Tuesday 8 March 2022

ருத்திரர்கள் வேறு- சிவன் வேறு

வேதங்கள் போற்றும் ருத்திரன், சைவத்தின் ஏக இறைவன் சிவன் இரண்டும் ஒன்றா? வேறா? உண்மை என்ன?

இப்போது மிசநரி சைவர்களின் பித்தலாட்ட பிரச்சாரத்தால் உங்களுக்கு எனக்கு என்று அனைவருக்கும் இந்த கேள்வி தோன்றுவது இயல்பாகிப் போனது.

இதற்கு காலம்-காலங்கள், காற்று-காற்றுகள், பூதம்-பூதங்கள் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை உணரவேண்டும். மேலோட்டமாக பார்த்தால் இவை ஒருமை பன்மை என்ற அளவிலேயே தோன்றும். ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்கும் இடையே பொருள் வேறுபாடும் உள்ளது.

காலம் என்பது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பிருந்தே அனாதியான காலம் முதல் இருப்பது. இந்த பிரபஞ்சம் அழிந்த பின்பும் முடிவிலியாக தொடர்வது. ஆனால் காலங்கள் என்பதில் வசந்தகாலம், மாரிகாலம், இளவேனிற்காலம் என்று பௌதீக காலநிலை மாற்றங்களையும், நல்லகாலம், கூடாதகாலம், கெடுகாலம், என்று தன்மை மாற்றத்தை குறிக்கவும் பயன்படும்.

இதுபோன்றே காற்று பூதம் என்ற சொற்களும் காற்றுக்கள் பூதங்கள் என்ற சொற்களும் பொருள் வேறுபாடு மிக்கன. பூதம் என்ற சொல் வழக்கத்தில் பேய் பிசாசு என்பவற்றை போன்ற அமானுஷ்ய விசயமாகவும் கூட குறிக்கப்படுகிறது. இந்த அமானுஷ்ய பூதத்தையும், பஞ்ச பூதங்கள் என்ற பௌதீக பூதங்களையும் ஒன்றாக கருத முடியாது அல்லவா, அதுபோல் வார்த்தைகள் ஒன்றெனினும் இடம் சூழல் என்பவற்றை பொறுத்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

அவ்வாறே இந்த வேதங்கள் குறிப்பிடும் ருத்திரன் என்பதும், ருத்திரர்கள் என்பதும். சைவம் என்ற கோட்பாட்டில் எவ்வாறான தத்துவத்தில் சிவன் என்பது குறிப்பிடப்படுகிறதோ அதே பொருளில்தான் வேதங்களும் ருத்திரன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் வேதங்கள் ருத்திரர்கள் என்று சொல்லி குறிப்பிடும் இடங்களில் அதன் பொருள் வேறுபடுகிறது. சிவத்துவக்கும் சீவனுககும் சீவாதாரங்கள் என்பவற்றுக்கும் உள்ள பொருள் வேறுபாடும் ருத்திரன் ருத்திரர்கள் என்பவற்றுக்கும் உள்ள வேறுபாடும் ஒன்றாகவே உள்ளது. 

காலம் காலங்கள் என்பவற்றின் பொருள் வேறுபட்டாலும் காலங்களின் ஒருமையை காலம் என்றுதானே குறிப்பிட வேண்டும். அதுபோல் ருத்திரர்கள் என்பவற்றின் ஒருமையை ருத்திரன் என்றே பல இடங்களில் வேதம் குறிப்பிடுகிறது. இந்த குழப்பத்தை நீக்க சிவனை மகா ருத்திரன் என்று குறிப்பிடும் வழக்கமும் முன்பே இருந்ததுதான். 

எனவே வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாதிரிகளின் மூளைச்சலவையில் இயங்கும் மிசநரி சைவர்களின் பிதற்றல்களை தூக்கி ஓரமாய் வைத்துவிடுங்கள். 

சிவம் என்பதும் ருத்திரன் என்பதும் ஒன்றுதான்.சீவன்கள் என்பதும் ருத்திரர்கள் என்பதும் ஒன்றுதான். ஆனால் சிவனும் சீவன்களும் ஒன்றல்ல, ருத்திரனும் ருத்திரர்களும் ஒன்றல்ல, இதுதானே சைவ கோட்பாடு. முப்பொருள் உண்மை சொல்வது அதைத்தானே?

சிவனையும் ருத்திரர்களையும் அதாவது சீவன்களையும் ஒப்பிட்டுக்காட்டி, வேகத்தில் உள்ள ருத்திரன் வேறு சைவத்தில் சொல்லும் சிவன் வேறு என்று உருட்டுவது, நாளை உங்களை முட்டிபோட வைத்து பின் உருட்டுவதற்காக அன்றி வேறில்லை.

உண்மையான இந்துக்களால், சைவ கோட்பாட்டை அறிந்தவர்களால் இதை புரிந்து கொள்ள முடியும்.



No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...