எது நடந்துவிடக் கூடாது என்று சங்கிலியர் பயந்தாரோ அது கண்முன்னே நடக்க போகிறது என்று நினைக்கையில் கோபம் கனலாக கக்கியது. மன்னாரில் கிறிஸ்தவ மதவிசாரணை நடவடிக்கைக்காக கோவாவில் இருந்து குழு ஒன்று வருகிறது என்றும், அதற்கான பலநூறு உள்ளூர் செயற்பாட்டாளர்களை மன்னாரில் ஒன்று கூட்டுகிறார்கள் என்பதுமே அவரின் கோபத்திற்கு காரணம். அதைவிட மாந்தை பற்று சங்குநாத மணியம், பூதத்தம்பிமுதலி, சோதிமுதலி என்று பலர் கடந்த சில நாட்களுக்குள் மர்மமாக கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் சங்கிலியரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள். அவரின் மனச்சாட்சியாக இருந்து செயலாற்றுபவர்கள். உளவுத்துறை தலைவர் கொண்டுவந்த செய்திகளின் பின் சங்கிலியரால் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. "உடனே புறப்படுவதற்கு தயார்ப்படுத்துங்கள்" என்று கட்டளை இட்டார். அவரது கட்டளைகளில் அப்படி ஒரு இறுக்கம். மந்திரிகள் தளபதிகள் என்று அனைவரும் பரபரப்பாக வேலை செய்தனர்.
படகுகள் பாதைகள் என்பவற்றை தயார் செய்யும் பொறுப்பு வீரமாப்பாணனிடமும், படைகளைத் ஒழுங்கு செய்யும் பொறுப்பு தளபதி இமையாணனிடமும் கொடுக்கப்பட்டது. இம்முறை எச்சரிக்கை மட்டும் கிடையாது தண்டனை வழங்குவதே சரி என்று சங்கிலியாருக்குப் பட்டது.
மாறியது மாறியதாகவே இருக்கட்டும், உங்கள் மத்ததை நீங்கள் பின்பற்றுங்கள், ஆனால் அடுத்தவர்களை நிர்ப்பந்தம் செய்து மதமாற்றாதீர்கள் என்று ஏற்கெனவே பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை செய்தாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மன்னாருக்கு நேரடியாக சென்று நிர்ப்பந்த மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டித்தும், மன்னார் கிறிஸ்தவ பாதிரி செபஸ்டியை எச்சரிக்கை செய்துவிட்டும் வந்திருந்தார் சங்கிலியர். அந்த எச்சரிக்கையோடு தூத்துக்குடிக்கு போனவன்தான் பாதிரி செபஸ்டி, அதன்பின் இன்னமும் மன்னாருக்கு திரும்பி வரவில்லை.
அவன் இங்கிருந்து தப்பித்து ஓடிப்போனதில் இருந்து எப்படியாவது யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்தது தமிழர்களின் இராச்சியத்தினை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அலைந்தான் சவேரியன். சவேரியனால் அனுப்பப்பட்டு வந்தவன்தான் இந்த செபஷ்டி. அதனால்தான் செபஷ்டி மதமாற்ற முடியாமல் திரும்பி போனதில் இருந்து சவேரியன் வெறிப்பிடித்து அலைந்தான். கோவா சென்ற சவேரியன் போர்த்துக்கேய தளபதிகள், ஆளுனர் என்று பலரையும் சந்தித்தான். எப்படியாவது யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்தது தமிழர்களின் இராச்சியத்தினை அழித்தே தீரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். அங்கிருந்தே போர்த்துக்கேய அரசருக்கும் படையெடுப்பு செய்ய வேண்டி கடிதம் அனுப்பினான். இப்படி எல்லா வழிகளிலும் தமிழர் அரசை அழிக்க வேண்டும் என்று ஆலாய் பறந்துகொண்டிருந்தான் பாதிரி சவேரியன்.
இலங்கையின் எல்லா கரையோர இராச்சியங்களும் கிறிஸ்தவ பறங்கியர்களின் வசமாகிவிட்டது. ஆனால் யாழ்ப்பாண இராச்சியத்தை மட்டும் இதுவரை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் இங்கே மதமாற்றம் செய்ய முடியவில்லை. மதமாற்றம் செய்யாமல் அவர்களால் போரில் வெல்ல முடியாது.
ஆம், கிறிஸ்தவர்களின் போர் யுத்திகளில் முதன்மையானது அதுதான், முதலில் மதமாற்றம் என்ற பெயரில் தமக்குச் சார்பாக புதிய இன குழுமம் ஒன்றை உருவாக்குவார்கள். அவ்வாறு உருவாகும் புதிய இனக்குழு அவர்களின் துணையாக, அவர்களோடு சேர்ந்து நின்று யுத்தம் செய்யும் படையாக மாறிவிடும். ஒரு நாட்டு மக்களில் இருந்து புதிதாக உருவான இனக்குழுக்களை கொண்டே, அந்த நாட்டினைப் போரில் வெல்வது தான் கிறிஸ்தவ பறங்கியர்களின் யுத்த முறையாக இருந்தது. அது யுத்த வெற்றியின் பின் நிர்வாகம் செய்வதற்கும் அவர்களுக்கு இலகுவாக அமைந்தது. தம் சொந்த நாட்டுக்கு எதிராக தம் பூர்வீக இனத்திற்கு எதிராக அன்னியர்களுடன் சேர்ந்து நிற்கும் அதிபயங்கரத்தை மதம்மாறியவர்கள் செய்வார்கள்.
இப்போது கிறிஸ்தவர்கள் செய்ய தயாராகும் மதவிசாரணை என்பது மிகவும் கொடூரமானது. இதில் எத்தனை தமிழர்கள் உயிர் பிழைப்பார்கள் என்பதே சந்தேகம். அதற்கு முன் யவன நாடுகளில் நடத்தப்பட்ட மத விசாரணைகளில் பலலட்சம் ஆண்கள் கொல்லப்பட்டதையும், பலலட்சம் பெண்கள் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் அடிமைகளாக்கப்பட்டதையும், கொல்லப்பட்டதையும் சங்கிலியர் அறிந்திருக்கிறார். அந்த கொடூரம் எம் தமிழ் மண்ணில் நடந்துவிடக்கூடாது என்பதே சங்கிலியரின் பதற்றத்திற்கு காரணம். அதனால்தான் அவர் ஆரம்பம் முதலே மதமாற்றத்தை எதிர்த்தும் கிறிஸ்தவ விபாரிகளை கட்டுப்படுத்தியும் வந்தார்.
படைகள், படகுகள், பாதைகள் என்று அனைத்தும் தயார் நிலையில் இருந்தது, இது ஒரு போர்ப்பயணம் போலவே இருந்தது. வீரமாகாளி கோயிலில் படையல் போட்டு இரவுப் பூசைகள் நடைபெற்றது. அதிகாலையில் படைகள் அனைத்தும் நல்லூரில் கூடி "வெற்றிவேல் வீரவேல்" என்ற முழக்கத்துடன் புறப்பட்டன. கொழுப்புத் துறையில் இருந்து புறப்பட்டு மாந்தை துறைக்கு கடல்வழி பயணிப்பது என்றும் அங்கிருந்து ஏனைய இடங்களுக்கு தரைவழியில் பயணிப்பது என்றும் முடிவானது.
படைகள் அனைத்தும் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் மாதோட்ட துறையை அடைந்தன. மன்னர் படையுடன் வரும் தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தால் மாதோட்டத்து அதிகாரிகள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சங்கிலியர் உள்ளூர் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
திருட்டு, விபச்சாரம் என்று ஒழுக்கமற்ற வாழ்வை வாழ்ந்தவர்கள் பலர் அவர்களுடன் சேர்ந்து நிற்பதாகவும், ஏனையவர்களை மதம்மாற அவர்களே நிர்ப்பந்தம் செய்வதாகவும் கூறினார்கள். தீவுக்குள் அவர்கள் பலமடைந்து இருப்பதையும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் தம்மையே எதிர்த்து செயற்படுவதாகவும், மணியமும் முதலிகளும் அவர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்கள். இவற்றை கேட்க கேட்க சங்கிலியரின் மனம் கொதித்தது. அப்பகுதி ஒற்றர் தலைவன் கிறிஸ்தவ படைகளின் பலத்தையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் விவரித்தான். படகுத் துறைக்கு அருகிலேயே தூத்துக்குடியில் இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்தும் வந்தவர்கள் பலர் முகாமிட்டு இருப்பதாகவும், மதம்மாறிய பலர் தோட்ட வெளியில் குடும்பம் குடும்பமாக இருப்பதாகவும் அவர்கள் தான் உள்ளூரில் வந்து தமிழர்களை மதம்மாற நிர்ப்பந்தம் செய்வதாகவும், மதம் மாற்றுவதற்கு தடையாக இருக்கும் அதிகாரிகள், கிராம தலைவர்களை கொல்வதாகவும் கூறினான். உள்ளூரில் பெண்கள் பலர் காணாமல் போயுள்ளதாகவும், ஆண்கள் மர்மமான முறையில் இறக்க பின்னர் பெண்களும் குழந்தைகளும் மதமாற்றம் செய்யப்பட்டு தோட்ட வெளியில் குடியமர்த்த பட்டுள்ளதாகவும் என்று ஒற்றர் தலைவனின் விவரிப்பு நீண்டுகொண்டே சென்றது.
சங்கிலியர் சினங்கொண்டு எழுந்தார், நாளைவரை காத்திருக்க வேண்டுமா? இல்லை இன்றே தமிழினத்தை காக்கப் போகிறோமா என்று கர்ச்சித்தார். வீரமாப்பாணனும் இமையாணனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இனங்காக்க புறப்பட்டவர்களுக்கு பயணம் சோர்வல்ல மன்னா, இன்றே செய்வோம் என்றான் இமையானன். வீரமாப்பாணன் மறுத்தான், இன்னும் சிறிது நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும், எதிரிகள் தப்பிக்க இரவு வாய்ப்பாகிவிடும், ஒருவர்கூட தப்பிக்க கூடாது, காலைவரை காத்திருப்போம் என்றான். சங்கிலியருக்கும் அது சரியாகவே பட்டது.
பொழுது சாய்ந்தது, உணவை உண்டுவிட்டு நான்கு பக்கங்களிலும் காவலுக்கு சிப்பாய்களை நிறுத்திவிட்டு ஏனைய படைகள் கூடாரங்களில் சென்று தூங்கிவிட்டார்கள். கண்களை மூடினாலும் சங்கிலியருக்கு தூக்கமே வரவில்லை. விடிய விடிய விழித்திருந்தார். மதமாற்றம் என்ற பெயரில் தமிழினத்தை அழிக்க துடிக்கும் கிறிஸ்தவர்களை நினைக்க நினைக்க ஆத்திரம் அனலாய் கொதித்தது.
சங்கிலியர் படையுடன் வந்த செய்தி அங்கிருந்த கிறிஸ்தவ கூட்டத்திற்கும் சென்றுவிட்டது. பாதிரி செபஸ்டி பயத்தில் தப்பித்து ஓடிப்போன பின்னர் ஆன்டனி, ஜேம்ஸ் என்ற இரண்டு பாதிரிகளை போர்த்துக்கேய சவேரியன் அனுப்பியிருந்தான். அவர்கள் தான் இந்த உள்ளூர் குழுக்களையும், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் இருந்து வந்தவர்களையும் வழிநடத்துவது. இரவோடு இரவாக தமது குழுக்களை அழைத்த பாதிரிகள் சங்கிலியன் படையோடு வந்து முகாமிட்டிருப்பதையும், அவர்களை விடியுமுன்னர் சென்று தாக்கவேண்டும் என்று தயார்ப்படுத்திவிட்டு இரவோடு இரவாக படகில் ஏறி தப்பித்து போய்விட்டார்கள்.
பாதிரிகளின் பேச்சைக் கேட்டு சங்கிலியரின் படைகளைத் தாக்குவதற்காக ஆயுதங்களுடன் புறப்பட்டன அந்தக கிறிஸ்தவ குழுக்கள். ஆனால் தூக்கம் இன்றி விழித்திருந்த சங்கிலியர் அதற்கு முன்பே எழுந்து படைகளைத் தயார்படுத்தி எதிரிகளைத் தேடிச் செல்ல தயாரானார். ஆனால் தமிழர் படைகளுக்கு தேடிச் செல்லும் வேலை இருக்கவில்லை. காவலுக்கு நின்ற படைவீரர்கள் எதிரிகள் வருவதைக் கண்டு எச்சரிக்கை செய்தார்கள். தமிழர் படைகள் துரித கதியில் செயற்பட்டு கிறிஸ்தவ கூட்டத்தினை வெட்டிச் சாய்த்து வீழ்த்தினார்கள். உயிர் பயத்தில் தப்பித்து ஓடியவர்களை துரத்திச் சென்று தலைகளை வெட்டி வீசினார்கள்.
சங்கிலியர் கர்ஜித்தார் இது முடிவல்ல, மதம் மாறி இனத்தை அழிக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். மதம்மாறியவர்கள் மதம் மாற நிர்ப்பந்தம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் வரலாற்றில் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவோம் என்று கட்டளை இட்டார். படைகள் நாலாபுறமும் விரைந்து சென்று இனத்துரோகிகளைக் கைது செய்தன. மன்னர் கைது செய்த அனைவரையும் அவர்கள் எங்கிருந்து தமிழினத்தை அழிக்க முற்பட்டார்களோ அந்த இடத்திற்கே கொண்டுவாருங்கள் என்று கட்டளை இட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் தோட்ட வெளிக்கு கொண்டு வரப்பட்டனர்.
சங்கிலியருக்கு அவர்களைப் பார்க்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. "இனத்துரோகிளே.. தேசத் துரோகிகளே.. நீங்கள் மனிதர்களா மிருகங்களா? உங்களுக்கு எத்தனை முறைதான் உயிர்ப்பிச்சை இடுவது. எதற்காக நாய் போல் எவன் எதைத் தந்தாலும் அவன் பின்னால் அலைந்து திரிகிறீர்கள்? உழைத்து சாப்பிட முடியாமல் அரிசிக்கும் பருப்பிற்கும் இனத்தை விற்கும் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமா? உடலை விற்கும் விபச்சாரிகளை விட இனத்தை விற்கும் நீங்கள் அசிங்கமான பிறவிகள். எமது இனத்தை எமது இராச்சியத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அன்னியன் வீசும் எலும்பை நங்கிப் பிழைக்கும் நாய்கள் நீங்கள். உங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை வரலாறு முழுவதும் பேசப்படும். மதமாற்றம் என்ற பெயரில் இனத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இது முன்மாதிரியாக இருக்கும்" என்று உறுமினார்.
மாதோட்ட ஒற்றர் தலைவனை அழைத்து கட்டாய படுத்தி கடத்தி வரப்பட்ட அபலைப் பெண்களை, சிறுவர்களை தனியாக வேறுபடுத்தினார். இன்றிலிருந்து உங்களுக்கு விடுதலை, இனி நீங்கள் இந்த அசிங்கமான அடையாளங்களை சுமக்க வேண்டியதில்லை, உங்கள் வீடுகளுக்கு சென்று யாரெல்லாம் பழையபடி தமிழர்களாக ஒழுக்கமான வாழ்வை வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அந்த அபலைகள் அனைவரும் நாங்கள் விரும்பி ஏற்கவில்லை மன்னா, எங்களை இந்த அசிங்கத்தில் தள்ளிவிட்டார்கள், இதை இனி எப்படிப் போக்குவோம் மன்னா என்று அழுதார்கள். "இது அசிங்கம் என்று உணர்ந்த இந்த கணமே நீங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். பாலாவியில் மூழ்கி எழுந்து தமிழர்களாய் வாழுங்கள்" என்று விட்டு மற்றவர்கள் பக்கம் திரும்பினார்.
அவர்களுக்கு கிடைக்க போகும் தண்டனை புரிந்து விட்டது. மன்னா எங்களையும் மன்னித்து விடுங்கள், இனி இவ்வாறு தவறுசெய்ய மாட்டோம். நாம் செய்தது மிகப்பெரிய அசிங்கம். இனி நாங்கள் ஒழுக்கமாக வாழ்வோம் என்று கதறினார்கள். ஆனால் மன்னர் அந்த கதறல்களை காதில் வாங்குவதாக இல்லை. மன்னர் படையினரை நோக்கி இவர்கள் அனைவரையும் சிரைச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். வீரமாப்பாணரும் இமையானனும்கூட ஒரு கணம் திகைத்து நின்றனர். அனைவருக்கும் சிரைச் சேதமா என்று? அவர்கள் முகக்குறிப்பை உணர்ந்த மன்னர் மீண்டும் அழுத்தமாக சொன்னார், "இனத்தை மதத்தை விற்று வயிற்றை வளர்ப்பவர்கள் யாரும் இந்த தேசத்தில் இருக்க முடியாது, அனைவர் தலைகளையும் கொய்து விடுங்கள்" என்றார்.
இனத் துரோகிகளின் அவலக்குரல் வானைப் பிளந்தது, இமையானன் தலையை அசைத்தான் இரத்த வெள்ளத்தில் நனைந்தது தோட்டவெளி. அந்த மண்ணைப் பிடித்திருந்த அசிங்கம் இரத்தத்தால் கழுவப்பட்டது. மதமாற்றம் செய்து இனத்தை அழிப்பவர்கள் வரலாறு முழுவதும் இதை மனதில் வைத்திருப்பார்கள், இப்படி ஒரு நிலை தோன்றும் போது சங்கிலியர்களும் தோன்றுவார்கள் எற்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்ற திருப்தியுடன் நல்லூரை நோக்கி புறப்பட்டார் சங்கிலியர்.
சங்கிலிய மன்னரின் வரலாற்று குறிப்புகள்:
முதலாம் சங்கிலி மன்னர், சங்கிலிய பண்டாரம், ஏழாம் செகராசசேகரன் என்னும் மூன்றுமே அவரைக் குறிக்கும் பெயர்களே.
1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாணம் நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆண்டவர்.
ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரையில் சிங்கைப் பரராசசேகரனின் பின்பு சங்கிலிய மன்னர் அரியணையில் அமர்ந்தார்.
அன்றைய யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் கிழக்கில் திருகோணமலை, மேற்கில் புத்தளம் வரை ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
மன்னாரில் கிறிஸ்தவ மதமாற்றிகள், மதவிசாரணைக்காக தயார்ப்படுத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்ட வருடம் 1544 ஆம் ஆண்டாகும்.
1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற செய்த படையெடுப்பை சங்கிலியர் முறியடித்தார்.
பலமுறை படையெடுப்பு செய்து தோற்ற கிறிஸ்தவர்கள் இறுதியாக 1560 இல் இரகசிய படையெடுப்பு ஒன்றைச் செய்து நல்லூரைக் கைப்பற்றினர். அப்போது சங்கிலியர் கோப்பாய்க்கு பின்வாங்கி பின் வன்னிப் பகுதிக்கு பின்வாங்கி சென்றார்.
அதன்பின்னர் சங்கிலியரைத் தேடிச் சென்ற கிறிஸ்தவ படைகள் பலர் நோயாலும், பசியாலும் வன்னிக்குள் மாள கடலில் ஒரு தொகுதி படை நல்லூரில் ஒரு தொகுதி படை என்று கிறிஸ்தவ படைகள் மூன்று நிலைகளில் சிதறி இருப்பதை சங்கிலியர் அறிந்தார். அந்த நேரத்தில் மக்கள் கிளர்ச்சியை உண்டுபண்ணி உள்ளிருந்து தாக்குதல் நடத்தி கிறிஸ்தவ படைகளை கொன்றும், விரட்டியும் மீண்டும் யாழ்ப்பாண இராச்சியத்தினை மீட்டார்.
1561 இல் புவிராஜ பண்டாரத்திடம் ஆட்சியை வழங்கிவிட்டு ஆட்சியில் இருந்து ஓய்வுபெற்றார்.
1565 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஷஷ்டி திதியில் நல்லூரில் சிவபதம் அடைந்தார்.
PararasaSekara mannan & Sekarasasekara mannan built many Hindu Temples in Jaffn Om Nama Shivaya!a Kingdom! Including my village Inuvil too! His generations are still living in Inuvil & Jaffna!
ReplyDelete