Saturday, 11 December 2021

அழிக்கப்பட்ட மித்ரவழிபாடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்

முன்னொருகாலத்தில் ஈரானிய ரோமானியான பேரரசுகளில் மிகவும் புகழ்பெற்ற வழிபாடாக மித்ர வழிபாடு இருந்தது.  இந்த மித்ரன் வேறுயாருமல்ல எம் வேதங்கள் போற்றும் அதே மித்தரன்தான். வேதங்கள் ஒளி, அதிஷ்டம் மற்றும் நட்பின் தேவதையாக மித்ரா வருணர் என்று இணையாகவும், தனியாகவும் பல பாடல்களில் மித்ரனின் புகழைப்பாடுகின்றது. இந்த மித்திரனின் வழிபாடுதான் இன்றைய பிரித்தானியா அல்ஜீரியா வடக்கு ஆபிரிக்கா சிரியா ஈரான் என்று எங்கும் புகழ் பெற்றிருந்தது. பொது ஆண்டு 1ஆம் நூற்றாண்டில் இருந்து  4 ஆம்  நூற்றாண்டு வரை மித்ரன் புகழ் மேலோங்கி இருந்தது.

ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்களுக்கு மித்ர வழிபாடும் மக்களுக்கு அதன்பால் இருந்த ஈர்ப்பும் தடங்கலாக இருந்தது. அதனால் கிறிஸ்தவர்களால் தொடர்ச்சியாக மித்ரவழிபாட்டாளர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். மித்ர வழிபாடு இழிவுபடுத்தப்பட்டது. பின்னர் மித்ர வழிபாட்டாளர்களின் விழாக்கள் பண்டிகைகள் தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை கிறிஸ்தவ மயமாக்கப்பட்டன.

2000 வருடங்களுக்கு முந்தைய அதே முறைமையைத்தான் கிறிஸ்தவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். இந்துக்களை, இந்துக் கடவுள்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

அன்று அப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தித் திருடப்பட்ட பண்டிகைதான் இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ். வேதங்கள் போற்றும் ஒளித்தேவதையான மித்ரனின் பிறந்தநாள்தான் இன்று கிறிஸ்துமஸ் என்று மாற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றது. ஆனால் இன்று மித்ரன் இல்லை. மித்ர வழிபாடும் சுவடே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மித்ர வழிபாடு ஏழு படிமுறைகளில் வழிபடப்பட்டது. மித்ரனின் பிறந்தநாள் அன்றைய ரோமானிய சூரிய நாட்காட்டியின் 7வது மாதத்தின் 16 ஆம் நாள் (அந்த ஆண்டின் 196 ஆம் நாள்) கொண்டாடப்பட்டது. மித்ரன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக மக்கள் நம்பினார்கள். ஏழு என்பதை அதிஷ்டம் தரும் மித்ரனின் இலக்கமாக நம்பினார்கள்.(Lucky seven)  

இப்போது சிந்தித்து பாருங்கள் கிறிஸ்தவ பித்தலாட்டம் உங்களுக்கே புரியும். இப்போது பின்பற்றும் பொது நாட்காட்டி கிறிஸ்தவர்களுடையது என்றால், கிறிஸ்த்து பிறந்ததில் இருந்து பின்பற்றப்படுகிறது என்றால் கிறிஸ்து பிறந்தநாள் எப்படி டிசம்பர் 25ஆம் திகதி வரும்? டிசம்பர் 31 அல்லவா கிறிஸ்து பிறந்த தினமான வரவேண்டும்.

இப்போது இவர்கள் சித்தரிக்க முயலும் கி.மு -கி.பி என்பதும் கிறிஸ்தவ நாட்காட்டி என்பதும் தவறானது. அது அன்றைய ரோமானிய இந்துக்களின் சூரிய நாட்காட்டி. மித்ர நாட்காட்டி. இன்று இந்திய இந்துக்கள் பயன்படுத்துவது அதிலும் மேம்பட்ட சூரிய சந்திர கலப்பு நாட்காட்டி. இது மிகவும் துல்லியமானது. வழுவற்றது.

சரி. நான் மித்ர வழிபாட்டிற்கு மீண்டும் வருகின்றேன். இந்த மித்ர வழிபாடு இன்று எப்படி இருக்கிறது பார்ப்போம். இன்றும் ஈரானிய மக்கள் மஹ்ரேகன் பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள். அனைவரும் தீபங்கள் ஏற்றி, தீமூட்டி சுற்றியிருந்து ஆடிப் பாடி என்று கொண்டாடுகிறார்கள். குர்திஷ் இனமக்கள் இன்றும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி 'காளி' மலைக்குச் சென்று அங்கேயே கொண்டாடுகிறார்கள். மலைக்குப் பெயர் காளி என்பது கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய மக்கள் மீண்டும் தங்கள் முன்னோர்கள் தொலைத்த அடையாளங்களை தேடி மித்ர வழிபாடு பண்டிகை என்று கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.

ரோமானிய சூரிய நாட்காட்டி என்பது தமிழ் நாட்காட்டியின் தமிழ்த் தேதிகளை ஒத்தது. நாமும் மித்ர விழாவை கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் மார்கழித் திங்கள் 16 ஆம் நாளை மித்ர விழாவாக, மித்ரனின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம்.

கிறிஸ்தவ நண்பர்களே! கேக்கையும் மெழுகுதிரியையும் தூக்கி வீசிவிட்டு கையில் தீப்பந்தம் ஏந்தி வாருங்கள். மரங்களை வெட்டி இயற்கையை அழித்து கொண்டாடும் மரபு தமிழர் மரபல்ல. பொங்கலும் பலகாரங்களும் செய்து எம் ஒளித்தேவதை மித்ரனின் பிறந்தநாளை கொண்டாடுவோம். எம் பாரம்பரிய மரபை அழிக்கும் பாழ்பட்ட சிந்தனைகள் வேண்டாம். நாம் தமிழராக வாழ தமிழ் மரபைப் பாதுகாப்போம்.

இந்து மட்டுமே தமிழன்









No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...