கு அருவருப்பாக இருந்தது. கிறிஸ்தவர்கள் பெயரில் அது ஞானஸ்தானம், பொம்மியின் பார்வையில் அது விபச்சாரம். பங்குத் தந்தையுடன் படுத்துவிட்டு, களங்கப்பட்ட உடலோடு கணவனிடம் செல்ல அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் ஒழுக்கமான தாய் தந்தைக்குப் பிறந்தவள். ஒழுக்கமான பரம்பரையில் வந்தவள். கண்டவனுடன் படுக்கையை பகிரவும், மதம்மாறவும் இழிபிறப்புக்கள் போல் அவளால் முடியவில்லை. பரமனை வணங்கிய கைகளால் பரதேசிகளை வணங்க அவள் மனம் ஒப்பவில்லை.

காட்டிற்குப் போன அழகன் வீட்டிற்கு வருகிறான். பொம்மியின் உடல் தீயில் கருகிப்போய் இருந்தது. தன் மானம் காப்பதற்காக, தன் குலத்தின் பெருமையை காப்பதற்காக, தன் கடவுளை வணங்குவேனே அன்றி வேறோர் இனத்தின் கயவனை வணக்க மாட்டேன் என்பதற்காக உயிர்துறந்தாள் பொம்மி. மானம் காக்க தீயில் கருகி உயிர் துறந்த பொம்மியின் உடலின் மானத்தை எங்கிருந்தோ பறந்துவந்த வெள்ளைச் சேலையொன்று காத்து நின்றது. 

எரிந்த நிலையில் இருந்த பொம்மியின் உடலைப் பார்த்து கதறி அழுதான். அவன் கதறல் கேட்டு உறவுகள் கூடியது. பொம்மியின் உடலை எடுத்துச் சென்று தீயில் ஆகுதியாக்கினார்கள். அவள் உடலை தீ இரண்டாம் முறை எரித்துக்கொண்டிருந்தது. அவள் உடல் எரிந்து கொண்டிருக்கும் போதே புறப்பட்டான் அழகன். அந்த கிறிஸ்தவ பங்குத்தந்தை உட்பட அவனது அடிபொடிகள் அனைவரையும் வெட்டிக் கொன்றான். அவன் கோபத்தின் வீரத்தின் முன்னால் கிறிஸ்தவர்களின் துப்பாக்கிகள் கூட தோற்றுப்போனது. பின் வெளியூரில் இருந்து கிறிஸ்தவ படைகளும் அதன் அடிமைக் கூட்டமும் ஊருக்குள் வந்து அராஜகம் செய்தது. அவை வருவதை அறிந்த அழகனும் உறவினர்களும் மலைக்காடுகளில் சென்று மறைந்து கொண்டார்கள். 

கிறிஸ்தவ காட்டுமிராண்டிகள் போனபின்னர் ஊருக்குள் வந்தார்கள். ஒழுக்கத்தின் மேன்மையை, உயிரைவிட ஒழுக்கம் மேலானது என்ற உண்மையை, தன் கடவுளை அன்றி அன்னிய நாட்டு குற்றவாளிகளை வணங்கக்கூடாது என்ற பெரிய படிப்பினையை அவர்களுக்கு உணர்த்தியவள் பொம்மி. அவர்கள் அனைவருக்கும் பொம்மி தெய்வமாக உயர்ந்து நின்றாள்.

பொம்மியின் அஸ்தியை கலசத்தில் இட்டு அதன்மேல் கோயில் அமைத்து வணங்கினார்கள். அவளின் மேன்மையும், ஒழுக்கமும் இறந்த பின்பும் அவள் மானத்தை காத்து நின்றது. இறந்த பின்னும் அவள் மானத்தை காத்த வெள்ளை ஆடையை அவர்கள் குலத்தின் அடையாளமாக மாற்றினார்கள். ஆண், பெண், குழந்தை, வயோதிபர் என்ற பேதமின்றி அனைவரும் வெள்ளை ஆடை மட்டுமே இன்று வரை அணிகின்றார்கள். குழந்தைகளின் தொட்டில் துணிமுதல் அரைநாண் கயிறுவரை வெள்ளை நிறம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். திருமணம் முதல் மரணம் வரை எல்லா நிகழ்வுகளுக்கும் வெள்ளை நிறம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். வருடாவருடம் சித்திரை பௌர்ணமியன்று பொம்மி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து விழா எடுக்கின்றனர்.

எமது நாட்டின் ஒவ்வொரு குலதெய்வமும், ஒவ்வொரு பழக்க வழக்கங்களும் ஒரு வரலாற்று செய்தியை கடத்தும் முயற்சியே. இருக்கும் பலலட்சம் குலதெய்வங்களின் பின்னாலும் இப்படி ஒரு வரலாறு நிச்சயமாக உள்ளது. இந்த பொம்மி அம்மனை குலதெய்வமாக வழிபடும் மக்களை மதமாற்றம் செய்ய அக்கிராமத்தில் பல கிறிஸ்தவ சபைகள் இப்போது செயற்படுகின்றது. 

கிறிஸ்தவ மதமாற்றத்தின் நோக்கம் இனவழிப்பு செய்வது மட்டுமல்ல, தமது அராஜக வரலாற்றை மறைப்பதும் தான். அன்றைய பொம்மிகள் இன்றைய லாவன்யாக்கள் வடிவிலும் அன்றைய எமிலிகள் இன்றைய சகாயமேரிகள் வடிவிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எம் தமிழினத்தை அழிக்க அன்னிய உறவுகளில் எத்தனை இழிபிறப்புக்கள் பிறந்தாலும், தமிழ் மக்களை மக்களை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்காக, குலங்காக்கும் தெய்வங்களாக, பொம்மிகளும், லாவண்யக்களும் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.








No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...