(ஆதாம் ஏவாள் யார்? ஆண்டவர் மற்றும் அறிவு புகட்டிய நாகம் யார்? உண்மை கதை)
ஈடன் தோட்டத்திற்குள் அந்த தோட்டத்தின் ஆண்டை வருகிறார். அவர் வரும் சத்தம் கேட்டு ஆதாமும் ஏவாளும் பயிர் செடிகளுக்குள் மறைந்து கொள்கிறார்கள். ஆண்டைக்கு எதுவுமே புரியவில்லை. வழக்கத்திற்கு மாறாக ஏன் இன்று இந்த அடிமைகள் இரண்டும் மறைந்து கொள்கிறார்கள்.. யோசித்துக் கொண்டே சுற்றி வந்து பார்க்கிறார். ஆதாம் ஏவாள் என்று இரண்டு அடிமைகளும் இலை தளைகளை எடுத்து மறைத்துக் கொண்டு பயிர்கள் பின்னால் நெளிந்து கொண்டே நின்றன..
ஆண்டையின் ஈடன் தோட்டத்தில் முன்பு மூன்று நிர்வாணிகள். இப்போது அடிமைகள் இரண்டும் உடலை மறைத்து நிற்க ஆண்டை மட்டும் அந்த தோட்டத்தில் அம்மணமாக நின்றார்.
ஆண்டை தன் இச்சைகளை போக்குவதற்கு என்றே உண்டாக்கிய தோட்டம் இந்த ஈடன் தோட்டம். ஆண்டை கொஞ்சம் அந்த விடயத்தில் மனநோயாளி மாதிரி.. அவருக்கு பெண்களை விட ஆண்கள் மீதும் அதனை விட ஆடு மாடுகள் மீதும் சபலம் அதிகமாக இருந்தது. அதனால் தன் சபலத்தை தீர்ப்பதற்கு என்று ஆட்கள் யாரும் எளிதில் அணுக முடியாத ஒரு இடத்தில் தனக்கான தோட்டத்தை அமைத்திருந்தார். ஈடன் தோட்டத்தை உருவாக்கிய புதிதில் ஆதாம் என்பவனை மட்டுமே ஆண்டை தோட்டத்தில் வைத்திருந்தார். அவன் ஒரு பழங்குடி இன அடிமை. சிறிய வயதிலேயே அடிமையாக கொண்டு வரப்பட்டு தனியாகவே அந்த தோட்டத்தில் இருந்தால் அவனுக்கு அந்த தோட்டமே உலகம், அவனது ஆணடையே எல்லாமும் என்பதாக வாழ்ந்தான். அவனுக்கு அந்த தோட்டத்திற்கு வெளியே மக்கள் இருப்பதோ நாடுகள் உலகம் என்பது பற்றியோ எதுவும் தெரியாது. ஆண்டையோ அந்த தோட்டத்தில் வைத்து ஆதாமை மட்டுமல்லாமல் அங்கிருந்த ஆடு மாடுகள் முதல் எல்லாவற்றையும் தன் இச்சைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தி வந்தார்.
ஒருநாள் ஆண்டை தவறான முறைகளில் ஆதாமை பயன்படுத்தி தனது இச்சைகளை தீர்த்துக் கொண்டதால் ஆதாம் வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அவன் இடுப்பு வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டே தூங்கிவிட்டான். அவன் தூக்கத்தால் கண்விழித்து பார்த்த போது ஆண்டை ஒரு சிறுமியை அந்த தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். அவளும் வேறு ஒரு பழங்குடி இன அடிமைச் சிறுமியே. ஆனால் அவளுக்கு ஓரளவு அவளின் பழங்குடியின மொழி ஓரளவு பேச தெரிந்திருந்தது. ஆனால் அவள் மொழி இவர்களுக்கு தெரியாது.
கண்விழித்து பார்த்த ஆதாமுக்கு இடுப்பு வலி போகவில்லை. ஆண்டை அவ்வளவு காட்டுமிராண்டி தனமாக நடந்திருக்கிறார். அவனுக்கு வலிக்கு காரணம் கேட்பதா புதிதாக ஒன்று வந்து நிற்கிறதே அது என்ன என்று கேட்பதா என்ற குழப்பத்தில் இரண்டையும் சேர்த்தே கேட்டான். ஆண்டையே எனக்கு இடுப்பு வலி தாங்க முடியவில்லை என்ன செய்தீர்கள் இது என்ன புதிதாக ஒன்றை கூட்டி வந்திருக்கிறீர்கள் என்றான்.
ஆண்டைக்கு தான் நடந்து கொண்டது கொஞ்சம் அல்ல நிறையவே தவறாக போய்விட்டது தெரிந்தது. சரி என்ன இருந்தாலும் அடிமை தானே என்ன வந்தது என்று நினைத்துக்கொண்டே இவள் ஏவாள், உன் இடுப்பு எலும்பை எடுத்து இவளை உருவாக்கினேன். இவள் உனது ஒரு அங்கமாவாள் என்று கூறினார். இடுப்பு வலிக்கு காரணம் சொன்னதாகவும் போய்விட்டது புதிதாக கொண்டு வந்த அடிமையை அவனுக்கு புரியும் வகையில் சொன்னதாகவும் போய்விட்டது என்று ஆண்டை நினைத்துக் கொண்டார். ஆதாமுக்கு அவன் அறிந்து முதல் ஆண்டை சொல்வது மட்டுமே உண்மை வேறு எதுவும் தெரியாது. அதனையும் அப்படியே நம்பிவிட்டான். அவன்தான் அவன் அறிந்த காலத்தில் இருந்தே அடிமை அல்லவா. அவனால் எப்படி சிந்திக்க முடியும் கேள்வி கேட்க முடியும் அல்லது கேள்வி கேட்க தெரியும். அவன் முட்டாள் அடிமை என்பதால் அவனது இடுப்பு எலும்பை எடுத்து ஏவாளை ஆண்டை செய்ததாக கூறியதை அவ்வாறே நம்பினான். ஆனால் இவர்களின் உரையாடல் ஏவாளுக்கு புரியவில்லை. ஏனென்றால் அவள் வேறு ஒரு பழங்குடி இன அடிமை.
காலங்கள் கடந்து போனது. ஏவாள் இவர்களது மொழி சூழல் என்பவற்றுக்கு பழக்கமாகி தனது பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போயிருந்தாள். அவள் சிறுமியாக அடிமையாக வந்ததால் காலப்போக்கில் ஆண்டை ஆதாமின் இடுப்பு எலும்பில் இருந்து தன்னை உருவாக்கியதாக ஆண்டை தொடர்ந்து சொல்லி வந்த கதையை அவளும் உண்மை என்று நம்பிவிட்டாள். என்ன இருந்தாலும் அவளும் ஒரு அடிமை தானே? அதைவிட அவளும் சிறு வயதில் வந்ததால் பழைய நினைவுகள் எல்லாம் மறைந்து விட்டது.
இப்போது ஆதாம் ஏவாள் என்னும் ஈடன் தோட்டம் மட்டுமே உலகம் என்று நம்பிய அந்த இரண்டு அடிமைகளும், ஆண்டையே தங்களைப் படைத்ததாகவும் ஆண்டையே எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று என்றும் நம்பி இருந்தன. ஆண்டையோ தன் முறையற்ற இச்சைகளை தீர்ப்பதற்கு ஆதாம் ஏவாள் மற்றும் பண்ணை விலங்குகள் அனைத்தையும் பயன்படுத்தி வந்தார்.
ஆனால் காலம் வித்தியாசமானது. அது எல்லா கேள்விகளுக்கும் பதிலையும் எல்லா பூட்டுகளுக்கும் திறப்பையும் தன்னிடமே வைத்திருக்கும். தேவையான போது அவற்றை வெளிப்படுத்தி விடும். அதுபோலவே ஈடன் தோட்டத்தையே உலகம் என்றும் ஆண்டையே தங்களைப் படைத்தவர் என்றும் நம்பிய அந்த இரண்டு அடிமைகளுக்கும் அவ்வாறே ஒரு வாய்ப்பு கிடைத்தது.
உலகம் முழுவதும் நாகரிக சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒப்பற்ற நோக்கில் விவசாயம் நெசவு என்று அனைத்து தொழில்களையும் கண்டறிந்து போதிக்கும் நாகர் இனத்தின் பிரதிநிதி ஒருவர் அந்த தோட்டத்திற்கு வருகிறார். இந்த தோட்டத்தை வைத்திருக்கும் ஆண்டைக்கும் ஆவர் சமூகத்திற்கும் விவசாயத்தை கற்பித்த நாகர் இனத்தின் பிரதிநிதி அவர். அன்றைய காலத்தில் அவர்களால் அணுக முடியாத பகுதி என்று உலகில் எதுவும் கிடையாது. ஈடன் தோட்டத்தை வந்து பார்த்த நாகருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. உலகையே நாகரிகமாக மாற்ற நாம் முயற்சி செய்கிறோம் ஆனால் அவ்வாறு மாற்றத்திற்காக பயிற்றுவிக்கப்பட்ட ஒருவனது தோட்டத்தில் இரண்டு அடிமைகள் நிர்வாணமாக, எதுவுமே தெரியாத அறிவற்ற நிலையில்..
நாகரால் அந்த நிலையை சகித்துக்கொள்ள முடியவில்லை. பருவ வயதை அடைந்து விட்ட இளம்பெண்ணும் ஆடவனும் இந்த நிலையில் உள்ளதை மாற்ற முடிவு செய்தார். அவர்களை அழைத்து அவர்கள் நிர்வாணமாக இருப்பதையும் எதுவும் தெரியாதவாறு இந்த தோட்டத்தில் அடிமைகளாக இருப்பதையும் உணர்த்தி இலை தளைகளை எடுத்து ஆடையாக்கி உடுத்தவதற்கு கற்பித்தார். அந்த அடிமைகள் மனதில் அறிவுத்தீயை முதன் முதலில் பற்ற வைத்தார் அந்த நாகர். வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருந்ததால் அவர்களின் சிந்தனை திறன் செயல்திறன் என்பவை ஒரு வரையறைக்குள் இருந்தாலும் மாற்றத்திற்கான விதையை நாகர் விதைத்து விட்டார்.
ஈடன் தோட்டத்து அடிமைகள் முதன்முதலாக சிந்திக்க ஆரம்பித்தன. தம்மை நினைத்து வெட்கப்பட்டு கூனிக் குறுகி நின்றன. அவர்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதுவரை தவறான வழியில் ஆண்டையால் பயன்படுத்தப்பட்ட ஆதாமிடம் ஆண்மையும் ஏவாளிடம் பெண்மையும் முதன்முதலாக வெளிப்பட்டது. இவர்களுக்கு போதித்த நாகர் ஆண்டையின் உண்மை முகத்தை அறிவதற்காக அந்த தோட்டத்திலேயே ஓரிடத்தில் மறைந்து கொண்டார்.
இந்த நேரத்தில் தான் ஆண்டை தான் உடுத்தி வந்த ஆடைகளை ஈடன் தோட்டத்திற்கு வெளியே ஓரிடத்தில் கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக நுழைகிறார். அடிமைகள் இரண்டும் இலை தளைகளை எடுத்து ஆடையாக்கி உடுத்தி இருப்பதைப் பார்த்ததும் நாகர் இனத்தவர் யாரோ இந்த தோட்டத்திற்கு வந்து சென்றது புரிந்து விட்டது. ஆண்டை உடனேயே சூழ்சியாக பேசி அவர்களை வெளியே அழைக்கின்றார். என் படைப்பிற்கு மாறாக ஆடை உடுத்தி பெரும் சாபத்தை பெற்று விட்டீர்கள் என்று மிரட்டுகிறார்.
அந்த நாகரின் பேச்சைக் கேட்டு அறிவு பெற்றுவிட்டால் தன் இச்சைகளை தீர்ப்பதற்கு எங்கே போவது என்று பயந்த ஆண்டை சில சமரசங்களுடன் அங்கேயே தங்க வைக்க முயற்சி செய்கிறார். அந்த அடிமைகளுக்கு உண்மையைச் சொல்லி அறிவு கண்ணை திறந்த நாகரை தீய சக்தி சாத்தான் என்று கூறி நம்ப வைக்கிறார்.
என்னதான் இருந்தாலும் ஆதாம் ஏவாள் இரண்டுமே அவை அறிந்தது முதல் ஆண்டையின் அடிமைகள் தானே.. அதனால் ஆண்டை சொன்னதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நாகர் விதைத்து சென்ற அறிவு வளர்ச்சியையும் ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியவில்லை. ஒரு சிலமணி நேரங்கள் வந்து சென்ற நாகரின் அறிவு மாற்றத்தைவிட பிறந்தது முதல் அறியாமையில் அடிமையாக வைத்திருந்த ஆண்டையின் செல்வாக்கே அவர்களிடம் மேலோங்கி இருந்தது..
ஆனாலும் நாகர் இனத்தின் பிரதிநிதி அவ்வப்போது வந்து அவர்களுக்கு வாழ்க்கையை பற்றி திருமணம் பற்றி ஆண்டையின் சூழ்ச்சியை பற்றி சந்ததி பெருக்கம் பற்றி என்று அவரால் முடிந்தவரை இந்த அடிமைகளுக்கு புரியும் வகையில் கற்பித்துவிட்டுச் சென்றார்.
அதன் பயனாக ஆதாம் ஏவாள் உறவுகொண்டு குழந்தைகள் பெற்று சந்ததிகள் உண்டாகின. அவர்கள் சந்ததிகள் அறிவை குறைவாகவும் அடிமைத் தனத்தை அதிகமாகவும் கொண்ட சந்ததிகளாக உலகம் முழுவதும் பரவின. ஆண்டையின் சந்ததிகளும் இந்த அடிமைகளின் சந்ததிகளை ஏமாற்றி பிழைப்பதற்காகவும், சாத்தானை விரட்டுகிறோம் என்று கூறி ஆடையை கழற்றி தம் ஆசைகளை தீர்ப்பதற்காகவும் உலகம் முழுவதும் பரவின.
நாகர்களும் தம் முயற்சியை கைவிடுவதாக இல்லை.. இந்த அடிமைகளின் சந்ததிகளை உண்மையைச் சொல்லி அறிவு கிடைக்க வைக்க முடியாதா என்ற ஏக்கத்தோடு தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
அறையில் காலத்தில் பண்ணையார்களை ஆண்டை என்று விழிப்பது வழக்கம். அந்த பண்ணையார்களுக்கு அடிமைகளாக இருந்து வேலை செய்தவர்கள் அவர்களின் ஆண்டை இறந்த பின்னர் ஆண்டவர் என்று வழிபடப்படும் மரபு உலகம் முழுவதும் இருந்தது.
ஆண்டை என்பது நிகழ்கால வார்த்தை அதன் இறந்தகால சொல்லே ஆண்டவர் என்பதாகும். அதுபோலவே மன்னர்கள் இறந்த பின்னர் அவர்களையும் ஆண்டவர் என்று கூறி வழிபட்டு உள்ளார்கள் சில பண்படாத சமூதாய மக்கள்.
No comments:
Post a Comment