Friday, 5 November 2021

தீபாவளிக்கு திராவிடர்கள் ஏன் வாழ்த்துவதில்லை?

அதற்கு முதலில் தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நரகாசுரனை அழித்த நாளாகவும் தீயவர்களை உலகில் இருந்து அழிக்க வேண்டியுமே தீபாவளி கொண்டாடுகிறது.

நர+ க +அசுரன் என்ற மூன்று சொற்களின் புணர்ச்சியே நரகாசுரன் என்பது.

நர என்றால் மனிதன் என்றும் க என்றால் கடவுள்/ஆன்மா என்றும் பொருட்படும்.

மனிதர்களில் கடவுளாக இருப்பது ஆன்மாவேயாகும். நரகா என்றால் ஆன்மாவை உடைய மனிதர் என்று பொருள். அசுரன் என்றால் தவறால் சூழப்பெற்றவன் என்று பொருள். ஆசு என்றால் தவறு/தீமை என்றும் அரன் என்றால் சூழப்பெற்றவன் என்றும் பொருள்.

இப்போது உங்களுக்கே புரியும். நரகாசுரனை அழிப்பது என்பது என்ன என்று. தீயவற்றால் தவறால் நிரம்பப்பெற்ற ஆன்மாவையுடைய மனிதன் நரகாசுரன் என்றும் அவ்வாறானவர்கள் அழியவேண்டும் என்றுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதன் நோக்கமே தீயவர்கள் அழியவேண்டும், அழிக்கப்படவேண்டும் என்ற உணர்வை சிந்தனையை மக்கள் மத்தியில் உண்டாக்கவேண்டும் என்பதே. 

இப்போது திராவிடர்கள் ஏன் வாழ்த்துவதில்லை என்று சொல்லி உங்களுக்கே புரிந்திருக்கும்.தீமைகளை தவறுகளை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள், ஆட்சி நடாத்துபவர்கள் திராவிடர்கள். அவர்களின் எந்தவொரு செயலிலும் அவர்களைத் தவிர்த்து யாருக்கும் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. அவ்வாறு தீமைகளை மட்டுமே செய்து வாழும் தீயவர்களான திராவிடர்கள் எப்படி தீயவர்களை அழிக்கவேண்டும், தீயவர்கள் அழியவேண்டும் என்றுசொல்லி வாழ்த்துவார்கள்?

தன்னைத்தானே அழிக்கவேண்டும் என்று யாராவது சொல்வார்களா? அதனால்தான் திராவிடர்கள் யாரும் தீபாவளிக்கு வாழ்த்துச்சொல்வதில்லை.



யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...