Thursday 24 February 2022

உன்னால் யாரையும் இழிவில் இருந்து மீட்க முடியாது-சிறுகதை

வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்தவர் சுவாமி சூட்சுமானந்தா , அவர் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தது எனக்குப் ஏமாற்றமாகவே இருந்தது. சிறு வயது முதலே மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி இருக்கையில் ஒரு துறவியிடம் இருந்து, அதுவும் என் குருவிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

சுவாமி என் மௌனத்தை கலைத்து "என்ன யோசிக்கிறாய்?" என்று கேட்கும் வரையில் இந்த உலகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் செய்யவேண்டும், உலகத்தில் உள்ள அனைவரும் சமமானவர்கள் என்றே நம்பிக்கொண்டிருந்தேன்.

சுவாமி என்ன யோசிக்கிறாய் என்று கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் "சுவாமி உலகத்தில் உள்ள அனைவரும் சமம்தானே? இப்போது இருக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகளை எப்படி இல்லாமல் செய்வது?" என்று கேட்டேன்.

சூட்சுமானந்தா சிரித்துவிட்டு கேட்டார் "இந்த உலகத்தில் உள்ள அனைவரும் சமமென்று யார் உனக்கு சொன்னது?" 

சுவாமியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, அதனால் மீண்டும் கேள்வியையே கேட்டேன். "அப்படியானால் உலகில் அனைவரும் சமனில்லையா?"

இல்லை என்று தலையை அசைத்த குரு "எதற்காக ஏற்றத்தாழ்வுகளை நீ இல்லாமல் செய்யப்போகிறாய்?" என்றார்.

நான் பதிலேதும் சொல்லவில்லை.

"மதம் மாறியதற்கு சாதிய இழிவுநிலைதான் காரணம் என்று யாரேனும் சொன்னார்களா?" குரு மீண்டும் கேட்டார்.

"ம்ம்" என்று தலையை அசைத்தேன்.

"இழிவான சாதி என்று சொல்லும் அவர்கள் தமிழர்களா?"

எனக்கு எதுவும் புரியவில்லை. "அப்படியானால் அவர்கள் தமிழர்கள் இல்லையா?"

"தமிழர்கள் கற்றறிந்த வீரமிக்க உயர்வான இனந்தானே? "

"ஆம் சுவாமி"

"அப்படியானால் அறிவற்ற, வீரமில்லாத, கீழான இவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும்?"

"அப்படியானால் இவர்கள் யார் சுவாமி?"

"இந்த தேசத்தில், இந்து மத்ததில் வெவ்வேறு குலத்தில் பிறந்தவர்கள் நாடாண்ட வரலாறும், வேதங்களை கற்றறிந்து உலகுக்கு வழிகாட்டிய சிறப்பும் நீ அறியவில்லையா?"

"அறிந்திருக்கிறேன் சுவாமி"

"இந்த தேசமும், இந்த மதமும் யாரும் எந்த உயரத்தையும் அடைவதை ஒருபோதும் தடுத்ததில்லை. யாரும் எந்த உயரத்தையும் எப்போது வேண்டுமானாலும் அடையலாம். நீ கூட என்னை சுவாமி என்றே விழிக்கிறாய் இல்லையா?"

"ஆம் சுவாமி"

"இதை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் உன்னால் சொல்ல முடியுமா?"

"முடியாது சுவாமி, இறைவனுக்கு நிகர் வைத்த குற்றத்தில் எங்கள் இருவரது தலையையும் மக்காவில் வைத்து வெட்டி விடுவார்கள்"

"என்னை உன்னை என்றல்ல, இன்றைய காலத்தில் நபிகளும், ஜீசஸும் அங்கே பிறந்தாலும் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் தலைவெட்டிக் கொல்லப்படுவார்கள்,

இங்குள்ள மதம்மாறுபவர்களின் பிரச்சினை சமூகத்தில் உள்ள இழிவு நிலையல்ல, அவர்களின் அடிமை மனோபாவம் தான் பிரச்சினை"

"என்ன சொல்கிறீர்கள் சுவாமி, மதம்மாறுபவர்கள் தமிழர்கள் இல்லை என்றீர்கள் சரி, அவர்கள் அடிமைகளா? எப்படி?"

"தமிழர்கள் பேரரசுகள் அமைத்து ஆண்டபோது பல நாடுகளைக் கைப்பற்றி பலரை அடிமைகளாக கொண்டுவந்தார்கள், பின் தமிழர் ராஜ்ஜியங்களில் தொழில் வளம் பெருகி பெரிய முதலாளிகள், பண்ணையார்கள் என்று உருவானபோது பல நாடுகளில் இருந்து கறுப்பு, சிவப்பு என்று பல்வகையான அடிமைகள் இங்கே கொண்டுவரப்பட்டார்கள்"

"அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் சுவாமி?"

"எதுவும் ஆகவில்லை. அவர்கள் இப்போதும் அடிமைகளாக்தான் இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு சுதந்திரம் என்பதை அனுபவிக்க தெரியவில்லை, அதனால் மதம்மாறி நவீன அடிமைகளாக வாழ்கிறார்கள்"

"மதம் மாறுவதற்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன சம்பந்தம் சுவாமி?"

"அடிமைகள் எப்படி வாழ்ந்தார்கள்?"

"மன்னனின் படைகளால், முதலாளிகள், பண்ணையார்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு வரையறைக்குள் வாழ்ந்தார்கள்"

"அதுதான் இங்குள்ள பிரச்சினை. இந்து மதத்தில் உள்ள கட்டற்ற சுதந்திரம், அவர்களின் இயல்பான, அடிமைத்தனத்திற்கு எதிரானது. அவர்களின் அடிமை மனோபாவம் இந்து மதத்தின் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது தடுக்கிறது. அதனால் அவர்களை கட்டுப்படுத்தி, ஆணையிட்டு, அடிமைகளாக நடாத்தக்கூடிய வழிமுறைகளை ஏற்று அடிமைகளாக வாழ்வதில் அவர்களின் மனம் திருப்தி அடைகிறது, அவர்களின் மீதான அனைத்து சுரண்டல்களையும் இயல்பாக உணர வைக்கிறது"

"உயர்வு தாழ்வு என்பது சமூகத்தில் இல்லை. அவர்களின் பரம்பரை பரம்பரையாக தொடரும் அடிமைத்தனத்தால் வந்தது என்றால் சரியா சுவாமி?"

"சரியாக புரிந்துகொண்டாய்.."

"மதம்மாறுபவர்கள் பலதேசங்களில் இருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டு இங்கு தமிழ் பேசி வாழும் மக்களே தவிர அவர்கள் தமிழர்கள் இல்லை, சரியா சுவாமி?"

"ம்ம்.., சரியாக பிடித்துக்கொண்டாய்.."

"இந்து மதத்தில் உள்ள சுதந்திரத்தை அனுபவிக்க தெரியாத அடிமைகள், மதமாற்றம் என்ற பெயரில் தம்மை நவீன அடிமைகளாக மாற்றிக் கொள்ள கூறும் காரணங்களில் ஒன்றுதான் சமூக இழிநிலை, சரியா சுவாமி?"

"மிகச்சரி.. எல்லாவற்றையும் கச்சிதமாக பிடித்துக்கொள்கிறாய்.."

"யாருடைய இழிநிலைக்கும் யாரும் காரணமாக முடியாது, யாரையும் இழிநிலையிலிருந்து யாராலும் மீட்க முடியாது, இந்த இந்து பண்பாட்டு வாழ்வியல் அனைத்திற்குமான சுதந்திரத்தை உனக்குத் தந்துள்ளது. நீ எதுவாக வாழ ஆசைப்படுகிறாயோ அதுவாக வாழ முடியும்" என்று குரு சொல்லச் சொல்ல என் மனம் பளிங்கு போல் தெளிந்தது.

என் ஏமாற்றம் மாற்றமாக மலர்ந்து நின்றது, "உன்னால் யாரையும் இழிவில் இருந்து மீட்க முடியாது" என்று சுவாமி சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் முழுவதுமாக புரிந்தது..



No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...