Saturday, 28 May 2022

இறுதி யுத்த காலத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை- உண்மை என்ன?

இலங்கையின் இறுதிப்போரில் எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள் என்று பலரும் தங்கள் கற்பனைக்கும், விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்றதுபோல் தரவுகளை வெளியிட்டபடி இருக்கிறார்கள். இதுவரையில் உண்மையான தகவலை யாரும் அறியக்கூட விரும்பவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

இறுதி யுத்த காலத்தில் புலிகளும், புலிகளுக்கு சார்பான இணைய ஊடகங்களும் மக்களின் இழப்புக்கள் பற்றிய செய்திகளை மிகப்படுத்தியே வெளியிட்டு வந்தது. அந்த மிகைப்படுத்தல் எண்ணிக்கை உண்மை அளவின் மடங்குகளாகக்கூட இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மக்கள் இழப்பு அதிகமாகும் போது சர்வதேசம் தலையீடு செய்யும், யுத்தத்தை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் பலரும் அதைப் பகிர்ந்தும் பரப்பியும் வந்தனர். 

அவ்வாறு புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்ட பொதுமக்கள் தொடர்பான இறப்பு பற்றிய தகவல்களே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை உண்மை என்று ஏற்றுக்கொண்டு இறுதி யுத்த கால மக்கள் இறப்பு பற்றிய மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் 8430 என்ற அளவிலேயே மக்களின் இறப்பு எண்ணிக்கை வருகிறது. இந்த எண்ணிக்கை என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் இறப்பு என்பதாகவே கணக்கிடப்படுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றபோது புலிகளால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தே இந்த எண்ணிக்கை வருகிறது. அந்த காலப்பகுதியில் காயமடைந்தவர்களை படுகாயம் அடைந்தனர் என்ற வகைப்படுத்தலில் எடுத்துக் கொண்டாலும் 9464 என்ற எண்ணிக்கையிலேயே படுகாயமடைந்தவர்கள் வருகின்றனர்.

ஒரு யுத்த களத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஐம்பது சதவீதம் பேர் இறந்தார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் 13500 பேர் என்ற அளவிலேயே இறப்பு எண்ணிக்கை வருகிறது. அதுபோல் மே 17 அன்று புலிகள் ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியதாக அறிவித்ததன் பின்னர் அரசபடைகளும் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் மே 17, 18 தேதிகளில் மக்கள் இறக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் புலிகள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியதாக அறிவித்த அன்று 3000 அளவிலான பொதுமக்கள் இறந்தார்கள் என்று புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவற்றையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் இறுதி யுத்த காலத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 16500 என்பதாகவே அமையும்.

யுத்தம் நடந்தது கொண்டிருந்த போது பொதுமக்கள் இழப்புகளை அதிகரித்துக் காட்டி யுத்தத்தை நிறுத்த முயன்றதுகூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ள கூடியதே. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்தப் பொய்களை திரும்பத் திரும்ப கூறவேண்டுமா? வரலாற்றின் சுவற்றில் சரியான பதிவுகளை மாத்திரம் விட்டுச் செல்ல வேண்டியது எம் தார்மீகக் கடமை அல்லவா?

தமிழர்கள் பொய்யர்கள், பித்தலாட்டம் செய்பவர்கள் என்ற அவப்பெயர் எம் தலைமுறையுடன் முடிந்து போகட்டும். நாளைய தலைமுறையை நாணயம் உள்ளவர்களாக மாற்றுவோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் 2009.01.01 தொடக்கம் 2009.05.15 வரையில் புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்ட செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும்.

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த செய்திகளின் படி பொதுமக்களின் இழப்பு அண்ணளவாக 120 வரையிலேயே பதிவாகியுள்ளது.

2009/01/01 இறப்பு - 6 படுகாயம்-28
2009/01/08 இறப்பு- 03
2009/01/20 இறப்பு- 17 படுகாயம்-51
2009/01/22 இறப்பு- 22 படுகாயம்-106
2009/01/23 இறப்பு- 05 படுகாயம்-83
2009/01/26 இறப்பு-300 படுகாயம் -700
2009/01/31 இறப்பு- 50 படுகாயம்-169
2009/02/01 இறப்பு-06
2009/02/02 இறப்பு-09
2009/02/03 இறப்பு-52
2009/02/06 இறப்பு-61
2009/02/07 இறப்பு-65 படுகாயம்-226
2009/02/08 இறப்பு-80 படுகாயம்-200
2009/02/09 இறப்பு-36 படுகாயம்-76
2009/02/10 இறப்பு-22 படுகாயம்-87
2009/02/19 இறப்பு-47 படுகாயம்-126
2009/02/20 இறப்பு-17 படுகாயம்-43
2009/03/01 இறப்பு-37 படுகாயம்-65
2009/03/07 இறப்பு-208
2009/03/10 இறப்பு-203 படுகாயம்-100
2009/03/19 இறப்பு-38 படுகாயம்-90
2009/03/20 இறப்பு-49 படுகாயம்-47
2009/03/21 இறப்பு-48 படுகாயம்-46
2009/03/24 இறப்பு-101 படுகாயம்-125
2009/03/25 இறப்பு-112 படுகாயம்-210
2009/03/26 இறப்பு-26 படுகாயம்-96
2009/04/01 இறப்பு-39 படுகாயம்-57
2009/04/02 இறப்பு-25 படுகாயம்-56
2009/04/03 இறப்பு-41 படுகாயம்-41
2009/04/04 இறப்பு-29 படுகாயம்-31
2009/04/05 இறப்பு-92 படுகாயம்-153
2009/04/07 இறப்பு-31 படுகாயம்-75
2009/04/08 இறப்பு-129 படுகாயம்-282
2009/04/15 இறப்பு-219 படுகாயம்-408
2009/04/16 இறப்பு-36 படுகாயம்-43
2009/04/17 இறப்பு-102 படுகாயம்-156
2009/04/18 இறப்பு-169 படுகாயம்-234
2009/04/19 இறப்பு-178 படுகாயம்-344
2009/04/20 இறப்பு-1496 படுகாயம்-3333
2009/04/21 இறப்பு-473 படுகாயம்-722
2009/04/22 இறப்பு-324 படுகாயம்-423
2009/05/01 இறப்பு-172 படுகாயம்-289
2009/05/02 இறப்பு-64 படுகாயம்-87
2009/05/07 இறப்பு-162
2009/05/09 இறப்பு-1112
2009/05/12 இறப்பு-47 படுகாயம்-56
2009/05/14 இறப்பு-1700
2009/05/15 இறப்பு-150



2 comments:

  1. Direct & Indirect deaths by 6000 artilleris/year & plane bombing! 180 massacres / food & medicine embago! Disappeared! Rapes/ torture/ pogroms killings fake accidents poverty vaccines in Srilanka 1948-2024 about 500k??

    ReplyDelete

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...