Saturday, 18 December 2021

மதமாற்றத்தின் நோக்கம் இனவழிப்பு செய்வதே

நம் தமிழர்களின் கலைகளைக் கற்று அதன் வாழ்வியல் அடிப்படையில் நின்று வாழ்வதற்கு அனுமதியற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும்.

ஒரு இனமானது,

1.மொழி
2. கலை
3. கலாச்சாரம்
4. மரபு
5. பழக்கவழக்கங்கள்
6. நம்பிக்கை
7. தொடர்ச்சி

என்னும் ஏழு கூறுகளினால் கட்டமைக்கப்படும். ஒரு இனத்தின் மொழியை, கலாச்சாரத்தை, அதன் மரபுகளை காத்துநிற்பது அந்த இனத்தின் கலைகளே.

அவ்வாறு தமிழர்களின் மொழியை, கலாச்சார மரபுகளை, பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகளை காத்துநிற்பது எம் தமிழர்கள் பின்பற்றிய கலைகளே. அவ்வாறான எம் னபாரம்பரிய கலைகளைப் பின்பற்றுவதையே அனுமதிக்காத கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் தமிழர்களாக இருக்கமுடியாது.

ஆனால் எம் கலைகள் அத்தனையையும் போற்றிப்பாதுகாப்பது இந்து தர்மமே. அதனால்தான் நாம் சொல்கிறோம் இந்து மட்டுமே தமிழன் என்று.

நீங்களே சொல்லுங்கள் நாமும் தமிழர்கள்தான் என்று சொல்லும் கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் எம் பாரம்பரிய கலைகளில் எவற்றையெல்லாம் ஏற்பார்கள் என்று?

தமிழர்களின் 64 கலைகள்.

1.அக்கர இலக்கணம்
2.லிகிதம்
3.கணிதம்
4.வேதம்
5.புராணம்
6.வியாகரணம்
7.நீதி நூல்
8.சோதிடம்
9.தரும சாத்திரம்
10.யோகம்
11.மந்திரம்
12.சகுனம்
13.சிற்பம்
14.வைத்தியம்
15.உருவ சாத்திரம்
16.இதிகாசம்
17.காவியம்
18.அலங்காரம்
19.மதுர பாடனம்
20.நாடகம்
21.நிருத்தம்
22.சத்த பிரமம்
23.வீணை
24.வேணு
25.மிருதங்கம்
26.தாளம்
27.அகத்திர பரீட்சை
28.கனக பரீட்சை
29.இரத பரீட்சை
30.கச பரீட்சை
31.அசுவ பரீட்சை
32.இரத்தின பரீட்சை
33.பூமி பரீட்சை
34.சங்கிராம இலக்கணம்
35.மல்யுத்தம்
36.ஆகர்சணம்
37.உச்சாடணம்
38.வித்து வேஷணம்
39.மதன சாத்திரம்
40.மோகனம்
41.வசீகரணம்
42.இரசவாதம்
43.காந்தர்வ விவாதம்
44.பைபீல வாதம்
45.தாது வாதம்
46.கெளுத்துக வாதம்
47.காருடம்
48.நட்டம்
49.முட்டி
50.ஆகாய பிரவேசம்
51.ஆகாய கமனம்
52.பரகாயப் பிரவேசம்
53.அதிரிச்யம்
54.இந்திர சாலம்
55.மகேந்திர சாலம்
56.அக்னி தம்பம்
57.சல தம்பம்
58.வாயு தம்பம்
59.திட்டி தம்பம்
60.வாக்கு தம்பம்
61.சுக்கில தம்பம்
62.கன்ன தம்பம்
63.கட்க தம்பம்
64.அவத்தை பிரயோகம்

தமிழர்களின் இந்த அறுபத்து நான்கு கலைகளையும் கற்று அதன் சாரத்தில் நின்று ஒருவன் வாழ்ந்தால் அவன் இந்துவாக ஆகிவிடுகிறான். நீங்கள் என்ன பெயரில், எந்த உருவில் கடவுளை வணங்குகிறீர்கள் என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. நீங்கள் எந்த வாழ்வியல் முறையில் வாழ்கிறீர்கள் என்பதே இங்குள்ள பிரச்சினையாக உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலைகள் கூறும் வாழ்வியல் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், ஜீசஸை வணங்குவதற்கும் ஏன் அனுமதிப்பதில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? மதமாற்றம் என்பது வணங்கும் தெய்வத்தை மாற்றுவதல்ல. நம் இனத்தின் பாரம்பரிய மரபுகளை அழித்து இனவழிப்பு செய்வதே மதமாற்றத்தின் நோக்கமாகும். 

தமிழினம் காக்க 
தாய்மதம் காப்போம்...


No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...