Monday, 25 November 2024

புலிகளின் கல்லறையில் சைவ தத்துவம்

தலைவர் பிரபாகரனின் மரபுவழி கல்லறை அமைப்பு முறையும், ஆன்ம சிவ தத்துவங்களும்.

இறந்தவர்களுக்கு கல்லறை அமைத்து அதனை வழிபடும், மரியாதை செய்யும் மரபு பன்னெடுங்காலமாகவே தமிழர்களிடம் இருந்து வருகிறது. அந்த கல்லறைகளை அமைக்கும் போது, அதற்கெனவும் சில மரபுகளை பின்பற்றினார்கள். 

உலகத்தில் உள்ள மத நம்பிக்கைகளில் இறைவன் என்பது வேறு, ஆன்மா என்பது வேறு என்று பேசும் ஒரேயொரு சமய தத்துவம் சைவ தத்துவம் மட்டுமே. மற்றையவை எல்லாம் ஏதோவொரு ஆன்மாவை  தெய்வம் என்றோ ஆண்டவர் என்றோ வழிபடும் ஆன்ம வழிபாட்டு மதங்களாகவே உள்ளன. அவர்கள் கூறும் தேர்வர்கள் தெய்வங்கள் என்பவை எல்லாம் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, ஆனால் அந்த ஆன்மாவிற்கு சில விசேட தன்மைகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

சைவ தத்துவங்கள் ஆன்மாவும் இறைவனும் ஒன்று கிடையாது,  அனுபவம் என்னும் ஒற்றை நிலையில் முக்தியடைந்த ஆன்மாக்கள் இறைவனை ஒத்த தோற்றத்தை காட்டும் என்று விளங்குவார்கள். அதாவது இறைவன் ஆன்மா இரண்டும் ஒரே போன்றவை கிடையாது. முக்தி நிலையில் ஆன்மாக்கள் இறைவனை ஒத்த வரம்பிலா இன்பத்தை அனுபவிக்கும் என்பதால் அந்த ஒரு நிலையில் இறைவன் ஆன்மா இரண்டும் ஒன்றுபோல் இருக்கும் என்பதாகும்.

அதனால் முக்தி அடைந்த ஆன்மாக்கள் என்று கருதப்படும் ஆன்மாக்களுக்கு கல்லறை அமைக்கும் போது, சிவ லிங்கத்தின் தோற்றம் ஒரு பார்வையில் தோன்றும் வகையில் கல்லறைகளை அமைந்தார்கள். அதாவது முழுமையாக சிவலிங்கமாக தோற்றமளிக்காமல் ஒரு பக்க பார்வையில் சிவலிங்கம் போல தோன்றும் வகையில் இருபரிமாண சிவலிங்கம் என்பதாக அமைப்பார்கள். 

புலிகளின் காலத்தில் கரும்புலிகள் மாவீரர்களின் கல்லறை அமைப்பு இந்த இருபரிமாண சிவலிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டது. 

அதெப்படி வாழ்வை முழுவதும் வாழ்ந்து முடிக்காதவர்கள் முக்தி அடையலாம், அவல சாவை தழுவியவர்கள் முக்தி அடையலாம், என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால் இந்த கேள்விக்கும் புலிகள் காலத்திலேயே, சைவ நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்கள் பதில் கூறினார்கள். தனக்கான வாழவை வாழாமல், தன் நாட்டிற்காக, சமூகத்திற்காக என்று வாழ்ந்து, தன் உயிரை ஆகுதி ஆக்குபவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது எம் பழம்பெரும் நம்பிக்கை. அவ்வாறு இறக்கும் மாவீரர்கள் வானத்தில் நட்சத்திரங்களாக தோன்றி மின்னுவார்கள் என்பதும் எம் மரபுவழி நம்பிக்கை. அதனால்தான்,

மாவீரர்களே, நீங்கள் எம்மை விட்டு சென்றாலும், இந்த மண்ணை விட்டு சென்றாலும் எமது மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்தையும், மலரும் தமிழீழத்தையும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்து பார்ப்பீர்கள் என்று மேடைகள் தோறும் பேசுவார்கள். இவைகளை வன்னியில் புலிகளுடன் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிவார்கள்.

தலைவர் பிரபாகரனின் தந்தையார் பெரும் சிவபக்தர் என்பதும், சிவாலயம் ஒன்றை பரிபாலனம் செய்து வந்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தலைவர் கூட 2002 சமாதான காலம் வரையில் மிகப்பெரிய முருக பக்தராக, யாராலும் வெல்லப்பட முடியாத ஒருவராக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே.

இறந்த மாவீரர்களுக்கு கல்லறை அமைப்பது தொடர்பாகவும், அதன் வடிவம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்த காலத்தில், தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை தான் இந்த வடிவத்தையும், ஆன்மா சிவ வடிவின் ஒரு தோற்றத்தை காட்டும் என்பதையும் விளக்கினார் என்று கூறுகிறார்கள்.

வீர சைவ பிரிவுகள் இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மேல், முழுமையான சிவலிங்கத்தை வைப்பார்கள். அவர்களின் நம்பிக்கை அடிப்படையில், உயிர் முக்தியின் பின்னர் சிவமாக மாறுகிறது என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சித்தாந்த சைவம் உயிர் சிவமாகும் என்பதை ஏற்பதில்லை. சிவத்தோடு சேர்ந்து நின்றாலும் அது ஆன்மாவே என்பது அவர்களின் தர்க்க முடிவு. தலைவரின் பரம்பரை கவராக்கள் எனப்படும் சித்தாந்த தத்துவங்களை ஏற்றுக்கொண்ட சைவப் பிரிவினர் என்பதால் சித்தாந்த அடிப்படையில் கல்லறைகளை அமைந்தார்கள்.

எமது மாவீரர்களின் கல்லறை அமைப்பு முறையை பற்றியும், தலைவரின் ஆழமான சைவ ஞானத்தை பற்றியும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment

புலிகளின் கல்லறையில் சைவ தத்துவம்

தலைவர் பிரபாகரனின் மரபுவழி கல்லறை அமைப்பு முறையும், ஆன்ம சிவ தத்துவங்களும். இறந்தவர்களுக்கு கல்லறை அமைத்து அதனை வழிபடும், மரியாதை செய்யும் ம...