Friday, 29 April 2022

கிறிஸ்து பிறந்தது கி.மு 45 ஆம் ஆண்டிலா?

 சேர் ஐசாக் நியூட்டன் அன்றைய யூலியன் நாட்காட்டியின் 1642 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார்.

அன்றைய தினத்தின் கிரிகேரியன் நாட்காட்டி(இன்றைய ஆங்கிலேய நாட்காட்டி) திகதி ஜனவரி 4ஆம் திகதி 1643 ஆம் ஆண்டு.

அப்படியானால் இன்றைய ஆங்கிலேய நாட்காட்டியின் படி கிறிஸ்மஸ் கொண்டாடப்பட வேண்டிய நாள் ஜனவரி 4 தானே? அப்படியானால் ஏன் டிசம்பர் 25 இல் கொண்டாடுகிறார்கள். கிரிகேரியன் நாட்காட்டியின் டிசம்பர் 25 என்பது யூலியன் நாட்காட்டியின் டிசம்பர் 15 ஆம் திகதி அல்லவா?

சரி, யூலியன் நாட்காட்டி என்பது யூலியஸ் சீசரால் அவரது காலத்தில் அதாவது இன்றைய ஆங்கிலேய நாட்காட்டிப்படி கி.மு 46 இல் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நியூட்டனின் பிறந்த நாள் என்பது யூலியன் நாட்காட்டி படி 1642

(ஆங்கில நாட்காட்டிப்படி) கிரிகேரியன் நாட்காப்படி 1643 ஆக இன்றைய ஆங்கிலேய நாட்காட்டி மற்றும் யூனியன் நாட்காட்டி இடையேயான கால வேறுபாடு ஒரு வருடம் மட்டுமே.

அப்படியானால் கிறிஸ்து பிறந்தது கி.மு 45 ஆம் ஆண்டிலா? அப்படி என்றால் 2022 என்ற இந்த வருடம் கி.பி 2067 ஆ? இல்லை இது 2022 ஆம் ஆண்டு தான் என்றால் கி.மு கி.பி என்பது எல்லாம் பொய்யா?

No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...