Thursday, 24 November 2022

உயிர்த்தெழுந்த மன்மதன்-காமன் பண்டிகை வரலாறு

இதுவரையில் ஈரேழு உலகத்திலும் இப்படி ஒரு பெண் பிள்ளை பிறந்ததில்லை, அவ்வளவு அழகு. கோடி சூரியன்களின் பிரகாசமும், கோடி சந்திரன்களின் அமைதியும் அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது. அறிவு, அழகு என்று அனைத்திலும் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே. எந்த ஒன்றிலும் ஒப்பிட முடியாத தனித்தன்மையுடன் இருந்தாள் ரதி. ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் பிறந்த குழந்தையல்லவா அவள். அவளுக்கு ஏது குறைவிருக்கும்.

ரதி பருவ வயதை அடைந்து விட்டாலும் அவளை பெற்ற ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் அது தோன்றவே இல்லை. பரமாளும் கடவுள் என்றாலும் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்போதும்  குழந்தைகள தானே. ஆனால் நாரதர் கண்களுக்கு அது உறுத்திக் கொண்டு இருந்தது. கைலாயத்தில் இருக்கும் பேரழகின் செய்தியைக் காவிக்கொண்டு ஆரோக்கியபுரத்திற்கு சென்றார்.

ஆரோக்கியபுரத்தின் அரசன் மன்மதன். மாயவனுக்கும் மகாலட்சுமிக்கும் மகனாக வைகுண்டத்தில் பிறந்தவன். ரதிக்காகவே பிறந்தவன் போல் அப்படி ஒரு ஆணழகன். இந்த ஈரேழு உலகத்தில் இவனால் சஞ்சலப்படாதவர் ஒருவர் கூட இல்லை. அப்படியான மன்மதன் தனக்கான நாடாக ஆரோக்கியபுரத்தை உருவாக்கி அதனை ஆட்சிசெய்து வருகிறான். 

மன்மதனிடம் வந்த நாரதர் ரதி தேவியின் பேரழகைப்பற்றிக் கூறி உனக்கு ஏற்றவள் அவள்தான், ஏன் உனக்கானவள் அவள்தான் என்றே வைத்துக் கொள் என்று கூறி ஆசையை தூண்டினார். எல்லோரையும் சஞ்சலப்பட வைக்கும் மன்மதனே இப்போது சஞ்சலம் அடைந்து நின்றான். ஒருபோதும் ரதியை காணாதவன் அவள் அழகை கற்பனையில் உருச்செய்து உருகிநின்றான். நாரதர் ஆரோக்கியபுரம் வந்த வேலை  முடிந்தது. அடுத்து வைகுண்டம் நோக்கி புறப்பட்டார்.

வைகுண்டம் வந்த நாரதர் தன் வேலையை அங்கேயும் ஆரம்பித்தார். "அங்கே மன்மதன் மனவேதனையில் இருக்கிறான், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்" என்று பொடிவைத்துப் பேச்சை ஆரம்பித்தார். 

"சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வாரும் நாரதரே.. என்ன கலகம் உண்டாக்க வந்தீர், மன்மதனுக்கு அப்படி என்ன மனவேதனை" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் மாயவன்.

"கலகம் ஒன்றும் இல்லை பிரபு, வரும் வழியில் ஆரோக்கியபுரத்திற்கு சென்றேன். மன்மதன் மணவயதை அடைந்தும் தனியாக இருக்கிறான். அவனுக்கு ஏற்ற ஒரே பெண் கைலாயத்தில் இருக்கும் எம்பெருமான் ஈஸ்வரனின் மகள் ரதி ஒருத்திதான். மன்மதனும் அவளை நினைத்தே மனம் உருகிக் கொண்டிருக்கிறான்" என்று வந்த விடயத்தை ஒரே மூச்சில் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

மன்மதன் மணவயதை அடைந்துவிட்டான் என்பது மாயவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. "நாரதரே.. நீர் சொல்வதும் சரிதான்.  ஈஸ்வரரிடம் சென்று பெண்கேட்டு வருவோம், இப்போதே புறப்படுவோம்" என்று சொல்லி நாரதரையும் அழைத்துக் கொண்டு மகாலட்சுமியுடன் புறப்பட்டார்.

கைலாயம் சென்றவர்கள் ரதியின் பேரழகைக்கண்டு சொக்கி நின்றார்கள். தங்கள் மகன் மன்மதனுக்கு ரதியை மணமுடித்து வைக்கவேண்டும் என்று ஈஸ்வரரிடம் வேண்டினார்கள். அதற்கு ஈஸ்வரரோ எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. அது ரதியின் விருப்பம். அவள் சம்மதித்தால் திருமணம் நடக்கும் என்றார்.

ரதியை மன்மதனுக்கு மணமுடித்து வைப்பதில் பார்வதிக்கும் விருப்பம். அண்ணன் மகன் மன்மதனையே மணமுடிக்க வேண்டும் என்று ரதியிடம் கூறினார். அவள் தாய் சொல்லை மீறவில்லை. மன்மதனை திருமணம் செய்ய சம்மதித்தாள்.

மாசித் திங்கள் பதினெட்டாம் நாளில் திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் கோலாகலமாக நடந்தது. கைலாயம், வைகுண்டம் மட்டுமல்லாமல் ஈரேழு உலகங்களும் விழாக்கோலம் பூண்டது. இதுவரையில் இப்படி ஓர் திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் வகையில் ரதி மன்மதன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பின்னர் மன்மதன் ரதியுடன் ஆரோக்கியபுரத்திற்கு சென்றுவிட்டான். ஈஸ்வரரும் ஆழ்ந்த தியானத்தில்  மூழ்கிவிட்டார். உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உலகியல் இன்பங்களில் மூழ்கிவிட்டார்கள்.

ஈஸ்வரரின் இந்த ஆழ்ந்த தியானத்தால் அனைத்து உலகங்களும் நிலைகுலைந்து போனது. சக்தியால் எந்த ஒரு செயலையும் ஒழுங்கு செய்ய முடியவில்லை. நாற்பத்தெட்டாயிரம் பிரம்மாக்களும் நாற்பத்தெட்டாயிரம் விஷ்ணுக்களும் செய்வதறியாது தவித்தனர்.

தேவர்கள் எல்லோரும் சென்று தேவேந்திரனிடம் முறையிட்டார்கள். உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கி சீரழிந்து நிற்கிறது. அவை அனைத்தும் சீராக இயங்க எப்படியாவது ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று வேண்டினார்கள். 

ஈஸ்வரரின் பார்வை பட்டால் மாத்திரமே இந்த உலகங்கள் அனைத்தும் சீர்பெறும், ஆனால் ஈஸ்வரரின் தியானத்தை யாரால் கலைக்க முடியும்.  அவ்வாறு சிந்தித்து கொண்டிருந்த இந்திரன் முன்பு நாரதர் வந்தார். மன்மதன் ஒருவனால் மாத்திரமே அது முடியும். மன்மதனை அழைத்து ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று சொல் என்றார்.

இந்திர சபைக்கு மன்மதனை அழைத்த இந்திரன், ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்தம்பித்து நிற்கும் பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒழுங்காக இயங்க ஈஸ்வரரின் தியானத்தை கலைத்தே ஆகவேண்டும் அது உன்னால் மட்டுமே முடியும் என்றார். மன்மதனால் மறுக்க முடியவில்லை, சம்மதித்துப் புறப்பட்டான். விடயம் அறிந்த ரதி தேவி பதறிப்போய் மன்மதனைத் தடுத்தாள். ஈஸ்வரரின் தியானத்தை கலைத்தால் அவரின் சினத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள். தயவுசெய்து அந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள் என்றாள்.

மன்மதன் பிடிவாதமாக இருந்தான். நான் இந்திரருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை என்னால் மீற முடியாது. அதுதவிர ஈரேழு உலகங்களும் நன்மை அடையும் என்றால் என்னை இழக்கவும் தயாராக உள்ளேன் என்றான். ரதி எவ்வளவோ கெஞ்சியும், தடுத்தும் ஒன்றும் முடியவில்லை. 

மன்மதன் தன்னுடைய கிளிவாகனத்தில் ஏறி தென்றல் தேரில் புறப்பட்டான். மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கையில் கரும்பு வில், நாணாக தேன் வண்டுகள், ஐமலர் அம்புகள் என்று அவனொரு விசித்திரமான போர்வீரனாக காட்சி அளித்தான். படைகளும் ஆயுதங்களும் இல்லாத ஆரோக்கியபுரத்தில் இருந்து பேரெழில் மின்னும் ஒரு வித்தியாசமான தாக்குதலாளன். 

மாசி மாத முழுமதி நாளில் ஈஸ்வரரின் இருப்பிடத்தை அடைந்தான். அவரின் தியானத்தை கலைக்க ஏதேதோ செய்து பார்த்தான். ஆத்திரமூட்டும் வகையில் ஏகடியம் எல்லாம் பேசினான். ஆனால் எதற்கும் எந்த சலனமும் இல்லை. கடைசியில் தன் கரும்பு லில்லை எடுத்து மலர்க்கணைகளை நாணேற்றி அவர்மீது எய்தான். ஈஸ்வரரின் தியானம் கலைந்தது. அவர் நெற்றிக் கண்ணைத் திறந்தார்.  மன்மதன் அந்த அனலில் கருகி சாம்பலாகிப் போனான்.

தகவல் அறிந்து ரதியும், வானவர்களும், ஈரேழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்தினார்கள். மாயவன் இந்திரன் முதலான வானவர்களும் ரதியும் ஈஸ்வரரிடம் சென்றார்கள். மன்மதனை உயிர்ப்பித்து அருள வேண்டும் என்று வேண்டினார்கள். 

மன்மதன் இறந்த மூன்றாம் நாள், மாசித்திங்கள் முழுநிலவை அடுத்த மூன்றாம் நாள், ரதியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தெரிவான், வேறு எவர் கண்களுக்கும் அவன் தோன்றமாட்டான் என்று கூறி ரதியை வாழ்த்தி மன்மதனை உயிர்ப்பித்தார் ஈஸ்வரர். 

இறந்த மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்தான் மன்மதன். அதுதான் அவர்களின் மணநாளும் கூட. மன்மதன் ரதியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஆரோக்கியபுரத்திற்கு சென்றான். மன்மதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்த செய்தியை அறிந்து ஈரேழு உலகங்களில் வசிப்பவர்களும் மகிழ்ந்தார்கள்.

இந்த நாளே மன்மதன் உயிர்த்தெழுந்த நாள் என்றும், ரதி-மன்மதன் திருமண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. காமன் பண்டிகையின் கடைசி நாள் மன்மதன் உயிர்த்தெழுந்து ரதியுடன் மீண்டும் சேர்தல் என்பதுடன் முடிவடைகிறது.

வரலாற்று குறிப்புகள்:

*காமன்விழா மாசிமாத அமாவாசை தினத்தில் ஆரம்பித்து பௌர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது.

*ஈஸ்வரரின் தியானத்தை கலைத்து அவரின் நெற்றிக் கண் அனலில் மன்மதன் சாம்பலான நாள் மாசிமாத பௌர்ணமி நாளாகும்.

*மாசிமாத பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் ரதி-மன்மதன் திருமண நாள். அன்றுதான் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியினை அடைந்த நாள்.

*கிரேக்க, ரோமானிய நாகரிகத்தில் ஹெய்ரோஸ்/ஈரோஸ்/குபிட் என்று மன்மதனும் ,அப்ரோடைட், சைக் என்று ரதியும் குறிப்பிடப்படுகிறது.


தத்துவார்த்த குறிப்புகள்:

*ஈஸ்வரர் என்பது அறிவின் குறியீடு. அறிவு கண்களை மூடும் போது உலக ஒழுங்கு சீர்கெட்டு விடுகிறது.

*மன்மதன் என்பது காமத்தின் குறியீடு. காமம் தவறானது இல்லை என்றபோதும் அது வெளிப்படையாக மாறும் போது உலக ஒழுங்கு சீர் கெட்டுவிடும். 

*காமத்தை தவிர்த்து விட்டு அறிவை மட்டும் கொண்டு உலகம் இயங்க முடியாது. ஆனால் காமம் எல்லோருக்கும் தெரியாமல் உரியவர்க்கு மட்டுமே தெரிய வேண்டும்.

*உண்மையான அறிவு காமத்தை அழித்துவிடும்.

*ரதி என்றால் எல்லோராலும் விரும்பப்படுவது என்று பொருள். அறிவும் ஆற்றலும் எல்லோராலும் விரும்பப்படுவது. சிவன் சக்தி என்பது அறிவு ஆற்றல் என்பவற்றை குறிக்கும்.

*காமம் என்பது மாயையில் இருந்து தோன்றுவது. மாயவனின் மைந்தன் மன்மதன் என்பது காமம் மாயையில் இருந்து பிறப்பது என்பதாகும்.

*ஆரோககியபுரத்தின் அரசன் மன்மதன். ஆரோக்கியம் இல்லை என்றால் அங்கு காமம் தோன்றாது. ஆரோக்கியமாக இருக்கும் வரையிலேயே காமம் இருக்கும்.















Friday, 18 November 2022

சாதி-கீழ்சாதி

கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்பு சாதி என்பதோ, சாதி என்ற வார்த்தையோ இந்த மண்ணில் இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

சாதி என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றே பலரும் நம்பவைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் சாதி என்பது போர்த்துக்கீச மொழிச்சொல்.

இந்த மண்ணில் கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னர் தொழில் ரீதியான குடிகளும், பரம்பரை ரீதியான பாரம்பரிய முறைகளும் பின்பற்றப்பட்டு வந்ததே தவிர இன்று இருக்கும் சாதிய கட்டமைப்பு ஒருபோதும் இருக்கவில்லை. ஒருவன் தன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அமைவாக தொழில்களை மாற்றும் சுதந்திரம் பெற்றவனாகவே இந்த சமூகத்தில் வாழ்ந்துள்ளான்.

இந்த மண்ணில் தோன்றிய இலக்கிய, இலக்கண ஆதாரங்கள் எல்லாம் பதினெட்டு குடிகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.

இன்று இருக்கும் பல்லாயிரம் சாதிகளும் தோன்றிய காலம் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பும், மதமாற்றமும் நிகழ்ந்த அன்னிய ஆட்சிக்காலமே

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது, பல்வேறு மொழிகளைப் பேசும் பதினெட்டு குடிகளும், பத்தாயிரத்திற்கும் அதிகமான இனக்குழுக்களும் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளன. 

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறும் காலத்தில் முன்பு இருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான இனங்களில்; 1652 இனங்களே எஞ்சி இருந்தன. மீதமுள்ள பல்லாயிரம் இனங்கள் கிறிஸ்தவர்கள் ஆண்ட அந்த 400 ஆண்டுகளில் காணாமல் போய் விட்டன.

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு போது, அவர்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது இருந்த பதினெட்டு குடிகள் முறைமை காணாமல் போய், பத்து-இருபது உயர் சாதிகளும், பல்லாயிரம் கீழ் சாதிகளும் எஞ்சியிருந்தன.

இறைவனே சொன்னால் கூட கண்ணை மூடி ஏற்காமல் விவாதித்து நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த மண்ணின் வழமை மறைந்து போய், யாரோ ஒரு அன்னியன் சொன்னவை எல்லாம் உண்மை என்று தலையில் தூக்கி அலையும் பெரும் அடிமைகள் கூட்டம் கிறிஸ்தவர்கள் வெளியேறும் போது உருவாகி இருந்தது.

கிறிஸ்தவர்கள் வரும்போது இருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான இனங்களில், அவர்கள் போகும் போது 1652 இனங்கள் தான் எஞ்சி இருக்கிறது என்றால் மீதமுள்ள இனங்களுக்கு என்ன நடந்தது?

அவர்கள் வரும்போது இல்லாத பல்லாயிரம் சாதிகள், அவர்கள் இந்த நாட்டை ஆண்ட போது எப்படி உருவானது?

இந்த மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் இனங்களுக்கு நடந்தது இதுதான். அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு கீழ்சாதிகள் ஆக்கப்பட்டார்கள்.

வாழ்வியல் அடையாளங்களை அழிக்கும் போதே, அந்த இனங்கள் அழிந்து, அவர்களின் மொழியும் இல்லாமல் போய்விடும். உலகம் முழுவதும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் பல்லாயிரம் இனங்களை அழித்தது அவ்வாறுதான்.

இந்த மண்ணிலும் அன்னிய ஆட்சிக் காலத்தில் தங்களின் பாரம்பரிய வாழ்வியலை இழந்த மக்கள்; தமது மொழியையும், இன அடையாளத்தையும் தொலைத்து கீழ்சாதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்

தங்களுடைய மரபுவழி வாழ்வியலை தொலைந்தால், அந்த மக்கள் கூட்டம் இழிவான நிலைக்கு சென்றுவிடும்

தமிழர்களே!

எங்கள் இந்து வாழ்வியலை இழந்தால், எங்கள் சந்ததிகள் கூட நாளை கீழ்சாதிகள் என்ற இழிவு நிலையைத்தாங்கி, அன்னிய மொழிபேசியே வாழவேண்டும்.

எங்கள் சந்ததிகள் அவ்வாறு இழிவு நிலையில் வாழ வேண்டும் என்று நாம் விரும்ப முடியுமா?

சாதி என்பதும், சாதிய உயர்வு-தாழ்வும் கிறிஸ்தவர்கள் எம்மீது திணித்த அசிங்கம். அன்னிரால் உண்டான வம்சங்களும், அடிமைகளும் மட்டுமே அந்த அசிங்கத்தை தூக்கிச் சுமப்பார்கள்.

தமிழர்களாய் ஒன்றிணைவோம். எம் இந்து வாழ்வியலை காப்போம்.

இந்து மட்டுமே தமிழன்





Saturday, 5 November 2022

சிவன் சொன்ன ரகசியம்

மகாபாரத போர் முடிந்து கலியுகம் ஆரம்பமாகிய காலம். இந்த கலியுகத்தின் வாழ்வை எண்ணி மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கலங்கிங்கொண்டு இருந்தார்கள். விஸ்வாமித்திரர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அவரது தவத்தின் பயனால் அவர்முன் சிவன் தோன்றினர். விஸ்வாமித்திரா எதற்காக இப்படி கடுந்தவம் புரிகிறாய், உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்டார்.

ஈஸ்வரனை பணிந்த விஸ்வாமித்திரர் "பெருமானே இந்த கலியுகத்தின் வாழ்வை எண்ணி மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் என்று அனைவரும் கலங்கி நிற்கிறார்கள். இந்த கலக்கத்தை போக்க அருள்புரிய வேண்டும். கலியுகத்திலும் தர்மம் மாறாமல் துன்பமின்றி வாழ அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினார்.

"விஸ்வாமித்திரா! உன் வேண்டுதலிலேயே அதற்கான தீர்வும் உள்ளது. யுகங்களை பற்றிக் கலக்கம் கொள்ளாதே, எந்த யுகமாக இருந்தாலும் அறம் தவறியவர்கள் அமைதியாக வாழமுடியாது, அவர்களுக்கு மெய்யின்பமும் கிட்டாது. மக்கள் தர்மத்தின்படி வாழ்ந்தால் அவர்களுக்கு துன்பம் கிடையாது. நீ கலங்கிநிற்க தேவையில்லை" என்றார்.

"ஈஸ்வரா அப்படியானால் ஏனைய யுகங்கள் போலத்தான் இந்த யுகமும் இருக்குமா? அப்படியானால் ஏன் கலியுகத்தைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள்?"

"உன் சந்தேகம் நியாயமானது, அவர்கள் பயப்படுவதற்கும் காரணம் உள்ளது. ஏனைய யுகங்களைவிட அதர்மிகள் அதிகரித்து இருப்பார்கள், தர்மம் என்பது கூட தனியான பெயராக அடையாளம் காட்டப்படும். தர்மத்தை காப்பதற்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். தர்மத்தை குறிக்கும் பெயர் புதிது என்றும், அதனால் முன்பு தர்மம் என்ற ஒன்று இருந்ததே இல்லை என்றும் அதர்மிகள் வாதிப்பார்கள். வன்முறையில் அதர்மம் திணிக்கப்படும். தர்மத்தின் வழியில் வாழ்பவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். எது தர்மம் என்றே தெரியாத பெரிய மக்கள் கூட்டம் உருவாகி இருப்பார்கள்" என்றார்.

"பெருமானே! நீங்கள் மட்டுமே எல்லாம் அறிந்தவர், எது எப்படி நடக்கும் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினால் நாம் அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்கும். அதற்கு நீங்கள் தான் அருளவேண்டும்"

வேண்டியவர்களுக்கு வேண்டியது எல்லாம் அருள்பவர் அல்லவா ஈஸ்வரன், அதனால் விஸ்வாமித்திரருக்கு எதிர்கால உண்மையை உரைத்தார். 

"அறிவாற்றல் கிடைக்கும் வழிமுறைகளையும், தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் மக்களுக்குப் பரப்பும் வழிமுறையை உருவாக்கு, காலத்தால் அவை அழிவதுபோல் தோன்றும், நேராக கூறும் கருத்து திரித்துக் கூறப்படும், குறியீடாக கூறும் கருத்து புரிந்து கொள்ளாமல் போகும், நீ உருவாக்கும் வழிமுறைகள் உன்னை வெறுப்பவர்கள் மூலமே பரப்பப்படட்டு காக்கப்படும். ஆனால் உரிய காலத்தில் அவை மீட்கப்பட்டு சரியான அர்த்தங்கள் மக்களுக்கு உணர்த்தப்படும்.

ஈஸ்வரா உரிய காலம் எது என்று கூறவில்லையே..?

"மனிதப் பிறவிகளை கடவுள் என்றும், தூதுவர் என்றும் நம்பும் அதர்மிகள் அதிகரித்து வருவார்கள். வாள்முனையிலும் வன்முறையிலும் அதர்மத்தை பரப்பும் அதர்மிகள் அன்பு, அமைதி என்று வேடம் தரிப்பார்கள். நீ உருவாக்கும் தர்மம் அன்று "இந்து" என்று பெயர் பெற்று நிற்கும். பெயர் புதிது என்பதால் தமது அதர்மமே பழமையானது என்றும் சரியானது என்றும் வாதிப்பார்ரகள். நீ வகுத்த வழிமுறையிலேயே அதர்ம சிந்தனைகளையும் பரப்ப முனைவார்கள்"

அதர்மிகள் அழிப்பது முடியாத காரியமா? அவர்களை வெல்வது எப்படி?

"தர்மம் ஒன்றுதான் அவர்களை அழிக்கும் ஆயுதம். மக்கள் ஒழுக்கம் தவறாமல் வாழவேண்டும், அறிவு பெற்று உழைப்பை நம்பி வாழவேண்டும், அப்போது அதர்மிகள் முற்றாக அழிந்து விடுவார்கள். உழைக்காமல் வாழவேண்டும் என்பவர்களும், ஒழுக்கமின்றி வாழ விரும்புபவர்களுமே அதர்மிகளாக மாறுகிறார்கள். உழைத்து வாழும் ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகும் போது கலியுகம் கூட மகிழ்ச்சி நிறைந்ததாக மாறிவிடும்" என்றார் ஈஸ்வரன்.

"சிவசிவா" என்று பாதம் பணிந்தார் விஸ்வாமித்திரர். 

சர்வம் சிவமயம்





Friday, 4 November 2022

நரசிம்ம வதம்-ஆன்மீக கதை

யுகங்கள் தோறும் திருமால் பலலட்சம் கோடி அவதாரங்களை எடுத்துள்ளார். இன்றும் எடுத்துக் கொண்டே இருக்கின்றார். இதில் முக்கியமான ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம். மிகவும் உக்கிரமான திருமாலின் இந்த அவதாரமானது இரணியகசிபுவை அழிப்பதற்காக எடுக்கப்பட்டது. 

இரணியகசிபுவின் மகன் பிரகலாதன், தன்னை வணங்காமல் திருமாலை வணங்கியதால் கோபமுற்ற இரணியகசிபு பிரகலாதனை கொல்ல முனைந்தான். (உலகத்தில் உருவ வழிப்பாடிற்கு எதிராக பதியப்பட்ட முதலாவது வன்முறை இதுதான். தன்னை வணங்குதல் என்றால் இரணியகசிபுவை வணங்குதல் கிடையாது, நான் யார் என்று உணர்ந்து நானே கடவுள் என்று கருதும் நிலையே தன்னை வணங்குதல், இது ஏகான்மவாதம் எனப்படும். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அத்வைதமே ஏகான்மவாதமாகும். இவர்கள் உருவங்களாக தோன்றும் மாயைகளை வணங்குபவர்களை மால் வழிபாட்டு மக்கள் என்று குறிப்பிட்டனர். மால் என்றால் மாயை, சிவனை உருச்செய்து வழிபட்டாலும் அது மால் வழிபாடுதான். இவ்வாறு உருவ வழிபாடு செய்த மக்களை ஏகான்மவாதிகள் தவறான வழிபாட்டை பின்பற்றுபவர்கள், மால் வழிபாட்டாளர்கள் என்று சொல்லி கொலை செய்தார்கள்)

சப்தரிஷிகளில் ஒருவரான ரிஷி காசியப்பருக்கு திருமாலின் அருளால் இரணிய கசிபு மற்றும் இரண்யட்சகன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அசுரர்களாக வளர்ந்தனர். அவர்களில் இரண்யட்சகன் பூமா தேவியை கட்டாயப்படுத்தி அசுர உலகத்திற்கு கடத்திச்சென்றான். அந்த தருணத்தில் அனைத்து தேவர்களும் பெருமாளிடம் காப்பாற்றும்படி வேண்டினர். வராக அவதாரமெடுத்த திருமால் தன் கொம்பால் இரண்யட்சகன் மார்பில் குத்தி அவனை வதைத்தார். பூமாதேவியை காப்பாற்றி அசுரர் உலகத்தில் இருந்த அசுரர்கள் அனைவரையும் வதைத்தார். தன் சகோதரனின் இறப்பை கேட்டு நடுங்கிய இரணியகசிபு தன் உயிரை பாதுகாக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்க தொடங்கினான்.

இரணியகசிபு தன் தவத்தால் சிவபெருமானிடம் அவன் விரும்பும் வரத்தை பெற்றான். மரணமில்லா வாழ்வு சிவனைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதால், தந்திரமாக சிவனையே ஏமாற்றுவதாக எண்ணிய இரணியகசிபு, தன் மரணம் மனிதனோ, மிருகமோ அல்லாத ஒருவனால் எந்தவித ஆயுதமும் இல்லாமல், பகலோ இரவோ இல்லாத நேரத்தில், பூமியிலும், வானத்திலும் இல்லாமல் நிகழவேண்டும் என்று வரம் கேட்டான்.கேட்கும் அடியவர்க்கு கேட்பதை எல்லாம் கொடுக்கும் சிவபெருமான் அவன் கேட்ட வரத்தையும் வழங்கினார்.

தான் கேட்ட வரம் கிடைத்துவிட்ட கர்வத்தால் இரணியகசிபு மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் துளியும் இரக்கமின்றி கொன்றான். இந்த சூழ்நிலையில்தான் இரணியகசிபுவிற்கு பிரகலாதன் என்னும் மகன் பிறந்தான். அவன் தன் தந்தையை போல அல்லாமல் திருமால் மீது அதிக பக்தி கொண்டவனாக இருந்தான்.

இரணியகசிபு எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரகலாதன் தொடர்ந்து திருமாலையே வணங்கினான். இதனால் தன் மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல உத்தரவிட்டான். இரணியகசிபுவின் வீரர்கள் எவ்வளவு முயன்றும் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் பிரகலாதனை தன் கைகளாலே கொல்வது என்று துணிந்தான் இரணியகசிபு.

பிரகலாதனை வதைக்க இரணியகசிபு முயன்றபோது அங்கு நரசிம்ம அவதாரத்தில் தோன்றிய திருமால் அவனை வதைக்க முயன்றார். இரணியகசிபுவை வீழ்த்திய நரசிம்மர் அவனை தூக்கி தன் மடியில் வைத்து தன் கூறிய நகங்களால் அவன் மார்பை பிளந்து கொன்றார். நரசிம்மர் மனிதரும் அல்ல மிருகமும் அல்ல இரண்டும் கலந்த உருவம், அவர் இரணியகசிபுவை வதைக்க பயன்படுத்தியது எந்த ஆயுதத்தையும் அல்ல தன் நகங்களை, அவர் கொன்ற இடம் வானமும் அல்ல பூமியும் அல்ல அவரின் மடியில், அவர் இரணியகசிபுவை வதைத்த நேரம் பகலும் அல்ல இரவும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட மாலை நேரம். இதனால்தான் நரசிம்மரால் இரணியகசிபுவை வதைக்க முடிந்தது.

நரசிம்மரின் கோபம் மூவுலகத்தினரையும் அஞ்சி நடுங்கும்படி செய்தது. அவரின் கோபம் அனைவரையும் அழிக்க கூடியதாக இருந்தது. இதனால் உலகத்தை காப்பாற்ற அனைவரும் சிவபெருமானை வேண்டினர். எனவே சிவபெருமான் வீரபத்திரர் மற்றும் பத்ரகாளியை நரசிம்மமரை அமைதிப்படுத்த அனுப்பிவைத்தார்.

வீரபத்திரர் மற்றும் பத்ரகாளி இருவரும் எவ்வளவோ முயற்சித்தும் நரசிம்மரை வீழ்த்தவோ, அமைதிப்படுத்தவோ இயலவில்லை. ஆனால் நரசிம்மர் அவர்களையும் வதைக்க துணிந்தார். எனவே சிவபெருமான் அவர்களை காப்பாற்றி நரசிம்மரை அமைதிப்படுத்த எண்ணினார்.

நரசிம்மரை கட்டுப்படுத்த தூய உருவைவிட்டு பேரழிவு உருவமான சரபா உருவத்தில் தோன்றினார் சிவபெருமான். சரப உருவம் என்பது மிகப்பெரிய தோன்றும் உருவமாகவும், நிறைய அங்கங்களுடனும், பறக்க இறக்கைகளுடனும் இருந்தது. இந்த பயங்கர உருவத்தில் தோன்றிய சிவபெருமான் நரசிம்மரை அந்த இடத்தில் இருந்து தூக்கிக்கொண்டு பறந்து சென்று மயக்கமடைய செய்தார்.

மயக்கம் தெளிந்த நரசிம்மர் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைந்தார். திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் மரணத்தை தழுவ வேண்டியது கட்டாயம். தன் அவதாரத்தின் நோக்கம் முடிந்தது என்று சொல்லிய நரசிம்மர் தம்மை வதம்செய்து அருளும்படி சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் நரசிம்மரை வதம் செய்து அவரையும் தன் பதத்தில் இணைத்து அருள்புரிந்தார்.



Wednesday, 26 October 2022

சாத்தான் விரட்டுதல்-சிறுகதை

மழைக்காற்று சில்லென்று வீசியது. வீசிய காற்றில் ஒட்டியிருந்த நீர்த்துளிகள் அவள் தேகத்தை சிலிர்க்க வைத்தது. குறுகலான சந்துவழியாக ஓட்டமும் நடையுமாக சென்ற மொறின் சர்ச்சுக்குள் நூழைந்தாள். மழை மேகங்கள் வானத்தை மறைத்து நின்றதால் உள்ளே அவ்வளவாக வெளிச்சம் இல்லை. சர்ச் முழுவதும் மங்கலாக இருந்தது. அத்தனை இருளையும் ஒற்றை மெழுகுவர்த்தி அகற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. 

வழியெங்கும் படர்ந்த ஈரலிப்பில் அவள் உடல் படபடத்துக்கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை நெருங்கி தன் கைகளை சூடேற்றினாள்.

அத்தனை மங்கலான இடத்திலும் மொறின் மட்டும் பிரகாசமாக தெரிந்தாள். அவள் மெல்லிய ஆடைகளை ஊடுருவி உடல் அப்பட்டமாக தெரிகிறது. அறைக்குள் இருந்து ரசித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் அடக்க முடியாமல் எழுந்தான்.

"என்ன மொறின் மழையென்றும் பார்க்காமல் வந்திட்ட போல" என்று கேட்டவாறே வெளியே வந்தான்."ஆமா ஃபாதர், எனக்கு நைட் ஃபுல்லா தூக்கமே வரல்ல, 

நீங்க நேத்து சொன்னதில இருந்து எனக்கு உறுத்திட்டே இருக்கு ஃபாதர். நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது ஃபாதர்" என்று படபடத்தாள்.

"தப்பு பண்ணினால் உறுத்தத்தானே செய்யும், நீ பண்ணினது சாதாரண தப்பா என்ன? நான் எத்தனை தடவை பூசையின் போது சொல்லி இருக்கிறேன். சாத்தானை வணங்குபவர்களுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று, எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் சாத்தானுக்கு படைத்ததை உண்ணக்கூடாது என்று?" 

"இல்லை ஃபாதர் என்னால எதுவும் பண்ண முடியலை, திவ்யாதான் தமிழங்க பண்டிகை தைப்பொங்கல்னு சொல்லி கட்டாயப்படுத்தி கொடுத்தா அதுதான் சாப்பிட்டேன்" என்று குழைந்துகொண்டே கூறினாள். 

"ஆண்டவரை தவிர எதை வணங்கினாலும் அது சாத்தான் தான். சூரியன், சந்திரன் என்று விதிவிலக்கு எல்லாம் கிடையாது. சூரியனை வணங்கினாலும் அது சாத்தான் வழிபாடுதான். உபாகமம் அத்தியாயம் 17 இல் ஆண்டவர் அப்படித்தானே சொல்லி இருக்கிறார். நீ படித்த பெண்தானே, என்ன குழந்தை பிள்ளை போல் பேசுகிறாய்? தமிழர்கள் கூட சேர்ந்து நீயும் சாத்தானுக்கு படைத்த பொங்கலை சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறாய், அப்படி சாத்தானுக்கு படைத்த பொங்கலை நீங்கள் சாப்பிட கூடாது என்று தானே வருஷா வருஷம் சர்ச்சில கூட நாம பொங்கல் வைக்கிறோம், சூரியனை வணங்கினால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார் அல்லவா" என்று கோபப்பட்டான் ஜேம்ஸ்.

"ஆமா தப்புத்தான் ஃபாதர். இனிமேல் அந்த தப்ப பண்ணமாட்டேன், அதனால்தான் பாவமன்னிப்பு கேட்க மழைன்னும் பார்க்காமல் வந்தேன்" என்ற சிணுங்கினாள்.

"ம்ம்.. சரி சரி உள்ளே வா" என்று அவளை அழைக்கொண்டு அறைக்குள் சென்றான் ஜேம்ஸ்.

உள்ளே சென்ற ஜேம்ஸ் இருக்கையில் அமர்ந்தான், மொறின் படபடப்போடு எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். 

என்ன சுத்திச்சுத்தி பார்த்திட்டே இருக்க என்ற ஜேம்ஸின் அதட்டலான குரலில் அவள் பார்வை நிலைத்து நின்றது. "ஃபாதர் பாவமன்னிப்புக்கு கூட்டுக்கு போக வேணாமா?" என்று அப்பாவியாக கேட்டாள்.

"கூடு சாதாரண தப்புக்குத்தான், நீ பண்ணினது சாதாரண தப்பா என்ன? உனக்கு சாத்தான் பிடித்துவிட்டது. அதனால்தான் இப்படி எல்லாம் செய்கிறாய், நீ ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து விசுவாசமாக மாறவேண்டும், உன் உடல் முழுவதும் சாத்தான் பீடித்துள்ளது அதைக் களைய வேண்டும்" என்று கண்டிப்புடன் கூறினான் ஜேம்ஸ்.

"அதுக்கு என்ன பண்ணணும் ஃபாதர்?" படபடப்புடன் பயந்து போய் கேட்டாள் மொறின். முதலில் உன் ஆடைகளை களைந்துவிடு என்றான் ஜேம்ஸ். ஜேம்ஸ் சட்டென்று சொன்னதாலோ என்னவோ தெரியவில்லை வழக்கத்துக்கு மாறாக அவள் சற்று தயங்கினாள். 

"சாத்தான் உன்னை பீடித்துள்ளது, அதனால்தான் தயங்குகிறாய், ஆதியாகமம் அத்தியாயம் 3இல் ஆண்டவர் என்ன சொல்லி இருக்கிறார்? சாத்தானின் தவறான வழிகாட்டலே ஆடை உடுத்த காரணம் என்று படித்ததை மறந்துவிட்டாயா? ஆண்டவருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆண்டவரை பின்பற்றுபவர்கள் ஆடைகளை களைந்து விடவேண்டும்" என்று ஜேம்ஸ் சொல்லச்சொல்ல மொறின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தாள்.

அவள் ஆடைகளை களைந்து ஆண்டவருக்கு விசுவாசமானவளாக மாறிநின்றாள். "ஆடை உடுத்துவதே சாத்தானின் தூண்டுதல் என்ற உன்னதமான கருத்தை சொல்லாவிட்டால் இந்த தரிசனம் கிடைத்திருக்குமா ஆண்டவரே? நன்றி ஆண்டவரே" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவள் அங்கங்களை கண்களாலேயே அளவெடுத்தான். அப்போதும் அவள் அங்கங்களில் எஞ்சியிருந்த சாத்தானின் தூண்டுதல்கள் அவனை உறுத்தியது. எழுத்து அவளருகில் சென்றான், அவளைத் தழுவியிருந்த சிறிய சாத்தானின் தூண்டுதல்களை அகற்றினான். இப்போதுதான் நீ ஆண்டவருக்கு முழுவதும் விசுவாசமாக மாறியிருக்கிறாய் என்றான். அவள் கண்களில் அப்படி ஒரு பெருமிதம். 

"சாத்தானின் தூண்டலால் உடுத்திய ஆடைகளை களைந்து விட்டேன். நான் ஆண்டவருக்கு விசுவாசமாக மாறிவிட்டேன், என் பாவங்கள் மன்னிக்க பட்டதா ஃபாதர்" அவள் வெகுளித்தனமாக கேட்டாள்.

"இல்லை, நீ இப்போது பாவ மன்னிப்புக்கு தயாராகிவிட்டாய், ஆனால் உன்பாவம் இன்னும் மன்னிக்கப்படவில்லை, ஆணடவருக்காக நானே உன்னை மன்னிக்க வேண்டும். இந்த வாய்கள் தானே சாத்தானுக்கு படைத்த பொங்கலை உண்டது. அந்த வாயில் ஒட்டியிருக்கும் சாத்தானை விரட்ட வேண்டும்" என்றான் ஜேம்ஸ். 

"அதற்கு என்ன செய்ய வேண்டும் ஃபாதர்.?" அவள் வார்த்தைகள் தழுதழுத்தன.

ஜேம்ஸின் கைகள் அவள் உடல் முழுவதும் ஊர்ந்தது தவழ்ந்தது. அவளை அப்படியே தழுவி முட்டிபோட்டு அமரவைத்தான். அவளை கண்களை மூடி ஆண்டவரை வேண்டச்சொன்னான். "அவள் ஆண்டவரே என்னை மன்னியுங்கள், ஆண்டவரே என்னை மன்னியுங்கள்" என்று வேண்டிக்கொடிருந்தாள். 

அவள் ஆண்டவரே ஆண்டவரே என்று வேண்டிக் கொண்டிருக்கையில் ஜேம்ஸ்ஸும் தன் பாவாடையை அவிழ்த்து ஆண்டவருக்கு விசுவாசமாக மாறியிருந்தான். சிறிது நேரத்தில் அவளின் வேண்டுதல் சத்தம் ஆ.. என்பதுடன் நின்றுவிட்டது. ஜேம்ஸ் அவள் வாயில் ஒட்டியிருக்கும் சாத்தானை விரட்ட ஆரம்பித்திருந்தான்.

சிறிது நேரம் வாயிலிருக்கும் சாத்தானை ஓட்டிய ஜேம்ஸ் அவளை அணைத்து தூக்கி கட்டிலில் சாய்ந்து அவள் உடலைப் பீடித்திருக்கும் சாத்தானை ஓட்ட ஆரம்பித்தான். அவள் "ஆ... ஆ... ஆண்டவரே" என்று சாத்தான் விரட்டப்படும் வேதனையில் அரற்றினாள். சிறிது நேரத்திலேயே ஜேம்ஸின் முயற்சி வெற்றி பெற்று ஜேம்ஸில் இருந்து சாத்தானை விரட்டும் புனித நீர் வெளியேறியது. அவன் எழுந்து விட்டான், அவளுக்கு ஏதோ இன்னும் வேண்டும் என்பது போல இருந்தது. "பாவமன்னிப்பு முடிஞ்சுதா ஃபாதர்? எனக்குள் இன்னும் சாத்தான் இருக்கிறது போல இருக்கு ஃபாதர் என்றாள்?" ஜேம்ஸிற்கு இன்னொருமுறை சாத்தானை விரட்டும் வீரியம் இல்லை. மிகவும் பலவீனமாக இருந்தான். 

அவளுக்கு இன்னும் சாத்தானை விரட்ட வேண்டும் என்றும், ஆடை அணிவதற்கு விருப்பமில்லாமலும் இருந்தது. ஆனால் வேறுவழியின்றி சாத்தானை விரட்டும் போது சிந்திய நீரை துடைத்துவிட்டு ஆடையை எடுத்து உடுத்தினாள். ஆடை உடுத்தியதும் சாத்தான் மீண்டும் முழுமையாக பீடித்ததாய் உணர்ந்தாள். அவளுக்கு ஜேம்ஸைப் பார்க்கவே பிடிக்கவில்லை, அவனைக் கேவலமான பார்வையுடன் கடந்து வெளியே வந்தாள். 

"ஆண்டவரே எனக்கு பெலத்தைக் குடும் ஆண்டவரே, ஆண்டவரே எனக்கு வீரியத்தை குடும் ஆண்டவரே" என்று ஜேம்ஸ் உள்ளே வேண்டியது வெளியே வந்த அவள் காதிலும் விழுந்தது. 

பொழுது சற்று சாய்ந்து விட்டது. வீதிகளை இருள் கவ்வியிருந்தது. வெளியே சற்று தூரத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் நின்றான். ஆஜானுபாகுவான தோற்றம், தோளில் காவித்துண்டு, நெற்றி நிறைய பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை என்று அவனைப் பார்க்கும் போதே அவளுக்கு ஏதோ செய்தது. அவள் உடல் குறுகுறுத்தது, ஜேம்ஸால் விரட்ட முடியாத சாத்தானை இவனால் விரட்ட முடியும் என்று முழுமையாக நம்பினாள், நேரே சென்று அவனிடம் கேட்டுவிடலாமா என்று சிந்தித்தாள். அவனது தோற்றம் இவளின் விருப்பத்திற்கு இணங்கமாட்டான் என்றே அவளுக்கு தோன்றியது. ஆனாலும் கேட்டுவிடவேண்டும் என்று ஆசை தூண்டியது. அவளுக்கு எதுவுமே புரியவில்லை. சுற்றிச் சுற்றி பார்த்தாள், "என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை (யோவேல் 2:26)" என்ற சுவற்றில் எழுதியிருந்த வாசகம் அவளுக்கு புதிய சிந்தனையைப் பாய்ச்சியது. தயக்கத்தை விட்டு அந்த இளைஞனை நோக்கி நடக்கலானாள்.

குறிப்பு:

1. சூரியன் சந்திரன் முதலான வான தேவதைகளையோ, வேறு தெய்வங்களையோ வணங்கினால் அவர்களை கொல் என்று சொல்கிறது பைபிள் உபாகமம் அத்தியாயம் 17

2. ஆடை உடுத்துவது ஆண்டவரின் படைப்பிற்கு விரோதமானது என்றும், சாத்தானின் தூண்டுதலால் மனிதர்களுக்கு உண்டான பழக்கமே ஆடை உடுத்துவது என்றும் சொல்கிறது பைபிள் ஆதியாகமம் அத்தியாயம் 3

கிறிஸ்தவ பைபிளின் படி இந்துக்கள் அனைவரும் கொல்லப்படவேண்டியவர்கள். தைப்பொங்கல் கொண்டாடினால் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.

அதனால்தான் சொல்கிறோம் இந்து மட்டுமே தமிழன் என்று.



Tuesday, 18 October 2022

கிறிஸ்தவர்களை கொன்ற சங்கிலிய மன்னர்

எது நடந்துவிடக் கூடாது என்று சங்கிலியர் பயந்தாரோ அது கண்முன்னே நடக்க போகிறது என்று நினைக்கையில் கோபம் கனலாக கக்கியது. மன்னாரில் கிறிஸ்தவ மதவிசாரணை நடவடிக்கைக்காக கோவாவில் இருந்து குழு ஒன்று வருகிறது என்றும், அதற்கான பலநூறு உள்ளூர் செயற்பாட்டாளர்களை மன்னாரில் ஒன்று கூட்டுகிறார்கள் என்பதுமே அவரின் கோபத்திற்கு காரணம். அதைவிட மாந்தை பற்று சங்குநாத மணியம், பூதத்தம்பிமுதலி, சோதிமுதலி என்று பலர் கடந்த சில நாட்களுக்குள் மர்மமாக கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் சங்கிலியரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள். அவரின் மனச்சாட்சியாக இருந்து செயலாற்றுபவர்கள். உளவுத்துறை தலைவர் கொண்டுவந்த செய்திகளின் பின் சங்கிலியரால் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. "உடனே புறப்படுவதற்கு தயார்ப்படுத்துங்கள்" என்று கட்டளை இட்டார். அவரது கட்டளைகளில் அப்படி ஒரு இறுக்கம். மந்திரிகள் தளபதிகள் என்று அனைவரும் பரபரப்பாக வேலை செய்தனர்.

படகுகள் பாதைகள் என்பவற்றை தயார் செய்யும் பொறுப்பு வீரமாப்பாணனிடமும், படைகளைத் ஒழுங்கு செய்யும் பொறுப்பு தளபதி இமையாணனிடமும் கொடுக்கப்பட்டது. இம்முறை எச்சரிக்கை மட்டும் கிடையாது தண்டனை வழங்குவதே சரி என்று சங்கிலியாருக்குப் பட்டது. 

மாறியது மாறியதாகவே இருக்கட்டும், உங்கள் மத்ததை நீங்கள் பின்பற்றுங்கள், ஆனால் அடுத்தவர்களை நிர்ப்பந்தம் செய்து மதமாற்றாதீர்கள் என்று ஏற்கெனவே பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை செய்தாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மன்னாருக்கு நேரடியாக சென்று நிர்ப்பந்த மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டித்தும், மன்னார் கிறிஸ்தவ பாதிரி செபஸ்டியை எச்சரிக்கை செய்துவிட்டும் வந்திருந்தார் சங்கிலியர். அந்த எச்சரிக்கையோடு தூத்துக்குடிக்கு போனவன்தான் பாதிரி செபஸ்டி, அதன்பின் இன்னமும் மன்னாருக்கு திரும்பி வரவில்லை. 

அவன் இங்கிருந்து தப்பித்து ஓடிப்போனதில் இருந்து எப்படியாவது யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்தது தமிழர்களின் இராச்சியத்தினை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அலைந்தான் சவேரியன். சவேரியனால் அனுப்பப்பட்டு வந்தவன்தான் இந்த செபஷ்டி. அதனால்தான் செபஷ்டி மதமாற்ற முடியாமல் திரும்பி போனதில் இருந்து சவேரியன் வெறிப்பிடித்து அலைந்தான். கோவா சென்ற சவேரியன் போர்த்துக்கேய தளபதிகள், ஆளுனர் என்று பலரையும் சந்தித்தான். எப்படியாவது யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்தது தமிழர்களின் இராச்சியத்தினை அழித்தே தீரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். அங்கிருந்தே போர்த்துக்கேய அரசருக்கும் படையெடுப்பு செய்ய வேண்டி கடிதம் அனுப்பினான். இப்படி எல்லா வழிகளிலும் தமிழர் அரசை அழிக்க வேண்டும் என்று ஆலாய் பறந்துகொண்டிருந்தான் பாதிரி சவேரியன்.

இலங்கையின் எல்லா கரையோர இராச்சியங்களும் கிறிஸ்தவ பறங்கியர்களின் வசமாகிவிட்டது. ஆனால் யாழ்ப்பாண இராச்சியத்தை மட்டும் இதுவரை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் இங்கே மதமாற்றம் செய்ய முடியவில்லை. மதமாற்றம் செய்யாமல் அவர்களால் போரில் வெல்ல முடியாது.

ஆம், கிறிஸ்தவர்களின் போர் யுத்திகளில் முதன்மையானது அதுதான், முதலில் மதமாற்றம் என்ற பெயரில் தமக்குச் சார்பாக புதிய இன குழுமம் ஒன்றை உருவாக்குவார்கள். அவ்வாறு உருவாகும் புதிய இனக்குழு அவர்களின் துணையாக, அவர்களோடு சேர்ந்து நின்று யுத்தம் செய்யும் படையாக மாறிவிடும். ஒரு நாட்டு மக்களில் இருந்து புதிதாக உருவான இனக்குழுக்களை கொண்டே, அந்த நாட்டினைப் போரில் வெல்வது தான் கிறிஸ்தவ பறங்கியர்களின் யுத்த முறையாக இருந்தது. அது யுத்த வெற்றியின் பின் நிர்வாகம் செய்வதற்கும் அவர்களுக்கு இலகுவாக அமைந்தது. தம் சொந்த நாட்டுக்கு எதிராக தம் பூர்வீக இனத்திற்கு எதிராக அன்னியர்களுடன் சேர்ந்து நிற்கும் அதிபயங்கரத்தை மதம்மாறியவர்கள் செய்வார்கள்.

இப்போது கிறிஸ்தவர்கள் செய்ய தயாராகும் மதவிசாரணை என்பது மிகவும் கொடூரமானது. இதில் எத்தனை தமிழர்கள் உயிர் பிழைப்பார்கள் என்பதே சந்தேகம். அதற்கு முன் யவன நாடுகளில் நடத்தப்பட்ட மத விசாரணைகளில் பலலட்சம் ஆண்கள் கொல்லப்பட்டதையும், பலலட்சம் பெண்கள் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் அடிமைகளாக்கப்பட்டதையும், கொல்லப்பட்டதையும் சங்கிலியர் அறிந்திருக்கிறார். அந்த கொடூரம் எம் தமிழ் மண்ணில் நடந்துவிடக்கூடாது என்பதே சங்கிலியரின் பதற்றத்திற்கு காரணம். அதனால்தான் அவர் ஆரம்பம் முதலே மதமாற்றத்தை எதிர்த்தும் கிறிஸ்தவ விபாரிகளை கட்டுப்படுத்தியும் வந்தார். 

படைகள், படகுகள், பாதைகள் என்று அனைத்தும் தயார் நிலையில் இருந்தது, இது ஒரு போர்ப்பயணம் போலவே இருந்தது. வீரமாகாளி கோயிலில் படையல் போட்டு இரவுப் பூசைகள் நடைபெற்றது. அதிகாலையில் படைகள் அனைத்தும் நல்லூரில் கூடி "வெற்றிவேல் வீரவேல்" என்ற முழக்கத்துடன் புறப்பட்டன. கொழுப்புத் துறையில் இருந்து புறப்பட்டு மாந்தை துறைக்கு கடல்வழி பயணிப்பது என்றும் அங்கிருந்து ஏனைய இடங்களுக்கு தரைவழியில் பயணிப்பது என்றும் முடிவானது.

படைகள் அனைத்தும் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் மாதோட்ட துறையை அடைந்தன. மன்னர் படையுடன் வரும் தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தால் மாதோட்டத்து அதிகாரிகள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சங்கிலியர் உள்ளூர் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

திருட்டு, விபச்சாரம் என்று ஒழுக்கமற்ற வாழ்வை வாழ்ந்தவர்கள் பலர் அவர்களுடன் சேர்ந்து நிற்பதாகவும், ஏனையவர்களை மதம்மாற அவர்களே நிர்ப்பந்தம் செய்வதாகவும் கூறினார்கள். தீவுக்குள் அவர்கள் பலமடைந்து இருப்பதையும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் தம்மையே எதிர்த்து செயற்படுவதாகவும், மணியமும் முதலிகளும் அவர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்கள். இவற்றை கேட்க கேட்க சங்கிலியரின் மனம் கொதித்தது. அப்பகுதி ஒற்றர் தலைவன் கிறிஸ்தவ படைகளின் பலத்தையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் விவரித்தான். படகுத் துறைக்கு அருகிலேயே தூத்துக்குடியில் இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்தும் வந்தவர்கள் பலர் முகாமிட்டு இருப்பதாகவும், மதம்மாறிய பலர் தோட்ட வெளியில் குடும்பம் குடும்பமாக இருப்பதாகவும் அவர்கள் தான் உள்ளூரில் வந்து தமிழர்களை மதம்மாற நிர்ப்பந்தம் செய்வதாகவும், மதம் மாற்றுவதற்கு தடையாக இருக்கும் அதிகாரிகள், கிராம தலைவர்களை கொல்வதாகவும் கூறினான். உள்ளூரில் பெண்கள் பலர் காணாமல் போயுள்ளதாகவும், ஆண்கள் மர்மமான முறையில் இறக்க பின்னர் பெண்களும் குழந்தைகளும் மதமாற்றம் செய்யப்பட்டு தோட்ட வெளியில் குடியமர்த்த பட்டுள்ளதாகவும் என்று ஒற்றர் தலைவனின் விவரிப்பு நீண்டுகொண்டே சென்றது.

சங்கிலியர் சினங்கொண்டு எழுந்தார், நாளைவரை காத்திருக்க வேண்டுமா? இல்லை இன்றே தமிழினத்தை காக்கப் போகிறோமா என்று கர்ச்சித்தார். வீரமாப்பாணனும் இமையாணனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இனங்காக்க புறப்பட்டவர்களுக்கு பயணம் சோர்வல்ல மன்னா, இன்றே செய்வோம் என்றான் இமையானன். வீரமாப்பாணன் மறுத்தான், இன்னும் சிறிது நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும், எதிரிகள் தப்பிக்க இரவு வாய்ப்பாகிவிடும், ஒருவர்கூட தப்பிக்க கூடாது, காலைவரை காத்திருப்போம் என்றான். சங்கிலியருக்கும் அது சரியாகவே பட்டது.

பொழுது சாய்ந்தது, உணவை உண்டுவிட்டு நான்கு பக்கங்களிலும் காவலுக்கு சிப்பாய்களை நிறுத்திவிட்டு ஏனைய படைகள் கூடாரங்களில் சென்று தூங்கிவிட்டார்கள். கண்களை மூடினாலும் சங்கிலியருக்கு தூக்கமே வரவில்லை. விடிய விடிய விழித்திருந்தார். மதமாற்றம் என்ற பெயரில் தமிழினத்தை அழிக்க துடிக்கும் கிறிஸ்தவர்களை நினைக்க நினைக்க ஆத்திரம் அனலாய் கொதித்தது.

சங்கிலியர் படையுடன் வந்த செய்தி அங்கிருந்த கிறிஸ்தவ கூட்டத்திற்கும் சென்றுவிட்டது. பாதிரி செபஸ்டி பயத்தில் தப்பித்து ஓடிப்போன பின்னர் ஆன்டனி, ஜேம்ஸ் என்ற இரண்டு பாதிரிகளை போர்த்துக்கேய சவேரியன் அனுப்பியிருந்தான். அவர்கள் தான் இந்த உள்ளூர் குழுக்களையும், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் இருந்து வந்தவர்களையும் வழிநடத்துவது. இரவோடு இரவாக தமது குழுக்களை அழைத்த பாதிரிகள் சங்கிலியன் படையோடு வந்து முகாமிட்டிருப்பதையும், அவர்களை விடியுமுன்னர் சென்று தாக்கவேண்டும் என்று தயார்ப்படுத்திவிட்டு இரவோடு இரவாக படகில் ஏறி தப்பித்து போய்விட்டார்கள். 

பாதிரிகளின் பேச்சைக் கேட்டு சங்கிலியரின் படைகளைத் தாக்குவதற்காக ஆயுதங்களுடன் புறப்பட்டன அந்தக கிறிஸ்தவ குழுக்கள். ஆனால் தூக்கம் இன்றி விழித்திருந்த சங்கிலியர் அதற்கு முன்பே எழுந்து படைகளைத் தயார்படுத்தி எதிரிகளைத் தேடிச் செல்ல தயாரானார். ஆனால் தமிழர் படைகளுக்கு தேடிச் செல்லும் வேலை இருக்கவில்லை. காவலுக்கு நின்ற படைவீரர்கள் எதிரிகள் வருவதைக் கண்டு எச்சரிக்கை செய்தார்கள். தமிழர் படைகள் துரித கதியில் செயற்பட்டு கிறிஸ்தவ கூட்டத்தினை வெட்டிச் சாய்த்து வீழ்த்தினார்கள். உயிர் பயத்தில் தப்பித்து ஓடியவர்களை துரத்திச் சென்று தலைகளை வெட்டி வீசினார்கள். 

சங்கிலியர் கர்ஜித்தார் இது முடிவல்ல, மதம் மாறி இனத்தை அழிக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். மதம்மாறியவர்கள் மதம் மாற நிர்ப்பந்தம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் வரலாற்றில் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவோம் என்று கட்டளை இட்டார். படைகள் நாலாபுறமும் விரைந்து சென்று இனத்துரோகிகளைக் கைது செய்தன. மன்னர் கைது செய்த அனைவரையும் அவர்கள் எங்கிருந்து தமிழினத்தை அழிக்க முற்பட்டார்களோ அந்த இடத்திற்கே கொண்டுவாருங்கள் என்று கட்டளை இட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் தோட்ட வெளிக்கு கொண்டு வரப்பட்டனர்.

சங்கிலியருக்கு அவர்களைப் பார்க்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. "இனத்துரோகிளே.. தேசத் துரோகிகளே.. நீங்கள் மனிதர்களா மிருகங்களா? உங்களுக்கு எத்தனை முறைதான் உயிர்ப்பிச்சை இடுவது. எதற்காக நாய் போல் எவன் எதைத் தந்தாலும் அவன் பின்னால் அலைந்து திரிகிறீர்கள்? உழைத்து சாப்பிட முடியாமல் அரிசிக்கும் பருப்பிற்கும் இனத்தை விற்கும் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமா? உடலை விற்கும் விபச்சாரிகளை விட இனத்தை விற்கும் நீங்கள் அசிங்கமான பிறவிகள். எமது இனத்தை எமது இராச்சியத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அன்னியன் வீசும் எலும்பை நங்கிப் பிழைக்கும் நாய்கள் நீங்கள். உங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை வரலாறு முழுவதும் பேசப்படும். மதமாற்றம் என்ற பெயரில் இனத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இது முன்மாதிரியாக இருக்கும்" என்று உறுமினார்.

மாதோட்ட ஒற்றர் தலைவனை அழைத்து கட்டாய படுத்தி கடத்தி வரப்பட்ட அபலைப் பெண்களை, சிறுவர்களை தனியாக வேறுபடுத்தினார். இன்றிலிருந்து உங்களுக்கு விடுதலை, இனி நீங்கள் இந்த அசிங்கமான அடையாளங்களை சுமக்க வேண்டியதில்லை, உங்கள் வீடுகளுக்கு சென்று யாரெல்லாம் பழையபடி தமிழர்களாக ஒழுக்கமான வாழ்வை வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அந்த அபலைகள் அனைவரும் நாங்கள் விரும்பி ஏற்கவில்லை மன்னா, எங்களை இந்த அசிங்கத்தில் தள்ளிவிட்டார்கள், இதை இனி எப்படிப் போக்குவோம் மன்னா என்று அழுதார்கள். "இது அசிங்கம் என்று உணர்ந்த இந்த கணமே நீங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். பாலாவியில் மூழ்கி எழுந்து தமிழர்களாய் வாழுங்கள்" என்று விட்டு மற்றவர்கள் பக்கம் திரும்பினார். 

அவர்களுக்கு கிடைக்க போகும் தண்டனை புரிந்து விட்டது. மன்னா எங்களையும் மன்னித்து விடுங்கள், இனி இவ்வாறு தவறுசெய்ய மாட்டோம். நாம் செய்தது மிகப்பெரிய அசிங்கம். இனி நாங்கள் ஒழுக்கமாக வாழ்வோம் என்று கதறினார்கள். ஆனால் மன்னர் அந்த கதறல்களை காதில் வாங்குவதாக இல்லை. மன்னர் படையினரை நோக்கி இவர்கள் அனைவரையும் சிரைச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். வீரமாப்பாணரும் இமையானனும்கூட ஒரு கணம் திகைத்து நின்றனர். அனைவருக்கும் சிரைச் சேதமா என்று? அவர்கள் முகக்குறிப்பை உணர்ந்த மன்னர் மீண்டும் அழுத்தமாக சொன்னார், "இனத்தை மதத்தை விற்று வயிற்றை வளர்ப்பவர்கள் யாரும் இந்த தேசத்தில் இருக்க முடியாது, அனைவர் தலைகளையும் கொய்து விடுங்கள்" என்றார்.

இனத் துரோகிகளின் அவலக்குரல் வானைப் பிளந்தது, இமையானன் தலையை அசைத்தான் இரத்த வெள்ளத்தில் நனைந்தது தோட்டவெளி. அந்த மண்ணைப் பிடித்திருந்த அசிங்கம் இரத்தத்தால் கழுவப்பட்டது. மதமாற்றம் செய்து இனத்தை அழிப்பவர்கள் வரலாறு முழுவதும் இதை மனதில் வைத்திருப்பார்கள், இப்படி ஒரு நிலை தோன்றும் போது சங்கிலியர்களும் தோன்றுவார்கள் எற்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்ற திருப்தியுடன் நல்லூரை நோக்கி புறப்பட்டார் சங்கிலியர்.


சங்கிலிய மன்னரின் வரலாற்று குறிப்புகள்:

முதலாம் சங்கிலி மன்னர், சங்கிலிய பண்டாரம், ஏழாம் செகராசசேகரன் என்னும் மூன்றுமே அவரைக் குறிக்கும் பெயர்களே.

1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாணம் நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆண்டவர்.

ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரையில் சிங்கைப் பரராசசேகரனின் பின்பு சங்கிலிய மன்னர் அரியணையில் அமர்ந்தார்.

 அன்றைய யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் கிழக்கில் திருகோணமலை, மேற்கில் புத்தளம் வரை ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

மன்னாரில் கிறிஸ்தவ மதமாற்றிகள், மதவிசாரணைக்காக தயார்ப்படுத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்ட வருடம் 1544 ஆம் ஆண்டாகும்.

1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற செய்த படையெடுப்பை சங்கிலியர் முறியடித்தார்.

பலமுறை படையெடுப்பு செய்து தோற்ற கிறிஸ்தவர்கள் இறுதியாக 1560 இல் இரகசிய படையெடுப்பு ஒன்றைச் செய்து நல்லூரைக் கைப்பற்றினர். அப்போது சங்கிலியர் கோப்பாய்க்கு பின்வாங்கி பின் வன்னிப் பகுதிக்கு பின்வாங்கி சென்றார்.

அதன்பின்னர் சங்கிலியரைத் தேடிச் சென்ற கிறிஸ்தவ படைகள் பலர் நோயாலும், பசியாலும் வன்னிக்குள் மாள கடலில் ஒரு தொகுதி படை நல்லூரில் ஒரு தொகுதி படை என்று கிறிஸ்தவ படைகள் மூன்று நிலைகளில் சிதறி இருப்பதை சங்கிலியர் அறிந்தார். அந்த நேரத்தில் மக்கள் கிளர்ச்சியை உண்டுபண்ணி உள்ளிருந்து தாக்குதல் நடத்தி கிறிஸ்தவ படைகளை கொன்றும், விரட்டியும் மீண்டும் யாழ்ப்பாண இராச்சியத்தினை மீட்டார்.

1561 இல் புவிராஜ பண்டாரத்திடம் ஆட்சியை வழங்கிவிட்டு ஆட்சியில் இருந்து ஓய்வுபெற்றார். 

1565 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஷஷ்டி திதியில் நல்லூரில் சிவபதம் அடைந்தார்.



Tuesday, 30 August 2022

விநாயகர் பிறந்தநாள் இதுதானா?

இன்று ஆவணி மாத சதுர்த்தி திதி. கணநாதன் பிறந்த நன்நாள் என்பது இந்துக்கள் நம்பிக்கை. 

கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்று சொல்லும் இந்துக்கள் எதற்காக தாம் வழிபடும் விநாயக கடவுளுக்கு பிறந்ததாக கூறி எதற்காக விழா எடுக்கின்றனர்? விநாயகர் பிறந்தநாள் இதுதானா?

முதலில் இந்துக்கள் கூறும் விநாயகர் அல்லது கணநாதன் என்பவர் யாரென்று பார்ப்போம். இந்த அண்டப்பிரம்மாண்டம் தோன்றுவதற்கு முன்பு சிவம் என்ற கடவுளின் முழுமையான இருப்பும், உயிர்களும், மாயமூலங்களும் மட்டுமே இருந்ததாக சித்தாந்தம் விளக்கும். இவ்வாறு முதலில் இருந்த முழுமையான இருப்பில் உண்டான தற்தூண்டலால் சிவசக்தி வெளிப்பட்டது என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

இங்கு சிவம் என்பது முதன்மையானது, சிவசக்தி வெளிப்பட காரணமான தற்தூண்டல்(சிவநாதம்) என்பது இரண்டாவதாக நிற்கிறது. இந்த தற்தூண்டலால் வெளிப்பட்ட சக்தியின் வெளிப்பாட்டால் இந்த அண்டங்கள் தோன்றுவதற்கு தேவையான பஞ்சபூத மூலங்கள் தோன்றியது. அதனால் சக்தி என்பது மூன்றாவதாக நிற்கிறது. இந்த அண்டங்கள் அனைத்தும் பூத மூலங்களாய் (பஞ்ச பூத மூலங்கள்) தோன்றி நின்றபோது அவை செயற்படுவதற்கும், அவை உருவாக தோன்றிநிற்பதற்கும் காரணமாக தோன்றியதே இந்த நாத தூண்டல். இந்த நாதமே பஞ்சபூத கணங்களால் ஆன அனைத்தினது இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. இப்படி கணங்களில் தூண்டலாக இருக்கும் நாதமானது நான்காவதாக நிற்கிறது.

கடவுளின் நிலையில் நான்காவது வெளிப்பாடு என்பதை குறிப்பதாகவே ஒவ்வொரு மாதமும் நான்காவது நாள் கணநாதனுக்கு உரியதாக சிறப்பிக்கப்படுகிறது. 

இந்த அண்டம் முழுவதும் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் இந்த நாதமே காரணமானது. பொருள் இருந்தும், ஆற்றல் இருந்தும் தூண்டல் என்ற ஒன்று இல்லை என்றால் எந்தச் செயலுமே நடக்காது. அதனால்தான் இந்த நாத தூண்டலை செயல்களின் தலைவன் என்று சொல்லி; விநாயகன் என்று போற்றுகின்றனர் எம் இந்துக்கள்.

எந்தவொரு செயலும் சிறப்பாகவும் சரியாகவும் நடைபெற்று முடிய செயற்தூண்டல் சரியானதாக இருக்க வேண்டும். அதனால்தான் செயல்கள் அனைத்தும் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்படுகிறது.

வினாயகரை வழிபட்டு, நற்தூண்டல் பெற்று, நற்செயல்கள் பலபுரிந்து இந்த உலகத்தினதும், அவரவர் ஆன்மாவினதும் நன்மைக்காக பாடுபட அனைவருக்கும் எம் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...