Saturday, 30 April 2022

ஆங்கில மொழி யாருடைய மொழி?

ஆங்கிலம் என்பது சர்வதேச மொழியா? பிரித்தானியர்களின் ஆட்சி மொழியா? பிரித்தானிய காலனித்துவ அடிமைகளின் மொழியா?

இன்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கும் பொய்களில் முதன்மையான பொய் ஆங்கிலம் சர்வதேச மொழி என்பது. இன்னொரு பொய் ஆங்கிலம் பிரித்தானிய மக்களின், பிரித்தானிய அரசர்களின் ஆட்சி மொழி என்பது.

உண்மையில் ஆங்கிலம் என்பது ஆங்கிலோ சாக்சன் என்ற இரு நாடோடி வேண்டுவ இனங்களின் கலப்பினால் உண்டான மொழியாகும். ஸ்கன்டினேவிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட ஆங்கிலோ சாக்சன் இனங்கள் ஜேர்மனி பகுதியில் சிலகாலம் வசித்து பின்னர் பிரித்தானியப் பகுதிகளை அடைந்துள்ளனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்கள் பிரித்தானியாவில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையோர வேடுவர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் கடையர்கள் என்ற கரையோர வேடுவர் சமூகத்தை ஒத்த ஒரு சமூகமாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டு சமூக மாற்றம் ஏற்படும் வரையில்; பிரித்தானிய அரசின் ஆட்சி மொழியாகவும், அரச குடும்பத்தின் தொடர்பாடல் மொழியாகவும் பிரெஞ்சு மொழியே இருந்துள்ளது. மன்னர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பிரித்தானிய பிரபுக்களும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே பேசியுள்ளனர். 

பிரித்தானிய அரசின் காலனித்துவ காலத்தில் உலகம் முழுவதும் அடிமை வியாபாரமும், அடிமைத் தொழிலாளர் பயன்பாடும் சர்வ சாதாரணமாக நடந்தது. இதனால் பல்வேறுபட்ட நாடுகளை, பல்வேறுபட்ட நாடுகளின் அடிமைகளை கட்டுப்படுத்த வேண்டிய, கட்டளை இடவேண்டிய தேவை பிரித்தானிய அரசுக்கு உருவானது. ஆனால் தம் மன்னர் குடும்பமும், பிரபுக்கள் குடும்பமும் பேசும் உயர்ந்த பிரெஞ்சு மொழியில் அடிமைகளுக்கு கட்டளை இடவோ, அடிமைகள் தங்களுக்குள் உரையாடவோ பிரித்தானிய அரச குடும்பம் விரும்பவில்லை. அதனால் பிரித்தானிய பகுதியில் வசித்த கரையோர வேடுவர்களான ஆங்கிலோ மக்களின் மொழியை அடிமைகளுக்கு கட்டளை இடுவதற்காக பயன்படுத்துவது என்றும், அடிமைகள் தங்களுக்குள் உரையாட ஆங்கிலோ மக்களின் மொழியை அனுமதிப்பது என்றும் முடிவு செய்தார்கள். 

இதன் காரணமாக பிரித்தானிய அரசின் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஆங்கில மொழியை கட்டளை இடும் மொழியாக பயன்படுத்தினார்கள், காலனித்துவ அடிமைகள் அந்த மொழியை கற்பதன் மூலம் தங்களின் கட்டளைகளை புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்பதால் அடிமைகள் அனைவருக்கும் ஆங்கில மொழியை கற்பித்தார்கள். அதுதவிர அவர்கள் அடிமைப் படுத்திய நாடுகளின் நிர்வாக மொழியாகவும் ஆங்கில மொழியைப் பயன்படுத்தினார்கள்.

அடிமைகள் அனைவரும் ஆங்கிலம் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக ஆங்கிலம் கற்ற அடிமைகளுக்கு, ஏனைய அடிமைகளை கட்டுப்படுத்தும் பதவிகளையும், பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்கிலம் பேசும் வெள்ளையின விலைமாதர்களை அழைத்து வந்து ஆங்கிலம் தெரிந்தால் அவர்களை அடைய முடியும் என்று ஆசை காட்டினார்கள். விலைமாதர்கள் அடைவதற்காக ஆங்கிலம் கற்றவர்கள் அக்காலத்திலும் அதிகம்.

பிரித்தானிய அரசு தன் காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஆங்கில மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்திய போதும், தன் அடிமைகள் அடிமை விசுவாசிகள் அனைவரும் ஆங்கில மொழியை கற்று பயன்படுத்த அனுமதித்த போதும், பிரித்தானிய அரசின் அலுவலத்திலோ, மன்னரின் அரண்மனைக்குள்ளோ ஆங்கிலம் பேச அனுமதிக்கப் படவில்லை. 

ஆங்கிலம் அடிமை மொழி என்பதிலும், அடிமைகளுக்கான மொழி என்பதிலும் பிரித்தானிய அரசு மிகவும் உறுதியாகவே இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் புரட்சி ஏற்பட்டு மன்னர் வம்சத்தின் அதிகாரம் குறைக்கப்படும் வரையில் ஆங்கிலம் அரண்மனைக்கு வெளியேதான் காத்திருந்தது. அதுவரை அடிமைகளாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசில் செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு மாறினார்கள். அரண்மனைக்குள்ளும், ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார்கள்.

இதன்போது உலகம் முழுவதும் ஆங்கிலம் கற்ற பிரித்தானிய அடிமைகளே அதிகமாக இருந்தார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் பிரித்தானிய அரசின் அடிமைகள் என்பது ஓர் அடையாளமாக விளங்கியது. இதனை மறைப்பதற்காக அந்த பிரித்தானிய அடிமைகள் சேர்ந்து உண்டாக்கிய புரட்டுக்களே ஆங்கிலம் சர்வதேச மொழி என்பதும், ஆங்கிலம் கற்றவர்கள் அறிவாளிகள் என்பதும்.

ஆங்கிலம் என்பது அறிவல்ல அது ஒரு மொழி. அது சாதாரண மொழியல்ல, அடிமைகள் தங்களுக்குள் பேசவும், அடிமைகளுக்கு அவர்களின் எஜமானர்கள் கட்டளை இடவும் உருவாக்கிய மொழி.

உண்மைகளை உணர்ந்து கொள்வோம். நவநாகரீக அடிமைகளாக வாழ்வதில் இருந்து மீண்டெழுவோம்.



Friday, 29 April 2022

கிறிஸ்து பிறந்தது கி.மு 45 ஆம் ஆண்டிலா?

 சேர் ஐசாக் நியூட்டன் அன்றைய யூலியன் நாட்காட்டியின் 1642 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார்.

அன்றைய தினத்தின் கிரிகேரியன் நாட்காட்டி(இன்றைய ஆங்கிலேய நாட்காட்டி) திகதி ஜனவரி 4ஆம் திகதி 1643 ஆம் ஆண்டு.

அப்படியானால் இன்றைய ஆங்கிலேய நாட்காட்டியின் படி கிறிஸ்மஸ் கொண்டாடப்பட வேண்டிய நாள் ஜனவரி 4 தானே? அப்படியானால் ஏன் டிசம்பர் 25 இல் கொண்டாடுகிறார்கள். கிரிகேரியன் நாட்காட்டியின் டிசம்பர் 25 என்பது யூலியன் நாட்காட்டியின் டிசம்பர் 15 ஆம் திகதி அல்லவா?

சரி, யூலியன் நாட்காட்டி என்பது யூலியஸ் சீசரால் அவரது காலத்தில் அதாவது இன்றைய ஆங்கிலேய நாட்காட்டிப்படி கி.மு 46 இல் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நியூட்டனின் பிறந்த நாள் என்பது யூலியன் நாட்காட்டி படி 1642

(ஆங்கில நாட்காட்டிப்படி) கிரிகேரியன் நாட்காப்படி 1643 ஆக இன்றைய ஆங்கிலேய நாட்காட்டி மற்றும் யூனியன் நாட்காட்டி இடையேயான கால வேறுபாடு ஒரு வருடம் மட்டுமே.

அப்படியானால் கிறிஸ்து பிறந்தது கி.மு 45 ஆம் ஆண்டிலா? அப்படி என்றால் 2022 என்ற இந்த வருடம் கி.பி 2067 ஆ? இல்லை இது 2022 ஆம் ஆண்டு தான் என்றால் கி.மு கி.பி என்பது எல்லாம் பொய்யா?

Sunday, 24 April 2022

ஈழத்தில் உருவான சோழவம்சம்- வரலாற்றுக் கதை

எட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் திசையுக்கிர சோழன் எனும் சிற்றரசன் உறையூரை ஆண்டுவந்தான். ஒருகாலத்தில் பேரரசாக விளங்கிய சோழர்கள் அன்று சிற்றரசர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். பல்லவ மன்னர்களின் தயவில் ஆட்சி செய்தார்கள். ஆனால் அது கூட இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களை வாட்டியது. தம் சோழ வம்சமே அழிந்துவிடுமோ என்று சோகத்தில் மூழ்கினார்கள்.

உக்கிர சோழனுக்கு ஒரேயொரு மகள். பெயர் மாருதப்புரவீகவல்லி. அழகும், அறிவும் பொருந்திய வீரமிகு பெண்ணாக வளர்ந்து வந்தாள். மன்னன் மட்டுமல்லாமல் மக்களும் அவளைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. குன்மநோய் அவளைப் பற்றிப் பிடித்தது. குன்மத்தால் உண்டான கூனல், அதனால் உண்டான முகச்சிதைவு என்று அவளின் உடல் கூனி முகம் குதிரை போல் ஆகிவிட்டது. அவளின் அவலட்சணமான தோற்றத்தை கண்டு அரசகுமாரர்கள் எவரும் மணமுடிக்க மறுத்தனர். வம்சத்தின் ஒரேயொரு வாரிசும் உருக்குலைந்து போனது, மணவயதைத் தொட்டும் மணமுடிப்பார் யாருமில்லை; நாடே வருந்தியது.

பேரரசை இழந்து சிற்றரசாய் ஆனோம். இன்று வம்சத்தையும் இழக்கும் நிலைக்கு ஆளாகினோம். சோழ வம்சத்திற்கு ஏனிந்த துயரம் என்று வருந்தினான் திசையுக்கிர சோழன். சோழ நாட்டின் புகழ்பெற்ற வைத்தியர்கள் அனைவரும் முயற்சித்து பார்த்துவிட்டார்கள், ஆனால் யாராலும் அவளது நோயை நீக்க முடியவில்லை. துயரம் தோய்த்த மன்னனின் முகத்தை மந்திரியால் பார்க்க முடியவில்லை. மன்னனின் துயர்தீர்க்க சங்கல்பம் பூண்டார் மந்திரியார். கருவூரார் பரம்பரையில் வந்த சித்தர் சாந்தலிங்கனை அரண்மனைக்கு அழைத்து வந்தார். 

இளவரசியின் நாடி பிடித்துப் பார்த்த சித்தர் கண்களை மூடி கருத்தேற்றி விட்டு "இது வெறும் குன்மமில்லை, பூர்வ ஜென்ம பாபத்தால் உணடான சாபமும் சேர்ந்தே உள்ளது. பத்தியமும், வைத்தியமும் பாதிக்குத்தான் பலனளிக்கும், பரிகாரம் ஒன்றே பூரணமாய் போக்கும்" என்றார். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் இருந்த மன்னன் "எதுவானாலும் சொல்லுங்கள் சுவாமி! செய்கின்றோம்" என்றான். 

"உண்டான நோய்க்கு ஒரு மண்டலம் மருந்து, தினம் கீரிமலை சென்று நன்னீர் ஊற்றில் நீராடி, ஈஸ்வரரை வணங்கி பின் பத்தியம் தவறாமல் மருந்துண்டுவர குன்மமும் நீங்கும், கூன் நிமிர்ந்து குதிரையும் மறையும்" என்றார். சோழ வம்சத்தில் வந்தவனுக்கு கடல் கடந்து செல்வது கடினமா என்ன? இளவரசியும், தோழிகளும் புறப்பட தயாரானார்கள். அழைத்துச் செல்ல விசுவாசப் படைகளும் கடல் கடக்க நாவாய்களும் தயாராயின. இதுவரை வாரிசு இல்லாமல் போய்விடும் என்று கவலைப்பட்டவனுக்கு, அந்த கவலைபோய் நம்பிக்கை பிறந்துவிட்டது. எத்தனையோ வைத்தியம், எத்தனையோ பரிகாரம் என்று செய்தபோது இல்லாத நம்பிக்கை இப்போது தோன்றியது. சித்தரின் தீர்க்கமான வார்த்தைகளை மன்னனும் முழுமையாக நம்பினான்.

நம்பிக்கை கடந்து அவனுக்கு ஆசையும் பிறந்துவிட்டது. இப்போது மறுபடியும் சோழப் பேரரசை அமைக்க ஆசைப்பட்டான். மனிதனின் ஆசைக்குத்தான் அளவு இல்லையே. "சுவாமி கீரிமலை சென்று நகுலேஸ்வரரை வணங்கி நன்னீர் ஊற்றில் நீராடினால் எம் சோழ வம்சத்தின் ஜென்ம சாபம் தீர்ந்துவிடுமா? நாம் மீண்டும் பேரரசு அமைப்போமா?" என்று ஆர்வமாக கேட்டான் திசையுக்கிர சோழன். புன்னகைத்தார் சித்தர். "ஈசனின் பாதத்தை இறுகப் பற்று, குமரியைத்தேடி குமாரன் வருவான், குமரியைப் பற்றுமிடம் குமரனுக்கு கோயில் அமை, குன்றிருக்கும் குமரன் குலங்காப்பான் " என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விட்டார். மன்னனுக்கு முழுவதும் புரியவில்லை, ஆனாலும் உரிய நேரத்தில் எல்லாம் புரியும் என்ற நம்பிக்கையில் தலையசைத்தான்.

யாழ்ப்பாணம் செல்லும் பணிகள் பரபரப்பாக நடந்தது. அது ஒரு காலத்தில் சோழநாட்டின் அங்கம் என்றாலும்; கடல்கடந்த பகுதி. சித்தரின் குடிலில் இருந்து மருந்துப் பொருட்கள் வந்தன. தோழிகள், பணியாட்கள் விசுவாச படைகள் சூழ இளவரசி புறப்பட்டாள். கோடியாக்ரையில் புறப்பட்ட நாவாய்கள் கீரிமலைக்கரையில் கரையொதுங்கின. 

கீரிமலையை அண்மித்த ஒரு பாதுகாப்பான பகுதியில் குடிலமைத்தார்கள். இளவரசி, தோழிகள், பணியாட்கள் என்று அனைவரும் படைகளின் காவலில் தங்கினார்கள். இங்கிருந்துதான் இளவரசி தினமும் ஆலயம் சென்று வந்தாள். அதிகாலையில் எழுந்து கீரிமலை நன்னீர் தீர்த்தத்தில் நீராடி நகுலேஸ்வரரை, நகுலாம்பிகையை வணங்கி பத்தியம் தவறாமல் மருந்துண்டு வந்தாள். ஓரிரு நாட்களிலேயே மாற்றம் தெரிந்தது. சிறிது நாட்களிலேயே அவள் பிணி முழுவதுமாக நீங்கியது. கூன் மறைந்தது. குதிரை முகம் நீங்கி பேரெழில் பெற்றாள்.

சோழ இளவரசி குதிரை முகம் மறைந்து பேரெழில் பெற்ற செய்தி உறையூருக்கு அனுப்பப்பட்டது. மன்னனும் மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். செய்தி கேட்ட மன்னன், நகுலேஸ்வரனின் பாதம் பணிய ஈழம் நோக்கிப் புறப்பட்டான். 

சோழ மன்னன் புறப்பட்ட அதே நேரத்தில் கதிரமலை இளவரசன் காங்கேயனும் நகுலேஸ்வரரை வணங்குவதற்காக கீரிமலை நோக்கி வந்தான். கீரிமலை செல்லும் வழியில் பேரழகியாக தோன்றிய மாருதப்புரவீகவல்லியை கண்டான். கண்டதும் இருவரும் காதல் கொண்டார்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் இறுகப் பற்றினார்கள். காதல் மயக்கத்தில் இருவரும் களித்திருந்த அந்நேரம், திசையுக்கிர சோழனும் வந்து சேர்ந்தான். இருவர் காதலுக்கும் சம்மதம் தெரிவித்தான். ஈஸ்வரன் பாதத்தை பணிந்து பற்றினான்; ஈசனின் முன்னிலையில் இருவருக்கும் கோலாகலமாக மணமுடித்து வைத்தான். 

சித்தர் சொன்னது திசையுக்கிர சோழனின் நினைவில் வந்தது. "ஈசனின் பாதத்தை இறுகப் பற்று. குமரியைத் தேடி குமாரன் வருவான். குமரிமைப் பற்றுமிடம் குமரனுக்கு கோயில் அமை. குன்றிருக்கும் குமரன் குலங்காப்பான்" வசனங்கள் மறுபடி ஒலித்தது.அந்த வார்த்தைகளின் அர்த்தம் அப்போதுதான் முழுமையாக புரிந்தது. சோழ இளவரசியை கதிரமலை இளவரசன் காங்கேயன் மனம்பற்றிய இடத்தில் சிறிய முருகன் ஆலயம் ஒன்று இருந்தது. பல்லாயிரம் வருடங்கள் பழைமையான கோயில் அது. அந்த ஆலயத்தையே பெரிதாக கட்டுவதற்கு முடிவெடுத்தான் சோழன். கதிரமலை இளவரசன் இப்போது சோழ இளவரசன் ஆனான். காங்கேயனும்,சோழ இளவரசியும் அங்கேயே தங்கி ஆலயம் அமைக்கும் பணிகளை கவனிக்க சோழ மன்னன் உறையூருக்கு திரும்பினான். கோயிலுக்கு தேவையான சிற்பங்கள், விக்கிரகங்கள், ஆபரணங்கள் அனைத்தையும் அங்கிருந்தே ஈழத்திற்கு அனுப்பினான். அழகிய ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டது. 

அவ்வாறு சோழன் அனுப்பிய பெரிய கலங்கள் கீரிமலை கடலில் கரையொதுங்க ஒதுங்கமுடியாமல் நின்றது. அதனால் கீரிமலை அருகில் உள்ள சற்று ஆழமான கடற்பகுதியில் பனை மரங்கள், சுண்ணாம்புக் கற்கள் என்பவற்றை கொண்டு இறங்கு துறை ஒன்றை அமைத்தான் காங்கேயன். காங்கேயன் அமைத்த துறை என்பதால் பின்னாளில் அது காங்கேசன்துறை என்றே பெயர் பெற்றது. 

கதிரமலை மன்னனும், சோழ இளவரசியும் மனம்பற்றிய இடம் அவர்களின் காதலின் அடையாளமாகவும், சோழ வம்சத்தின் ஜென்ம சாபத்தை நீக்கி பேரரசை நிறுவும் பரிகார தலமாகவும் அமைந்தது. ஆலயம் அமைக்க ஆரம்பித்த சிலகாலத்திற்குள் அவர்கள் காதலின் அடையாளமாக ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மனோகரன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டார்கள். ஆலய பணிகள் பூர்த்தி அடைந்து கும்ப அபிஷேகமும் நடந்தது(பொ.ஆ 789, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்). பின்னர் இருவரும் திசையுக்கிர சோழனுடன் உறையூருக்கு திரும்பினார்கள். உறையூர் திரும்பிய சிறிது காலத்தில் திசையுக்கிரன் இறந்துவிட்டான். சோழ வம்சத்தில் வராத காங்கேயன் அரியணையில் அமரமுடியாது. அதனால் ஆட்சிப் பொறுப்பு மனோகரன் வசமானது(பொ.ஆ 790). பால்ய வயதிலேயே பட்டது அரசனானான். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகர சோழன் என்னும் பட்டத்து பெயரில் பலகாலம் ஆண்டான்(பொ.ஆ790-848) பாலகன் வளர்ந்து பதின்ம வயதை எட்டினான். காங்கேயனும் மாருதப்புரவீகவல்லியும் அவனுக்கு மணம்முடித்து வைத்தார்கள். சோழப் பேரரசை நிறுவப்போகும் வாரிசை அவன் மனைவிதான் சுமந்தாள். விஜயாலய சோழன் பிறந்தான். சோழப் பேரரசை நிறுவும் முயற்சி அவனிடம் இருந்து ஆரம்பமானது.

விஜயாலயன் காலத்தில் தஞ்சை நெஞ்சை நிமிர்த்தியது. மீண்டும் புலிக்கொடி வானில் பறந்தது. வானத்தில் தோன்றும் இருள் நிரந்தரமாக நிற்பதில்லை, அது என்றேனும் விலகி ஒளி கொடுக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தினான். 

சோழ வம்சத்தின் இன்னோர் அத்தியாயம் ஆரம்பமானது...

வரலாற்று குறிப்புகள்:

கதிரமலை என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் பகுதியை சுற்றியுள்ள பகுதியாகும். கந்தரோடை என்று இன்று அழைக்கப்படுகிறது.

கீரிமலை என்பது இலங்கையின் யாழ்ப்பாண வடகோடியில் உள்ளது. பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஆலயமே மாருதப்புரவீகவல்லி குன்மமும் குதிரை முகமும் நீங்கிய ஆலயம். கீரிமலை ஆலயத்திற்கு 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


கீரிமலை நகுலேஸ்வர தலபுராணம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தலபுராணம்

யாழ்ப்பாண வைபவமாலை

தட்சிண கைலாச புராணம்

நகுலமலைச்சதகம்

சோழர் வரலாறு

சித்தர்களின் வாழ்க்கை குறிப்புகள் என்பவற்றை தழுவி எழுதப்பட்டது


Tuesday, 19 April 2022

ஆவிகள் மட்டும் அலைவதில்லை- (ஆவியான ஞாயிறு) பைபிள் உருவான கதை

ஓநாய்களின் ஊளையும், பேய்க்குருவிகளின் கூச்சலும் இரவின் அமைதியை இல்லாமல் செய்தது. சூனியக்காரர்களின் இராக்கூச்சல்கள் அச்சத்தை கூட்டியது. அந்த பைப்லஸ் மலைப்பகுதி முழுவதும் என்றுமில்லாதவாறு சப்தங்களால் அதிர்ந்தது. இரவு முழுவதும் எழுந்த கூச்சல்கள் மலைகளைத் தாண்டி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் திகிலைக் கூட்டியது. 

பைப்லஸ் மலைப்பகுதியில் மக்கள் யாரும் வசிக்காததால் சூனியக்காரர்கள், தீய ஆவிகளை வணங்குபவர்களின் உறைவிடமாகவே அது மாறியிருந்தது. துர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளை கொண்டு மக்களை ஆட்சிசெய்வதும், இவ்வுலகை ஆவிகளை வழிபடும் உலகமாக மாற்றுவதுமே அந்த சூனியக்காரர்களின் நோக்கம். ஆனால் இவ்வாறான சூனியக்காரர்கள் மக்கள் வசிக்கும் ஊர்களுக்குள் செல்லமுடியாது. அந்த பகுதிகளை ஆட்சிசெய்த ரோமானிய பாகன்களும், அருகில் இருந்த யூத, கானானிய சிற்றரசுகளும் இந்த சூனியக்காரர்களை அடியோடு வெறுத்தார்கள். ஊர்களுக்குள் சூனியக்காரர்கள் நுழைவதையே தடை செய்தார்கள். அப்படி விரட்டப்பட்ட சூனியக்காரர்கள்தான் பைப்லஸ் மலைகளிலும், ஏனைய மக்கள் வசிக்காத காடுகளிலும் அடைக்கலம் புகுந்தார்கள். ஆனாலும் மாறு வேடங்களைத் தரித்து அவ்வப்போது ஊர்களுக்குள் சென்றார்கள். 

இறைவழிபாட்டாளர்களை, தெய்வ நம்பிக்கைகளை அழித்து; மக்களை இறந்தவர்களின் தீய ஆவிகளை வழிபட வைப்பதும், இவ்வுலகை ஆவிகளுக்குரிய உலகமாக மாற்றுவதுமே இந்த சூனியக்காரர்களின் இலட்சியம். அவ்வாறு ஆவிக்குரிய உலகமாக மாற்றும் முயற்சியில் பலவருடங்கள் பயிற்சி பெற்று மாறுவேடத்தில் சென்ற ஒருவனை; ரோமானியர்கள் பிடித்து; சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டார்கள். அவ்வாறு சிலுவைத் தண்டனை பெற்று இறந்தவனின் உடலை இரவோடு இரவாக பைப்லஸ் மலைப்பகுதிக்கு கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி கொண்டுவந்த உடலைச் சுற்றி முட்டிபோட்டு நின்று கூச்சலிட்டு அதன் ஆவியை அழைத்தார்கள். சூனியக்காரர்கள் ஆவியை அழைத்த அவலக் கூச்சல் தான் மலைகளை கடந்து; மக்கள் வாழும் பகுதிகளையும் திகில் கொள்ள செய்திருந்தது.

அந்த சூனியக்காரர்கள் பெண்கள் உடுத்தும் கவுண் போன்ற ஆடைகளை அணிந்திருந்தார்கள். தங்கள் தலைமுடியை தெரியாதவாறு மறைத்திருந்தார்கள். முட்டி போட்டு இருந்து இரண்டு கைகளையும் அகலத்தூக்கி புரியாத வார்த்தைகளால் ஆவியை அழைத்தார்கள். இடுப்பில் பட்டி ஒன்றை கட்டியிருந்தார்கள். முட்டி போட்டிருந்து வணங்குவது ஆவி வழிபாட்டின் முக்கிய அம்சம். தலைமுடி தெரிந்தால் துர் ஆவிகள் உள்ளிறங்காது ஓடிவிடும் என்பதால்; ஆவிகளை வழிபடுபவர்கள் தலைமுடிகள் தெரியாதவாறு மறைத்தே இருப்பார்கள். தீய ஆவிகள் தம் மரணத்திற்கு காரணமான பொருட்களை தேடி வரும் என்பதால் சிலுவை ஒன்றை செய்துவைத்து ஆவியினை அழைத்தார்கள். விடிய விடிய கூச்சல் போட்டு; ஆவிகளை அழைத்த சூனியக்காரர்கள்; கொண்டு வந்த பிணத்தை சுற்றியிருந்து பிய்த்துத் தின்றார்கள். அதில் அழுகி ஒழுகும் ஊனத்தை இரத்தம் என்று சொல்லி குடித்தார்கள். அவர்களின் செயல்கள் அருவப்பானதாகவும், திகில் கொள்ளும் படியானதாகவும் இருந்தது. அவர்கள் எத்தனையோ அவலச்சாவு அடைந்தவர்களின் ஆவிகளை தமது நோக்கத்தை அடைவதற்காக பயன்படுத்த முனைந்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஆவிகள் உயிரோடிருந்தபோது வணங்கிய குல தெய்வங்கள் இவர்களின் முயற்சிகளைத் தடுத்துவிடும். அதனால் சூனியக்காரர்களுக்கு இந்த உடலும் இதனுடைய ஆவியும் மிகவும் முக்கியமானது. இவன் பன்னிரண்டு வயது முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆவிக்குரிய உலகத்தை நிறுவுவதற்காக இவர்களுடன் ஒன்றாக பயணித்தவன். போதைப் பொருள் பழக்கம், விபச்சாரிகள் தொடர்பு, திருடர்கள் சகவாசம் என்று இவனைவிட தீய ஆவியை காண்பது அரிது. இவன் ஆவிகளைத் தவிர்த்து குலதெய்வம், இறைவன் என்று ஏதொன்றையும் வணங்கியவன் இல்லை. இவனது ஆவியைப் பயன்படுத்தி ஆவிக்குரிய உலகை உருவாக்குவதை எவராலும் தடுக்க முடியாது என்று அந்த சூனியக்காரர்கள் நம்பினார்கள்.

அந்த அடர்ந்த மலைக்காட்டில்; பகல் எது இரவு எது என்று தெரியாமல் பொழுதுகள் நீண்டது. அவலச்சாவு அடைந்தவர்களின் பிணத்தை உண்டு அதன் இரத்தத்தை குடிப்பவர்களில் ஒருவனுக்கு அதன் ஆவி வசப்படும் என்பது ஆவிகளை வழிபடுபவர்கள் நம்பிக்கை. பிணத்தை உண்டு இரத்தத்தின் ஊனத்தை குடித்து 'அல்லேலூயா' என்று கூச்சலிட்டு ஆவியை அழைத்தார்கள். அந்த சூனியக்காரர்களின் நோக்கம் வீண்போகவில்லை. அவர்களில் ஒருவனுக்கு அந்த சிலுவையில் செத்தவனின் ஆவி வசப்பட்டது. இந்த அவலத்தில் செத்தவனின் தீய ஆவியை வைத்தே மக்களை நம்பவைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள். இறைவழிபாட்டைவிட ஆவி வழிபாடே சிறந்தது என்றும் ஆவிகள் வழிபாடு வல்லமை மிக்கது என்றும் மக்களை நம்ப வைக்க முடிவு செய்தார்கள்.

முதலில் இறந்தவனின் நண்பர்களை நம்பவைக்க முடிவு செய்தார்கள். பொதுவாக மரணம் அடைந்தவர்களது ஆவி தான் வசித்த இடங்களையும், பழகிய நபர்களையும் சுற்றிச் சுற்றியே வரும். அவற்றால் வெளிப்பட முடியாது. ஆனால் துர்மரணம் அடைந்தவர்களது ஆவிகளை மற்றவர் கண்களுக்கு தோன்றச்செய்ய முடியும். அதுகூட ஒரு மண்டலம் வரையிலேயே செய்விக்க முடியும். அதன் பின்னர் பொதுவாக அந்த ஆவிகள் தன்நிலையை இழந்து சிதைத்துவிடும். இந்த சூனியக்காரர்கள் சிலுவையில் இறந்தவனின் ஆவியை அவனது நண்பர்கள் இருக்குமிடங்களில் தோன்றசசெய்தார்கள். அவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். சிலுவையில் இறந்தவனின் நண்பர்கள் பலர் ஆவிகளை வழிபடும் வழக்கம் உள்ளவர்களாதலால் அவர்களிடம் இறந்தவனின் ஆவியை தோன்றச் செய்வது இலகுவாக இருந்தது. இறந்த ஆவி சிதைந்து போகும் ஒரு மண்டலம் வரையில் சிலருக்கு தோன்றவும், சிலருக்கு இறந்தவனின் குரலை ஒலிக்கவும் செய்ய முடிந்தது. ஆனால் முழுமையாக அவனது உருவை காணவோ, குரலை கேட்கவோ எவராலும் முடியவில்லை.

மாறுவேடம் தரித்த சூனியக்காரர்கள் ஊருக்குள் புகுந்து மக்களிடையே பேசினார்கள். இறந்தவனின் ஆவியை அரைகுறையாக கண்டவர்களை, குரலை அசுமாத்தமாக கேட்டவர்களை துணையாக வைத்து இறந்தவன் உயிர்த்து வந்ததாக நம்ப வைத்தார்கள். புத்தி குறைந்தவர்கள் பலர் அதையும் நம்பினார்கள். ஆனால் மக்கள் யாரும் இறந்தவனை ஒருபோதும் காணவில்லை. ஆவிகளை வழிபட்டால் இறந்தபின்பும் உயிர்க்க முடியும் என்று ஆசை காட்டி மக்களை ஆவிகளை வழிபட ஊக்குவித்தார்கள். 

அப்போதுதான் சிலுவையில் இறந்தவனின் ஆவியை வைத்தே; ஆவிக்குரிய உலகமாக மாற்றும் அவர்களின் திட்டத்தில்; எதிர்பாராத தடைகளாக குலதெய்வங்கள் குறுக்கே வந்தன. ஆசை காட்டியதால் ஆவி வழிபாட்டிற்கு மாறியவர்களுக்கு, அதுவரை அவர்கள் வழிபட்ட குலதெய்வங்கள் வந்து உண்மையை உணர்த்தி நின்றன. தாம் புதிதாக வணங்குவது துர் ஆவிகள் என்ற உண்மையை உணர்ந்ததும் பலர் ஆவி வழிபாட்டில் இருந்து விலகிச் சென்றுவிட்டார்கள். மக்களை ஆவி வழிபாட்டிற்கு கஷ்டப்பட்டு அழைத்து வருவதும், அவர்கள் உண்மை உணர்ந்து தப்பித்து செல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சூனியக்காரர்களால் உலகம் முழுவதையும் ஆவிக்குரியதாக மாற்ற முடியவில்லை. ஆனாலும் பல நாடுகளில் பலரை மாற்றிவிட்டார்கள். அதுபோல் அவர்கள் தங்களின் வேடங்களையும் மாற்றிவிட்டார்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் ஆவி வழிபாட்டு உலகமாக மாற்ற முடியவில்லை என்பதுதான் சூனியக்காரர்களின் ஒரே கவலை. அதையும் மாற்றிவிடத் துடித்தார்கள். ஒருநாள் சூனியக்காரர்கள் எல்லோரும் ஒன்றாக கூடினார்கள், ஆவி வழிபாட்டை பரப்புவதற்கு தடையாக இருப்பது மக்களின் அறிவும், அவர்கள் வழிபடும் குலதெய்வங்களும் என்று ஒருமனதாக ஒத்துக் கொண்டார்கள். மக்களின் அறிவை மழுங்கச் செய்வதும், குலதெய்வ வழிபாட்டை இல்லாமல் செய்வதும் ஆவிக்குரிய உலகை நிறுவுவதற்கு அவசியம் என்றார்கள். மக்களை அறிவற்றவர்கள் ஆக்குவதற்கும், குலதெய்வ வழிபாட்டை இல்லாமல் செய்வதற்குமான கோட்பாடுகளை பைப்லஸ் மலையில் இருந்து நூலாக உருவாக்கினார்கள். தீய ஆன்மாக்கள் தான் ஆவியாக அலையும் என்பதை மறைத்து தூய ஆவி என்று இல்லாத ஒன்றை நம்ப வைக்கும் கற்பிதங்களை உருவாக்கினார்கள். பைப்லஸ் மலையில் இருந்து உருவானதால் அந்த நூல் பைபிள் என்றே பின்னாளில் பெயர் பெற்றது.

சூனியக்காரர்கள் அனைவரும் தாம் தரித்த புதிய வேடங்களில் எல்லா நாடுகளுக்கும் செல்வது என்றும்; யுத்தம், பசி, பட்டினி என்று உண்டாக்கி; சிந்திக்க முடியாத அறிவற்ற மக்களாக மாற்றுவது என்று சபதம் செய்தார்கள். ஆவிகளை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் குலதெய்வங்களும், காவல் தெய்வங்களும் குறுக்கே வரக்கூடாது என்றும் அதனால் அவற்றை சாத்தான்கள் என்றும், தீயவை என்றும் கூறி மக்களை நம்பச் செய்வது என்றும் முடிவு செய்தார்கள். 

அந்த சூனியக்காரர்களின் சூழ்ச்சிப் பயணம் நாடு நாடுகளான தொடர்ந்தது. குலதெய்வங்கள் கூடாது என்றார்கள். அவை சாத்தானின் வடிவங்கள் என்றார்கள். அவர்களின் பேச்சை நம்பி குலதெய்வங்களை கைவிட்டவர்கள் தீய ஆவிகளை வழிபடும் அற்பர்களாக மாற்றப்பட்டார்கள். அறிவற்ற மந்தைகளாக, தன் இனத்தின் பெருமை மறந்த தற்குறிகளாக ஆனார்கள். ஆனாலும் அவர்களால் உலகம் முழுவதையும் ஆவிக்குரியதாக மாற்ற முடியவில்லை. 

இறைவழிபாட்டை இறுகப் பிடித்தவர்களும், குலதெய்வங்களை குடும்பங்களில் போற்றியவர்களும் இன்னமும் அறிவு பொருந்திய பெருமைமிகு மக்களாகத்தான் வாழ்கிறார்கள். 

ஆனாலும் சூனியக்காரர்கள் தம் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ஒரு கையில் சிலுவை, மறு கையில் ஆவிக்குரிய பைபிள் நூல் என்று அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆவிகள் மட்டுமல்ல, ஆவிகளை வழிபடுபவர்களும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.



Thursday, 24 March 2022

விசித்திரமான கிராமம்-குட்டிக்கதை

அது ஒரு விசித்திரமான கிராமம். அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பீத்தலான பையை வைத்திருப்பார்கள். தினமும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த பீத்தலான பைக்குகள் உணவுப் பொருட்கள், பானங்கள் என்று இட்டு நிரப்புவார்கள். எவ்வளவு இட்டாலும் அது ஒருபோதும் நிரம்புவதில்லை. ஏனென்றால் பீத்தலான பையில் இருந்து சிறிது நேரத்திலே அவை வெளியேறிவிடும். அது நிரம்பாது என்று தெரிந்தாலும் யாரும் விடுவதாக இல்லை. தினமும் கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது ஒன்றை உள்ளே இட்டு நிரப்புவார்கள். சிலர் தம் வசதிக்கேற்ப விதம் விதமான விலையுயர்ந்த பண்டங்களை போட்டு நிரப்புவார்கள். விலை கூடியதோ குறைந்ததோ அந்தப் பை ஒருபோதும் நிரம்புவதில்லை.

உள்ளே தினமும் பண்டங்களை போட்டு நிரப்புவதோடு நிறுத்தாமல், ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப அந்த பீத்தல் பையை அலங்காரம் செய்வார்கள். விலை கூடிய பொருட்களால் அலங்காரம் செய்வதை பெருமையாக கருதிய பலர் மிகவும் பெறுமதி மிக்க பொருட்களால் அலங்காரம் செய்தார்கள். அந்த பீத்தல் பையை வைப்தற்கென்றே விதம் விதமாக வீடுகள் அமைத்து அதற்குள் அந்த பையை வைத்தார்கள்.சிலர் தங்கள் வசதிக்கேற்ப குடிசை அமைத்து தங்கள் பீத்தல் பைகளை வைத்தார்கள். சிலர் தமது செழிப்பை காட்டுவதற்காக மாடமாளிகைகள் அமைத்து அதில் தங்கள் பீத்தல் பைகளை வைத்தார்கள்.

அந்த பீத்தல் பைகளுக்கு ஒரு அதிசய இயல்பும் உள்ளது. இரண்டு விதமான பீத்தல் பைகள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது புதிதாக ஒரு பீத்தல்பை தோன்றும். அந்த பீத்தல் பைகளும் நினைத்தன நாம் ஒன்றுடன் ஒன்று சேர்வதும், புதிய பீத்தல் பையை உண்டாக்குவதும்தான் தம் பிறவிப் பயனென்று. அதனால் இரண்டு விதமான பீத்தல் பைகளை ஒன்றாக்கி வைப்பது அந்த ஊரில் வழக்கமானது. இரண்டு பீத்தல் பைகளை ஒன்றாக்கி வைப்பதை பெரும் நிகழ்வாக கொண்டாடினார்கள். அலங்காரம், ஆட்டம், பாட்டம் என்று அமர்களப்படுத்தினார்கள்.

பின் ஒருநாளில் பண்டங்களை உள்நிரப்ப முடியாமல், உருவம் சிதைந்து, துர்நாற்றம் எடுக்கும் வகையில் அந்த பீத்தல் பைகள் மாறிவிடும். அப்படி ஒரு பை மாறுவதை பார்த்து, ஏனைய பைகள் சுற்றிநின்று கவலைப்பட்டு கதறி அழும்.

ஆம் அது ஒரு விசித்திரமான கிராமம்.

அந்த விசித்திரமான கிராமம்தான் இந்த உலகம். அந்த பீத்தல் பைதான் உங்கள் உடல். அதை நிரப்பப் பாடுபடும் நீங்கள் அதை உணர்வதே இல்லை.


ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே!


நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே!



Wednesday, 23 March 2022

தோட்டத்தில் கிடைத்த டைனோசர் குட்டிகள்-சிறுகதை

 ஒரு நாள் ஒரு விவசாயி தனது தோட்டைத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அருகில் உள்ள பற்றைக் காட்டை சுத்தம் செய்தார். அந்தப் பகுதியில் பற்றைகளோடு சேர்த்து கற்களும் கிடந்தது. கற்களை அகற்றினால் தான் பயிரிட முடியும் என்பதால் மிகவும் சிரமப்பட்டு அந்த கற்களையும் அகற்றினார். அப்போதுதான் கற்களின் இடுக்குகளின் கீழே வித்தியாசமான முட்டைகள் சில இருப்பதைக் கண்டார். அவை சாதாரண முட்டைகளைவிட பெரிய உருவத்தில் கொஞ்சம் கடினமான ஓட்டுடன் இருந்தன. விவசாயி அவற்றை கவனமாக தோண்டியெடுத்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மீதமுள்ள நிலத்தை சுத்தமாக்க ஆரம்பித்துவிட்டார். 

விவசாயி தோட்டம் செய்வதற்கான நிலம் முழுவதும் சுத்தம் செய்தபின்னர் நிலத்தை பண்படுத்தி பயிர்களை நட்டார். வாரங்கள் சில கடந்தபின்னர்தான் அவருக்கு முட்டையின் ஞாபகம் வந்தது. அந்த வித்தியாசமான முட்டைகளை வைத்த இடத்திற்கு சென்று பார்த்தார். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த முட்டைகள் சிலவற்றில் இருந்து டைனோசர் குட்டிகள் பொரித்திருந்தது. அழிந்து போனதாக சொல்லப்பட்ட டைனோசர்கள் தனது தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து அவரால் நம்பமுடியவில்லை.

தகவல் ஊரெல்லாம் பரவியது. அதற்குள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் செல்ல அவர்களும் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் டைனோசர் குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தமது திணைக்களத்தின் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றார்கள். நாட்கள் வாரங்கள் என்று வருடங்கள் சில கடந்தது. இப்போது டைனோசர் குட்டிகள் வளர்ந்து பெரிதாக ஆகிவிட்டன. அவை தாவர உண்ணி டைனோசர்கள். மிகவும் பெரிய உருவில் வளர்ந்து நின்றன. யானையை விட பெருத்த உருவம், ஒட்டகச்சிவிங்கியை விட நீண்ட கழுத்து என்று அதன் உருவம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது. வளர்ந்த குட்டிகளில் ஒன்று மக்கள் பார்வைக்காக மிருகக்காட்சி சாலையில் சேர்க்கப்பட்டது. தகவல் கேள்விப்பட்டு நாடு முழுவதும் உள்ள மக்கள், கூட்டம் கூட்டமாக வந்தனர். 

தீயாய் பரவிய செய்தி அந்தப் பார்வையற்றறோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கும் எட்டியது. அந்த டைனோசர் பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்க அவர்களுக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது. அந்த இல்லத்தில் இருந்த பிறவிக் குருடர்கள் நால்வர் எப்படியாவது அந்த டைனோசரை பார்த்து விடுவது என்று புறப்பட்டார்கள். ஒருவாறு மிருகக்காட்சி சாலைக்கு வந்து டைனோசர் இருக்கும் இடத்திற்கும் வந்துவிட்டார்கள். இவ்வளவு தூரம் வந்தவர்கள் தாம் எப்படி டைனோசரை பார்ப்பது என்பதை சிந்திக்கவில்லை. நால்வரும்  உட்கார்ந்திருந்தது கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நால்வரில் ஒருவனுக்கு அந்த யோசனை தோன்றியது. எம்மால் பார்க்கத்தானே முடியாது அருகில் சென்று தடவிப் பார்ப்போம் என்றான். மற்றவர்களுக்கும் அந்த யோசனை சரியாக படவே சந்தோஷமாக சம்மதித்தனர்.

நால்வரும் எழுந்து டைனோசர் கூண்டு அருகில் சென்றனர். வாயில் காவலரிடம் தங்கள் பிரச்சினைகளை சொல்லி தடவிப் பார்க்க அனுமதி கோரினர். காவலனுக்கும் இவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. சரி, ஒவ்வொருவராக சென்று தடவிப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுமதித்தார்.

முதலில் ஒருவன் உள்ளே போனான். போனவன் டைனோசரின் வாலைப் பிடித்தான். நுணியில் சிறிதாக இருந்து மேலே செல்லச் செல்ல அகலமாக போனது வால். ஒரு பக்கத்தில் முள்போல் சொரசொரப்பாக இருந்தது. அதன் உயரம் ஓரளவுக்கு மேல் அவனுக்கு எட்டவில்லை. அவன் எட்டிய அளவுக்கு தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.

அடுத்தவன் சென்று டைனோசரின் கால்களைப் பிடித்த்தான். உருளையாக மொழுமொழுவென்று சீராக இருந்தது. அப்படியே உருளை அவனது கைகள் எட்டாத உயரத்திற்கு சென்றது. அவனும் எட்டும் அளவுக்கு தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.

மூன்றாமவன் சென்றான். அவன் நான்கு கால்களுக்கும் நடுவில் நின்றான் நகர்ந்து தொட்டுத் தடவிப் பார்த்தான். நான்கு உருளைகள் நான்கு இடத்தில் இருப்பதைக் கண்டான். அவனும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.

நான்காமவன் உள்ளே சென்றபோது டைனோசர் களைப்பில் சரிந்து படுத்திருந்தது. போனவன் வயிற்றை தடவினான்,பெரிய கோளம்போல இருந்தது. எட்டிப் பார்த்தான் ஒரு அளவுக்கு மேல் எட்டவில்லை. சற்று நகர்ந்து பார்த்தான். சரிந்து படுத்திருந்த டைனோசரின் இரண்டு கால்களையும் தடவினான். இரண்டு உருளைகள் ஒன்றன் மேல் ஒன்றாக பின்னியது போல இருந்தது. அவனும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.

நான்கு நண்பர்களுக்கும் டைனோசரை  பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு தமது இல்லத்திற்கு திரும்பினார்கள். இல்லத்தில் இருந்த ஏனைய குருடர்கள் டைனோசர் எப்படி இருக்கும் என்று கேட்டார்கள். 

அதற்கு முதலாமவன் கீழே ஒடுங்கி  மேலே அகன்று உருளையாக செல்லும் என்றான். அது முள்போல் இருக்கும், ஆனால் எட்டாது என்றான். இடைமறித்த இரண்டாமவன் இல்லை இல்லை உருளையாகத்தான் இருக்கும். ஆனால் ஒரே அளவில்தான் இருக்கும். முள் எல்லாம் இல்லை, மொழு மொழு என்றிருக்கும். எட்டாது என்பது உண்மைதான் என்றான். அப்போது இடைமறித்த மூன்றாமவன் ஒரு உருளை இல்லை நான்கு உருளைகளாக இருக்கும். நான்கும் வேறு வேறு இடத்தில் இருக்கும், ஆனால் எட்டாது என்பது உண்மைதான் என்றான். அதன்பின் நான்காமவன் சொன்னான் நீங்கள் மூவரும் சொல்வது தவறு. அது கோளமான வடிவத்தில் தான் இருக்கும். இரண்டு உருளைகள் பின்னியதுபோல கிடையாக இருக்கும். அனால அந்த உருளைகள் கோளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றான்.

இந்த நான்கு பார்வையற்றவர்கள் போலத்தான் நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள், நாம் இந்துக்கள் இல்லை வைணவர்கள் என்று சொல்லி வாதாடும் உட் தத்துவக்காரர்கள்  அனைவரும் இருக்கிறார்கள்.

நான்கு குருடர்களும் சொன்ன டைனோசர் உருவம் எப்படி உண்மையில் டைனோசர் இல்லையோ, அதுபோலத்தான் இந்த சைவ, வைணவ பிரிவினர் சொல்வதும் இந்துமதம் இல்லை. சைவம், வைணவம் என்பவை இந்த குருடர்கள் தடவிப் பார்த்த டைனோசரின் ஏதோ ஒரு பாகத்தையும், இந்து என்பது இவர்களின் பார்வையில் படாத இவர்கள் தொட்டுணராத முழுமையான டைனோசரையும் ஒத்தது. 

இல்லத்திற்கு திரும்பி வந்த நால்வரிடம் டைனோசர் பற்றி கேட்ட ஏனைய குருடர்களின் நிலையில் இருப்பவர்கள்தான் இந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள். அவர்களுக்கு தடவிப் பார்க்கும் ஆர்வமும் இல்லை, அதற்கான வாய்ப்புகளும் அவர்களின் மதத்தில் இல்லை. இல்லத்தில் இருந்துகொண்டே டைனோசர் எப்படி இருக்கும் என்று கேட்ட குருடர்களைப் பார்க்கிலும் அந்த நான்கு குருடர்களும் மேம்பட்டவர்களே தவிர, அவர்களும் முழுமையாக டைனோசரை பார்க்க பார்வை பெறவேண்டும்.

கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களைவிட சைவம் வைணவம் மேலானது என்று பேசிக்கொண்டு இருக்காமல், இவற்றையும் உள்ளடக்கிய, இவற்றையும் கடந்த இந்து தர்மத்தின் முழுமையை உணர்ந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது முழுமையை நோக்கிய பயணம். பரந்த பார்வையுடன் இந்துவாய் வாழ்வோம்.. குருட்டு நம்பிக்கைகளை தூக்கி வீசிவிட்டு இந்துக்களாக மாறுவோம்..



Tuesday, 22 March 2022

பறங்கியர்கள் கரையார்கள் என்ற சாதிய அடையாளத்திற்குள் ஒழிகிறார்களா?

இலங்கையில் பெரும்பாலான பறங்கியர்கள் தங்களை கரையார் என்ற சாதிய அடையாளத்திற்குள் மறைத்துக்கொள்கிறார்களா? இந்த கேள்வி உங்களுக்கு எப்போதாவது தோன்றி இருக்கிறதா?

இலங்கையில் சாதிய, மத ரீதியாக பிரிவினைகள், சாதிய, மத ரீதியான அரசியல் என்பவை வெளிப்படையாக பேசப்பட்டாவிட்டாலும் தேர்தலில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் காரணியாக சாதியும் மதமுமே இருக்கிறது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் நடந்ததை சற்று திரும்பிப் பார்ப்போம். வன்னி தேர்தல் தொகுதியில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக முடியும். இந்த தொகுதியில் சுமார் 80 வீதமானோர் தமிழர்கள். 12 வீதமானோர் பறங்கியர்கள் (இலங்கையில் கிறிஸ்தவர்கள் பறங்கியர்கள் என்ற தனியான இனம் என்பதை அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது) மீதம் சோனகர்கள், சிங்களவர்கள் வாழ்கிறார்கள். (இலங்கை அரசியலமைப்பு சட்டம் முஸ்லிம்கள் சோனகர் என்ற தனியான இனம் என்பதை உறுதிப்படுத்துகிறது).

இந்த தேர்தல் தொகுதியில் 80 வீதமானோர் தமிழர்களாக இருந்தபோதும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகவில்லை. 12 வீதம் உள்ள பறங்கிய இனத்தவர்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும், 6 வீதம் உள்ள சோனகர்கள் 2 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. 

இது எவ்வாறு சாத்தியமானது..?

இங்குதான் கரையார் என்ற அடையாளத்திற்குள் பறங்கியர்கள் ஒழிந்துகொள்வதன் தந்திரம் உள்ளது. வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மீன்பிடி மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாரம்பரிய கரையார மக்கள். இந்த கரையோரப் பகுதிகளில் வாழும் பறங்கியர்களும் கடற்தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களையே செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு தொழில் அடிப்படையில் கரையார் சாதிக்குள் ஒழிந்து கொள்வது இலகுவானது. 

இவ்வாறு பெரும்பான்மையாக உள்ள கரையார் சாதிக்குள் தம்மை ஒழித்துக் கொண்டவர்கள் மதரீதியான தம்மை புறக்கணித்து விடக்கூடாது என்பதற்காக சாதிய ரீதியான பிரிவினையை உண்டுபண்ணினார்கள்.  பெரும்பான்மை கரையார சாதியினரிடம் சென்று எங்கள் கரையார சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். அதே நேரத்தில் பறங்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில், நாங்கள் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். அதேபோல் பள்ளர், நளவர் போன்ற சாதிகள் அதிகமாக வாழும் உட்கிராமங்களுக்கு சென்று உயர்சாதிய வெறுப்பை பரப்பி தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்கள். அதைவிட புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் அவர்களின் இலகுவான வாக்குகளாக மாறினார்கள்.

இப்போது சிந்தித்து பாருங்கள். சாதியம் பேசி தமிழர்கள் வாக்குகளை அறுவடை செய்த அவர்கள், மத ஒற்றுமை பேசி கிறிஸ்தவ பறங்கியர்கள் அனைவரது ஓட்டுக்களையும் பெற்றார்கள். அதைவிட இல்லாத சாதிய கொடுமையை கற்பனையில் உண்டாக்கி பள்ளர் நளவர் போன்ற சாதிகளின் ஓட்டுக்களையும் அறுவடை செய்தார்கள்.

அப்படியானால் தமிழ் வேட்பாளர்கள் என்ன செய்தார்கள்? 

நாங்கள் சாதியை வைத்தோ, மதத்தை வைத்தோ அரசியல் செய்யமாட்டோம், எம் தமிழ் வாக்காளர்களை ஒன்றிணைக்க மாட்டோம் என்று தங்களுக்குள் பிரிந்து நின்றார்கள். தமிழ் வேட்பாளர்கள் சிலர் பறங்கிய வேட்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து பறங்கிய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். 

ஆக, தமக்குள் ஒன்றிணைந்து செயற்பட முடியாததாலும், தமிழர்கள் அனைவரையும் பறங்கியர்கள் உண்டாக்கிய சாதிய பிரிவினையில் இருந்து மீட்க முடியாததாலும், நான்கு பறங்கியர்கள் வெற்றிபெற ஒரு தமிழர் கூட வெல்ல முடியாமல் போனது..

சரி இந்த பறங்கியர்கள் கரையார் என்ற சாதிய அடையாளத்திற்குள் மட்டுந்தான் ஒழிகிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாகும். எந்த இடத்தில் எந்த சாதி ஆதிக்கம் செலுத்துகிறதோ, பெரும்பான்மையாக இருக்கிறதோ அங்கே அந்த சாதியின் பெயரால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். யாழ்ப்பாணத்தில் நகர்ப் பகுதிகளில், உட் கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான பறங்கியர்கள் தம்மை வெள்ளாளர்கள் என்று சொல்லி மறைத்துக் கொள்வார்கள். பள்ளர் நளவர்கள் அதிகமாக செறிவாக வாழும் பகுதிகளில் தங்களை அவ்வாறே அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் முக்குவர்கள் பெரும்பான்மையாக ஆதிக்க சாதிகளாக இருப்பதால் அங்கு தம்மை முக்குவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள். 

இவ்வாறு அந்தந்த இடத்தில் தங்களை அந்தந்த சாதிகளாக மறைத்துக் கொள்ளும் பறங்கியர்கள், தாங்கள் அந்த சாதிகளில் இருந்து மதம்மாறி சென்றவர்கள் என்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்குவதற்காக சிலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவார்கள். சிலருடன் திருமண பந்தத்தை உண்டாக்குவார்கள்.(ஆனால் அவர்களையும் மதமாற்றுவார்கள்) 

இங்கே  தமிழர்களை மதமாற்றம் செய்வதே பறங்கியர்கள் தம்மை மறைத்துக் கொள்வதற்காகத்தான். மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் பறங்கியர்கள் தனியான இனமல்ல, அவர்கள் இங்கிருந்து மதம்மாறி சென்றவர்களே என்ற தோற்றத்தை உண்டாக்கி பறங்கியர்களை காப்பாற்றும் அரணாக விளங்குகிறார்கள்.

இந்த நிலைதானே இப்போதும் தொடர்கிறது... மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? யார் செய்வது? இதுதான் எம்முன்னே உள்ள பல்லாயிரம் டாலர் பெறுமதியான கேள்வி...

(பறங்கியர்கள் என்பவர்கள் ஐரோப்பிய கிறித்தவ ஆட்சியில் ஆபிரிக்காவில் இருந்தும், ஏனைய காலணித்துவ நாடுகளில் இருந்தும் அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்களையும், இங்கே பூர்வீகமாக வாழ்ந்த மக்களையும் வன்புணர்வு செய்து, பாலில் அடிமைகளாக பயன்படுத்தி ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய ஒரு கலப்பினமாகும். இவர்கள் இந்த தேசத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் என்பவற்றை மலினமாகவும், ஐரோப்பியர்களை உயர்வானவர்கள் என்றும், அவர்களின் கலாச்சாரம் உயர்வானது என்றும் நம்பும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட இனமாகும்)



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...