போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு பற்றி பிரசன்ன வீரக்கொடி என்ற சுதேச இலங்கையர் வரைந்த ஓவியம் இது.
இந்த ஓவியத்தை கொஞ்சம் கவனமாக கவனித்து பாருங்கள். பல்வேறு உண்மைகளை இந்த ஓவியத்தில் மிக கவனமாக பதிவு செய்திருக்கிறார் அவர்.
வழக்கமாக போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு என்றால் எமது மனதில் தோன்றும் காட்சி என்ன? போர்த்துக்கேயர் என்றால் வெள்ளையர்கள் என்பதாக தானே எமது மனது கற்பனை செய்கிறது. கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு என்பதை மறைப்பதற்காக வெள்ளையர் ஆட்சி என்று திரும்ப திரும்ப சொல்லி எம்மை அவ்வாறு நம்பவைத்து விட்டார்கள். அப்படியானால் போர்த்துக்கேயர்கள் வெள்ளையர்கள் கிடையாதா? போர்த்துக்கேய எஜமானர்கள் வெள்ளையர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்களது சேவகர்கள், படைகள், அடிமைப் படைகள் என்பவை வெள்ளையர்களை மட்டும் கொண்டதல்ல. போர்த்துக்கேய எஜமானர்களும், முக்கிய தளபதிகள் என்று கூறப்படும் நபர்களும் மாத்திரம் வெள்ளையர்களாக இருந்தார்கள். படைகளில் வெள்ளை, பிரவுன், கறுப்பு என்று பலரும் இருந்தார்கள். அடிமைப் படைகளும், அப்படைகளின் கீழ்நிலை தளபதிகள் பலரும் கறுப்பர்களாக மட்டுமே இருந்தார்கள்.
அப்படியானால் இந்த ஓவியத்தில் சித்தரிக்கும் காட்சியின் சம்பவத்தை நினைவு கூருங்கள். சுதேச ஆண் ஒருவரின் தலையை கொய்து கையில் வைத்திருக்கும் போர்த்துக்கேயன் ஒருவன் இன்னொரு சுதேசி ஆணின் தலையை கொய்வதற்கு வாளுடன் நிற்கிறான். பின்னால் சுதேசி பெண்கள் போர்த்துக்கேய படைகளால் துஷ்பிரயோகம் செய்யபடும் காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த போர்த்துக்கேயர் படைகளில் கன்னங்கரேலென்ற தோற்றத்தில் கறுப்பர்கள் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னான காலத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.அவர்களிடம் அகப்பட்ட ஆண்களை தலையை கொய்து கொன்றார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அப்படியானால் அந்த கறுப்பர் படைகள் மட்டும் துஷ்பிரயோகம் செய்யாமல் ஒழுக்கமாக இருந்திருப்பார்களா? இல்லை, அந்த ஆபிரிக்க கறுப்பர்களும் சுதேச பெண்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அந்த துஷ்பிரயோகத்தின் மூலம் சுதேச பெண்களுக்கு பிறந்த பிள்ளைகள் சுதேச பாரம்பரியத்தை பின்பற்றி வாழ அனுமதிக்கப்பட்டிருப்பார்களா? அல்லது போர்த்துக்கேய கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வாழ நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்குமா? நிச்சயமாக சுதேச அடையாளத்தை தாங்கி வாழும் சூழல் அன்று அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
இந்த மண்ணில் அவ்வாறு உருவானவர்கள் இன்று யாராக இருக்கிறார்கள்? அந்த கறுப்பர்கள் வெள்ளையர்கள் துஷ்பிரயோகம் செய்து உருவாக்கிய வம்சாவளியினர் இந்த நாட்டைவிட்டு திரும்பிச் சென்ற வரலாறு ஏதாவது பதிவுசெய்யப்பட்டுள்ளதா? அவர்கள் இந்த நாட்டைவிட்டு திரும்பிச்சென்ற எந்த ஒரு வரலாறும் பதியப்படவில்லை. அப்படியானால் அந்த வம்சாவளியினர் இந்த மண்ணில் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளலாம். யார் அவர்கள்?
அவ்வாறு உருவாகி, அந்த போர்த்துக்கேய பாரம்பரியத்தை தாங்கி வாழும் மக்கள் தமிழர்களோ சிங்களவர்களோ கிடையாது என்பது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?
வரலாறு என்பது வெறும் பாடப்புத்தகங்களில், யாரோ எழுதிய நூல்களில் இருந்து படித்து அறிவது கிடையாது. எம் அறிவைப் பயன்படுத்தி பல விடயங்களை தர்க்க பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment