Friday, 22 September 2023

யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் யார்?

அதற்கு முதலில் கிழக்கிந்திய கம்பெனி தெரியுமா? ஓ.. தெரியுமே பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபார குழுமம் என்றுதானே நினைக்கிறீர்கள். அது சரிதான். ஆனால் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதில் கிடையாது. அதுதவிர டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி என்றும் ஒரு குழுமம் இருந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் பின்னால் பிரித்தானிய அரசகுடும்பமும், அரசும் எவ்வாறு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருந்ததோ அதுபோல், டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு பின்னால் ஒல்லாந்த அரசும், அரசகுடும்பமும் இருந்தது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக வந்ததாக கூறிக்கொண்டாலும் கிழக்கிந்திய கம்பெனி எமது நாடுகளை ஆண்டதும், அவர்களிடம் இருந்தே பிரித்தானிய அரசுக்கு இந்த நாடுகளின் ஆட்சி அதிகாரம் கைமாற்றம் செய்யப்பட்டதும் வரலாறு.

இந்த கிழக்கிந்திய கம்பெனி போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல வியாபார குழுமங்கள் இங்கே இருந்துள்ளன. வியாபார குழுமங்கள் என்றால் அது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அமைப்பு கிடையாது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகள் சேர்ந்த ஒரு சங்கமாக இருந்தது. அந்த வியாபார குழுக்கள் தமது பாதுகாப்பிற்காக தனியான பாதுகாப்பு படைகளையும் வைத்திருந்துள்ளனர். பல நாடுகள் அதனை அனுமதித்து இருக்கின்றன.

வாதாபி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இந்த வாதாபியை மையமாகக் கொண்டும் ஒரு வியாபார குழுமம் இருந்துள்ளது. அதில் பல்வேறு உப குழுக்களும் இருந்துள்ளது. அவை தனியான கொடி தனியான சில பழக்க வழக்கங்கள் என்பவற்றையும் கொண்டிருந்தன. இந்த வாதாபியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு வியாபார குழுமம் இடப கொடியை தமது கொடியாக கொண்டிருந்துள்ளது. இந்த வியாபார குழுமம் இன்றைய கர்நாடகம், தமிழகம், ஆந்திரம், இலங்கை போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. 

வாதாபி சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்தி அவர்கள் குழுமம் இயங்கினாலும், சோழ பாண்டிய பல்லவ பகுதிகளிலும் செல்வாக்கும் சிறப்பு உரிமைகளும் பெற்றவர்களாகவே இருந்தார்கள். இன்றைய பல்தேசிய கம்பெனிகள் எல்லா நாடுகளிலும் செல்வாக்கு பெற்றிருப்பது போல. சாளுக்கிய இராச்சியம் மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர் என்று கலிங்கப்பகுதியிலும் ஆந்திரப் பகுதியிலும் விஸ்தரிப்பு செய்யப்பட்ட போது இந்த வியாபார குழுமமும் அந்த பகுதிகளை மையப்படுத்தி இயங்க ஆரம்பித்தது.

பிற்கால சோழ இராச்சியம் வலுவிழந்து சோழர் பெயரில் சாளுக்கியர் ஆளும் நிலை வந்தபோது, குலோத்துங்கன் காலத்தில் சோழ இராச்சியத்திலும் இவர்களின் செல்வாக்கு ஏனைய வணிக குழுக்களை விட மேலோங்கி இருந்தது. இந்த சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்திய வணிக குழுவினர் வளஞ்சியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் பட்டாரகியை வழிபட்டார்கள், இவர்களின் கொடியாக இடபக்கொடி இருந்தது என்று கூறப்படுகிறது. பட்டாரகி என்பது இன்று பத்ரகாளி, மாகாளி, பிடாரி என்று கூறப்படும் உக்கிரமான பெண் தெய்வ வடிவத்தை குறிக்க கூடியது. பட்டாகத்தி என்று கூறப்படும் பெரிய கத்தியைக் கையில் வைத்திருக்கும் தெய்வ வடிவம் பட்டாரகி என்பதாக அல்லது பட்டாரகி தெய்வம் வைத்திருக்கும் கத்தி என்பதால் அது பட்டாகத்தி என்பதாக ஆகியிருக்கலாம். பட்டாரகியை வழிபடுபவர்கள் என்பதால் பட்டாரகர் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். 

யாழ்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் உருவான ஒரு ஆட்சியாளர்களாக அறியப்படுகிறார்கள். இது சோழ பேரரசு வலுவிழந்து சோழர்கள் பெயரில் சாளுக்கியர் ஆட்சியில் அமர்ந்த காலப்பகுதியாகும். சோழ பேரரசின் பெயரிலேயே சாளுக்கியர் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்றால் அன்றைய பாண்டியர்கள் என்பவர்களும் பாண்டியர் பெயரிலான சாளுக்கியர் என்றே கொள்ளவேண்டும். சமகாலத்தில் வலுவான இருந்த சோழ பேரரைசையே சோழர்கள் பெயரில் கைப்பற்றி ஆண்ட சாளுக்கியர், பலகாலம் முன்பாகவே சிதைந்துபோன பாண்டிய இராச்சியத்தை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அதனால் அன்றைய காலப்பகுதியில் பாண்டியர் பெயரில் ஆண்டவர்களும் சாளுக்கியர் என்றே கொள்ளவேண்டும்.

இவ்வாறு சாளுக்கியர் தென்னிந்தியாவில் அதிகாரத்தில் அமர்ந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்திலும் ஆரிய சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு ஆட்சியாளர்கள் உருவாகினார்கள். ஆக இதுவும் சாளுக்கிய ஆட்சியின் தொடர்ச்சி என்றே கருதவேண்டும். அதுவரை இருந்த நிலவுடைமையாளர் ஆட்சி முறைக்கு மாற்றாக வியாபாரிகள் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்று சொல்லலாம். 

ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் வீரமாகாளி அம்மனை வழிபடுபவர்களாகவும், நந்திக் கொடியை தமது கொடியாக கொண்டவர்களாகவும் இருந்தனர். சாளுக்கியர் கொடியில் இருந்து சூரிய சந்திர அடையாளங்களையும் தமது அரசு கொடியில் வைத்திருந்தனர். இந்த வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த படையின் தலைவன் ஒருவன் ஆரிய சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் இங்கே ஆண்டிருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

இந்த இடப கொடியில் இருக்கும் இடபம் கவரா என்று அழைக்கப்படும். இன்றும் சிங்கள மக்கள் எருதை கவரா என்றே அழைக்கின்றனர். இந்த கவரா கொடியினை கொண்ட குழுவினர் கவராக்கள் என்று அழைக்கப்படும் வழக்கமும் இருந்துள்ளது. இடப வாகனத்தை கொண்ட சிவனின் வடிவம் கவரேஸ்வர் என்று அழைக்கப்படும். எருது வாகனத்தில் உள்ள காளியின் வடிவமும் உண்டு. 

சோழர்கள் கூட நிசும்பசூதனி என்ற பெயரில் இந்த அகோர காளியை வழிபடுபவர்களாகவும், சிவ வழிபாட்டை பரதெய்வ வழிபாடாக பின்பற்றுபவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த சாளுக்கிய அரசை மையப்படுத்திய வளஞ்சியர் குழுமங்கள் கபரேஸ்வரர், நகரேஸ்வரர் போன்ற கடவுள்களை பரதெய்வமாக வழிபட்டாலும், வாதாபி சாளுக்கியர்கள் கந்த கடவுளை பரதெய்வமாக கந்தேஸ்வரர் என்றும் வழிபட்டுள்ளனர்.

ஆக, இந்த ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்திய வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் ஆட்சி என்பதை உறுதியாக கூறலாம். அவர்களே நல்லூர் வீரமாகாளி அம்மனை வழிபடுபவர்களாகவும் அந்த ஆலயத்தை அமைத்து ஆட்சி செய்தவர்களாகவும் கொள்ளலாம். பின்னர் தென்னிலங்கையில் ஆண்ட வேறொரு வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த சப்புமல்குமார எனப்படும் செண்பக பெருமாளே யாழ்பாணத்தை கைப்பற்றி சிலகாலம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலை அமைத்தவர் என்று கொள்ளலாம்.

இப்போது இந்த வளஞ்சியர் குழுமம் என்ன ஜாதி என்று தேடுவது அர்த்தமற்றது. ஏனென்றால் அது பல இன சமூக குழுக்கள் சேர்ந்த ஒரு கூட்டம். இன்று அவர்கள் எந்தெந்த ஜாதிகளில் கரைந்து போயுள்ளார்கள் என்று வேண்டுமானால் தேடிப் பார்க்கலாம். இந்த பட்டாரகி தெய்வம் எனப்படும் பத்ரகாளி அல்லது மாகாளியை குலதெய்வமாகவும் , கவரேஸ்வரர் எனப்படும் இடபவாகன சிவனை பரதெய்வமாகவும்  வழிபடுபவர்கள் யார் என்று தேடினால், அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்கள் இந்த ஆரிய சக்கரவர்த்திகளின் பண்பாட்டு மிச்சங்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

இங்கே அரசவம்சம், அரச வம்சத்தின் வாரிசுகள் என்று யாரும் கிடையாது. ஏனென்றால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பவர்களே ஒரு வியாபார குழுமம்தான்.



Friday, 1 September 2023

வீரம் விளைந்த வன்னி

(பறங்கியர்கள் வன்னியர்கள் இடையிலான போர்க்கால வரலாற்று தொடர்)

பறங்கியங்களோட வண்டியள் வருகுது.. பறங்கியங்கள் ஊருக்க வாறாங்கள் என்று கத்திக்கொண்டே சுப்பு ஊருக்குள் ஓடிவந்தான்.

சுப்பு இவ்வாறு கத்திக்கொண்டு ஓடிவர, வீடுகளில் இருந்த எல்லோரும் வத்தல், கிழங்கு தானியங்கள் என்று வீட்டில் கிடைத்த உணவு பொருட்களையும், தேவையான வேறு பொருட்களையும் எடுத்துக்கொண்டு காடுகளுக்குள் ஓடினார்கள். குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் என்று இம்முறை யாரும் விடுபட்டு விடக்கூடாது என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டே காடுகளுக்குள் ஓடினார்கள். பறங்கியர்களுடைய வண்டிச் சத்தம் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருவாறு எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் காடுகளுக்குள் வந்துவிட்டார்கள். ஒருவித பதைபதைப்புடன் பாதுகாப்பான இடத்தை அடைவதற்காக, கிராமத்தில் இருந்து சற்று தூரமான காட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்து கெண்டிருந்தோம்.

ஏன் பறங்கியர்களைக் கண்டு ஓடுகிறோம் என்பதற்கு முதலில் எங்கள் கிராமத்தைப் பற்றி சொல்லவேண்டும். அடர்ந்த வன்னிப் பெருங்காடுகளுக்கு நடுவே குளங்கள் ஆறுகளை அண்மித்த விவசாய கிராமங்களில் எமது எழுவாழி கிராமமும் ஒன்று. எழுவாழி குளத்தின் வடக்குப் பகுதியில் விவசாய நிலங்கள் இருக்கிறது. குளத்தின் கிழக்குப் பகுதியில் எங்கள் குடியிருப்பு பகுதி. அதனோடு சேர்ந்தவாறே மேய்ச்சல் நிலமும் இருந்தது. எங்கள் கிராமத்தில் ஒரு நாற்பது குடும்பங்கள் வரை வாழ்ந்து வந்தோம். நெல்லு, இறுங்கு, சாமி திணை, உளுந்து, பயறு என்று எல்லாம் எங்கள் கிராமத்திலேயே பயிரிடப்படுகிறது. ஊரின் எல்லையில் ஒரு ஐயனார் கோயில், எழுவாழி குளத்தின் அருகில் நாகம்மாள் ஆலயம், தெற்குப் பக்கத்தில் ஒரு சிறிய குன்று, குடியிருப்பைவிட்டு சற்று தள்ளி இருந்தது, அதில் ஒரு முருகன் கோயில். சிறுவர்கள் எல்லோரும் அந்த மலைக்கோயில் முன்றலில் சென்றுதான் விளையாடுவார்கள். செங்கற்களால் கட்டப்பட்ட முருகன் கோயில், அதற்கு முன்னால் கருங் கற்களால் பொழிந்து கட்டப்பட்ட ஒரு கேணி இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கேணி என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்த கோயில் மலையில் நின்று பார்த்தால் ஊரைச் சுற்றி பல மைல் தூரங்களுக்கு தெரியும். சுப்பு இந்த மலையில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போதுதான் பறங்கியர் வண்டி வருவதைக் கண்டிருக்கிறான். அவன் கண்டு வந்து சொன்னதால் தான் நாம் இப்போது தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறோம். 

இவை எல்லாவற்றையும் விட எங்கள் முத்தண்ணனை பற்றி சொல்லியே ஆகவேண்டும். எங்கள் கிராமத்தில் இன்றும் மக்கள் பலர் குடும்பங்களுடனும், உயிருடனும் இருப்பதற்கு இவர்தான் காரணம். இவர் சுப்புவின் தாய்வழி உறவினர். பறங்கியரின் வெறியாட்டத்தால் மனைவி மக்கள் எல்லோரையும் இழந்து தனித்துப்போய் ஒலுமடுவில் இருந்து இங்கே வந்தவர். இவர் வந்து இப்போது இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர் வந்து பறங்கியர் செய்யும் கொடுமைகள் பற்றி சொன்னதால் தான் நாம் ஏற்கனவே ஒருமுறை பறங்கியர்கள் ஊருக்குள் வந்தபோதும் பெரிய அளவில் இழப்புகள் ஏதுமின்றி தப்பித்துக் கொண்டோம்.

முத்தண்ணனின் ஒலுமடு கிராமம் எங்கள் ஊரில் இருந்து ஒரு இருபது மைல் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஊருக்குள் புகுந்த பறங்கியர்கள் ஆயுத முனையில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று பலரை பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதை தடுக்க முனைந்தவர்கள், எதிர்த்து போரிட்டவர்கள் என்று கிராம மக்கள் பலரை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று விட்டு சென்றிருக்கிறார்கள். எதிர்த்து வெல்ல முடியாது என்ற நிலையில் பலர் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அதற்கு பிறகு அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். சிலர் யாழ்ப்பாணம் நோக்கி செல்ல பலர் குடும்பமாக அனுராதபுரம் நோக்கி சென்றுவிட்டனர்.  பறங்கியர்களின் அந்த வெறியாட்டத்தில் முத்தண்ணன் குடும்பத்தில் அவர் மட்டும் எஞ்சி தனிமரமாகிவிட்டார். அவருக்கு வேறு எங்கும் செல்ல பிடிக்காததால் எழுவாலியில் வந்து எம்முடனேயே தங்கிவிட்டார். இப்போது அவரது ஊரில் யாருமே இல்லை என்று சொல்வார். 

பறங்கியர்கள் வந்தால் என்ன நடக்கும் என்று முத்தண்ணன் வந்து சொன்னதால் தான் எங்களுக்கு தெரியும். இல்லாவிட்டால் ஒரு வருடத்திற்கு முன்பே எங்கள் ஊராருக்கும் இதே நிலைமைதான் வந்திருக்கும். 

ஒரு வருடத்திற்கு முன்பும் எங்கள் கிராமத்திற்கு பறங்கியர் கூட்டம் வந்தது. அப்போதும் எச்சரிக்கையாக இருந்ததால், இதேபோல் காடுகளுக்குள் ஓடி பெரும்பாலானவர்கள் தப்பிவிட்டோம். ஊருக்குள் இருந்த ஒருசில வயதானவர்கள், நோயாளிகளை கூட மிகக் கொடூரமாக தாக்கிக் கொன்று, குடிசைகள் அனைத்தையும் எரித்து ஊரையே நாசமாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். சென்ற முறை வந்து ஐந்து நாட்கள் வரை முகாமிட்டு தங்கியிருந்தார்கள். நாகம்மாள் கோயில் ஐயனார் கோயில் இரண்டையும் அடியோடு அழித்து விட்டு சென்றார்கள். முருகன் கோயில் மட்டும் ஓரளவு தப்பித்து இருந்தது. நாம் ஊருக்குள் திரும்பி வந்தபோது ஒன்றுமே இல்லை. ஊர் சுடுகாடாக கிடந்தது. ஐந்தாறு மாடுகளைக் கூட சுட்டுக் கொன்று தின்று, மீதமுள்ள இறைச்சியை வாட்டி எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். எமது ஊரில் இது இரண்டாவது முறை. சில ஊர்களில் பலமுறை இவ்வாறு நடந்திருக்கிறது. பல ஊர்கள் முற்றிலும் இல்லாமல் போயிருக்கிறது. 

காடுகளுக்குள் நீண்ட தூரம் வந்தாகிவிட்டது. ஓடிக்கொண்டே இருந்தோம், பசியும் தாகமும் அனைவரையும் வாட்டியது. இங்கேயே தங்கி விடுவோமா என்று சரசாச்சி கேட்க, பலரும் இனியும் ஓட முடியாது இங்கேயே இருப்போம் என்று சொன்னார்கள். நல்லையா மட்டும் இங்கே வேண்டாம் இன்னும் கொஞ்ச தூரம் போனால் ஒரு சிறு குளம் இருக்கிறது, அங்கே தங்கிவிட்டால் தண்ணீர் சிக்கல் இருக்காது என்றார். எல்லோருக்கும் அது சரியாக படவே களைப்பைப் பாராமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நல்லையாவுக்கு இந்த காடு முழுவதும் அத்துப்படி. நித்தமும் வேட்டைக்கு போய் காட்டில் எந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியும். அதனால் அவரது பேச்சை யாரும் மறுக்கவில்லை. 

ஒருவாறு நல்லையா சொன்ன அந்த இடத்திற்கு வந்தாகிவிட்டது. எல்லோரும் தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு, சாப்பிடுவதற்கு ஏதாவது செய்யலாம் என்று தயாரானோம்.  மூன்று நான்கு இடங்களில் தீமூட்டி கிழங்கு இறுங்கு என்பவற்றை சுட்டு குழுக் குழுவாக சாப்பிட ஆரம்பித்தோம். சிறுவர்கள் மட்டும் எல்லா இடங்களிலும் மாறி மாறி சென்று சாப்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு அப்படியும் அது பத்தியப்படவில்லை. அருகில் இருந்த விழாமரத்தில் இருந்து பழங்களை கொண்டு வந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திலேயே இரண்டு பெரிய காட்டு மாமரங்கள். அதன் கீழும் பழங்கள் தாராளமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் மேலே ஏறிச் சென்று பிடுங்கி வந்தார்கள். எல்லோரும் கிடைத்ததை எல்லாம் மாற்றி பகிர்ந்து தின்றார்கள். பயத்தில் ஓடிவந்த போதும் ஒரு மகிழ்ச்சியான பொழுதாக அது கடந்தது. 

முத்தண்ணன் மட்டும் ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தார். அவருக்கு ஒலுமடுவில் நடந்த கொடுமைகள் நினைவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்த பறங்கியர்கள் யார் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவரிடம் நீண்ட நாட்களாக கேட்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முத்தண்ணன் அருகில் சென்று அவர் சிந்தனையை கலைத்தேன். 

முத்தண்ணா இந்த பறங்கியர்கள் எப்படி இருப்பார்கள்? என்று பேச்சுக் கொடுத்தேன்.. என்னை ஒருமுறை ஏற இறக்கப் பார்த்தவர் "தெரிந்து என்ன செய்ய போகிறாய்?" என்று கேட்டார்? "இல்லையண்ணா, இப்படி பயந்து ஓடிக் கொண்டு இருக்கிறோமே, அதுதான் கேட்டேன். அவர்களை கண்டு ஏன் பயப்படுறம், அவங்களை எதிர்த்து ஏதாச்சும் செய்ய முடியாதா எண்டுதான்" என்று இழுத்தேன் 

"அவர்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்"

"எங்களிடமும்" என்ற என்னை தொடரவிடாமல் மறித்த முத்தண்ணன், எங்களிடம் இருப்பது போல் கத்தி, ஈட்டி, வாள், வில்லம்பு இல்லை அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்றார்.

"துப்பாக்கியா அப்படியென்றால்"

"அது தூரத்தில் நின்றே ஒருவரை கொல்லக்கூடிய ஆயுதம். எம்மில் பட்டால் வெடித்துச் சிதறி இறந்து விடுவோம்"

"அவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?"

"ஒரு இருநூறு முன்னூறு பேர் இருப்பார்கள் சிலவேளை ஐநூறு பேர் வரையில் இருப்பார்கள்"

நான் எமது கிராமத்தவர்களை திரும்பி பார்த்தேன். ஒரு நாற்பது ஐம்பது பேர் கூட போராடக்கூடியவாறு தேறமாட்டார்கள். 

முத்தண்ணா சொல்வதைப் பார்த்தால் எம்மை தூரத்தில் வைத்தே கொண்டுவிடுவார்கள்.

இன்னும் எனது முதலாவது கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அந்த பறங்கியர்கள் எப்படி இருப்பார்கள் என்று..

"முத்தண்ணா, எமது ஊருக்கு எல்லையில் போய் நின்று அவர்கள் எப்படி இருப்பார்கள், என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வருகிறேன். யாரிடமும் சொல்லாதீர்கள் என்றேன்.."

"தனியாகவா"

"ம்ம்"

"தனியாக வேண்டாம் நானும் வாறன்" என்றார் முத்தண்ணன். எனக்கு சந்தோஷம், ஆனால் ஏதோ ஒருவித பதட்டமும் ஒருபக்கம் தொற்றிக் கொண்டது. 

"இப்போதே ஒரு இரண்டு மூன்று மணி ஆகியிருக்கும். நேரத்தோடு போனால்தான் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்று அவசரப்படுத்தினேன். முத்தண்ணன் எதுவும் பேசாமல் எழுந்து சென்றார். கொண்டுவந்த சாமான்களில் இருந்து இரண்டு உறைக்கத்திகளை எடுத்து வந்து ஒன்றை என்னிடம் தந்துவிட்டு மற்றையதை அவர் இடையில் சொருகிக்கொண்டு 

"சரி புறப்படு" என்றார். 

நாம் இருவரும் யாருக்கும் சொல்லாமல் எமது கிராமத்தை நோக்கி புறப்பட்டோம். பறங்கியர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கும் ஆவலில் வேகமாகவே கிராமத்தை அண்மித்து விட்டோம். எமது குடியிருப்பை அண்மித்த ஒரு பற்றைக்குள் இருவரும் பதுங்கிக்கொண்டோம். பறங்கியர்கள் வந்த வண்டிகளின் குதிரைகள் அங்காங்கே கட்டப்பட்டிருந்தது. தூரத்தே குதிரை வண்டிகள் நின்றன. பறங்கியர்களை காணவில்லை.

 "முத்தண்ணா இந்த இடத்தில் இருந்து பார்த்தால் பறங்கியர்கள் யாரையும் காணவில்லை. வேறு இடத்தில் நின்று பார்ப்போமா?" என்றேன்.

"குதிரை இங்கே நிற்பதால் அதன் அருகில் தான் கூடாரம் அமைப்பார்கள். சற்று பொறு" என்றார். முதண்ணா சொல்லி சிறிது நேரத்தில் அவர்கள் கூடாரம் அமைக்க வந்துவிட்டார்கள். முத்தண்ணா பெரிய சாத்திரகாரன்தான் என்று நினைத்துக்கொண்டேன். 

பறங்கியர்கள் என்றால் வெள்ளையர்கள் என்றுதான் இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால் அவர்களில் பலர் பயங்கரமான கறுப்பு நிறத்தில் இருந்தார்கள். சிலர் கறுப்பு வெள்ளை இரண்டும் கலந்தது போலவும், கறுப்பு தோலில் பூனைக் கண்கள், பழுப்பு நிற தோலில் சுருட்டை முடி என்று பல்வேறு விதமாக வித்தியாசமான விசித்திரமான உருவங்களில் இருந்தார்கள்.

"முத்தண்ணா முத்தண்ணா"

"என்னடா"

"பறங்கியர்கள் என்றால் வெள்ளையர்கள் இல்லையா, இவர்கள் எல்லாம் வேறு வேறு உருவத்தில் இருக்கிறார்கள். ஒருசிலர் மட்டும் தானே வெள்ளையாக இருக்கிறார்கள்?"

"வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும் தான் ஐரோப்பாவில் இருந்து வந்த பறங்கியர்கள்"

"அப்படியானால் அந்த அமாவாசை கறுப்பர்கள்?"

"அவர்கள் ஆபிரிக்க அடிமை படைகள்"

"அவர்கள் எப்படி அடிமைகள் ஆனார்கள்?"

"என்னுடைய ஊர் ஒலுமடுவில் வந்து பெண்கள் இளைஞர்கள் சிறுவர்களை பிடித்துக் கொண்டு சென்றார்கள் என்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா?"

"ம்ம்"

"அவ்வாறு பிடித்துக் கொண்டு செல்லப்படும் சிறுவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் சொல்லும் வேலைகளை செய்யும் வகையில் வளர்ப்பார்கள். அவர்களை இவ்வாறு படைதிரட்டி சென்று வேறு நாடுகளில் கொள்ளையிடும் நபர்கள் நபர்கள் விலைகொடுத்து வாங்குவார்கள்"

"மனிதர்களை விலைக்கு விற்பார்களா?"

"ம்ம், கிறித்தவ அமைப்புக்கள் அதைத்தான் செய்கிறது"

"அப்படியானால் அவர்கள் ஏன் கறுப்பாக இருக்கிறார்கள். அவர்களும் எங்களைப் போலத்தானே இருக்க வேண்டும்"

"இவர்கள் எங்கள் நாட்டில் இருந்து பிடித்து செல்லப்பட்ட சிறுவர்கள் இளைஞர்கள் கிடையாது. ஆபிரிக்கா என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கேயும் இவ்வாறு கிராமம் கிராமமாக சென்று பெண்கள் சிறுவர்கள் இளைஞர்கள் என்று பிடித்துச் சென்று கிறிஸ்தவர்களாக மாற்றி பின் அடிமைச் சந்தைகளில் விற்பார்கள். அப்படி ஆபிரிக்க அடிமைச் சந்தைகளில் விலைகொடுத்து வாங்கப்பட்டு எம் நாட்டில் கொள்ளையடிக்க கொண்டுவரப்பட்டவர்கள்தான் இந்த அமாவாசை கறுப்பர்கள்"

"அப்படியானால் அவர்கள் இந்த விலைக்கு வாங்குபவர்களுக்கு எதிராக சண்டைபோட மாட்டார்களா? அவர்களை கொன்றுவிட்டு தப்பித்து செல்ல முற்பட மாட்டார்களா?"

"அதற்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கிறிஸ்தவ மதம் என்பது அடிமைகள் சிந்திக்க கூடாது என்பதற்காகவும், அடிமைப்படுத்தும் எஜமானர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய கூடாது என்பதற்காகவும் உருவாக்கிய ஒரு முறைமை. கிறிஸ்தவராக மாறிவிட்டால் அவன் அடிமையாக இருப்பதை இயல்பாகவும் பெருமையாகவும் உணர்வான். எதிர்த்து போராட மாட்டான்"

எனக்கு அவர்களை பார்க்க பாவமாகவும் இருந்தது. ஆத்திரமாகவும் இருந்தது. ஒரு மனிதன் இவ்வளவு முட்டாளாக, சிந்திக்க முடியாத அடிமையாக, அப்படி இருப்பதை பெருமையாக உணரும் நிலையில் இருக்கிறான் என்று நினைக்கும் போது அவர்களை கொன்று விட்டால் என்ன என்று தோன்றியது.

"அப்படியானால் கறுப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் எல்லாம் கலந்து விசித்திரமாக இருக்கும் மற்றவர்கள் யார்?"

"அவர்கள் எங்கள் ஊர்களில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பெண்கள் போன்றவர்களால் உண்டான சந்ததிகள். பிடித்து செல்லப்பட்ட பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெள்ளையர்கள், கறுப்பின அடிமைப் படைகள் என்று பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தப் பட்டார்கள். அதனால் உண்டான சந்ததிகள் தான் இந்த கறுப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் இருக்கும் இவர்கள். கறுப்பின அடிமைப் படைகள் தப்பித்து ஓடாமல் இருப்பதற்காகவும் எதிர்த்து போராடாமல் இருப்பதற்காகவும் பிடித்துச் செல்லும் பெண்களில் தமக்கு பிடித்தவர்கள் போக மீதமானவர்களை அடிமைப் படைகளும் அனுபவிக்க அனுமதிப்பார்கள்"

"என்ன கொடுமையான இழிவான பிறப்பு, அவர்கள் பாவம் இல்லையா?"

"இல்லை. அவர்கள் தான் வெள்ளையர்கள் கறுப்பர்களை விட மோசமாக நடந்து கொள்வார்கள். கிறிஸ்தவ மதத்தை அவர்கள் தான் மக்களிடையே பலாத்காரமாக பரப்புவார்கள்.அவர்கள்தான் கிறித்தவ மதத்தையே உருவாக்கி காப்பாற்றுவது போல நடந்து கொள்வார்கள். தம்முடைய பிறப்பை யாரும் தவறாக சொல்லக் கூடாது என்பதற்காக எல்லோரையும் தம்மைப் போல மாற்றுவதற்கு துடிப்பார்கள்."

முத்தண்ணன் சொல்ல சொல்ல எனக்கு உடலெங்கும் ஒருவித அனல் பரவியது. நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் தமது கூடாரத்தை அமைத்து முடித்திருந்தார்கள். சூரியன் மறைந்து வானில் நிலவும் வந்துவிட்டது. அது ஒரு முன்னிலவு நாள். பாதி நிலவின் வெளிச்சத்தில் அசைவு காட்சிகள் மட்டுமே தெரிந்தது. 

"சரி, பறங்கியர்களை பார்த்தாகிவிட்டது புறப்படு" என்றார் முத்தண்ணன்.

"இந்த இருட்டிற்குள் எப்படி அங்கு செல்வது. இரவு இங்கேயே தங்குவோம், வெள்ளாப்புடன் எழுந்து விடிவதற்கு முன்பு அங்கு செல்வோம்" என்றேன். 

"அப்படியானால் இங்கே இருக்க வேண்டாம் மலையில் சென்று தங்குவோம்" என்றார்.

எனக்கும் அதுதான் பாதுகாப்பான இடமாக பட்டது. யாராவது வந்தால் கண்டுகொள்ளலாம் என்பதால் எழுந்து மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்...

தொடரும்...


Monday, 28 August 2023

புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறித்தவ டாக்டர்+போதகர் துரை..

பலநூறு பெண்கள் மற்றும் சிறுமிகளை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய குற்றத்திற்காக இவருக்கு புலிகளின் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த இவரது சகாக்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கிறித்தவ குழுவினர் சிறுவர்கள் இளைஞர்கள் பலரை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுகளும் அந்த வழக்கில் பதிவாகி இருந்தது.

இந்த வழக்கில் சுமார் 120 பெண்கள்,சிறுமிகள் நேரடியாக தாம் பாலியல் வல்லுறவுக்கு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக துரை டாக்டர் என்பவரின் மகன் உட்பட 250 இற்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. தந்தையும் அவரது பதின்ம வயது மகனும் சேர்ந்து சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக அந்நாளில் பரவலாக பேசப்பட்டது. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த அவரது அவரது தனியார் வைத்தியசாலையில் வைத்தே பல குற்றச்செயல்கள் நடந்தமை வழக்கில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. சில குற்றச் செயல்கள் உடையாகட்டு மற்றும் விசுவமடு பகுதிகளில் உள்ள அவரது கிளினிக் நிலையங்களில் நடந்ததுள்ளது. 

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கிறித்தவ சபை இவரால் உருவாக்கப்பட்டதுதான். பின்னால் கிறித்தவ சபை முன்னால் மெடிக்கல் கிளினிக் என்று ஒருசேர நடத்தி வந்தார். பாடசாலை மாணவிகள், புலிகள் இயக்க பெண் உறுப்பினர்கள் உட்பட பலர் இவர்களால் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது வழக்கில் உறுதிசெய்யப்பட்டது. 

புலிகளின் காலத்தில் குழு ஒன்றினால் நடந்த மிகப் பெரிய பாலியல் வல்லுறவு சம்பவங்களாக இவை பதிவாகி இருந்தது. புலிகள் இந்த பாலியல் குற்றவாளி டாக்டருக்கும் அவரது சகாக்களுக்கும் தண்டனை வழங்கியதை அடுத்து கிறித்தவ அமைப்புக்கள் பரபரப்பாக செயற்பட்டன.

குறித்த வைத்தியர் ஒரு கிறிஸ்தவர் என்பதாலும் கிறித்தவ மதம் மரணதண்டனையை தற்போது எதிர்ப்பதாலும் அவரது மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று போப்பாண்டவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அன்றைய நாளில் பிபிசி தனியான பெட்டக நிகழ்ச்சி ஒன்றையே நடத்தியிருந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவர் கத்தோலிக்கர் கிடையாது. பெந்தகோஸ்து சபையை சேர்ந்தவர். முன்பு கத்தோலிக்கராக இருந்தவர். ஆனால் கத்தோலிக்க வத்திக்கான் போப்பாண்டவர் இவரது மரண தண்டனையை நிறுத்தும்படி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கிறிஸ்தவ சபைகளின் கடுமையான அழுத்தத்தை அடுத்து புலிகள் பகிரங்கமாக மரணதண்டனை விதிப்பதை கைவிட்டனர். 

இந்த சம்பவங்கள் வழக்கு தண்டனை என்பவை அனைத்தும் 2000 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த துரை டாக்டருக்கு இரகசியமான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் அவரது உடல் யாரிடமும் கையளிக்கப்படவில்லை. அதனால் அவருக்கு உண்மையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதா அல்லது கிறித்தவ மிஷனரிகளினதும் வத்திகானதும் அழுத்தத்தால் கைவிடப்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

ஆனால் பின்னாளில் அவரது மகன் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அவர் வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார் என்றும் கூறுகின்றனர்.



Thursday, 10 August 2023

நவாலி புக்காரா விமான தாக்குதல் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

யாழ்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற காலத்தில் நவாலி பகுதியில் சென். பீட்டர்ஸ் சர்ச் சர்ச் மீது விமானதாக்குதல் நடைபெற்றது என்றும் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் ஒரு செய்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது. உண்மையில் நடந்தது என்ன?

யாழ்பாணத்தை மீளக் கைப்பற்றும் இராணுவத்தின் நடவடிக்கை நடந்தபோது மக்கள் வன்னியை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்போது நவாலிக்கு வடக்கே இருந்த மக்கள் நவாலி வழியாக இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு செல்லும்போது நவாலி சின்னக்கதிர்காமம் ஆலயத்தில் நீர் அருந்திவிட்டு சென்றனர். அதற்கு முன்னால் உள்ள ஒரு சர்ச்சுத்தான் இந்த சென். பீட்டர்ஸ் சர்ச். அது வீதியில் இருந்து சற்று உள்ளே உள்ளது.

இந்த சென். பீட்டர் சர்ச் புலிகளின் ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும் புலிகள் தாக்குதல் ஒன்றுக்காக தயார்ப்படுத்தல் செய்யும் இடமாகவும் இருந்தது. மக்கள் யாரும் சர்ச்சுக்குள் இல்லை. புலிகள் சர்சுக்குள் இருப்பது பாதிரிகளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் பாதிரிகளின் முடிவைக் கேட்டு செயற்பட புலிகள் தயாராக இல்லை. பின்னாளில் மடுவிலும் அதுதான் நடந்தது. பாதிரிகள் நயவஞ்சகமாக திட்டம் போட்டார்கள். புலிகளையும் வெளியேற்ற வேண்டும். தமது சர்ச்சுக்கு முன்னால் இருக்கும் அந்த சிறிய முருகன் ஆலயத்தையும் ஒருசேர இல்லாமல் செய்ய வேண்டும் என்று.

மக்கள் தண்ணீர் குடித்துச் செல்லும் முருகன் ஆலய சூழலில் காவல் நடவடிக்கைக்காக புலிகள் ஆயுதங்களுடன் நின்றார்கள். அதை ஆலயத்திற்கு எதிராக பயன்படுத்த நினைத்த பாதிரிகள் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு ஒரு தகவலை அனுப்புகிறார்கள். "நவாலி சின்ன கதிர்காமம் முருகன் ஆலயத்தில் புலிகள் தங்கி இருக்கிறார்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்று இரவே தாக்குதல் நடத்த தயாராகிறார்கள்" என்பதே அது.

இராணுவம் தனது முன்னேற்ற நடவடிக்கைகளை பாதிக்கும் எந்த விடயத்தையும் அனுமதிக்காது தானே. அவர்கள் தாக்குதலுக்கு தயாராகும் புலிகளையும், பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களையும் விமான தாக்குதல் மூலம் அழிக்க முடிவு செய்கின்றார்கள். இன்று இரவே தாக்குதல் நடத்த தயாராகிறார்கள் என்று பாதிரிகள் தகவல் அனுப்பியதன் சூழ்ச்சி, வியாபார நிறுவனங்கள் இன்று மட்டுமே தள்ளுபடி என்பது போன்றது. அந்த தகவலை இராணுவம் சரிபார்க்க அவகாசம் கொடுக்க கூடாது என்பதே அவர்களின் நோக்கம். இராணுவமும் அந்த சூழுச்சியில் சிக்கியது. அவசர அவசரமாக விமான தாக்குதல் நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டது. 

மாலை 5 மணிக்கு பின்னர் புக்காரா விமானங்கள் தாக்குதலுக்கு புறப்பட்டன. ஆனால் பாதிரிகள் அனைவரும் அந்த இடத்தை விட்டு அதற்கு முன்னரே பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். புக்காரா வந்தது. சின்னக் கதிர்காமம் முருகன் கோயில் மீது குண்டு வீசியது. முருகனின் அருளோ என்னவோ முருகனின் முன்னால் விழுந்த குண்டுகள் வெடிக்கவில்லை. அடுத்தடுத்து விமானம் வீசிய குண்டுகள் தகவல் கொடுத்த பாதிரிகளின் சர்ச் வளாகத்திலேயே விழுந்து வெடித்தன. இறுதியாக வீசப்பட்ட ஒரு குண்டு சென்.பீட்டர்ஸ் சர்ச்சின் மீதே சரியாக விழுந்தது. சர்ச் உள்ளே இருந்த குண்டுகளால் வெடித்துச் சிதறியது. அத்துடன் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டன.

இந்த தாக்குதலில் பாதிரிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிய, அரச நிவாரணங்களை மதமாற்றும் நோக்கில் வழங்கிய அரச அதிகாரிகள் புலிகள் உட்பட சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர். வீதியால் சென்ற, இங்கே நடக்கும் எந்த சூதும் அறியாது அவ்விடத்தில் ஓய்வெடுக்க தங்கிய மக்கள் சிலரும் அந்த இறந்தவர்களில் அடக்கம்.

போர்த்துக்கேயர் காலத்தில் முருகன் கோயிலை இடித்து கட்டப்பட்ட ஒரு சர்ச்சுத்தான் இந்த சென் பீட்டர்ஸ் சர்ச். பின்னாளில் இந்துக்கள் அந்த சர்ச்சுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய இடத்தில் முருகன் கோயிலை மீளமைத்துக் கொண்டனர். அதுதான் இந்த சின்னக் கதிர்காமம் முருகன் கோயில். ஆனால் அது இருப்பது கூட பாதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாமல் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தன்வினை தன்னைச் சுட அவர்களின் சர்ச்சே சுடுகாடாக மாறியது.  

கடவுள் இருக்கான் குமாரு..

தாக்குதல் நடந்தது சர்ச்சில், சர்ச் முழுவதும் நிர்மூலம் ஆகியது, ஆனால் பாதிரிகள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை, அது எப்படி சாத்தியம் என்று சிந்திக்க முடியாத முட்டாளாக உன்னை மாற்றியது யார்? எப்போது சிந்திப்பாய் தமிழா?



இடிக்கப்பட்ட முருகன்கோயில்கள் குழந்தையேசு சர்சுகளாக

கத்தோலிக்க மதத்தவர் குழந்தை யேசு என்ற பெயரில் சர்ச் அமைத்து, குழந்தை வடிவில் யேசு சிலைகளை அமைத்து வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம். கத்தோலிக்க மதம் போர்த்துக்கேயர்களால் பரப்பப்பட்டாலும் போர்த்துக்கல் நாட்டில் இந்த குழந்தை யேசு சர்ச்சுகள் கிடையாது. ஏனைய நாடுகளில் தாம் உருமாற்றி அமைத்த வழிபாடுகளை தமது நாட்டில் மாதிரி வடிவமாக அமைப்பது போர்த்துக்கேயர் வழக்கம். அவ்வாறு அமைந்த ஒரேயொரு குழந்தை யேசு மாதிரி சர்ச் மட்டுமே போர்த்துக்கல் நாட்டில் இருக்கிறது.

அப்படியானால் எப்படி இலங்கை இந்தியா போன்ற இந்துக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் மட்டும் இந்த குழந்தை யேசு சர்ச்சுகள் இருக்கிறது? 

போர்த்துக்கேயர்கள் மேரியின் சர்ச்சுகளை மட்டுமே ஆரம்பத்தில் அமைத்தார்கள். அவர்கள் பெண் தெய்வமான கன்னித் தெய்வ வழிபாட்டை உடையவர்கள் என்பதால் அவர்களின் பாரம்பரிய கன்னித் தெய்வ வழிபாடு பைபிள் கதாபாத்திரமான மேரியாக மாற்றப்பட்டது என்று பார்த்தோம். ஆனால் போர்த்துக்கேயர் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்த இடங்களில், ஏற்கனவே அந்த இடங்களில் உள்ள ஆலயங்களை இடித்து அதன் மேலேயே தமது சர்சுகளை கட்டினார்கள். 


இன்று இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பழைமையான சர்ச்சுகள் என்று சொல்பவை அனைத்தும் இந்து ஆலயங்களை இடித்து அதன் மேல் கட்டப்பட்டவையே. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்து சர்ச் கட்டியதும், மடுவில் கண்ணகை அம்மன் கோயிலை இடித்து மேரிக்கு சர்ச் கட்டப்பட்டதும், வேளாங்கண்ணியில் அம்மன் கோயிலை இடித்து சர்ச் கட்டியதும் மட்டுமே பலருக்கு தெரிந்தது. ஆனால் அனைத்து பழைய கத்தோலிக்க சர்ச்சுகளும் இவ்வாறு இந்து ஆலயங்களை இடித்து கட்டப்பட்டது தான் என்பதே கசப்பான உண்மையாகும்.

போர்த்துக்கேயர்கள் இங்குள்ள இந்து ஆலயங்களை இடித்து சர்ச் கட்டியபோது ஒரு வழிமுறையை பின்பற்றி உள்ளனர். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. ஆண் தெய்வங்கள் இருந்த கோயிலை மேரியின் சர்ச்சாக சில இடங்களில் மாற்றி அமைத்தபோது தடங்கல்கள், தோல்விகள், உயிரிழப்புகள் என்பன அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவ்வாறு மாற்றி அமைப்பதை கைவிட்டு பெண்தெய்வ கோயில்கள் இருந்த இடங்களை மட்டும் மேரியின் சர்ச்சாக மாற்றினார்கள். ஆண் தெய்வங்கள் இருந்த இடங்களை அந்தோனி, ஜீசஸ், குழந்தை யேசு போன்ற ஆண்களின் சர்ச்சாக மாற்றினார்கள். ஆண் தெய்வங்கள் இருந்த இடத்தில் தமது பெண் தெய்வத்தை அதுவும் கன்னித் தெய்வத்தை வைப்பதற்கு விரும்பவில்லை என்று அதற்கு பின்னாளில் ஒரு காரணம் கூறினார்கள். ஆனால் அவ்வாறு மாற்றி அமைத்தபோது ஏற்பட்ட ஆபத்துக்கள் காரணமாக உண்டான பயமே அமைக்காமல் விட்டமைக்கு காரணமாகும்.

முருகன் கோயில்கள் எல்லாம் குழந்தை யேசு சர்ச்சுகளாகவும், ஐயனார், சிவன், வைரவர் போன்ற கடவுளர்களின் கோயில்கள் ஜீசஸ், அந்தோனி போன்றவர்களின் சர்ச்சேகளாகவும் மாற்றப்பட்டது.

முருக வழிபாடு அதிகமாக இருந்த இடங்களில் குழந்தை யேசு சர்ச்சுகள் அதிகமாக இருப்பதற்கும், ஐயனார் கோயில்கள் இருந்த இடங்களில் அந்தோனியார் சர்ச்சுகள் அதிகமாக இருப்பதற்கும் போர்த்துக்கேயரின் இந்த ஆண் தெய்வம் இருந்த இடத்தில் ஆண் தெய்வத்தை வைப்பது என்ற பயம் காரணமாக உண்டான வழக்கமே காரணமாக இருந்துள்ளது.

போர்த்துக்கேயர் இடித்த இந்து கோயில்கள் சர்சுகளாக மாற்றப்பட்டது என்றாலும், அனைத்தும் அவர்களது காலத்தில் மாற்றப்படவில்லை.  போர்த்துக்கேயர் காலத்தில் இடிக்கப்பட்ட பல கோயில்கள் ஆங்கிலேயர் காலத்தில் தான் சர்சுகளாக மாற்றப்பட்டது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஒன்று மொழிவழியாக அவர்கள் வேறுபட்டு தோன்றினாலும், பாரம்பரிய இனங்களை அழிப்பது, கிறித்தவ அடையாளங்களை திணிப்பது, என்பவற்றில் அவர்களின் கிறித்தவ மதவெறி ஒன்றுபட்டே நின்றது.

இன்று நீங்கள் காணும் பழைமையான சர்ச்சுகள் எல்லாம் முன்னாளில் அம்மன் முருகன் சிவன் ஐயனார் போன்ற கடவுளர்களின் கோயில்கள் தான். தொல்லியல் திணைக்களம் அங்கெல்லாம் ஆய்வு செய்ய முனையாது. ஏனென்றால், திணைக்களங்கள் அனைத்தும் கிறித்தவ மதவெறியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால் தொல்லியல் ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

இன்று ஞானவாவியில் வெளிப்படும் மறைக்கப்பட்ட உண்மைகள் போல, அனைத்து சர்ச்சுகள் உள்ளேயும் பல உண்மைகள் மறைக்கப்பட்டே உள்ளது. ஆனால், அவையும் ஒருநாளில் வெளிப்படும். காத்திருப்போம்...




நாம் ஜீசஸை பின்பற்ற வேண்டுமா?

நிச்சயமாக, நாம் அனைவரும் ஜீசஸை பின்பற்ற வேண்டும். ஜீசஸைப் போன்ற தியாகம் மிக்க இந்துக்களே இன்றைய காலத்தின் தேவை.

என்ன ஜீசஸ் இந்துவா? என்று உங்களுக்கு தோன்றலாம்..

ஆம், ஜீசஸ் ஒரு இந்துவேதான். இந்து வாழ்வியலை, பாரம்பரியத்தை காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடினார். நாம் அனைவரும் இந்துக்களாக வாழ்வதற்காகவே யூதர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடினார். அதற்காகவே தன் இன்னுயிரை ஈந்தார்.

ஜீசஸ் எப்படி இந்துவாக முடியும்? அதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம்.. நானே சொல்கிறேன்.. கவனமாக கேளுங்கள்.

நீங்கள் பலரும் நம்புவது போல ஜீசஸ் யூதர் கிடையாது. அவர் ஒரு அசாரியர். இன்றைய இஸ்ரவேல் நாட்டின் பூர்வ குடிகள் சமாரியர்கள். அசாரியர்களும் அவர்களுடன் நீண்டகாலமாக வாழும் ஒரு இனக்குழுதான். யூதர்கள் என்பவர்கள் அந்த நாட்டில், அந்த காலத்தில் புதிதாக உருவான ஒரு மதக் குழுமமாகும். சில நூற்றாண்டுகள் முன் உருவான அவர்கள் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும், தமது வழிமுறையே சரியானது என்றும், மற்றவர்களது வழிபாடுகள் மதங்கள் அனைத்தும் பிழையானது என்றும் கூறி தடை செய்தார்கள். அப்போது ரோமானியர்களுக்கு கீழான சிற்றரசர்களாக ஆதிக்கம் செலுத்தும் குழுமமாக இந்த யூதர்கள் இருந்தார்கள்.

அந்த நாட்டில் யூத வழிப்பாட்டு தலத்திற்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஏனைய மதத்தவர்களின் வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் யூதர்களால் இடித்து அழிக்கப்பட்டது. யூதர்களின் ஆட்சி அதிகார எல்லைக்குள் வேறு எந்த மதத்தின் வழிபாட்டு தலமும் இருக்க கூடாது, உருவ வழிபாடும் இருக்க கூடாது என்று தடை செய்தார்கள். அதனால் தமது மதத்தைக் காப்பாற்ற எண்ணிய பலரும் யூத ஆட்சி எல்லையைக் கடந்து வேறு இடங்களில் சென்று குடியேறினார்கள். குடியேறிய இடங்களில் தமது வழிபாட்டு தலங்களை உண்டாக்கி சிலைகளை பிரதிஷ்டை செய்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

அப்படி அசாரியர்கள் பலர் குடியேறிய ஒரு இடம்தான் அபிஜா பிராந்தியம். இன்று லெபனான் என்று அழைக்கப்படும் அந்த அபிஜா பிராந்தியத்தில்தான் அசாரியர்கள் ஆலயம் அமைத்து சிலைகளை பிரதிஷ்டை செய்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த ஆலயத்தில் பிரதான அர்ச்சகராக இருந்தவர்தான் சகாரியர்.

இந்த சகாரியர்தான் எலிசபெத்தின் கணவர். எலிசபெத்தின் மகன்தான் ஜீசஸிற்கு லெபனான் ஆற்றில் வைத்து ஜலதீட்சை கொடுத்த யோவான் எனப்படும் ஜோன். ஜீசஸை விட ஜோனின் பிறப்பே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஜீசஸின் குரு என்றுகூட யோவானை கூறலாம். யோவானும் தந்தை வழியில் லெபனான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் பூசை செய்து வந்த ஒரு அர்ச்சகராவார். 

சகாரியர், யோவான் இருவரும் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தாலும், ஜீசஸ் வாமாச்சாரம் என்று சொல்லக்கூடிய ஆவிகள், மந்திர தந்திரங்களில் நாட்டமுடைய ஷாமன் மதத்தின் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஏனென்றால் அவர் நீண்டகாலமாக அவ்வாறான ஆவி வழிப்பாட்டை பின்பற்றுபவர்களுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். 

நாம் இந்திய நாட்டில் வாமாசாரம் என்று சொல்லும் நடைமுறை மதம், மத்திய கிழக்கு நாடுகள் முதல் மங்கோலியா வரை ஷாமன் மதம் என்ற பெயரில் இன்றுவரை இருக்கிறது. ஜீசஸ் இந்த ஷாமன் மத்ததை சேர்ந்தவர்களுடனேயே நீண்ட காலமாக இருந்துள்ளார். அதனால்தான் யோவான் ஜலதீட்சை கொடுத்து ஜீசஸை வைதீக நடைமுறைக்கு மாற்றினாலும், அவர் வாமாச்சார வழிமுறைகள் மீதே நாட்டம் கொண்டவராக இருந்தார். அதையே மக்களிடம் பரப்பினார்.

இன்று காளிக்கும், வைரவருக்கும், கருப்பனுக்கும், முனியப்பருக்கும் பலிகொடுத்து உருவேற்றி வழிபடும் வழிமுறையே ஜீசஸின் வழிமுறையாக இருந்துள்ளது. கோயிலில் பால் பழம் பூ வைத்து தூம் தீபம் காட்டும் வைதீக நடைமுறையையே சகாரியரும், யோவானும் பின்பற்றி உள்ளனர். மீண்டும் ஒருமுறை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஜீசஸை விட யோவானே முக்கியமானவராக எதிர்பார்க்கப்பட்ட ஒருவராக பைபிளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மேரியின் வயிற்றில் ஜீசஸை கொடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே எலிசபெத்தின் வயிற்றில் யோவானை கர்த்தர் கொடுத்துவிட்டார், கப்ரியல் மூலமாக.

ஆக, கர்த்தருக்கு முதலில் பிறந்த பிள்ளை யோவான், பிறகு பிறந்தவர்தான் ஜீசஸ். வைதீக மத்ததை காப்பதற்காக யோவானையும், வாமாச்சார வழிமுறைகளை காப்பதற்காக ஜீசஸையும் கர்த்தர் பிறப்பித்தார் என்றே கொள்ள வேண்டும்.

உண்மையில் நீங்கள் ஜீசஸை பின்பற்றுபவராக இருந்தால் பலிகொடுத்து வழிபடும் வாமாச்சார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அல்லது கர்த்தர் முதலில் கொடுத்த யோவானின் வழிமுறைகளை பின்பற்றுவது என்றால் வைதீக இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும்.

இரண்டு வழிமுறைகளையும் கர்த்தாவாகிய அந்த மாயவனே காட்டியுள்ளார். நீங்கள் ஜீசஸை பின்பற்ற போகிறீர்களா? யோவானை பின்பற்ற போகிறீர்களா?

யாரை பின்பற்றுவது என்றாலும் நீங்கள் இந்து மதத்தை முதலில் பின்பற்ற வேண்டும். 

கிறிஸ்தவம் என்பது ஜீசஸ் காட்டிய வழிமுறை கிடையாது. ஜீசஸ் பெயரால் மற்றவர்களை அடிமைபாபடுத்தும் யூதர்களின் சூழ்ச்சி அது.

பி.கு: இந்த சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் குறிப்பிடப்படும் சம்பவங்களே..



Friday, 4 August 2023

மணிப்பூர் கலவரமா? மதமாற்ற வெறியா? போதை வியாபாரமா?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் யார் யாருக்கு இடையே மோதல் நடக்கிறது?

மெய்தேய் இனத்தவர்களுக்கும் குகி இனத்தவர்களுக்கும் இடையே மோதல் நடக்கிறது.

மெய்தேய் இனத்தவர்கள் யார்?
குகி இனத்தவர்கள் யார்?

மணிப்பூரில் வாழும் பூர்வீக பழங்குடி இந்துக்கள் மெய்தேய் இனத்தவர்கள். 

மியான்மார் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய கிறிஸ்தவர்கள் குகி இனத்தவர்கள்.

குகி இனத்தவர்கள் மலைகளில் வாழ்கின்றனர். மெய்தேய் இனத்தவர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் வாழ்கின்றனர்.

இவர்களது வாழ்வாதாரம் தொழில் என்ன?

மெய்தேய் இனத்தவர்கள் மலைகளில் காடுகளில் உள்ள பட்ட மரங்களை வெட்டி விறகாக்கி விற்கிறார்கள். பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயம் செய்கிறார்கள்

குகி கிறித்தவ இனத்தவர்கள் மலைகளின் மேல் பப்பி, ஒப்பியம் போன்ற பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள்!. (பப்பி ஒப்பியம் என்பவை போதைவஸ்து பயிர்கள். இந்தியாவில் அதிகமாக போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட பகுதி வடகிழக்கு மாநிலங்கள் தான்)

சரி, ஏன் இரண்டு இனங்களுக்கும் மோதல் ஏற்பட்டது?

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இட ஒதுக்கீடுகள் சலுகைகள் என்பவை வழங்கப்படும்.

மியன்மார் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய கிறிஸ்தவ குகி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் சலுகைகள் என்பவை கிடைக்கிறது, ஆனால்,

மண்ணின் பூர்வ குடிகளும் பழங்குடி மக்களுமான மெய்தேய் இனத்தவர்களுக்கு கிடைப்பதில்லை.

குகி இனத்தவர்கள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் என்பவற்றால் செல்வச் செழிப்பு மிக்க அதிகாரம் மிக்க இனமாக உள்ளனர். ஆனால் மெய்தேய் இனத்தவர்கள் விவசாயம் விறகு வெட்டுதல் என்று மிகவும் ஏழைகளாகவும் அதிகாரமற்றவர்களாகவும் உள்ளனர்.

நீண்டகாலமாக தமக்கும் இட ஒதுக்கீடுகள் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்று மெய்தேய் பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். சட்டப் போராட்டமும் நடத்தி வந்தனர். அதன் பயனாக உச்சநீதிமன்றம் அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

ஆனால், குகி கிறித்தவ இனத்தவர்கள் மெய்தேய் பழங்குடி மக்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என்று போராட ஆரம்பித்தனர். மெய்தேய் இனத்தவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

மலைகளில் இருக்கும் குகி இனத்தவர்களுக்கு, பள்ளத்தாக்கு பகுதியில், வெளியில் வாழும் மெய்தேய் இனத்தவர்களை தாக்குவது எளிதாக இருந்தது. 

போதை வியாபாரத்தில் ஈடுபடுவதால் குகி கிறித்தவ இனத்தவர்களிடம் நவீன ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் கட்டமைப்பு உள்ளது. அதனைப் பயன்படுத்தி மெய்தேய் பழங்குடி மக்களை தாக்கினார்கள்.

மெய்தேய் பழங்குடி மக்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடாது என்று, குகி கிறித்தவ இனத்தவர்கள் ஏன் போராடுகிறார்கள்?

மெய்தேய் மக்களுக்கு சலுகைகளை வழங்கினால், மதம் மாறினால்தான் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெறலாம் என்ற அவசியம் இல்லாமல் போய்விடும். அதனால் மெய்தேய் பழங்குடி மக்களை மதமாற்றம் செய்வது சிரமமாக போய்விடும்.

மதமாற்றத்தை தடுக்க கூடிய இந்த நீதிமன்றத்தின் இட ஒதுக்கீட்டு தீர்ப்பு அவர்களின் கிறித்தவ மதமாற்ற கொள்கைக்கு எதிரானது. அதனால் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

சுமார் ஒரு லட்சம் மெய்தேய் பழங்குடி மக்கள் அகதிகளாக முகாம்களில் உள்ளார்கள். பலநூறு மெய்தேய் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் சொத்துக்கள் அனைத்தும் குகி கிறித்தவ இனத்தவர்களால் கொள்ளையிடப் பட்டுள்ளது. சுமார் ஆயிரம் இந்து பழங்குடி வழிபாட்டு தலங்கள் கிறித்தவ இனத்தவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இப்போது இராணுவ பிரசன்னத்தில் அப்பகுதி உள்ளது. ஆனாலும் கிராம பாதுகாப்பு குழு என்ற பெயரில் குகி கிறித்தவ போதைவஸ்து கூட்டம் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 

பி.கு: இந்த குகி கிறித்தவ குழுக்களை போதைவஸ்து கூட்டத்தை வழிநடத்தி வருபவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்பது குறிப்பிடத்தக்கது.



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...