Friday, 31 December 2021

நாட்காட்டி (காலண்டர்) வரலாறும் புதுவருடமும்.

பண்டைய ரோமானியர்களின் சூரிய நாட்காட்டி யூலியஸ் சீசர் காலத்தில்  கணிதவியலாளர்கள் வானியலாளர்கள் என்போரைக்கொண்டு இந்திய சுமேரிய நாட்காட்டிகளையொட்டி திருத்தம் செய்யப்பட்டது. அதுவே யூலியஸ் நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது. அதுவரையில் இருந்த 13 மாதங்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்செய்யப்படும் நாட்திருத்தமும் யூலியஸ் நாட்காட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்செய்யப்படும் வகையில் 12 மாதங்களாக மாற்றப்பட்டது. நாட்களை சீர்செய்யும் வருடம் லீப் வருடம் எனப்பட்டது.

இத்திருத்தம் ரோமானிய பண்டைய நாட்காட்டியின் 708ஆம் ஆண்டில் அதாவது இன்றைய பொ.மு 44 இல் செய்யப்பட்டது. இந்த நாட்காட்டியே நீண்டகாலமாக ரோமானிய பேரரசின் ஐரோப்பிய பகுதிகளில் பயன்பாட்டில் இருந்தது. 

இந்த யூலியன் நாட்காட்டியின் புதுவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்பட்டது. ஆனால் 1582 இல் போப் கிரிகேரி என்பவன் நாட்காட்டி தேதிகளை 15 நாட்களால் முன்னகர்த்தி மாற்றினான். ஏப்ரலில் கொண்டாடப்பட்ட புதுவருடத்தை ஜனவரி முதலாம் திகதி கொண்டாட உத்தரவிட்டான். ஆனால், பிரான்ஸ் தவிர ஏனைய நாடுகள் அன்றைய மாற்றத்தை ஏற்கவில்லை. 

பின்னர் தனது நாட்காட்டி மாற்றத்தை ஏற்காதவர்களை முட்டாள்கள் என்றும் ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்றும் தனது திருச்சபைகள் மூலம் பிரச்சாரம் செய்து ஏப்ரலில் புதுவருடம் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று இழிவுபடுத்தினான். 

பின்னர் படிப்படியாக ஏப்ரல் புதுவருடம் இல்லாமல் செய்யப்பட்டது. ஜனவரி முதல் நாள் புதுவருடமாக மாற்றப்பட்டது.  பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும் அதனை ஏற்றதையடுத்து அவர்கள் அடிமைப்படுத்தியிருந்த நாடுகளிலும் அது நடைமுறைக்கு வந்தது.

இந்த கிறிஸ்தவ கூட்டத்தின் வரலாறே உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாரம்பரிய வழக்கவழக்கங்களை இழிவுபடுத்தியும் இல்லாமல் செய்தும் வந்ததுதான். 

இன்னோர் இனத்தின் பழக்கவழக்கங்கள் மரபுகள் என்பவற்றை நாம் மரியாதையுடன் நோக்கலாம், அவர்களின் பண்டிகை விழாக்கள் என்பவற்றில் நாமும் கலந்து கொண்டாடலாம்.தவறில்லை. 

ஆனால் உலகில் உள்ள பல்வேறு இனங்களின் பாரம்பரியத்தையும் மரபையும் அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கொண்டாட்டங்களில் கலந்து எமக்கும், எம் சந்ததிகளுக்கும் அழியாத பழியைப் பங்குபோட்டுக் கொள்ளவேண்டுமா?

உலகின் பாரம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ கூட்டத்தை புறக்கணிப்போம். அவர்களின் வஞ்சகப் பண்டிகைகளை புறக்கணிப்போம். எம் சந்ததிகளை வரலாற்றுப் பழியில் இருந்து பாதுகாப்போம்.

எம்மை அடிமைப்படுத்தியவன் திணித்தவற்றை தலையில் வைத்துக் கொண்டாட நாம் அடிமைகள் இல்லை. நாம் உலகின் பழைமைமிக்க, பாரம்பரிய இனம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

சர்வம் சிவமயம்

No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...