Thursday, 10 February 2022

அழுகிய காதல்-ஷாஜகான் மும்தாஜ் வாழ்க்கை கதை

இன்றைய பாகிஸ்தானின் லாகூர் நகரில் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் 'ஷாஜகான்' என்ற அந்த விசித்திரமான குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே இளவரசர் என்றும் அரியணையின் அடுத்த வாரிசு என்றும் பிறந்தது அந்த குழந்தை. அவன் அவனது தந்தை ஜகாங்கிரின் 5வது பிள்ளை. அவனது தாய் ஜெகத் கோசனியின் மூத்த மகன். அவனுக்கு முன்பிருந்த எல்லா பிள்ளைகளும் பெண் பிள்ளைகள் என்பதனால் இவன்தான் அடுத்த மன்னன் என்று அன்றே முடிவானது. பிறந்த போது அவனுக்கு 'குர்ராம் சஹாபுதீன்' என்று பெயர் சூட்டினார்கள். 'ஷாஜகான்' என்பது பின்னர் அரியணைக்காக சூட்டிய பெயர்.

அந்த குழந்தை வளர்ந்து வரும் போது மிகவும் விசித்திரமான உருவத்தில் இருந்தது. அவனது தந்தை ஜகாங்கிர் மங்கோலிய துருக்கிய கலப்பினத்தில் வந்தவன். மங்கோலியா என்பது இன்றைய சீனாவின் வடக்கேயுள்ள நாடு. துருக்கி என்பது மத்தியகிழக்கு நாடுகளும், கிழக்கு ஐரோப்பாவும் என்பன சந்திக்கும் பகுதி.

வீங்கிய இமைகள், உள்ளே பதிந்து வெளியே உயர்ந்த கண்கள், செம்பட்டை பரட்டை என்று எல்லாம் கலந்த முடிகள், அகன்று நெளிந்து புடைத்த மூக்குகள், அரைகுறையாக வளர்ந்த தாடி என்று அவன் விசித்திரமான தோற்றத்தில் இருந்தான். இன்றைய ஆபிரிக்க பழங்குடியின கறுப்பர்கள், ஐரோப்பிய பழங்குடி எஸ்கிமோக்கள், சீனப் பழங்குடிகள் என்று எல்லாம் கலந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு விசித்திரமான தோற்றத்தில் இருந்தான்.

ஜகாங்கிரின் இரண்டாவது மனைவி ஷாஜகானின் தாய் ஒரு ராஜபுத்திர வம்சத்து இளவரசி. ஆனால் அந்த ராஜபுத்திர வம்சத்தின் லட்சணத்தில் ஒன்றுகூட அவனிடம் இல்லை. 

அவனது தோற்றம் மட்டுமல்ல அவனது செயற்பாடுகளும் விசித்திரமான ஒரு ஜீவராசிபோலவே இருந்தது. அவன் சிறுவயதிலேயே அதீத பாலியல் இச்சையுடன் அலைந்தான். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானான். அவனது காமத்தை அவனைவிட குறைந்த வயதுடைய சிறுமிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பதினைந்து வயதிற்குள் மூன்று திருமணம் செய்துவிட்டான். அவர்கள் மூவராலேயும் அவனது காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அந்த நேரத்தில்தான் அர்ஜுமன்ட் பானு பேகம் என்ற பெண்ணை சந்திக்கிறான் ஷாஜகான். இவள் பெர்சிய பிரபு ஒருவரின் பேத்தி. திருமணம் ஆனவள், கணவனும் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவன்தான். அவளின் கண்கள் நிரப்பிய காமம். உப்பிய முகத்தில் கழுகுமூக்கு. பருத்த இடையில் பனங்கிழங்கு தொடைகள் என்று அவளது தோற்றமும். நடை, நளினம் என்று அவளின் அங்க அசைவுகளும் அவளின் அடங்காத காமத்தை பறைசாற்றி நின்றது. இருவரது காமமும் பற்றி எரிந்தது. அவள் தான் மணம் முடித்தவள் என்பதையே மறந்தாள். மானம், கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாம் அவர்களுக்கு ஏது? இருவரும் நிமிடங்கள், மணித்தியாலங்கள் கடந்து வெறியைத் தீர்க்க முனைந்தார்கள். அவர்களின் காமவெறி தீரவில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிரியவும் மனமில்லை. இருவருக்கும் பற்றிய காமத்தில் அவளின் கணவன் மர்மமாக கொல்லப்படுகிறான். அவள் அந்தப்புரத்தில் ஐக்கியம் ஆகினாள்.

அவனின் காமத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மனைவிகள் வேண்டாப் பெண்டிர்கள் ஆனார்கள். அர்ஜுமன்ட் பானுவும் ஷாஜகானும் காமத்தில் கரைபுரண்டு ஓடினார்கள். அவள் மீதான மோகத்தில் அவளுக்கு மும்தாஜ் மஹால்(அரண்மனையின் மணிக்கல்) என்று பட்டம் சூட்டினான் ஷாஜகான். வருடாவருடம் அவர்கள் கையில் ஒரு பிள்ளை. பன்றி குட்டிபோடுவதுபோல் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள் முட்டைக்கண்ணி மும்தாஜ். அவனும் விடுவதாக இல்லை, பிள்ளை கொடுப்பதை கடமையாகவே செய்தான்.

போதை, காமம், குழந்தைகள் என்று அவர்கள் காலங்கள் ஓடியது. அவளுக்கு முன்பும் மூன்று மனைவிகள். அவளுக்கு பின்பும் பல மனைவிகள். இவளை மிஞ்சிய சுகத்தை எவளாவது கொடுப்பாளா என்று பல பெண்களை அனுபவித்துப் பார்க்கிறான். ஆனால் அவளிடம் மட்டுமே ஏதோ ஒன்று அவனைக் கட்டிப்போட்டது. எத்தனையோ அழகிய கன்னிப்பெண்கள் அவன் அந்தப்புரத்திற்கு வந்து போனார்கள். ஆனால் அந்த பலபிள்ளை பெற்றவள்மேல் அவன் மோகம் தீரவேயில்லை.

காமத்தை மிஞ்சிய போதையை அதிகாரம் சிலவேளை உண்டாக்கிவிடும். காமத்தில் மூழ்கிக் கிடந்த ஷாஜகானுக்கும் அதிகார போதை உண்டாகிவிட்டது. தந்தையுடன் சேர்ந்து பல போர்களில் படைதிரட்டி சென்றவன், இப்போது தந்தைக்கு எதிராகவே படைதிரட்டி நின்றான். ஆனால் இறுதியில் தோற்றுவிட்டான். சாஷ்டாங்கமாக காலில் விழுந்து சரணடைந்தான். தந்தை அவனை மன்னித்தாலும் வீட்டுச் சிறையிலேயே வைக்கிறான். ஆனால் அடுத்த வருடமே அவன் தந்தை மர்மமான முறையில் இறக்க அரியணை அவன் வசமானது.

அரியணை ஏறியதும் தன் எதிரிகளை எல்லாம் தூக்கிலிட்டு கொல்கிறான். தன் மாற்றாந்தாயான நுர்ஜகானை சிறையில் அடைக்கிறான். அதன்பின் அந்தப்புரம் முழுவதும் பெண்களால் நிரப்புகிறான். எத்தனை பெண்கள் வந்தாலும் வயதான மும்தாஜை அவனால் விட முடியவில்லை. அவள் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. வைத்தியர்கள் இனி குழந்தை பெறவேண்டாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் ஷாஜகான் விடுவதாக இல்லை. வயது போனபின்பும், நோய்வந்து உடல் தளர்ந்தபோதும் அவளை விடுவதாக இல்லை. அவள் இப்போதும் பிள்ளை பெற்றுக்கொண்டே இருந்தாள். அவன் அரியணை ஏறி நான்கு ஆண்டுகளில் அவள் பதின்நான்காவது பிள்ளையைப் பெற தயாரானாள். வைத்தியர்கள் அவள் உடல்நிலையை சொல்லி எச்சரித்தனர். அவன் தானம் கொடுத்து கடவுளின் கணக்கை மாற்றப்பார்த்தான். அவள் முப்பது மணிநேரம் பிரசவ வலியால் துடித்தாள். குழந்தை பிறக்கவில்லை. இவன் பொன்னையும் பொருளையும் தானமாக அள்ளி வீசிக்கொண்டு இருந்தான். கடைசியில் மும்தாஜ் இறந்தே போனாள்.

ஷாஜகான் அவள் கொடுத்த இன்பத்தை மறக்க முடியாமல் தவித்தான். வயது போனபின்பும், நோய்வந்து வாட்டியபோதும் இவன் கேட்ட பொழுதுகளில் அவள் மறுத்ததே இல்லை. வைத்தியர்கள் எச்சரித்தும் அடங்காத காமத்தால் அவள் இறந்துவிட்டாள். பதின்னான்காவது பிள்ளைப்பேற்றில் உயிர்விட்ட காமக்கிழத்திக்கு கற்களால் கல்லறை அமைத்தான். அது அவனுக்கு திருப்தி தரவில்லை. ஆக்ராவில் உள்ள சிவாலயம் ஒன்றை இடித்து அந்த இடத்தை அவள் பெயரில் நினைவிடமாக மாற்றினான். சிவத்தை அகற்றிவிட்டு சிவாலயம் இருந்த இடத்தில் அவள் சவத்தைப் புதைத்தான்.

எது செய்தாலும் மும்தாஜ்மீதான அவன் காமம் தீரவில்லை. அவளின் சாயலில் அவளைவிட சற்று அழகாகவே இருந்தாள் ஜஹானாரா பேகம். இவள் சாஜகானுக்கும் மும்தாஜுக்கும் பிறந்த மூத்த மகள். அவளையே மனைவியாக்கினான் ஷாஜகான். தொட்டிலில் போட்டவளை கட்டிலில் போட்டு மதித்தான். மும்தாஜ் நினைவில் அடக்கிவைத்திருந்த காமம் எல்லாவற்றையும் பெற்ற மகள் என்றும் பாராமல் அவள்மீது தீர்த்தான். அந்த முறைதவறிய உறவை விமர்சித்தான் என்பதற்காக அவன் மகனான ஔரங்கசீப்பையே சிறையில் அடைத்தான். 

காலம் வேகமாக ஓடியது. சிவாலயத்தை உடைத்து சிற்றின்ப சிறுக்கியின் சவத்தை புதைத்த வினைப்பயன் விரட்டியது. அவன் பெற்ற பிள்ளைகளே பகைவர்கள் ஆனார்கள். இன்னோர் மனைவியின் மகனான நசிஃப் அதிகாரத்திற்காக கலகத்தில் ஈடுபட்டான். மும்தாஜின் மகனும் பட்டத்து இளவரசனுமான 'தாரா ஷிகோ'வை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டான். ஏனைய மனைவிகளின் புதல்வர்கள் அனைவருக்கும் ஒன்றுசேர்ந்து எதிர்த்தனர். ஷாஜகான் அரசை இழந்து நோயில் விழுந்தான்.

மகன்கள் செய்த கலகத்தால் இன்னோர் மகனான ஔரங்கசீப் சிறை மீண்டான். ஷாஜகான் ஆளமுடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டான் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தான். ஆனால் சிறிது நாட்களில் ஷாஜகான் உடல்நிலை தேறினான். ஆனால் ஔரங்கசீப் ஆட்சியை கொடுக்கவில்லை. வீட்டுச் சிறையில் ஷாஜகானை அடைத்தான். வீட்டுச் சிறைக்குள் தந்தையுடன் சேர்ந்து சல்லாபம் நடத்தினாள் மும்தாஜின் மகள் ஜஹானாரா பேகம்.

பெற்ற மகளுடன் சரசம்பண்ணியவாறு இருந்த ஷாஜகான் மீண்டும் மீளமுடியாத நோயில் வீழ்ந்தான். சிவாலயம் இடித்து சவத்தை புதைத்து கல்லறை கட்டியவன், காதல் என்று சொல்லி காமவெறி பிடித்து அலைந்தவன், பெற்ற மகளை பெண்டாட்டி ஆக்கியவன் அப்படியே அணுஅணுவாக அழுகினான். சீதபேதியால் உருச் சிதைந்தான். கடைசியில் சிந்தை கெட்டு இறந்து போனான்.



No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...