Sunday 13 February 2022

சிவாலய வாசலில் சிறுக்கியின் சிலை-சிறுகதை

பத்மநாதன் தீவிரமான சிவபக்தர், மிகுந்த ஞானம் உடையவர். சிவதத்துவத்தை உணர்ந்து முக்தி வேண்டிப் பிரார்த்தனை செய்வது அவர் வழக்கம். அவர் மனம் தவறுதலாகக்கூட பொருள் வேண்டியோ, உலக இன்பங்களை வேண்டியோ வணங்கியது கிடையாது. அவ்வளவு சுத்தமான ஆன்மீக நாட்டம் அவருடையது.

பத்மநாதன் சிவாலயம் செல்லும் போது அவரது பேரனும் அவருடன் செல்வது வழக்கம். செல்லும் வழியில் அவரது பேரன் "ஏன் தாத்தா அது இப்படி இருக்கிறது?, இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் தாத்தா?" என்று ஏதாவது ஒன்றை பற்றி கேட்டுக்கொண்டே செல்வான். "எல்லாம் சிவன் செயல், அவன் ஆட்டுவிக்கிறான் இவர்கள் ஆடுகிறார்கள்" என்று எல்லாவற்றுக்கும் ஒரே பதிலையே  சொல்வார் பத்மநாதன். அவரது ஆன்மீக பக்குவம் அதைக் கடந்து எதையும் பேச வைக்கவில்லை.

ஒருநாள் வழக்கம்போல பேரனை அழைத்துக்கொண்டு பத்மநாதன் சிவாலயம் நோக்கி சென்றார். போகும் வழியில் திடீரென ஒரு வெளிநாட்டு பெண்மணி ஒருவரின் சிலை இருந்தது. அவமானம் தாங்காமல் குனிந்த தலையுடன், என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுவது போல் இருந்தது அந்த சிலை. அந்த சிலையை சிலர் வணங்கிவிட்டும் சென்றார்கள்.

பேரனுக்கு இது விசித்திரமாக இருந்தது. இது என்ன என்று அறியும் ஆர்வம் வந்துவிட்டது. எது கேட்டாலும் தாத்தாவிடம் இருந்து ஒரே பதில்தானே வரும். அவன் இம்முறை மிகவும் எச்சரிக்கையாக, "தாத்தா எனக்கு எல்லாம் சிவன் செயல், அவன் ஆட்டுவிக்கிறான் இவர்கள் ஆடுகிறார்கள்" என்று பதில் சொல்லாமல், எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆரம்பித்தான். பத்மநாதனும் வேறு வழியின்றி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"யார் தாத்தா அந்த பொம்பிளை?"

"அவ ஒரு ஜுத நாட்டு பெண்."

"எதுக்கு தாத்தா அவ தலையை தொங்க போட்டிட்டு, கெஞ்சிற மாதிரி கும்பிட்டிட்டு நிக்கிறா?"

"அவ கல்யாணம் பண்ண முன்னாடியே தப்பான உறவில குழந்தை பெத்துக்கிட்டா, அந்த அவமானத்தில மக்கள் முன்னாடி தலை குனிஞ்சு நிக்கிறா, அந்த ஊரில கல்யாணம் ஆகாம குழந்தை பெத்துக்கிட்டா கல்லால் எறிஞ்சு கொன்னுடுவாங்க.. அப்படி கொன்னுடாதிங்கன்னு கும்பிட்டுக் கெஞ்சுறா.." என்று தாத்தா சொல்லும் போதே அந்த சிலையில் உள்ள பெண்ணை கும்பிடும் நபர்களை பார்க்க அவனுக்கு அசிங்கமாக இருந்தது. இவர்கள் மூளை இல்லாதவர்களா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே..

"ஏன் தாத்தா அந்த தப்பான பெண்ணை இங்க சிலபேர் கும்பிடுறாங்க?" என்று அடுத்த கேள்வியை அடுக்கினான்..

"கல்யாணம் கடந்த கள்ள உறவுக்கு ஆசைப்படுறவங்க, ஒழுக்கம் கெட்டு வாழுறவங்க தங்களைப்போல வாழ்ந்த அவங்கள கும்பிடுறாங்க.." என்றார்.

"அதுசரி தாத்தா, நீங்கதான் எல்லாம் சிவன் செயல் என்னு சொல்லுவீங்கல்ல இதுவும் சிவன் செயல் தானா?"

"அதிலென்ன சந்தேகம்? இதுவும் சிவன் செயல் தான்" என்றார் தாத்தா... அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை..

"இல்லை தாத்தா, நாம நல்ல மனதோட இந்த பிறவியைக் கடந்து இறைவனை அடையணும்னுதானே கோயிலுக்கு போறம்.. நாம சிவனிட்ட போற வழியிலேயே ஏன் இப்படி அசிங்கம் எல்லாம் வர சிவன் அனுமதிக்கணும்?" ஆதங்கத்தோடு கேட்டான் பேரன்.

"நீ இறைவனை அடையணும்னா இப்படி அசிங்கங்களை எல்லாம் கடந்துதான் வரணும் என்று உணர்த்தத்தான் இதை சிவன் செய்திருக்கிறார். சில தப்பானவர்கள் இப்படி அசிங்கங்களையும் நின்று வணங்குவார்கள் அதனால் மனதை சிதறவிடாதே என்பதை உணர்த்தத்தான் சில தப்பானவர்களை வணங்கவும் விட்டுள்ளார்" என்றார் தாத்தா.

பேரனுக்கு உண்மை புரிந்தது. எல்லாம் சிவன் செயல் என்று தாத்தா சொல்லும் வார்த்தையின் பொருள் அப்போதுதான் அவனுக்கு முழுமையாக புரிந்தது.



1 comment:

  1. What all these and why all these? These types of comments tantamount to incitement of religious hatred.

    1)மத நம்பிக்கைகள் வேறு.2)மதப்பற்றாளர்கள் வேறு.3)மதத் தலைவ ர்கள் வேறு.

    இவற்றுள் மத நம்பிக் கைகள் மீது வசைபாடி நிந்தனை செய்வது நட வடிக்கைகளுக்கு உட்ப ட்டவை.

    ReplyDelete

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...